தேடல் கேள்விகள் " 🎯கேள்வி 5

"தேடல் கேள்விகள் "
🎯கேள்வி 5
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
 சைக்கோகளுக்கு கொலை செய்யும் போது என்ன விதமான உணர்வு இருக்கும் அது அவர்களை எப்படி கொலை செய்ய தூண்டும்.
-Ramamoorthy-
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
📝 பதில் :ரோம் நகரில் நீரோ என்ற மன்னன் கேள்வி பட்டு இருப்போம் அதாங்க ரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்தான் னு கேள்வி பட்டு இருப்போமே அவன் தான்.
அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது..
தினம் அரண்மனை சேவகர்கள் அவனுக்கு விளையாட முயல் குட்டி ...நாய் குட்டி அல்லது வேறு சில சிறு பிராணிகளை கொண்டு வந்து தருவார்கள். அவன் அவற்றைக் கொண்டு எப்படி விளையாடுவான் என்பது தான் கொடுமை.
அவன் அந்த விலங்குகளின் கால்களை துண்டிப்பான் அல்லது கண்ணை குத்தி எடுப்பான் அணு அணுவாக அவைகளை கொலை செய்யும் போது அவனுக்கு அது திருப்தியை கொடுத்தது.

உடனே அவசர பட்டு முகம் சுளித்து விடாதீர்கள் இந்த சைக்கோ தனம் நம் அணைவருக்குள்ளும் இருக்கிறது என்பது தான் உண்மை.
சின்ன குழந்தைகள் தும்பிகள் மற்றும் பட்டாம் பூச்சிகளின் ரக்கையை பிய்த்து போட்டு வேடிக்கை பார்ப்பதை பார்த்து இருப்பீர்கள்.. அல்லது காரணமில்லாமல் பக்கத்தில் ஊர்ந்து வரும் எறும்பை நசுக்கி கொல்லுவதை பார்க்கலாம்.. இதை தான் நீரோ கொஞ்சம் பெரிய விலங்குகளை வைத்து செய்தான் (அப்புறம் பெரியவனானதும் விலங்குகளுக்கு பதில் மனிதனை பயன் படுத்தினான் )

சரி அப்போ அனைவருமே சைக்கோதானா. ??

பொதுவாக என்னதான் நாகரீகம் வளர்ந்து இருந்தாலும் மனிதன் ஒரு விலங்கு என்பது மறுக்க முடியாத உண்மை அதுவும் பல ஆயிரம் வருடம் குகையில் காட்டில் வாழ்ந்த விலங்கு.
24 மணி நேரமும் ஆபத்தில் வாழ்ந்த ஒரு உயிரினம். பொதுவாக பிற விலங்குகளை எதிரியாக பார்க்கும் மனோபாவம் தற்காப்பினால இயல்பாக இருந்த ஒரு விலங்கு.

நீங்கள்  பொதுவாக நாயை கவனித்திருக்கலாம். புதிதாக இரண்டு நாய்கள் சந்தித்துக்கொண்டால் முதலில் அவைகளுக்கு இடையில் இருப்பது வெறுப்பு உணர்வு தான். அவைகள் முதலில் சண்டைக்கு தான் முயல்கின்றன.
உளவியல் ரீதியாக மனிதனும் இதே மாதிரியான குணத்தை தான் கொண்டிருக்கிறான் என்று உளவியல் சொல்கிறது. அதாவது புதிதாக ஒரு மனிதனைப் பார்க்கும் பொழுது முதலில் உள்ளுக்குள் "யார் பெரியவன்" என்கின்ற ஒரு உணர்வுதான் தோன்றுவதாக சொல்கிறார்கள். அவன் நட்பு பாராட்ட கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. குகை மனிதன் காலத்தில் அவனது தற்காப்புக்கு இந்த எதிர்வினை தேவை பட்டு இருக்கலாம் ஆனால் அறிவு வளர்ச்சி பெற்ற இன்று அது அவசியம் அற்றது.

சைக்கோ என்றாலே நமக்கு நினைவில் வருவது திரைப்படங்களில் கொடூரமாக கொலை செய்யும் சைக்கோக்கள் தான்.
ஆனால் சைக்கோகள் பல விதம் என்கிறது ஆய்வு.
உதாரணமாக தேவை இல்லாமல் டார்ச்சர் கொடுக்கும் மேலதிகாரியை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் ஜாலியாக லீவ் போட போகிறீர்கள் என்று தெரிந்தாலோ... அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தாலோ.. கூடுதலாக கொஞ்சம் வேலை பளுவை கொடுபார்.

"அழகி" படத்தில் ஒரு வாத்தியார் அந்த "பெண் ரொம்ப அழகா இருக்குனு வேணும்னே அவளை டார்ச்சர் பண்ணுவார் " னு சொல்லுவான் கதா  நாயகன். அவள் அழகாக இருந்தால் வாத்தியாருக்கு என்ன என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் நிஜத்தில் இப்படி அழகாக இருப்பவர்கள் மேல் தேவையற்ற குற்ற உணர்வு கொண்டு டார்ச்சர் செய்ய விரும்பும் ஆட்கள் நீங்கள் நேரில் பார்த்து இருக்கலாம்.

இப்படி நிறைய வகை சைக்கோக்கள் பிரிவு இருக்கிறது.

இப்பொது கொடூர கொலைகள் செய்யும் சைக்கோ பற்றி பார்ப்போம்..
விஸ்கான்சிஸ் பல்கலை கழகம் சைக்கோவின் மூளை பற்றி ஒரு ஆய்வு அறிக்கை கொடுத்து இருக்கிறது அதன் படி சைக்கோகள் மூளையில் amygdala மற்றும் ventromidial prefrental cortex பகுதிகளுக்கு இடையிலான தொடர்பு கொஞ்சம் குறைவாக இருப்பதை பார்த்தார்கள்.

இதனால் என்ன ஆகும் என்றால் மனிதனுக்கு உள்ள எதிர்மறை உணர்வு அதாவது சோகம் ,கவலை வருத்தம் போன்றவை ஒழுங்காக ஏற்படுவது இல்லை.
ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதற்கு இந்த எதிர்மறை சிந்தனைகள் அத்தியாவசியம் என்கிறது அறிவியல். காரணம்.. ஒரு மனிதனை நாம் துன்புறுத்தக் கூடாது என்று நாம் ஏன் நினைக்கிறோம் என்றால் அந்தக் கட்டத்தில் துன்பப்படும் அந்த மனிதனின் இடத்தில் தம்மை வைத்து சிந்திக்கறது மனித மூளை. அதாவது இதை செய்தால் அவன் எப்படி துன்பப்படுவான் என்பதை அது அவன் இடத்தில் தன்னை வைத்து பார்த்து புரிந்து கொள்கிறது . விலங்குகளுக்கு இந்த உணர்வு இருப்பதில்லை.
(இதை வேறு விதமாக சொல்வதானால் யார் மனித தனம் மிக்கவர்கள் என்றால் பிறர் இடத்தில் தன்னை வைத்து பார்த்து சிந்திக்க முடிபவர்களே என்று சொல்லலாம்.)

நாம் மேலே பார்த்த படி மூளையின் amygdala மற்றும் ventromidial prefrental cortex பகுதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு குறைவாக இருப்பதால் ... அவர்கள் பிற மனிதனின் துன்பத்தை உணர்வது இல்லை.
எனவே சைக்கோ தனம் என்பதை வரையறுக்க வேண்டும் என்றால்...Empathy என்று சொல்ல கூடிய பிறர் இடத்தில் தம்மை வைத்து சிந்திக்க முடியாத தன்மை தான் சைக்கோ தனத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம்..

சைக்கோ கொலையாளிகளுக்கு உடலியல் மற்றும் மனோவியல் இரண்டு காரணங்களும் உண்டு சிலருக்கு இரண்டுமே உண்டு.

1966 இல் Charles Whitman, (இவனை பற்றி முன்பே ஒரு தனி கட்டுரை போட்டு இருந்தேன் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.) அவன் டெக்சாஸ் யூனிவர்சிட்டி டவர் இல் இருந்து பலரை சுட்டு கொன்றான் அவனை சுட்டு வீழ்த்தி பிடித்த போலீஸ் அவன் வீட்டுக்கு சென்றபோது அவன் மனைவி மற்றும் தாயை கொலை செய்துவிட்டு தான் இங்கே வந்து அனைவரையும் சுட்டதாக தெரிந்தது.
அதன் டைரியை ஆராய்ந்த போலீஸ் ஒரு ஆச்சரியமான குறிப்பை பார்த்தது.
"என் மூளையில் ஏதோ குடைந்து கொண்டே இருக்கு நான் இறந்த பின் போஸ்ட் மாடர்ம் செய்தால் மூளையில் ஏதாவது பொருள் அடைத்து கொண்டு இருக்கிறதா என்று பார்க்கவும் " னு எழுதி இருந்தான் .
அவனை போஸ்டமாடம் செய்த டாக்டர்கள் அவன் மூளையில் ஒரு பெரிய சைஸ் கட்டி இருந்ததை பார்த்தார்கள். அது உணர்ச்சியை கட்டுப்படுத்தும் நரம்பு பகுதியை அழுத்தி கொண்டு இருந்ததாம்.

இப்படி மூளையில் உடலியல் பிரச்சினை மற்றும் DNA வில் கூட சைக்கோ தனம் இருக்கிறது என்கிறார்கள்.
இது தவிர மனோவியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிகிறது. பெரும்பாலும் சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சைக்கோவானவர்கள்  அதிகம். குழந்தைப்பருவம் ஒரு சைக்கோவின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பிறரை துன்புறுத்தும் போது நமக்கு துன்பம் உண்டாவது இல்லை என்பது போய் மாறாக அவர்களுக்கு ஒரு இனம் புரியாத இன்பம் ஒரு குறுகுறுப்பு உண்டாகிறது.
அது அவர்களை காரணம் இல்லாமல் கொலை செய்ய தூண்டுகிறது.
(கொலை செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தான் அங்கே காரணம்.)

ஆனால் மேற் சொன்ன ஆய்வுகள் எல்லாமே மேற்கத்திய ஆய்வுகள் தான்.மனிதனை உன்னத மனிதன் அல்லது சைக்கோ மனிதன் ஆக்கும் காரனின்கள் எல்லாமே அவன் கைகளில் இருப்பதாகவே கிழக்கத்திய விஞ்ஞானம்  நம்புகிறது.  தனது உடலியல் அல்லது மனோவியல் எப்படி பட்டதாக இருந்தாலும்... தன்னை நினைத்த மாதிரியாக தான் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதுதான்... கிழக்கத்திய அறிவு நமக்கு சொல்லும் பாடம்.

இன்றும் உலக அளவில் சைக்கோ தனம்  ... மனபிறழ்வுகள்.. வித வித மன நோய்கள் மலிந்து கிடப்பது மேற்கத்திய நாடுகளில்தான்.
உலக அளவில் குற்றங்கள் அதிகம் நடப்பது மேற்கத்திய நாடுகளில் தான்.
கிழக்கத்திய நாடுகள் கடைபிடிக்கும் 'ஏதோ ஒன்று ' மனிதர்களை மிக அமைதியாக வைத்திருக்கிறது.
ஆனால் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்பதுதான் வருத்தமான உண்மை.  அதற்கு காரணம் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய பாணிக்கு மாறி வருவதுதான்.

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"