"ஏலியனை தேடும் துகள்...." அறிவியல் காதலன் (கருத்தும் எழுத்தும் : ரா .பிரபு)





"ஏலியனை தேடும் துகள்...."

அறிவியல் காதலன்

(கருத்தும் எழுத்தும் : ரா .பிரபு)

மனிதகுலம் விஞ்ஞான வளர்ச்சி அடைந்தது முதல் ஏலியன் எனும் பக்கத்துக்கு வீட்டு காரனை தேடும் படலம் நடந்து கொண்டு தான் இருக்கிறது...
நம்மை அவ்வபோது வேவு பார்கிறானோ என்ற ஐயம் எப்போதும் நமக்கு இருந்து வந்துள்ள ஒன்று தான்.
ஆனால்
அவன் இருப்பிடத்திற்கு சென்று அவனை வேவு பார்த்தால் என்ன என்ற எண்ணம் நமக்கு தோன்றும் பட்சத்தில் நமக்கு தலையாய தடையாய் இருக்கும் விஷயம் அந்த பக்கத்துக்கு வீட்டு காரன் இருக்கும் தூரம்..

பல்லாயிரம் கோடி நட்சத்திரத்தில் நமக்கு மிக பக்கத்தில் இருப்பது ஆல்பா செண்டாரி என்ற நட்சத்திரம்.. (உண்மையில் இது மூன்று நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றும் ஒரு தொகுதி)
ஒளி வேகத்தில் சென்றால் ஒரு 4.3 வருடத்தில் அடையலாம்.
அதை நம்மிடையே உள்ள அதிவேக  விண்கலத்தை கொண்டு முயற்சித்தால்..என்ன ஒரு 30,000 ஆண்டுகள் பிடிக்கும் அவ்வளவு தான்.

இன்று நான் உங்களிடம் பகிர வந்தது
இந்த நீண்ட நெடிய கால கெடுவை தகற்பதற்கான ஒரு வழிமுறையை இப்போது கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்பதை சொல்ல தான்.
இந்த ப்ராஜெக்டை செய்ய போகும் நபர் யார்?
வேறு யாராக இருந்து விட முடியும்.. இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞாணி ஸ்டீபன் ஹாகிங்ஸை தவிர.....

இதற்கு அவருக்கு உதவ போவது ரஷ்ய பில்லினியர் யூரி மில்லர் அவர்கள்.
இதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர்
Brake throughout star shot.
இதன் பட்ஜெட் 100 மில்லியன் டாலர்

பிளான் இது தான்......
இம்முறை பெரிய பெரிய விண்கலத்தை எல்லாம் அனுப்ப போவதில்லை.
அந்த விண்கலத்தை விண்கலம் என்று சொன்னால் நீங்கள் கொஞ்சம் சந்தேகமாக பார்ப்பீர்கள். காரணம் அதன் எடை அதிகபட்சமாக ஒரு கிராம்.
அந்த ஸ்பேஸ் ஷிப்பை நீங்கள் உங்கள் இரு விரலுக்கு இடையில் மறைத்து வைத்து விடலாம்.
பார்க்க நம்ம வீட்டு போன் மற்றும் ரேடியோவில் உள்ளே இருக்கும் pcb board போல தான் இருக்கும்.
இந்த சின்ன நானோ கிராப்ட்டில் எப்படி என்ஜின் வைப்பது எரிபொருள் நிரப்புவது?
கவலை வேண்டாம் இது தானாக பறந்து செல்ல கூடியது அல்ல.
கிட்ட தட்ட 100 ஜிகா வாட் ஆற்றல் கொண்ட லேசர் கதிர்கள் தான் இதை தூக்கி செல்ல போகிறது.
இப்படி ஒன்று இரண்டு அல்ல 100 கணக்கில் 1000 கணக்கில் அனுப்பப்பட உள்ளது.

இந்த லேசரினால் அந்த துகளை ஒளியின் வேகத்தில் 20 சதம் வேகம் என்ற அளவில் கொண்டு செல்ல முடியும்.
இந்த விண்கலம் எங்கே போய் தன் ஆராய்ச்சியை செய்ய  போகிறது என்றால் நான் முன்பு குறிப்பிட்ட ஆல்பா சென்டரியில் தான்.

இந்த வேகத்தில் இது 20 ஆண்டுகளில் அங்கு சென்று அடையும்.
அங்கிருந்து தகவல் வந்து சேர ஒரு 20 ஆண்டு எப்படி பார்த்தாலும் ஒரு தலைமுறைக்குள் இதை சாதித்து விடலாம்.
சைஸை வைத்து அதை ஏதோ சிறு துகள் என்று எண்ணி விட வேண்டாம்.
அது அங்கே சென்றதும் போட்டோ மற்றும் டேட்டாகளை பூமிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தது.
இதை அங்கே கொண்டு செல்வதில் ஒரே ஒரு மகா பிரச்னை உள்ளது.
அதன் பெயர் "ஸ்பேஸ் ரேடியேஷன்."

நாம் அனுப்பும் பெரிய பெரிய விண்கலங்கள் எல்லாம் கூட இதற்கு தப்புவதில்லை. அதனால் அதில் ரெடியேஷன் தாங்கும் shield அமைப்பு வைக்க பட்டு இருக்கும்.
நம்ம தக்குண்டு ஸ்பேஸ் ஷிப்பில் அதற்கெல்லாம் இடம் இல்லை என்பதால் இது கதிர்வீச்சால் பாதிக்க படாமல் இருக்க ஒரு வைழிமுறையை கண்டு பிடித்தார்கள்..
அதாவது இதில் வைக்க படும் எலெக்ட்ரானிக்ஸ் சமாச்சாரம் பாதிப்புக்கு உள்ளாக உள்ளாக அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் (self healing ) டெக்நாலஜியில் வடிவமைக்க பட்டுள்ளது.
(நம்ம volvarin ஸ்டைலில்)

இதற்கான லாஞ்சிங் தேதிகள் இன்னும் அறிவிக்க பட வில்லை என்றாலும் 2017 இல் ஒரு புது வித முயற்சியை மேற்கொண்டு,
எப்போவேணும் என்றாலும் ஏலியன் எனும் பக்கத்து விட்டு காரனை தேடி பயணம் செல்லலாம் அந்த சிறு துகள்.



அன்பு நண்பன் அறிவியல் காதலன் ரா.பிரபு

Comments

  1. இலுமினேட்டியாவின் பெரிய கட்டளையிலிருந்து ஐக்கிய மாகாணத்திற்கும் உலகெங்கிலும் உள்ள வாழ்த்துகள், இது இலுமினெட்டின் சகோதரத்துவத்தில் சேர ஒரு திறந்த வாய்ப்பாகும், அங்கு நீங்கள் இழந்த கனவுகள் மீட்கப்படலாம், மேலும் அங்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் காணலாம் எந்த இரத்த தியாகமும் இல்லாமல். மேலும் புதிய உறுப்பினர்களை சகோதர சகோதரிகளிடம் சேர்ப்பதற்காக 700,000 அமெரிக்க டாலர் தொகையை செலுத்துகிறோம், மேலும் அவர்களது தெரிவு மற்றும் இடம் ஆகியவற்றிற்கான ஒரு வீடு, முதலீடுகளுடன் இடம் பெறுவதோடு, வாழ்க்கையில் இந்த வாய்ப்பைப் புகழ்ந்துகொள்வதற்காகவும் கொடுக்கிறோம்.

    புதிய உறுப்பினர்களுக்கு நன்மைகள் அளிக்கின்றன.
    1. அமெரிக்க டாலர் 700,000 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசு.
    2. ஒரு புதிய ஸ்லீக் ட்ரீம் CAR டாலர் $ 150,000 டாலர் மதிப்புள்ளது
    3. உங்கள் தேர்வு நாட்டில் வாங்கி ஒரு கனவு வீடு
    4. உங்கள் விருப்பப்படி எந்த நாட்டிற்கும் செல்ல இன்னும் இராஜதந்திர பாஸ்போர்ட்


    குறிப்பு; இந்தியா, துருக்கி, ஆபிரிக்கா, அமெரிக்கா, மலேசியா, துபாய், குவைத், யுனைட்டட் கிங்டம், ஆஸ்திரியா, ஜெர்ம்னி, ஐரோப்பா போன்ற நாடுகளிலிருந்தும் இல்லுமினாட்டி சகோதரத்துவத்தை நீங்கள் இணைக்கலாம். ஆசியா, ஆஸ்திரேலியா, முதலியன,

    குறிப்பு: நீங்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள ஆர்வம் இருந்தால்: illumiinatibrothehood@gmail.com

    ReplyDelete
    Replies
    1. neengal enna solla varugireergal endru puriyavillai.. Konjam thelivu padutthungalaen...

      Delete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"