Posts

Showing posts from November, 2017

"அலெக்ஸான்ரியாவின் அதிசய இன்ஜினியர்."

Image
"அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அதிசய இன்ஜினியர்" ரா.பிரபு " அலெக்ஸான்ரியா" எகிப்தின் மிக பிரபலமான ஒரு நகரம். குறிப்பாக அந்த கால உலக அதிசயம் கலங்கரை விளக்கமும் .. இடைக்காலத்தில் உலக அதிசயமான நெக்ரோபோலீஸ் எனும் கல்லறைகள் கட்டிடங்களுக்காகவும் உலக பிரசித்தம். இதற்கும் மேல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அலெக்ஸான்ரியாவின் எரிந்து போன மகா பெரிய நூலகம். உலகத்தின் அணைத்து போக்கிஷியங்களும் அங்கே கொட்டி கிடந்தன. (அந்த நூலகம் வார கணக்கில் எரிந்ததாம் அவ்ளோ பெரிது ) அலெக்ஸாண்ட்ரியா கி. மு 331 இல் அலெக்ஸ்சாண்டரால் நிறுவப்பட்ட நகரம். அது பண்டைய கடவுள்கள் ஆட்சி செய்த ஒரு புராண நகரம். அந்த நகரத்தின் மக்கள் கடவுளுக்கு மிக பக்தியாக  இருந்தார்களா தெரியாது ஆனால் மிக பயந்து இருந்தனர். அதற்க்கு காரணம் அங்கே இருந்த பிரமாண்ட கோவில் களின் கடவுள்கள் மிக உயிரோட்டமாக இருந்தது தான். ஆம் அந்த கடவுள்கள் அந்த மாநகர மக்கள்களுடன் பல வகைகளில் பேசினார்கள் தொடர்பு கொண்டார்கள் பய முறுத்தினார்கள். அக்கால கிரேக்க கடவுள் ஜூயுஸ் பற்றி இன்றைய பல ஹாலிவூட் திரைப்படங்களில் நாம் பார்த்து இர