கடைசி கடிதம்.





கடைசி கடிதம் 

(கதை, கற்பனை ,எழுத்து :ரா.பிரபு)

வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு குட்டி தொடரில் உங்களை சந்திக்கிறேன். சங்கர் ராமன் என்கிற ஒரு நடுத்தர வயது மனிதனின் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் நடந்த ஒரு நாள் சம்பவம் தான் இந்த "கடைசி கடிதம்"
கதைக்கு செல்வோம் வாருங்கள்......

அது 1992 ஆம் வருடம்.
கோடை தினத்தில் ஒரு குறிப்பிட்ட நாள்.
சங்கர ராமன் ஒரு விளக்க முடியாத மனநிலையில் இருந்தார்.
சங்கர ராமன் ஒரு சாதுவான நல்ல மனிதர். அதிகம் அதிர்ந்து பேசாதவர்.
வேலையில் அதிக கடமை உணர்ச்சியும் கடின உழைப்பும் கொண்டவர்.
விளைவு,
இத்தனை நல்ல உள்ளங்களை சம்பாதித்திருந்தார்.
நடுத்தர வர்க்கம் என்பதன் மிக சரியான அச்சு வார்ப்பு இந்த சங்கர ராமன்.
குடும்பம் கொஞ்சம் பெரிசு. அன்பான பண்பான மனைவி தவிர 4 பெண்கள்.
அப்புறம் ஆன் குழந்தையை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தோடு விடா முயற்சியில் பிறந்த கடைசி கடைக்குட்டி பய்யன்.

தனது போஸ்ட் மேன் உத்யோகத்தில் இத்தனை பேரை வளர்த்து ஆளாக்கியதற்கு அவருக்கு ரெண்டு நோபல் பரிசு கூட கொடுக்கலாம்.
அவருக்கு இருக்கும் கவலை தனது கடைசி பெண் இன்னும் கரைசேர வில்லை. அதற்குள் இந்த நாள் வந்து விட்டதே என்பது தான்.
எந்த நாள்?

இன்று சங்கர ராமனுக்கு ரிடயர்மெண்ட் தினம்.

சென்னையில் ஒரு முக்கிய கிளையில் உள்ள போஸ்ட் ஆபீசில் அவர் போஸ்ட் மேன். இதனை வருட போஸ்ட்மேன் அனுபவத்தில் அவர் நிறைய நல்ல பெயரையும் கொஞ்சம் பணத்தையும் சம்பாதித்து இருந்தார்.
ரிடேயர்ட் தினத்தில் எந்த தொழிலாளிக்கும் இருக்கும் ஒரு விளக்க முடியாத உணர்ச்சி அவரையும் ஆட்கொண்டது.
ஒரு சின்ன உரை போல நிகழ்த்த சொன்னார்கள் உடன் வேலை செய்பவர்கள்.
இரத்தின சுருக்கமாக நாலு வார்த்தைகள் சொல்லி இருந்தார்.

"வேலை .. அது வெறும் சம்பலத்துக்காக செய்யும் ஒரு கடமை அல்ல..அது நமது கவுரவத்தின்... இந்த சமுதாயத்தில் நமக்கென ஒரு இடத்தை நமக்கு அளிக்கும் ஒரு அடையாளம்.
வேளையில் நேர்மை இல்லாதவன் தனக்கே நேர்மை இல்லாதவன் ஆவான்.
என்னால் முடிந்தளவு கடவுள் தந்த இந்த வேலையை கடவுளாகவே பாவித்து தான் செய்து வந்து இருக்கிறேன்.
உங்களுடன் சேர்ந்து இவ்வளவு நாள் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்"

பல பேர் கரகோஷத்திற்கும் நல விசாரணைக்கும் பின் சங்கரராமன்  தனது வழக்கமான மேஜையை அடைந்தார். கடைசியாக அனைத்தையும் சுத்தம் செய்து வைத்தார். தான் எப்போதும் வைத்திருக்கும் ஒரு சின்ன சாய்பாபா சிலை மற்றும் அம்மன் போட்டோ இரண்டையும் எடுத்து கொண்டார்.

"ஹ்ம்ம் நாளையிலிருந்து இந்த இருக்கையில் குப்பனோ சுப்பனோ யாரோ ஒருவன் இருப்பான்.
எனது அருமை இருக்கையே ... விடை பெறுகிறேன்"

தனது பொருட்களை எடுத்து கொண்டு மேஜையை ஒரு முறை சுத்தம் செய்த போது தான் .... அதை கவனித்தார்.....

தனது மேஜையின் ஆழத்தில் தனக்கே தெரியாமல் அது சிக்கி இருந்தது...
ஒரு கடிதம்.
சாதாரண இன்லேண்ட் லெட்டர்...

"அட இது எப்படி இங்க போச்சி .... என்ன லெட்டர் இது எவ்வளவு நாளா இங்க இருக்கு"

சிந்தனையோடு உள்ளே கையை விட்டு வெளியே எடுத்தார்.
தான் டெலிவரி செய்ய வேண்டிய ... ஆனால் செய்யாமல் விட்டு விட்ட ஒரு கடிதம் அது என்பது அவருக்கு புரிந்தது.
அவசர அவசரமாக அதன் தேதியை பார்த்தார்..

"1990 "

கடவுளே இரண்டு வருடமாக அல்லவா இது இங்கே தங்கி இருக்கிறது.
இதில் என்ன இருக்கும் தெரிலேயே
வெகு இயல்பான சாதாரண விஷயமாக சம்பரதாய மாக எழுத பட்ட ஒரு கடித்தமாக இருக்கலாம் ...
அல்லது உயிர் போற அவசரமாக கூட இருக்கலாம்.
தனது பணியின் கடைசி நாளில் இப்படி ஒரு குற்ற உணர்வு ஏற்பட வேண்டுமா கடவுளே..
இதில் முக்கியமாக ஒன்றும் இருந்து விட கூடாது..
அதை பிரித்து பார்ப்பது என முடிவு செய்து கொண்ட சங்கர ராமன் அதை தனது பையில் போட்டு கொண்டு வெளியேறினார்.

அந்த கடிதம்....

அவரது பணியின் இந்த கடைசி நாளில் அவருக்கு சில விசித்திர அனுபவதை தர போவதை பற்றி அப்போதைக்கு அவர் அறிந்திருக்க வில்லை........

தொடரும்............





 ~~~~~~~~~~ * * * * ~~~~~~~~~~~





கடைசி கடிதம்( அத்தியாயம் 2)



சங்கர ராமன் தனது ஆபீஸை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ..தான் வழக்கமாக செல்லும் அந்த முருகன் டீ கடையை அடைந்து உள்ளே தனது வழக்கமான பெஞ்சில் சென்று அமர்ந்தார்.
கடை முதலாளி சிநேகமாக புன்னகை செய்ததற்கு மறு புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
டீ மாஸ்டர் இவரை பார்த்ததும்' லைட் டீ சர்க்கரை கம்மி ' ....(இவரது வழக்கமான மெனு ) ஐ போட தொடங்கினார்.

சங்கர ராமன் தனது பையில் இருந்து அந்த கடிதத்தை எடுத்தார் கொஞ்சம் தயக்கதோடு பிரித்தார்...பார்த்தார்..

அழகிய பெண் கையெழுத்தில் எழுத பட்டிருந்தது அந்த கடிதம்..
அதை படிக்க தொடங்கினார்..

"அன்புள்ள அம்மா..
பண்புள்ள அப்பா....
உங்கள் மகள் மகிழ்ச்சியின் மறுஉருவமாக எழுதி கொண்டது....
இங்கே நான் மற்றும் உங்கள் மாப்பிளை நலமோ நலம்.. உங்கள் நலன் அறிய அவா..
கடவுளே வந்து பார்த்து வைத்தாலும் கிடைக்காத நல்ல மாப்பிளை நல்ல வாழ்க்கை எனக்கு அமைத்து கொடுத்திருக்கிறீர்கள்..
கல்யாணத்திற்கு பின் எனது முதல் கடிதம் இது..
மட்டற்ற மகிழ்ச்சி யை வாழ்வில் அனுபவிப்பது அநேகமாக இதுவே முதல் முறை....
இந்த மகிழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம் தான் மீன் முள்ளாய் உறுத்துகிறது..
அது நாங்கள் வாழ்வது உங்கள் சொத்தில் தான். ஆனால் நீங்கள் எங்கோ சேலம் பக்கத்தில் குக்கிராமதில் ஒரு மூலையில் ....
அது மட்டும் தான் பிடிக்க வில்லை.
இது உங்கள் வீடு நீங்கள் எங்களிடம் வந்து ஒன்றாக தங்கி இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை..
விரைவில் உங்கள் பதிலை எதிர் பார்த்து
அன்பு மகள் ...
 மோனிகா.."

அவ்வளவு தான் இருந்தது கடிதத்தில்..

"அடடா ஒரு புது கல்யாண பெண் சந்தோசமாய் தனது பெற்றோருக்கு எழுதிய முதல் கடிதம்.. இதை தவற விட்டு விட்டோமே...
அதன் பின் என்ன நடந்திருக்கும் அந்த பெண் வேறு தபால் போட்டிருப்பாளா.. அவர்கள் இப்போது சேர்ந்து வாழ்கிறார்களா இல்லையா"

கடிதத்தை திருப்பி பார்த்தார் டூ அட்ரஸில் எங்கோ சேலம் பக்கத்தில் ஒரு ஊர் அட்ரஸ் இருந்தது.
ஓ இது அங்கே அனுப்ப பட்டிருக்க வேண்டிய கடிதம்.
ஃபிரம் அட்ரஸ் ஐ பார்த்தார் அது இங்கே இருந்து ஒரு நாலு தெரு தள்ளி தான்.
கடிதம் இங்கே தான் போஸ்ட் செய்திருக்கிறார்கள்..

அந்த நாலு தெரு தள்ளி அந்த பெண்ணை நேரே சென்று பார்த்தால் என்ன .. அந்த பெண்ணிடம் தனது கவன குறைவுக்கு ஒரு மன்னிப்பு கேட்கலாம் தப்பில்லை..
குறிப்பாக இரண்டு வருடம் முன் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தவள் இப்போது எப்படி இருக்கிறாள் என அறியும் ஆவல் அவரை உந்தி தள்ளியது..
சம்பந்தம் இல்லாமல் தனது கடைசி பெண் நினைவுக்கு வந்து சென்றாள்.
அவளுக்கு கல்யாணம் என்றால் அதற்கு இன்னும் ஒரு 5 லட்சம் தேவையாயிற்றே என்ன செய்ய போகிறேன். எப்போதும் அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம் தான் அது அதான் இப்போதும் வந்து சென்றது..

டீ கு காசு கொடுத்து விட்டு வெளியேறினார் ..
அந்த அட்ரஷை பார்த்து கொண்டார் ஒரு ஆட்டோவை பிடித்து அங்கு செல்ல தீர்மானித்தார்..

அந்த முகவரியில் ....அவருக்காக காத்திருந்தது... ஒரு எதிர் பாராத அனுபவம்......

தொடரும்.........





 ~~~~~~~~~~ * * * * ~~~~~~~~~~~







கடைசி கடிதம் (அத்தியாயம் 3)


ஆட்டோவுக்கு காசை கொடுத்து விட்டு  சங்கர ராமன் அந்த முகவரியில் இறங்கிய போது மணி காலை 11.45
கையில் உள்ள முகவரி படி நடந்து சென்று அந்த வீட்டை அடைந்தார்..
கையில் உள்ள முகவரியை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து கொண்டார்.
அந்த வீடு ஒரு குட்டி பங்களா டைப்பில் இருந்தது.

நன்கு பராமரிக்க பட்டிருந்தது..
கதவில் நுணுக்கமான வேலைபாடை ரசித்த படி அங்கிருந்த அழைப்பு மணி பொத்தானை அமுக்கினார்...

உள்ளே எங்கேயோ அது இசைப்பது கேட்டது.

கொஞ்ச நேர காத்திருப்புக்கு பின் கதவை திறந்து ஒரு இளம் பெண் எட்டி பார்த்தாள்..
கழுத்தில் தாலி நெற்றியில் குங்குமம் சகிதம்.
"யாருங்க " என்றால் குழப்பமாக

"அது... வந்துமா... நான்... உங்களுக்கு தெரியாது ஆனா உங்களை எனக்கு தெரியும் ... அது கொஞ்சம் உள்ள வந்து பேசலாமா " என்றார்

"வாங்க " என்று குழப்பமாக அவள் கதவை திறந்தாள்.

உள்ளே பிரமாண்ட ஹாலில் தெரிந்த சோபாவில் தயங்கிய படி அமர்ந்தார்..
சுவற்றில் பல படங்களில் பல போஸ் களில் இந்த பெண் ஒரு ஆணுடன் இருப்பது தெரிந்தது..
இவளது கணவன் கொஞ்சம் உயரம் கூர்மையான மூக்கு
"இவள் அழகுக்கு அவன் அவ்வளவு பொருத்தம் இல்லையே " என்று ஒரு சிந்தனை வந்து போனது..

"நல்லா இருக்கியாமா " என்றார்

"நல்லா இருக்கேங்க ... ஆனா நீங்க யாருனே சொல்லலேயே.."

"உம் பேரு மோனிகா தானே மா "

"வாட்.... மோனிகா வா.." அவள் முகம் திடீரென ஒரு இருளுக்கு போனது..

"நான் மோனிக்கா இல்லைங்க என்னோட பேரு உஷா" என்றாள்.

"அப்போ இந்த அட்ரஸ் ல மோனிகாணு...."

"இருந்தாங்க.... நான் வர்றதுக்கு முன்னாடி..."

"என்னது ..அப்போ மோனிகா யாரு "

" என்னோடய புருஷனோட முதல் மனைவி "

"என்னது.... முதல் மனைவியா..." சங்கர் ராமன் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

 "இரண்டே வருடத்தில் இன்னொரு கல்யாணமா... மோனிகா எப்படி சம்மதித்தாங்க... இப்போ எங்கே அவங்க" என்று கேட்டார் அவசர அவசர மாக

"இருந்தா தானே சம்மதிக்க அவங்க இறந்துடாங்க...இரண்டு வருடம் ஆச்சு"
என்றால் அவள்.

"வாட்" சங்கர ராமன் துல்லியமாக அதிர்ந்தார்...

"ஏன்... எப்படி என்னாச்சு"

"என்னாச்சுன்னு தெரியல என் கணவர் சொல்லி தான் தெரியும் ஒரே சோகமா இருப்பாளாம்...
எப்போ பார்த்தாலும் டிப்ரஷன் தானாம்..
வாழ்க்கை வெறுத்து போன மாதிரியே பேசுவாளாம் ஏதோ மண நோய் போல..
ஒரு நாள் விரக்தி தாங்காம தூக்குல தொங்கிட்டாளாம்....
நான் அவர் கூட ஆபிசில் வேலை பார்த்து வந்தேன்.. என்னை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார் திருமணத்துக்கு முன்பே அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டு தான் திருமணம் செய்தார்" என்றால் அவள்

சங்கர ராமனை குழப்பம் சூழ்நதது...
'என்னது அவள் விரக்தியாக இருந்தாளா...
வருத்தமாக இருந்தாளா...
அந்த கடிதத்தில் தான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக சொன்னது அவருக்கு நினைவு வந்து போனது...
'இங்கே நிச்சயம் ஏதோ குழப்பம் .....
இல்லை இல்லை.... மர்மம் ...இருக்கிறது .. அந்த மோனிகா விடம் ... இந்த உஷா விடம்...'
என்று உறுதியாக நினைத்து கொண்டார் சங்கர ராமன்..
ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.

சங்கர ராமன் ஒரு முறை அந்த வீட்டை சுற்றி பார்த்தார்..
நல்ல பசையான ஆளு தான் என நினைத்து கொண்டார்..

"உங்க வீட்டு காரரை நான் பார்க்கனுமே மா " என்றார்.

"அவருக்கு ஆபிஸ் இங்க பக்கத்துல தான் லஞ்சுக்கு இங்க தான் வருவார் இப்போ வர நேரம் தான் ....
ஆமாம் நீங்க யாருனே சொல்லலேயே சார்"

" மோனிகாவுக்கு வேண்டியவர்னு வச்சிக்கோங்களேன்..."

"சரிங்க அப்போ வெயிட் பண்ணுங்க அவரு இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாரு"

உஷா போட்டுவந்த காப்பியை சாப்பிட்டு சரியாக 18 நிமிடம் கழித்து காலிங் பெல் சத்தம் கேட்டது...
அதை தொடர்ந்து உஷா அங்கே சென்று கதவை திறப்பதையும் சுவர் புகை படத்தில் இருந்தவன் கதவை திறந்து உள்ளே வர அவனிடம் இவரை பற்றி அவள் ஏதோ சொல்லுவதும் தெரிந்தது ..
சற்றே முகம் மாறியவனாய் இவரை நெருங்கிய அவன்..

"ஹலோ சார் நான் ராஜேஷ் " என்று கையை நீட்டினான் உறுதியான கைகள்..
அவனுக்கு கையை நீட்டுவதற்கும் கை குளுக்குவதற்கும் இடையிலான சில செகண்டில்.... சங்கர ராமன் மூலையில் சில மின்னல் வெட்டியது....
குறுக்கு எழுத்து புதிர் போல சில சிந்தனை.....

' உங்கள் சொத்தில் தான் வாழ்கிறோம் அப்பா ...... அவள் எழுதிய வரிகள்....

கூட வேலை செய்த அழகி ....உஷா.....

மகிழ்ச்சியின் உச்சத்தில்..... மோனிகா வார்த்தைகள்.....

எப்போ பாத்தாலும் டிப்ரஷன் .... உஷா வார்த்தைகள்....

சுற்றி சுவற்றில் ஒரு புகை படம் கூட மோனிகாஉடையது இல்லையே.....,'

பல சிந்தனைகள் ஒருங்கிணைந்து அவருக்கு ஒரு தீர்வை..... ஒரு சந்தேகத்தை ... கொடுத்தது...

"நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா சார் " என்றவனை உறுதியாக பார்த்து

"உங்க கிட்ட தனியா பேசணும் "
என்றார்."  திட்ட வட்டமாக..






~~~~~~~~~~ * * * *~~~~~~~~~~~~






கடைசி கடிதம் (அத்தியாயம் 4)



"உங்களிடம் தனியாக பேச வேண்டும்" என்று சொன்னவரை குழப்பமாக பார்த்தான் ராஜேஷ் ..

பிறகு சற்று தயக்கத்தோடு "சரி வாங்க மேல போய்டலாம் " என்றான்.

இருவரும் படியேறி மாடி யில் இருந்த ஒரு அறை க்கு சென்றார்கள் அங்கு இருந்த ஒரு நாற்காலியை காட்டி "உட்காருங்க" என்றான் ராஜேஷ்  பின்
"சொல்லுங்க நீங்க யாரு" என்றான்.

"போலீஸ் " மிக உறுதியாக வந்தது சங்கர ராமன் வார்த்தைகள்

"வாட்  "போலீஸ் " எதுக்கு என்ன பாக்க வந்திருக்கு..

"இறந்து போன உங்கள் மனைவி கேஸ் விஷயமாக பேச தான்"

"ஆ....ஆனா அ... அது தான் சூசைட் னு போலீஸ் கேஸை முடிச்சிடிங்களே.... இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தானே....விசாரிக்க வந்தது... இப்போ என்ன திரும்ப..."

"மிஸ்டர் நாங்க கிரைம் பிராஞ்ச் ...ஸ்பெஷல் ஆபீசர்... திடீர்னு தான் எங்களுக்கு அந்த மகா ஆதாரம் கிடைத்தது மோனிகா தற்கொலை செய்யவில்லை சொத்துக்காக கொல்ல பட்டிருக்கிறாள்..
மேலும்......."

சொல்லி நிறுத்திவிட்டு அவன் கண்ணை உற்று பார்த்து " அதை பண்ணது நீங்க தான் என்றும் தெரியும். ஆதார பூர்வமா...... " என்றார்.

ராஜேஷ் அனல் கக்கும் கண்களுடன்...நடுங்கும் கை நடுங்கும் குரலுடன் கத்தினான்

"என்ன விளையாடுறீங்களா... கெட் அவுட் ...என்ன யா ஆதாரம் இருக்கு நான் தான் கொன்னேன்னு..."

"கூல் அண்ட் ரிலாக்ஸ் பாய் ஆதாரம் பார்க்க அசையா இருந்தா .... நான் சொல்ற ஹோட்டலுக்கு இன்ணைக்கு மாலை 4 மணிக்கு வா....
வந்து என்னை பாரு... என்று அந்த ஹோட்டல் பெயர் மற்றும் ஒரு மொபைல் நம்பரை கொடுத்தவர்..
எந்த தயக்கமும் இன்றி அவனை திரும்பி கூட பார்க்காமல் உறுதியான நடை உடன் வெளியேரினார்.

                            * * * *

விறு விறு வென வெளியேறி pco வில் சங்கர ராமன் சில போன் கால் களை செய்தார் ...
பிறகு..
அந்த குறிப்பிட்ட ஹோட்டலில் ஒரு ரூம் புக் செய்தார்.
பாக்கெட்டில் உள்ள அம்மன் போட்டோவை ஒரு முறை தொட்டு கொண்டார்.

                            * * * *

மிக மிக சரியாக அந்த 4 மணிக்கு அந்த ஹோட்டல் அறை கதவு தட்ட பட்டது சங்கர ராமன் திறந்தார் ..
ராஜேஷ் இறுகிய முகத்துடன் நிற்பது தெரிந்தது..
உள்ளே வந்ததும் உட்கார சொல்லி சைகை காட்டினார்
சோபாவில் அமர்ந்தான்..
நெருப்பில் இருப்பதை போல இருந்தான் ..

"எங்க சார்.... என்ன ஆதாரம் சார் ...காட்டுங்க பார்க்கலாம் " என்றான்
குரலில் பதட்டம் சடுகுடு ஆடியது..

"பொறு " என்று நிதானமாக ஓரமாக வைத்திருந்த பையில் இருந்து அந்த டேப் ரிகார்டரை எடுத்து வைத்தார்.

இதில் இருக்கு உன்னோடய மொத்த ஆதாரம்

அவன் அவசரமாக டேப்பை நோக்கி கையை நீட்ட அதை தூக்கி கொண்ட சங்கர ராமன்..

"ஆவசரம் வேண்டாம் இதை கேட்கும் முன் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு "

"என்ன பேசணும்"

" இவ்வளவு உறுதியான ஆதாரம் கிடைத்த பின் நீ இன்னும் கைது பண்ண படாம இருக்கியே ஏன்?..
நான் போலீஸ் ஸ்டேஷன் கூப்பிடாம உன்ன ஹோட்டல் கூப்பிட்டேன் ஏன்?"

ராஜேஷ் அவரை நிமிர்ந்து பார்த்தான் அவர் அலட்சியமாக சாய்ந்து உட்கார்ந்தார் ..
ராஜேஷ் பதட்டமாக தண்ணீர் பாட்டிலை எடுத்து முழுதாக வயிற்றுக்கு வார்தான் பின் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் 5 நிமிடம் சுத்தமாக ஏதும் பேச வில்லை ..
பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய் அவர் முன் அமர்ந்தான் ..

"இ....இங்க பாருங்க ஆபீசர் .... நான் வந்து.... அது..."

"என்னிடம் தயக்கமோ பயமோ தேவை இல்லை ரிலாக்ஸ்"

"ச....சரி....ஓகே  ஆபீசர் நான் ஒத்துக்குறேன் இந்த கொலையை என் மனைவி மோனிகாவை நான் தான் கொன்னேன் சொத்துக்காக ...
பிறகு கூட வேலை பார்க்கும் உஷாவை மணந்தேன் ... அவளுக்கு இதெல்லாம் தெரியாது...
எல்லா ஆபிசருக்கும் அப்போவே எல்லாத்தையும் கவினிச்சாச்சு.....
சரி உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க "

"5 லட்சம் " என்றார் சிறிதும் தயங்காத சங்கர ராமன்..

ராஜேஷ் கொஞ்சம் தளர்ந்தவனாய்

" ஒரு வகைல நான் எதிர் பார்த்தேன் ஆபீசர் " என்றவன்
அந்த சூட்கேஸை நீட்டினான்

" நீங்க கேட்டதை விட கொஞ்சம் அதிகமாவே இருக்கு" என்றான்

" நான் ஆதாரத்தை பார்க்கலாமா"

"தாராளமா" என்று அந்த டேப்பை நீட்டினார்

அதை பாய்ந்து ஆன் செய்தான் ..
அதில் இவனுடைய குரல் மிக தெளிவாக ஒலித்தது....

"ச....சரி....ஓகே  ஆபீசர் நான் ஒத்துக்குறேன் இந்த கொலையை என் மனைவி மோனிகாவை நான் தான் கொன்னேன் சொத்துக்காக ...
பிறகு கூட வேலை பார்க்கும் உஷாவை மணந்தேன் ... அவளுக்கு இதெல்லாம் தெரியாது...
எல்லா ஆபிசருக்கும் அப்போவே............"

ஐந்து நிமிடம் முன்னாடி இவன் பேசியது ஒலித்ததை கேட்டு அதிர்ந்தான்..

"யோவ் என்ன விளையாடுறயா"

" மிஸ்டர் ராஜேஷ் சொந்த வாக்கு மூலத்தை விட உறுதியான ஆதாரம் வேறு ஏது "

அவன் கடுப்பாகி " புல் ஷீட் என்ன முட்டாள் ஆக்கிட இல்ல " என்று கோப மாணவன்... பின் நிதானமாக அந்த டேப்பை எடுத்து கொண்டு

" இனி என்னை தொல்லை பண்ணாதீங்க ஆபீசர் "

என்று விட்டு விறு விறு என கதவை நோக்கி நடந்தான்

"மிஸ்டர் ராஜேஷ் ஒன் மினிட் "

அவர் குரல் முதுகை தொட்டது..

"உங்களை சந்திக்க சில பேர் பக்கத்து ரூம்ல நம்ம கான்வரசேஷனை ஒட்டு கேட்ட படி காதிருக்காங்க ..."

அவர் சொல்லி முடிக்கவும்  ஒரு நாலைந்து ஆசாமிகள் கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள் அவர்களை பார்த்தாலே அவர்களுடைய புரோபஷன் என்னவென்பது புரிந்தது "

" யா....யார் இவர்கள் "

" கிரைம் பிரெஞ்ச் ஐ சேர்ந்த ஸ்பெஷல் ஆபிசர்ஸ்... எனது நண்பர்கள்"

" அப்போ நீ ... நீங்க "

" நான் ஒரு போஸ்ட் மேன்.... ரிடயர்ட் போஸ்ட் மேன் ..."

" அநியாயத்தை அழித்து உண்மையை வெளிப்படுத்த சில நேரம் கடவுள் போஸ்ட் மேன் அவதாரத்தில் கூட வரலாம் ..... யார் கண்டது  ".. என்றார்

சங்கர ராமன் தனக்கு கிடைத்த கடிதம் பற்றி அதன் மூலம் வந்த சந்தேகம் பற்றி நிதானமாக சொன்னார்.

மிக மிக திட்டமிட்டு செய்த கொலை யில் இப்படியும் மாட்ட முடியுமா...
ஒரு டெலிவரி செய்ய படாத கடிதம் ஒருவன் தலையெழுத்தையே மாற்றுமா..
என்ற அதிர்ச்சியோடு ராஜேஷ் அவர்களுடன் தலையை தொங்க போட்டு நடக்க....

 தனது கடைசி நாளில் ஒரு அசாதாரண செயலை செய்த திருப்தியில் தலை நிமிர்ந்த படி கூட நடந்து வந்தார்.......

'ரிடயர்டு போஸ்ட் 'மேன்  சங்கர ராமன்


முற்றும்.



பின்னுரை....

சங்கரராமன் மோனிகாவுக்கு தேடி கொடுத்த நியாயத்துக்கு மோனிகா ஆவி கொடுத்த பரிசு..தனது சொத்தில் 5 லட்சம்...(அவர் பெண் திருமணத்திற்கு)







Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"