"ஈயும் குட்டி சூறாவளியும்"

 

"ஈயும் குட்டி சூறாவளியும்"


ரா.பிரபு


"Bumblebee’s shouldn’t be able to fly."

ஈக்களால் பறக்க முடியாது..

நூற்றாண்டுக்கு முன் இருந்து சொல்ல பட்டு வந்த ஒரு கூற்று இது.


ஆம் 'ஏரோடைனமிக்ஸ் விதி அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் ஒரு ஈயால் பறக்க முடியாது தான் .ஆனால் நல்ல வேலை ஈக்கு இந்த விதிகள் தெரியாது அதனால் அது தொடர்ந்து பறந்து கொண்டிருக்கிறது..'(the bee movie இன் ஆரம்ப சீனில் இந்த வசனத்தை சொல்லி இருப்பார்கள் மற்றும் ஒரு பாக்சிங் படம் ஒன்றில் கூட ஒரு வீரனை ஊக்க படுத்த இதை  சொல்லி இருப்பார்கள் படம் பெயர் நினைவில் இல்லை. )


பல வருடங்களுக்கு முன் நடந்தது இது.. 

இரண்டு நண்பர்கள் ஒரு டின்னரில் சாப்பிட்டுக்கொண்டு 'லைட்டாக' மது அருந்தி கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள் அதில் ஒருவர் உயிரியலாளர் மற்றொருவர் பொறியாளர்.

அந்த உயிரியலாளர் அந்த பொறியாளரை பார்த்து ஒரு ஈ பறப்பதற்கான அறிவியலை உங்களால் விளக்க முடியுமா என்று கேட்கிறார். ( அவர்கள் பேசி கொண்டது Bumblebee எனும் ஈ வகை பற்றி ) அந்தப் பொறியாளர் உடனே குனிந்து அருகில் இருந்த நேப்கின் பேப்பரை எடுத்து பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு அவசர அவசரமாக சில கணக்குகளை போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்துவிட்டு சொன்னார்."Bumblebee’s shouldn’t be able to fly."


ஆம் அந்த ஈயின் இறக்கை அளவும் அதன் உடல் அளவும் கணக்கிட்டு பார்க்கும் போது அந்த ஈ அறிவியல் ரீதியாக பறப்பதற்கு சாத்தியமே இல்லை. மேலே சொன்ன சம்பவம் நடந்ததற்கான ஆதாரப்பூர்வமான குறிப்புகள் எதுவும் இல்லை ஆனால்..

1934 இல் பிரான்ஸ் நாட்டில் இதை பற்றி ஒரு ஆய்வு புத்தகம் ஒன்று ஆதார பூர்வமாக வெளியானது (அதன் பெயர் Le vol des insectes, ) அதில் பல சில ஆய்வுகளுக்கு பின் ஆதார பூர்வமாக சொல்ல பட்ட விஷயம் bumble bee மட்டும் இல்லை எந்த வகை ஈயுமே' law of physics ' படி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.


நம் கண் முன்னால் தினம் பறந்து கொண்டிருக்கும் ஈக்கள் அறிவியல் விதி படி பறக்க முடியாமல் போக காரணம் என்ன உண்மையில் ஈக்கள் அறிவியல் விதிகளை மீறுகின்றனவா ? 

அதிவேக பிரேம் ரேட்கள் கொண்ட கேமராகள் இந்த உலகத்துக்கு வந்த பின் அது வரை இருந்து வந்த பல ரகசியங்கள்..பல  விஷ்யங்கள் விளக்க பட்டன.( உதாரணமாக ஒரு குதிரை வேகமாக ஓடும் போது ஏதோ ஒரு கணத்தில் குதிரை அனைத்து கால்களும் பூமியில் தொடாமல் அந்தரத்தில் மிதக்குமா என்று ஒருவர் ஆராய்ந்தார். அதி வேக கேமரா கொண்டு அதற்கு "ஆம் " என்று விடை கண்டார் அதை பற்றி வேறு பதிவில் சொல்கிறேன் )

அதி வேக கேமராக்கள் ஈக்கள் பற்றிய பல அதிசயங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. ஒரு விமானம் பறப்பதை விடவும் மிகவும் சிக்கலான பறக்கும் நுட்பம் கொண்டது ஒரு ஈ என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ? நாம் கண்ணை ஒரு முறை சிமிட்டும் நேரத்துக்குள் ஈக்கள் தங்கள் ரக்கையை 220 முறை விசிற முடியும் என்றால் நம்ப முடியுமா ? 

ரோட்டில் ஆசுவாசமாக நடந்து செல்கிறீர்கள் வழியில் ஒரு பாம்பு படுத்து இருக்கிறது அதை பார்த்து வினாடி நேரத்துக்குள் குதித்து பின் வாங்குகிறீர்கள் இதே போல வேகமாக ஒரு ஈ பறக்கும் போது வழியில் வேட்டையாடியை கண்டால் சட்டென்று நின்று பின் வாங்கி தப்பும். ஆனால் அதை அவைகள் செய்யும் வெகம் மனித கண்களால் பார்க்க முடியாதது. அதை காண உயர் வேக கேமராவில் படம் பிடித்து அதை ஸ்லோ மோசனில் போட்டு பார்த்தால் ஈக்கள் நின்று தங்கள் கால்களை அகற்றி பிரேக் போட்டு ரிவர்ஸ் கியர் போட்டு திரும்பி வருவதை காண முடியும்.


இப்படி பட்ட திறமையும் வேகமும் தான் ஈக்களை அறிவியல் விதியை மீறி பறப்பதாக மனிதனை பல வருடங்களுக்கு நம்ப வைத்தது. ஆனால் ஒரு வழியாக ஆய்வாளர்கள் இதை நவீன கருவியுடன் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தி " அட இது அறிவியல் விதி எல்லாம் மீறவில்லைப்பா நாம் புரிந்து கொண்ட வகையில் இது பறக்க வில்லை அவ்வளவு தான் " என்று கண்டு பிடித்து சொன்னார்கள். அந்த ஆய்வாளர்களின் முக்கியமானவர் சீனாவை சார்ந்த விஞ்ஞானி' Lijang Zeng ' அவரும் அவரது டீமும் ஈ பின்னாடி லேசரும் எதிரொளிக்கும் கண்ணாடியும் எல்லாம் ஒட்டி. ஏதேதோ ஆய்வுகள் செய்து பின்  இதன் அறிவியலை சரியாக படம் பிடித்து காட்டினார்கள்.


முதலில் ஒரு ஈ பறப்பது விமானம் பறக்கும் நுட்பத்தில் அல்ல. அது சிக்கலான வேறு வழிமுறையை கையாள்கிறது.

ஒரு விமான ரக்கை காற்றில் கிழித்து கொண்டு முன் நோக்கி பாயும் போது அந்த ரக்கையின் மேல் புறம் குறைந்த அழுத்தமும் கீழ்ப்புறம் அதிக அழுத்தமும் உருவாக்கும் படி அந்தக் ரக்கையின் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும். விமான ரக்கைகள் மேல் பக்கம் சற்று கூம்பு போல வடிவம் கொண்டு இருப்பதை பார்க்கலாம். அதன் வழியே காற்று மோதி பின் செல்லும் போது அங்கே குறைந்த காற்று அழுத்த பகுதி ஒன்றை உண்டாக்குன்றன. அதை நோக்கி விமானம் தள்ள பட்டு மேலெழும்புகிறது. 

வேகமாக சென்று கொண்டிருக்கும் ஒரு லாரியின் பின்பக்கத்தில் கவனித்திருக்கிறீர்களா தூசுகள் லாரியை நோக்கி இழுக்கப்பட்டு கொண்டிருக்கும்.

ஒரு ரயில் வேகமாக கடந்து செல்லும்போது அதன் அருகில் நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் ரயிலை நோக்கி ஒரு சக்தியால் இழுக்க படுவதை உணர முடியும். அந்த சக்தியின் பெயர் தான் காற்று அழுத்த மாறுபாடு. விமானம் பறப்பதற்கும் மேலே சொன்ன இரண்டு எடுத்து காட்டுக்கள் நடப்பதற்கும் அறிவியல் காரணம் ஒன்றே.(நீங்கள் ஸ்ட்ரா போட்டு கூல்டரிங் உருஞ்சுவது கூட விமானம் பறக்கும் அதே அறிவியல் நுட்பதால் தான் )

பறவைகள் தங்கள் பெரிய ரக்கையை வேகமாக அடிப்பது மூலம் தங்கள் ரக்கைக்கு கீழ் மற்றும் மேல் பகுதியில் காற்று அழுத்த மாறு பாடு பெறுகின்றன.

ஆனால் இது போன்ற  விளைவுகளை உண்டு பண்ண ஈயின் குட்டி ரக்கையை வைத்து கொண்டு சாத்தியம் இல்லை.


சரி ஈக்கள் என்ன தான் பண்ணுகின்றன ?

ஒரு ஈயின் இறக்கை அசைவு பார்க்க முன் பின் அசைவது போல இருந்தாலும் அது நுட்பமாக பார்த்தால் ஒரு சுழற்சி கோணத்தில் விசிறி கொண்டு இருப்பது புரியும். உங்கள் கைகளை பக்க வாட்டில் நீட்டுங்கள் உள்ளங்கையை அகலமாக திறந்து கொண்டு தரை நோக்கி திருப்பி வையுங்கள் இப்போ கைகளை முன்னே நோக்கி வேகமாக கொண்டு வாருங்கள். அப்படி சரியாக முன்னோக்கி வரும் போது இப்போது திறந்த உள்ளங்கையை திருப்பி மேலே வானத்தை நோக்கி காட்டுங்கள். கிட்ட தட்ட இப்படி தான் ஈக்கள் ரக்கையை வீசுகின்றன. அதுவும் வினாடிக்கு 200 முறைக்கு மேல் எனும் அசுர வேகத்தில் இந்த செயலால் ஈக்கள் தங்கள் ரக்கைகளுக்கு அடியில் உள்ள காற்றில் ஒரு குட்டி சூறாவளியை உண்டு பண்ணு கின்றன. (ஈயின் ரக்கைக்கு அடியில் இருக்கும் காற்றை பார்க்க முடிந்தால் அவைகள் வேகமாக சுழண்டு கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்) ஒரு புயலின் கண் பகுதி அழுத்தம் குறைந்த பகுதியாக இருப்பதை போல இங்கேயும் ஒரு குறைந்த அழுத்த பகுதியை ஈக்கள் உண்டு பண்ணுகின்றன. புயலில் சிக்கிய பொருள் ஒன்று வானத்தில் எடுத்து செல்ல படுவதை போல தானே உண்டாக்கிய குட்டி புயலில்  அமர்ந்து தான் ஈக்கள் பறக்கின்றன.


தான் பறப்பதற்காக ஒவ்வொரு முறையும் குட்டி சூராவளியே உண்டு பண்ணி கொண்டு இருக்கும் ஈக்கள் ஒரு ஆச்ரயம் தான் அல்லவா.


    🌏ரா.பிரபு ✍️

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"