Posts

Showing posts from October, 2019

வைரதை சுத்தியால் உடைக்க முடியுமா ?

Image
வைரதை சுத்தியால் உடைக்க முடியுமா ? ரா.பிரபு ஒரு சுத்தியை வைத்து வைரத்தை உடைக்க முடியுமா ? இந்த கேள்வியை  கேட்டால் உங்களில் பலபேர் " அதற்கு வாய்ப்பில்லை காரணம் உலகிலேயே மிக உறுதியான ஒரு பொருள் வைரம் " என்று பதில் சொல்லலாம் ஆனால் உண்மை அது அல்ல சுத்தியை வைத்து வைரத்தை உடைத்து பார்த்தீர்களேயானால் வைரம் உடைந்து போகும். அப்போ உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் என்று சொல்லப்படுவது உண்மை இல்லையா ? உண்மை எனில் வைரம் உடைந்தது ஏன் ? காரணம் உலகிலேயே மிகவும் கடினமான பொருள் வைரம். ஆனால உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் அல்ல இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது. (Diamonds are the "hardest " mineral but not "toughest" ) என்ன வித்தியாசம் இவையிரண்டுக்கும் ? Friedrich Mohs ஒரு  mineralogist. இவர் பொருட்களுக்கு இடையிலான கடினத்தன்மையை அளக்க ஒரு அளவீடு கண்டு பிடித்தார் அந்த அளவீடின் பெயர் "mohs ". பொருட்கள் ஒன்றில் ஒன்று கீறலை ஏற்படுத்தும் தன்மையை வைத்து இந்த கடின தன்மை கான அளவீட்டை இவர் கண்டுபிடித்தார். உதாரணமாக" talc " யை எடுத்து கொண்

குரங்கு_வித்தை (சிறு கதை)

Image
"குரங்கு வித்தை " (சிறு கதை) ரா.பிரபு அந்த குரங்கு மீண்டும் ஒரு முறை துள்ளி பல்டி அடித்தது. கூட்டம் மீண்டும் ஆர்ப்பரித்தது. "ராமு அட்றா.. ராமு... " அந்த குரங்காட்டி தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தான்.  கரகோஷதால் எந்த வகையிலும் பாதிக்க படாமல் கர்ம யோகி போல அந்த குரங்கு மீண்டும் பல்டியை தொடர்ந்தது. ஆகாஷ் தனது ஸ்கூல் பேக்கை ஓரமாக வைத்து விட்டு கையை தட்டினான். "ஆகாஷ் ! டைம் ஆகுது வா வீட்டுக்கு லேட்டா போனா உங்க அம்மா இதே மாதிரி குரங்காட்டம் ஆடுவா " ஹரி கண்டிப்பான குரலில் சொன்னதும் "அப்பா ப்ளீஸ் பா  இன்னும் 5 மினிட்ஸ் ஒன்லி " என்று அவன் சொல்லி அரை மணிநேரம் கழித்து கிளம்பினான். வீட்டுக்கு போகும் வழியில் அவன் குரங்கை போல தாவி தாவி செல்ல முயல்வதை கவனித்தான் ஹரி.           ✴          ✴            ✴            ✴ "என்னங்க இவனை கொஞ்சம் வந்து பாருங்களேன் " பிரிய மனைவி பிரியா வின் குரல் கேட்டு ஹாலுக்கு வந்த ஹரி கஷ்ட பட்டு சிரிப்பை அடக்கினான் "என்னடி இவன் குரங்கு மாதிரி பல்டி அடிச்சிட்டு இருக்கான் " " காலைல இர