தேடல் கேள்விகள்" (கேள்வி : 3)

தேடல் கேள்விகள்"

(கேள்வி  : 3) 

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
கேள்வி : நாம் இறந்த பிறகு நமது ஆத்மா என்ன செய்யும் 
-Sajikumar cpv-
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

📝 பதில் :  அறிவியல் ரீதியாக இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும் . ஆம் அறிவியலில் இதற்க்கு சரியான விடை இன்று வரை கண்டு பிடிக்க பட வில்லை என்றாலும் முடிந்த அளவு அறிவியல் கொண்டு பதில் சொல்ல முயன்று பார்க்கிறேன்.

அறிவியலில் பல கோட்பாடுகள் உண்டு அதே போல பல விதிகள் உண்டு. இதில் இந்த கோட்பாடுகள் என்பது காலத்தால் மாற கூடியது ... ஏன் பல நேரம் இது வரை சொல்லி வந்த கோட்பாடுகள் முற்றிலும் பொய் என்றும் நிரூபிக்க கூடியது. (உதாரணமாக சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்பது ஒரு காலத்தில் அறிவியல் கோட்பாடு ஆனால் அதன் பின் அது முற்றிலும் பொய் பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று மாறியது )

ஆனால் விதிகள் அப்படி அல்ல நாம் அறிவியல் விதிகள் என்று சொல்வது எல்லாமே இயற்கையின் விதிகள் தான் அவைகள் ஒரு போதும் மாறாது.
உதாரணமாக ஈர்ப்பு என்பது ஒரு விதி. Thermodynamic ஒரு விதி . Thermodynamic இல் entropy படி பிரபஞ்ச ஒழுங்கு இருக்க இருக்க சிதைந்து கொண்டே செல்கிறது என்று சொல்கிறது என்றால் அந்த விதி பல கோடி ஆண்டுகள் தாண்டியும் மாறாது.
சரி விஷயத்துக்கு வருவோம்.

இன்று காலை நீங்கள் 10 புஸ் அப் செய்து இருந்தால் அதற்க்கு உங்கள் உடல் செலவிட்ட அந்த ஆற்றல் இருக்கிறதே அது பல கோடி கிலோமீட்டர் தாண்டி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரியனில் உண்டான ஆற்றல் என்பது தெரியுமா? அந்த ஆற்றல் அங்கே இங்கே என கடந்து கடைசியாக நேற்று இரவு நீங்கள் சாப்பிட்ட இட்லி மூலமாக உங்கள் உடலை அடைந்து இருந்தது.
உங்களுக்குள் நீங்கள் கவனித்து பார்த்தால் உங்கள் உடலில் இரு வகை ஆற்றல்கள் இருப்பதை கவனிக்கலாம் ஒன்று மேலே நாம் பார்த்த உடலை இயக்கும் ஆற்றல். இன்னொன்று ஒரு வேலை ஆன்மாவை நீங்கள்  நம்புவதாக இருந்தால்.. அதை உங்களை இயக்கும் ஒரு உள் ஆற்றலாக நாம் கற்பனை செய்யலாம்.
(அறிவியல் நிரூபணம் இல்லாததால் இப்போதைக்கு ஒரு கற்பனைக்கு என்று வைத்து கொள்ளுங்கள் )

தெர்மோடைனமிக்ஸ் விதி ஆற்றலைப் பற்றி என்ன சொல்கிறது என்றால் 'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது 'அது நாம் மேலே பார்த்ததுபோல சூரியனிலிருந்து இட்லிக்கு என்பதை போல வேறு வேறு வடிவத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.
இப்போ ஆன்மா ஒரு ஆற்றல் என கொண்டால் ஆற்றல் பற்றிய அறிவியல் விதி அதற்கும் நிச்சயம் பொருந்த வேண்டும்.

இப்போது மிக வித்தியாசமான ஒரு ஒப்பீடை சொல்கிறேன் கேளுங்கள்

கீதையில் க்ருஷ்ணன் ஆன்மா பற்றி சொன்னது.
"ஆன்மாவை ஆக்கவும் அழிக்கவும் முடியாது அது சட்டையை மாற்றுவதை போல வேறு வேறு உடலை மாற்றி கொண்டே இருக்கிறது "

அட ! அப்படியே நம்ம தெர்மோடைனமிக்ஸ் விதி மாதிரியே இருக்கு இல்ல ??

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"