Posts

Showing posts from March, 2020

கிருமி (குறுங்கதை )

Image
கிருமி (குறுங்கதை ) ரா.பிரபு. இன்றைலிருந்து சுமார் 20..30 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் .... அந்த வீடு கொஞ்சம் பசை உள்ள இடமாக தெரிந்தது. குறிப்பாக சுத்தம் கண்ணில் அறைவதாக இருந்தது. இருக்காதா பின்னே ஆச்சாரமான ஆத்து காரர் வீடு ஆச்சே. தாழ்வாரத்தில் ஆடும் ஊஞ்சலில் நியூட்டன் விதிக்கு உட்பட்டு ஊசலாடி கொண்டே பேசி கொண்டு இருந்தார் வேங்கடநாதன். "திரும்பவும் கேட்கறேன் சுப்பையா... உனக்கு காசு கொடுக்கிறது பத்தி எனக்கு பிரச்னை இல்லை ஆனா நீ சொல்ற காரணம் தான் கொஞ்சம் முட்டாள் தனமா இருக்கு.." சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த வெற்றிலை பெட்டியை எடுத்து திறந்து இரண்டு இலைகளை அசை போட்டார். சுப்பையா என்று அழைக்க பட்டவன் வீட்டிற்கு வெளியே கை கட்டி நின்று இருந்தான் . கக்கத்தில் அடடக்க பட்ட துண்டு அவன் பணிவை சொன்னது. உரம் ஏறிய அவன் உடல் அவன் உழைப்பை சொன்னது. கருங்கல் போன்ற  அவன் கருப்பு வண்ணம் அவன் 'வர்ணத்தை' சொன்னது. தயங்கிய வார்த்தைகளை கொண்டு பேசினான். "அய்யா பையன் டாக்டருக்கு படிக்கணும் னு ஆசை படறான்.... அதான்......." பட்டாசு பெட்டியில் தீ குச்சி விழுந்தது போல சி