வைரதை சுத்தியால் உடைக்க முடியுமா ?

வைரதை சுத்தியால் உடைக்க முடியுமா ?

ரா.பிரபு

ஒரு சுத்தியை வைத்து வைரத்தை உடைக்க முடியுமா ?
இந்த கேள்வியை  கேட்டால் உங்களில் பலபேர் " அதற்கு வாய்ப்பில்லை காரணம் உலகிலேயே மிக உறுதியான ஒரு பொருள் வைரம் " என்று பதில் சொல்லலாம் ஆனால் உண்மை அது அல்ல சுத்தியை வைத்து வைரத்தை உடைத்து பார்த்தீர்களேயானால் வைரம் உடைந்து போகும்.

அப்போ உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் என்று சொல்லப்படுவது உண்மை இல்லையா ? உண்மை எனில் வைரம் உடைந்தது ஏன் ?

காரணம் உலகிலேயே மிகவும் கடினமான பொருள் வைரம். ஆனால உலகிலேயே மிகவும் உறுதியான பொருள் வைரம் அல்ல இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது.
(Diamonds are the "hardest " mineral but not "toughest" )

என்ன வித்தியாசம் இவையிரண்டுக்கும் ?

Friedrich Mohs ஒரு  mineralogist. இவர் பொருட்களுக்கு இடையிலான கடினத்தன்மையை அளக்க ஒரு அளவீடு கண்டு பிடித்தார் அந்த அளவீடின் பெயர் "mohs ". பொருட்கள் ஒன்றில் ஒன்று கீறலை ஏற்படுத்தும் தன்மையை வைத்து இந்த கடின தன்மை கான அளவீட்டை இவர் கண்டுபிடித்தார்.

உதாரணமாக" talc " யை எடுத்து கொண்டார். இருப்பதிலேயே மென்மையான பொருள். மற்ற எந்த பொருளை கொண்டும் talc ஐ சுரண்ட.. கீற முடியும். எனவே இதற்கு mohs அளவு 1 என்று கொடுத்தார். அடுத்ததாக gypsum எடுத்தார் . இது talc ஐ விட கடினமானது எனவே இதில் talc ஐ வைத்து கீற முடியாது சுரண்ட முடியாது ஆனால் மற்ற பொருட்களை விட இது மென்மையானது எனவே talc தவிர மற்ற பொருளை வைத்து சுரண்ட முடியும். எனவே இதற்கு நம்பர் 2 கொடுத்தார். அதாவது ஒரு பொருள் எந்த mohs எண்ணிக்கை அளவு கொண்டுள்ளதோ அதே பொருளை அல்லது அதற்கு கீழ் உள்ள பொருளை கீற முடியும் அதற்கு மேல் உள்ள பொருளை அல்ல .

இப்படி அவர் கொடுத்த வரிசை இதான்
talc, gypsum,calcite, fluorite, apatite, feldspar, quartz, topaz, corundum, மற்றும் 10 ஆவதாக diamond.

இருப்பதிலேயே உயர்ந்த அளவு 10 அந்த பத்தாவது இடத்தில் இருப்பது வைரம். அந்த அளவும் கூட மற்ற பொருட்களுடன் ஒப்பிட முடியாத அளவு மிக மிக அதிக உயரத்தில் இருக்கும் ஒன்று.

அதாவது ஒரு உதாரணத்திற்கு பள்ளி வகுப்பில் 10 மாணவர்கள் வெவேறு உயரத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை உயர அடிப்படையில் வரிசையாக நிற்க வைக்கிறார் ஆசிரியர். இதில் முதல் இடத்தில் இருபவனை விட இரண்டாம் இடத்தில் இருப்பவன் கிட்ட தட்ட அரை அடி உயரம் இருக்கிறான். அப்புறம் 3 ஆவது ஆள் இரண்டாம் ஆளை விட கிட்ட தட்ட முக்கால் அடி உயரம் அப்புறம் 4 ஆவது ஆள் அடுத்த ஆள் அடுத்த ஆள் எல்லாமே கிட்ட தட்ட தனது முன்னால் உள்ளவனை விட  1 அடி உயர வித்யாயசத்தில் மாறி மாறி வருகிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள் . ஆனால் அந்த 10 ஆவது ஆள் மட்டும் 9 ஆவது ஆளைவிட திடீரென 100 அடி 200 அடி உயரமாக பிரமாண்டமாக நிற்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள் எப்படி இருக்கும் .mohs அளவில் வைரம் மற்ற பொருட்களை விட அந்த அளவில் கடின தன்மையில் உயர்ந்து நிற்கிறது. (Mohs Graphs படத்தை பாருங்கள் புரியும் )தனக்கு முந்திய இடத்தில் இருக்கும் ரூபியை விட 140 மடங்கு அதிக உறுதி கொண்டது வைரம். எனவே கடினத்தன்மையில் மற்ற எந்த பொருளும் வைரத்திற்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது.

இதற்கு அர்த்தம் என்னவென்றால் உலகத்தில் இருக்கும் என்ற பொருளை வைத்தும் வைரத்தின் மேல் நாம் கீறளை ஏற்படுத்த முடியாது. ஆனால் வைரத்தை கொண்டு எந்த பொருளையும் கீற முடியும். ஒரு கிரைண்டிங்  மெஷின் சான கல்லில் வைரத்தை வைத்து அழுத்தி பிடித்தால் சான கல் முழுதும் தேய்ந்து அழிந்து விடும் ஆனால் வைரத்தின் மேல் சிறு கீறளை கூட அதனால் உண்டாக்க முடியாது அவ்வளவு கடினமானது வைரம்.

ஆனால்......

வைரம் உடைக்க முடியாத உறுதியானது அல்ல. என்ன காரணத்தினால் வைரம் மிகவும் கடினமானதாக இருக்கிறதோ அதே காரணத்தால் தான் வைரம் உடைந்தும் போகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா .?
முதலில் வைரம் இவ்வளவு கடினமாக இருப்பதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அவைகளுக்குள் இருக்கும் அனு பிணைப்பு மிகவும் குறுகிய இடத்தில் நெருக்கமாக இருப்பது தான்.. ஒரு சின்ன அறையில் 100 பேரை போட்டு அடைத்த மாதிரி அணுக்கள் அடைத்து கொண்டு இருக்கும். அங்கே அணுக்கள் நகர இடம் ஏதும் இல்லை. ஒரு ஸ்டீல் பொருளில் அடி விழும் போது அதில் உள்ள அணுக்கள் நகர்ந்து கொடுத்து உடையாமல் கொஞ்சம் வளைந்து கொடுத்து தப்பிக்கும். ஆனால் வைரத்தின் அணுக்கட்டமைப்பு வளைந்து கொடுக்க இடம் கொடுக்காததனால் உடைந்து போகிறது.

அதேசமயம் வைரத்தை கண்ட மேனிக்கு நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடைத்து விடவும் முடியாது. சரியான கோணத்தில் வைத்து அடித்தால் மட்டுமே வைரம் உடையும். அது என்ன சரியான கோணம் ?

உதாரணமாக ஒரு கரும்பை எடுத்துகொள்ளுங்கள் அதை குறுக்கு வாட்டத்தில் அரிவாளை கொண்டு பிளந்தால் என்ன ஆகும் ? இரண்டாக பிளந்து விடும். ஆனால் கரும்பை நடுவில் வெட்டினால் என்ன ஆகும் கரும்பு இரண்டு துண்டாக வெட்டப்படும் ஆனால் பிளக்க படாது.
இதே போல வைரமும் ஒரு மரதுண்டு போல உள்ளே வரிகளை கொண்டது நேர் வாட்டத்தில் வைத்து அடித்தால் வைரத்தை பிளந்து விட முடியும் (cleaving direction ).
ஆனால் படுக்க வாட்டில் வைரத்தை வைத்து அடித்தால் அதை உடைக்க முடியாது.

அதாவது வேறு வழியில் சொல்ல வேண்டுமென்றால் வைரத்தை பிளக்க முடியும் ஆனால் உடைக்க அல்ல.

எனவே திரைபடத்தில் யாராவது வைரம் உடைந்து விட்டது எனவே இது போலி என்று காட்டினால் அதை நம்பி உங்கள் வைரத்தை உடைத்து பார்க்காதீர்கள்.

(Bang bang படத்தில் "இது போலி வைரம் அதான் உடஞ்சி போச்சி இல்லைனா இதை அடித்த சுத்தி தான் உடைந்து இருக்கும் " என்று முட்டாள் தனமான வசனம் பேசும் ஒரு காட்சி லிங்க்  =
https://youtu.be/oL_iesBfc94 )


Comments

  1. OK அதர்க்கு எவ்வளவு force தேவை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"