Posts

Showing posts from December, 2017

"அன்புடன் அறிவியல் "

Image
" அன்புடன் அறிவியல் " அறிவியல் காதலன் - ரா. பிரபு நண்பர்களுக்கு வணக்கம் ! பல வகை தலைப்புகளில் அவ்வபோது பல கட்டுரைகள் நான் எழுதி இருந்தாலும் அறிவியல் கட்டுரைகள் தான் எப்போதும் எனது அபிமானம் எனது அடையாளம் என்று நினைக்கிறேன். அப்படி அவ்வபோது பல இடங்களில்  நான் எழுதிய அறிவியல் கட்டுரைகளில் நெடுங்கட்டுரைகள் தவிர்த்து விட்டு சிறு கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த "அன்புடன் அறிவியல்" .(இது 2016 முதல் 2017 வரை எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு )படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் நன்றி. 1. "சூரியன் எனும் சூரன்" நமது சூரிய குடும்பத்தின் 'தலை'யான சூரியன் எனும் சூரனை பற்றியும் அது வேலை செய்யும் விதம் பற்றியும் சில தகவல்களை தான் நாம் இன்று பார்க்க போகிறோம். முதலில் இந்த பூமியின் மொத்த ஆற்றல்காண ஆற்றல் மூலம் சூரியன் தான் என்று நாம் கேள்வி பட்டு இருந்தாலும் அது எப்படி என்பதை இன்னும் பல பேர் முழுதாக புரிந்து கொள்வதில்லை. அதாவது நாம் அன்றாடம் பல செயல்கள் செய்கிறோம் படிக்கிறோம் எழுதுகிறோம் ஒடுகிறோம்.. பேசுகிறோம் பாடுகிறோம் இது எல்லாவற்றிற்கும் ஆ