"அலெக்ஸான்ரியாவின் அதிசய இன்ஜினியர்."









"அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அதிசய இன்ஜினியர்"


ரா.பிரபு

" அலெக்ஸான்ரியா"
எகிப்தின் மிக பிரபலமான ஒரு நகரம். குறிப்பாக அந்த கால உலக அதிசயம் கலங்கரை விளக்கமும் .. இடைக்காலத்தில் உலக அதிசயமான நெக்ரோபோலீஸ் எனும் கல்லறைகள் கட்டிடங்களுக்காகவும் உலக பிரசித்தம்.
இதற்கும் மேல் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அலெக்ஸான்ரியாவின் எரிந்து போன மகா பெரிய நூலகம். உலகத்தின் அணைத்து போக்கிஷியங்களும் அங்கே கொட்டி கிடந்தன. (அந்த நூலகம் வார கணக்கில் எரிந்ததாம் அவ்ளோ பெரிது )

அலெக்ஸாண்ட்ரியா கி. மு 331 இல் அலெக்ஸ்சாண்டரால் நிறுவப்பட்ட நகரம். அது பண்டைய கடவுள்கள் ஆட்சி செய்த ஒரு புராண நகரம். அந்த நகரத்தின் மக்கள் கடவுளுக்கு மிக பக்தியாக  இருந்தார்களா தெரியாது ஆனால் மிக பயந்து இருந்தனர். அதற்க்கு காரணம் அங்கே இருந்த பிரமாண்ட கோவில் களின் கடவுள்கள் மிக உயிரோட்டமாக இருந்தது தான். ஆம் அந்த கடவுள்கள் அந்த மாநகர மக்கள்களுடன் பல வகைகளில் பேசினார்கள் தொடர்பு கொண்டார்கள் பய முறுத்தினார்கள். அக்கால கிரேக்க கடவுள் ஜூயுஸ் பற்றி இன்றைய பல ஹாலிவூட் திரைப்படங்களில் நாம் பார்த்து இருபோம்.
குறிப்பாக  அலெக்சான்றியாவை அன்றைய காலத்தில் மிரட்டி இருந்தது அன்றைய கடவுள் serapis .

சேராபிஸ் க்கு மிக பிரமாண்ட கோவில் இருந்தது. மக்கள் கோவிலுக்கு பயம் கொண்ட பக்தியுடன் செல்ல காரணம்  அங்கே ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போது அவர்கள் ஒரு மாயா ஜால உலகத்திற்கு சென்று வந்தார்கள்.
அங்கே உள்ளே செல்ல கதவுகள் சாத்த பட்டிருக்கும் அதை திறக்கும் ஆட்கள் அங்கே யாரும் கிடையாது. மாறாக கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருப்பை கொளுத்தி வேண்ட வேண்டும்.
 திருப்தியான கடவுள் கொஞ்சம் நேரம் கழித்து கதவை திறப்பார்.மாயாஜாலமாக தானாக திறக்கும் கதவை கடந்து சென்றால். உள்ளே கோவிலில் நடுவில் பிரமாண்ட ஹாலில் ஒரு உலோக ரதம்  கிளம்பி மெல்ல காற்றில் எழும். அங்கே முன்னால் பிரமாண்டமாக அமர்ந்து இருக்கும் சேராப்பிஸ் முகத்தில் சூரிய ஒளி தோன்றும் அந்த கணம் அந்த ரதம் அப்படியே காற்றில் எழும்பி பறக்கும்.
மக்கள் கடவுளின் சக்தியை கண்டு பிரமித்து விழுந்து வணங்குவார்கள்.

அங்கே இடிகளின் கடவுள் சிலை முன் நின்று வணங்கும் போது அந்த சிலைகள் சில நேரம் இடி சத்தத்தை கொடுக்கும். அங்கே இருந்த சில சிலைகள் உறுமும். அப்புறம் சில தேவதைகள் காணிக்கை நேரத்தில் கண்களில் இருந்து ரத்தம் வழியும். இன்னோரு தேவதை காணிக்கை நேரத்தில் திடீரென மார்பில் இருந்து பால் பீச்சி அடிக்கும்.
இது போன்ற கடவுளின் சக்தியை நேரடியாக தினம் தினம் காணும் அந்த நகரத்தின் மக்கள் கடவுளை ரத்தமும் சதையுமாக உணர்ந்ததாக நம்பினார்கள். வணங்கினார்கள். பயந்தார்கள்.

 ஆனால் பாவம்...
அவர்களுக்கு தெரியாது. இந்த மாயா ஜாலத்திற்கு பின்னால் இருந்தது கடவுள் சக்தி அல்ல அது ஒரு திறமை வாய்ந்த  இன்ஜினியரிங் மூளை என்று.
அந்த மகா மூளை கொண்ட இன்ஜினியரை hero of alexandriya  என்று அழைக்கிறார்கள் .(கதாநாயகன் என்ற பொருளில் அல்ல..அது அவன் பெயர்.) அவன் பெயர் heron அதை தான் அப்படி அழைக்கிறார்கள் .ஹெரான் ஒரு கணிதவியல் மற்றும் பொறியியல் வல்லுனர். அக்காலத்தில் மின்சாரமோ மோட்டாரோ இல்லாத காலத்தில் அவன் செய்து வைத்திருந்த கண்டுபிடிப்புகள் ..தானியங்கிகள்.. தொழில்நுட்பங்கள் எல்லாமே இக்கால நவீன கண்டுபிடிப்புக்கு சவால் விடுபவை. உதாரணமாக சில....

அந்த கோவிலில் ஒரு சிலை இருந்தது ஒரு பிளாட்பார அமைப்பு அதில் ஒரு பக்கம் ஒரு குதிரை நிற்கும் அதற்க்கு எதிரே ஒரு மனிதன் கையில் வாளுடன் திரும்பி நிற்பான் திடீரென அந்த மனித சிலை திரும்பும் அந்த குதிரையின் கழுத்தில் வாளை வைத்து அப்படியே வெட்டும் .. அந்த வாள் குதிரை கழுத்தை அறுத்து கொண்டே சென்று அடுத்த பக்கம் வருவதை பார்க்கலாம் கழுத்தில் வெட்ட பட்ட கோடும் தெரியும் ஆனால் குதிரை தலை துண்டாகாமல் அப்படியே தான் இருக்கும் அந்த மனிதன் திரும்ப திரும்ப குதிரையை வெட்டி கொண்டே தான் இருப்பான். இதை தவிர அந்த குதிரை வாயில் தண்ணீர் வைக்க பட்டால் அழகாக உறிஞ்சி வேறு குடிக்கும். இதை பார்க்கும் மக்கள் தலை கிறுகிறுக்கும்.
அந்த அமைப்பை யாரவது உடைத்து பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும் அங்கே அடியில் அந்த சிலையில் ஒரு ஓட்டை இருப்பதும் அதில் தண்ணீர் நிரம்ப நிரம்ப ஒரு குழாயில் வெற்றிடம் உண்டாகி குதிரை வாயில் வைக்க பட்ட தண்ணீரை உருஞ்சுவதும்.
மேலும் அந்த கத்தி வெட்டி கொண்டு முன்னேற முன்னேற கழுத்தின் உள்ளே கழுத்தை இணைத்து பிடிக்கும் பலசக்கர அமைப்பு இருந்ததும்.இவ்வளவும் இயங்குவது தண்ணீரின் சக்தியால் மட்டுமே.

இதே போல இன்னொரு சிறு சிலை .. அதில் ஒரு முனையில் ஒருவன் வில்லை இழுத்து பிடித்து இருப்பான் எதிர் முனையில் ஒரு டிராகன் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விசை இழுக்க பட்டதும் அவன் டிராகனை நோக்கி அம்பு விடுவான் அப்போது டிராகன் கர்ரர் என உறும்பும். இதுவும் தண்ணீரின் மாயாஜாலம் தான் விசை இழுக்க பட்ட உடன் ஒரு பாத்திரத்தின் நீர் கீழ் நோக்கி வடியும் அப்போது உண்டாகும் வெற்றிடடத்தில் காற்று புகுந்து டிராகன் உறும்பும் சப்தம் கொடுக்கும்.

ஒரு நீண்ட சதுர வடிவ மர குழாய் அமைப்பில் ஒரு  முள் முள்ளாக இருக்கும் இரும்பு பந்து போடப்பட்டு அந்த அமைப்பு ஊஞ்சல் போல மேலே கீழே ஆட்ட படும் போது உருளும் அந்த பந்து எழுப்பும் கட கட ஓசை... அந்த சிலைக்கு வெளியே இருந்து கேட்பவருக்கு இடியின் ஓசை போல இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக...

தேவதை முன்னால் நெருப்பில் காணிக்கை செலுத்தும் மக்கள் அந்த தேவதைக்குள் நடந்து கொண்டிருக்கும் சூட்சமம் பற்றி துளியும் அறியாமல் இருந்தார்கள்.
அவர்கள் எரிக்கும் நெருப்பு உள்ளே இருக்கும் ஒரு பாத்திரத்தை சூடாக்கும் அதற்க்கு உள்ளே வைக்க பட்ட நீர் படி படியாக சூடாகி பாத்திரத்தின் நீராவி அழுத்தத்தை கூட்டும். அந்த பாத்திரத்தில் இணைக்க பட்ட ஒரு குழாய் அடுத்த பாத்திரதுடன் இணைக்க பட்டிருக்கும் .
அந்த இன்னொரு பாத்திரத்தில் செயற்கை ரத்தம் வைக்க பட்டிருக்கும். மக்கள் நெருப்பு தொடர்ந்து எரிக்க எரிக்க குழாயில் அழுத்தம் அதிகமாகும். குழாயில் அழுத்தம் அதிகமாகி பாத்திரத்தில் உள்ள ரத்தம் அதனுடன் இணைக்க பட்ட அடுத்த குழாய் வழியாக மேலேறும் அந்த குழாய் தேவதை சிலையின் கண்களில் உள்ள மெல்லிய ஓட்டையில் உள்பக்கமாக இணைக்க பட்டிருக்கும். எனவே குறிப்பிட்ட நேரம் நெருப்பை மூட்டிய பின் அந்த தேவதை ரத்த கண்ணீர் வடிக்கும். சில தேவதை மாரில் பால் வடிவதும் இப்படி தான்.

ஹெரான் இப்படி பட்ட பல தகிடு தித்தங்களை செய்து கொடுத்தான். கடவுள்களின் தூதர்கள் ..மத போதகர்கள் அவனிடம் மக்களை கடவுளை நம்ப வைக்கும் படி கருவிகள் செய்து தர சொல்லி பணித்து இருந்தார்கள். அவனது எல்லாம் கண்டுபிடிப்பும் வெறும் ஈர்ப்பு விசை ...நீரின் சக்தி மற்றும் நீராவியின் சக்தி இதை கொண்டது இதை வைத்தே பெரிய மாய ஜாலங்களை நிகழ்த்தி காட்டினான்.
மிதக்கும் உலோக ரதம் ஒரு காந்த சக்தி கருவியாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஹெரானின் கருவிகள் ஆச்சர்யமானவை ... அதில் எங்கோ ஒரு இடத்தில கொளுத்த படும் நெருப்பு ஒரு இடத்தில் நீராவியை உண்டு பண்ணி விசையை முறுக்கி கோவில் கதவை திறக்க பண்ணியது.
சில தேவதையை சிரிக்க வைத்தது.. சில கடவுளை உறும வைத்தது. காற்றால் சுழல வைக்க பட்ட காற்றாடி அதனுடன் இணைந்த ஒரு அமைப்பின் மூலம் இசையை வழங்கியது.
புனித நீரை விநியோகிக்கும் ஜாடியின் மேலே போட பட்ட நாணயம் உண்டில் போல உள்ளே சென்று ஒரு விசையை தட்ட ஒரு வால்வ் சில வினாடிகள் திறக்க பட்டு புனித நீரை விநியோகித்து.

ஹெரானின் இந்த அற்புத பொறியியல் நுட்பத்திற்கு காரணம் அங்கே இருந்த அந்த உலகத்தின் அணைத்து பொக்கிஷத்தை அறிவை தனக்குள்ளே சுமந்திருந்த அலெக்ஸான்ரியா நூலகம் தான் என்கிறார்கள்.

ஹெரான் என்ன தான் அற்புத கருவிகளை கண்டு பிடித்து இருந்தாலும் ஒரு டாவின்சி போல ...
ஒரு ஆர்கிமிடிஸ் போல ... அவனுக்கு போதிய அங்கீகாரம் தருவது சரி அல்ல என்றே பலரும் கருதினார்கள் ஆம் அது சரியான கருத்தும் கூட.
காரணம் ஹெரானின் கண்டுபிடிப்புகள் எதுவுமே மக்களுக்கானது அல்ல மாறாக கடவுள் பெயரை சொல்லி மக்களை நிரந்தர முட்டாள் ஆக்கி வைத்திருக்க விரும்பிய மத குருமார்களுக்கானது.

கடவுள் சிலைகளுக்குள் அவன் செய்து வைத்திருந்த தகிடு தித்தம் ஒருவேளை மக்களுக்கு தெரிந்து இருந்தால் அவர்கள் அவனை கடவுளுக்கு காணிக்கை ஆக்கும் நெருப்பில் அவனை காணிக்கை ஆக்கி இருப்பார்களோ என்னவோ. ஆனால் எப்படியாகினும் தொழிற்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் ஹெரானின் அதிசய பொறியியல் கருவிகள் நம்மை ஆச்சர்ய பட வைக்க தவறுவது இல்லை.

( மேலும் தகவலுக்கு heron of alexandriya என்று தேடி பாருங்கள் )

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"