Posts

Showing posts from April, 2019

"கருந்துளை ஏன் இப்படி இருக்கிறது ?

Image
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 "கருந்துளை ஏன் இப்படி இருக்கிறது ? (M 87 வடிவத்தின் விளக்கம்  ) 🎯 அறிவியல் காதலன் ரா.பிரபு ✍ 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ஏப்ரல் 10 ஆம் தேதி நமக்கு கிடைத்த கருந்துளையின் படத்தை பார்த்தவர்கள் மங்கலான ஒரு சுமாரான படத்தை கண்டு இருப்பார்கள். சிலருக்கு அந்த படம் ஏமாற்றத்தை கூட கொடுத்து இருக்கலாம்... ஆனால் அந்த வடிவத்தில் நாம் காண்பது என்ன என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவார்கள் . அந்த படத்தை எப்படி புரிந்து கொள்வது என்று தான் இப்போது சொல்ல போகிறேன். ஆனால் அதை விட ஆச்சரியம் ஒன்று இருக்கிறது. அது ஐன்ஸ்டைனிடம் இருந்த ஆச்சரியம். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஐன்ஸ்டீனிடம் யாராவது சில கலர் பென்சில்களை கொடுத்துவிட்டு நீங்க ஏதோ' க்ராவிடி ல ஸ்பேஸ் வளையும் 'னு சொல்றிங்களே..அப்போ பயங்கர க்ராவிட்டி கொண்ட  பிளாக் ஹோல் ஒரு வேளை எதிர்காலத்தில் 100 ஆண்டுகள் கழித்து புகைப்படம் எடுக்கப் பட்டால் அது பார்க்க எப்படி இருக்கும் என்று வரைந்து காட்டுங்கள் பார்ப்போம் என்று கேட்டு இருந்தால்.. மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இன்று நமக்குக் கிடைத்துள்ள புகைப்படத்தை அவர் அன்றே  அச்சுப் பிசக

பிளாக் ஹோல் M87 கரும் பூதத்தின் முதல் படம்

Image
பிளாக் ஹோல் M87 கரும் பூதத்தின் முதல் படம் அறிவியல் காதலன் ரா.பிரபு நீண்ட நாளாக வெறும் கோட்பாடு அளவில் கருத்தாக இருந்த விண்வெளி கரும் பூதம் பிளாக் ஹோல் இன்று ஆதார பூர்வமாக ..புகை பட ஆதாரத்தோடு நிருபிக்க பட்டுள்ளது. (பிளாக் ஹோல் படத்தை முதலில் பார்த்த மனிதர்கள் நாம் தான் என்று பெருமையாக சொல்லி கொள்ளலாம்.) இந்த பூதத்தை விஞ்ஞானிகள் படம் பிடித்தது எப்படி என்று பார்க்கலாம்... ஏதோ உளுத்தம் வடையை out of focus இல் எடுத்தது போல் இருக்கும் அந்த புகை படத்தை விஞ்ஞானிகள் ஏன் அவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்றால் பிளாக் ஹோல் ஐ படம் பிடிப்பது என்பது ஒரு நிஜமான பூதத்தை படம் பிடிப்பதை விடவும் அதிக கடினமான ஒன்று. காரணம் பிளாக் ஹோலின் எஸ்கேப் வெலாசிட்டி 3 லட்சம் கிமி / வினாடி யை விட அதிகம் என்பதால் அதிலிருந்து ஒளியும் கூட தப்பி வெளியே வருவது இல்லை. ஒளி பட்டு திரும்பாத அல்லது ஒளிராத ஒன்றை எப்படி பார்க்க முடியும் அல்லது படம் எடுக்க முடியும் ? இதை சாதிக்க தான் கடின உழைப்பு தேவை பட்டது. பிளாக் ஹோல் எனும் டார்கெட் உண்மையில் மிக பிரமாண்டமாக இருந்தாலும் அதை படம் எடுக்க முனையும் போது அது இருக்கும் த