"தேடல் கேள்விகள் " (கேள்வி : 1 )







"தேடல் கேள்விகள்  "

(கேள்வி : 1 )
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
கேள்வி : உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??

-கார்த்திக் கோயமுத்தூர் -

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

📝 பதில் : வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம்.
உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல.  அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism .

உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள் கேட்டது போல வலியை உணராத உயிரிகளாக பிறப்பது உண்டு ஆனால் அந்த குழந்தைகள் அதிக நாள் தாக்குப் பிடித்து உயிர் வாழ்வது இல்லை.  வலி எனும் சர்வைவல் மெக்கானிஸம் உயிர் வாழ மிக முக்கியம் .

"உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசரம் " -என்று மூளை உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான் வலி.
உடலில் ஏதாவது ஒரு பகுதி காயமடைந்தால் அந்த பகுதியில் இருந்து சிக்னல் நமது மூளைக்கு செல்கிறது என்பதை நாம் அறிவோம்.
இதில் ஒரு சின்ன ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாம் உணர்வதைப் போல வலி என்கின்ற ஒன்றை அந்த அடிபட்ட பாகம் நமக்கு தருவதில்லை. அவைகள் இப்படி ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்ற தகவலை மூளைக்கு நரம்புகள் மூலமாக அனுப்பி வைக்கின்றன அவ்வளவு தான். அதை ஆராய்ந்து பார்த்து வலி என்கின்ற உணர்வை நமக்கு கொடுப்பது மூளையின் வேலை தான்.

ஒரே மாதிரியான காயத்திற்கு ஒரே மாதிரியான வலியை மூளை தருவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம். அவைகள் அந்த வலி தொடர்புடைய பழைய வரலாறு புரட்டி பார்க்கின்றன அந்த மனிதனின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. காயம் ஏற்பட்ட சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன இவையெல்லாம் வைத்து அலசி ஆராய்ந்து எவ்வளவு வலியை எப்போது தரவேண்டும் என்று மூளை முடிவு செய்கிறது. உதாரணமாக ஒரு விளையாட்டு வீரன் மிக கடுமையாக அடி பட்டாலும் அந்த விளையாட்டு முடியும் வரை அவன் அந்த வலியை உணராமல் இருப்பது பல முறை நடக்கிறது. அது வரை விளையாடி கொண்டு இருந்தவன் விளையாட்டு முடிந்த பின் காலை ஊன்ற கூட முடியாமல் அவதி படுவதை பார்க்கலாம். பலமுறை சுறாவால் கடிபட்டு கையை இழந்தவர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது.

அடியே பட்டு இருந்தாலும் மூளை தகவலை கொடுக்கவில்லை என்றால் வலியை நாம் உணர மாட்டோம் என்பதை போல இந்த உண்மை தலைகீழாக நடப்பதும் உண்டு . அதாவது எந்த காயமும் இல்லாத ஓரிடத்தில் காயம் இருப்பதாக மூளை சொல்லமுடியும் சிலநேரம் குழம்பிப்போய் அப்படி சொல்வது உண்டு. ஒரு போரில் ராணுவ வீரன் தனது கால் கட்டை விரலில் கடுமையான வலி இருப்பதாக இரவு முழுவதும் கதறிக் கொண்டு இருந்த கதையைச் சொல்வதுண்டு என்ன ஆச்சரியம் என்றால் அவரது முழு காலையே வெட்டி எடுத்து விட்டார்கள் ஆனால் அவன் தொடர்ந்து தனது கால் கட்டைவிரலில் கடுமையான வலி இருப்பதாக சொல்லி கொண்டே இருந்தான். ஆம் இல்லாத கட்டைவிரலில் வலியை உணர வைக்க கூட மூளையால் முடியும்.

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் அதிக வலியை உணர்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கு காரணம் ஆண்களைவிட பெண்கள் அதிக  உணர்வுகளை கொண்டிருப்பதுதான்.
நம்மைப் போலவே பாலூட்டி விலங்குகள் வலியை உணரும் போது முகத்தில் உணர்வுகளை காட்டுகின்றன. ஊர்வன வகுப்பை சேர்ந்தவர்கள் வலியை உணர்ந்தாலும் அவைகளால் உணர்வை காட்ட முடிவதில்லை. ஆனால் வலியை மறக்கடிக்கும் மருந்துகள் நம்மைப்போலவே அவைகள் உடம்பிலும் வேலை செய்கிறது.

சரி ஒரு கேள்வி ... எறும்புகள் போன்ற சிறு பூச்சிகள் வலியை உணருமா?
பலவகையான பூச்சிகள் வலியை ஏதும் உணர்வது இல்லை என்பதுதான் உண்மை. காரணம் வலி சிக்னலை மூளைக்கு அனுப்பும் நரம்பமைப்பு போன்ற கட்டமைப்பு ஏதும் அவைகள் உடலில் இருப்பதில்லை.

வலியின் அளவை அளக்க முடியுமா அதற்கான அளவீடு ஏதும் உண்டா ??
ஆம் உண்டு வலியின் அலகு dol. (வலிக்கான Latin வார்த்தை dolor இல் இருந்து வந்தது )  பல இடங்களில் del என்று குறிப்பிடுவதை பார்க்கலாம்..
இதை எப்படி அளக்கிறார்கள்.??
தொழில்நுட்பம் கொஞ்சம் வளராத காலத்தில் வலியை அளப்பதற்கு கையில் நிஜமாக சூடு வைத்தார்கள் அதன்பின் சிறிது நாட்களுக்கு கையில் அழுத்தத்தை கொடுத்து அளந்து பார்த்தார்கள்..  நல்லவேளையாக இப்பொது எளிய வழியை கண்டுபிடித்து விட்டார்கள். இப்போது அதை எப்படி அளக்கிறார்கள் தெரியுமா ?
வலி நேரத்தில் மூளையை படம் பிடிப்பதன் மூலம். அந்த நேரத்தில் மூளை கொண்டிருக்கும் சென்ஸ் ஐ கவனிப்பதன் மூலம் அந்த நேரம் உடல் உணரும் வலியின் அளவை கணக்கிட முடியும். .  (உடல் முழுக்க வலியைக் கொடுக்கும் மூளையில் வலி உணரும் நரம்புகள் இல்லை மூளையை அப்படியே வெட்டி எடுத்தாலும் கூட மனிதனுக்கு துளியும் வலிக்காது )

வலியை உணராத படி இருப்பது நல்ல உடலுக்கு அறிகுறி அல்ல அது ஒரு நோய் அந்த நோயின் பெயர் congenital insensitivity to pain with anhidrosis, அதாவது சுருக்கமாக CIPA . இந்த நோயாளிகள் துளியும் வலியை உணர்வது இல்லை.

மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னதாக தெரியவில்லை நீங்கள் கேட்டது போல உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ??
விடை : நாம் நினைப்பதைப் போல வலியில்லாமல் இன்பமாக இருந்து இருக்காது மாறாக வாழ்வதே கடினமாக இருந்திருக்கும் என்பதுதான் சுருக்கமான விடை.

சரி நண்பர்களே... உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி ...
வலியை உணராத நோய் இருப்பதைப் பற்றி சொன்னேன் இதற்கு எதிரான ஒரு நோய் ஒன்று உண்டு. அந்த நோய் இருப்பவர்களை உடலில் மெதுவாகத் தொட்டாலோ சீண்டினாலோ ..ஏன் தலையைக் கோதினாலோ கூட வலியால் துடிப்பார்கள் அந்த நோயின் பெயர் என்ன தெரியுமா ?

விடை : Allodynia

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"