Posts

Showing posts from February, 2021

தங்கம் 2

Image
  "தங்கம் 2" (அறிவியல் சிறுகதை )  #ரா_பிரபு தங்கம் சிறுகதை ஒரு பாகம் தான். ஆனால் நண்பர்கள் சிலர் சொன்னதற்கு இணங்க யோசித்து ஓரு பார்ட் 2 எழுதி இருக்கிறேன். பார்ட் 2.. "கியாபுக் கியா.  கிர்.. " என்றார் உருமாறிய பெஞ்சமின்.. தன் புதிய பன்றி மூஞ்சி அழகை கண்ணாடியில் ரசித்தார். ச்சை மனிதர்கள் முகம் தான் எவ்ளோ கேவலமா இருக்கு.. இந்த கூம்பு வடிவ முகம் தான் என்ன அழகு.  இதை ஏதோ ஒரு பூமியின் அருவெறுப்பான பிராணியுடன் ஒப்பிட்டு பேசுகிறாராகள் அந்த பிராணியை ஒரு முறை பார்க்க வேண்டும். கதவை தடவி தடவி திறந்த உதவியாளர் பீட்டர்" கியாரிக்.. கியப்பிக்கி... " என்றான். (நமக்கு ஜிர்கோனி தெரியாததால் இனி மொழி பெயர்க்க வேண்டியது கடமை ) "மரண வெற்றி பாஸ்.ம் " "மனித உடல்ல பாக்க ரொம்ப அழகா இருக்க ஹி ஹி " "பூமி வெற்றிகரமா கைப்பற்ற பட்டது .வாழ்க ஜிர்கோனி.." " நான் யார் உடல்ல இருக்கேன் பாரு.  உலகத்துல இருக்கிற விஞ்ஞானிகள்ல இவர் தான் பெரிய உஸ்தாதாம்.. "  "உலக முதன்மை விஞ்ஞானியையே பிடிச்சிடீங்க தலைவரே.. நீங்க கீர்த்தி மிக்கவர்..." அந்த தலைவன் கொ

" தங்கம் "

Image
  "தங்கம் " (அறிவியல் சிறுகதை ) ரா.பிரபு அன்று விடியல் சூரியனின் ரத்த சிகப்பில் 'அபாயம்'குறியீடு இருந்தது. ரீடிங்குகளை பார்த்த டாக்டர் பெஞ்சமின் ரியோ ,தான் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பதை மறந்து ஓரு சிறுவனை போல அந்த காரிடாரில் ஓடினார்.  "டாக்டர் எனி பிராப்ளம் " ?? எதிர் பட்ட உதவியாளர்கள் பதட்டத்தை இவரிடம் பற்ற வைத்து கொண்டார்கள்.  "எஸ் எஸ் வெரி மச் .." பெஞ்சமின் நெற்றியை சொரிந்து கொண்டார் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார். சிகரெட் பாதி உடல் இளைப்பதற்குள் நசுக்கி கொன்று தூக்கி போட்டார். "அவசர கூட்டம் ஏற்பாடு பண்ணுங்க அனைத்து நாட்டு விஞ்ஞானிகள் கூட்டம்..  அதுங்க திரும்ப வருதுங்க.. உலகத்தை அழிக்க " ▪️▪️▪️ அந்த அறையின் பிரமாண்டத்தில் புட் பால் ஆடலாம். ஆனால் இப்போது வெறும் மின்னணு 3D ஒலி/ஒளி  சூழ பட்டு பூராம் டிஜிட்டல் உருவங்கள் நின்றிருந்தது. 2042 ஆம் ஆண்டின் தொழில் நுட்ப சக்தி காரணமாக அவர்கள் விர்சுவல் என்பதை அறியாத அளவு நேரில் பிரசன்னமாக இருந்தார்கள்.  "இன்டர்நேஷனல் ஏலியன் ரிசர்ச் சென்டர் சார்பாக அனைவருக்கும் பேட் மார்னிங் சொல்லுவதற்கா