Posts

Showing posts from August, 2018

"இரண்டாம் பொறி"

Image
" இரண்டாம் பொறி" (சமூக குறுந்தொடர் ) ரா.பிரபு "சிறுவாணி குப்பம்"அநேகமாக வரைப்படங்களில் அவ்வளவாக காண கிடைக்காத சிறு கிராமம். அந்த கிராமத்தின் பள்ளி மைதானம் இன்று ஞாயிறு என்பதால் பாலைவன பார்வையில் இருப்பது தான் வழக்கம். (பள்ளி நாளில் கூட பெரிய மாணவர்கள் கூட்டம் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம் ) இன்று திடீர் என்று பதின்ம பெண் போல ஆச்சர்ய அலங்காரமாய் பலரை திரும்பி பார்க்க வைத்து கொண்டிருந்தது. குட்டி திருவிழாவை போல ஊர் மக்கள் உற்சாகமாக கூடி இருந்தார்கள். அதோ கூட்டத்தில் ஓரமாய் கண்ணில் ஆனந்த கண்ணீர் உடன் நிற்கும் அந்த விவசாய குடும்பம் ... அது தான் தமிழரசனின் குடும்பம். தமிழரசன் .....????? இதோ கொஞ்ச நேரத்தில் மேடை ஏறி பேச போகும் ஊரின் சமீப கால கதாநாயகன். விஞ்ஞானத்தில் அதீத ஆர்வம் கொண்ட மாணவன்..  அவன் கதாநாயகனான காரணம் அவனது சமீபத்திய கண்டுபிடிப்பும் அது திடீரென தமிழ்நாடு பூரா புகழ் அடைந்ததும். அந்த கண்டு பிடிப்பு பற்றி....இதோ  ஒரு நிமிடத்தில்  அவனே சொல்வான். நண்பர்கள் சூழ பைக்கில் வந்து இறங்கிய தமிழரசன் கூட்டத்தை பார்த்தான். பக்கத்தில் திரும்பி அவனுட