விசித்திர ஓவியர் வான்கோக் " (The Redheaded Madman) "Vincent van Gogh "


"விசித்திர ஓவியர் வான்கோக் "
(The Redheaded Madman)
"Vincent van Gogh "

ரா.பிரபு

பொதுவாக ஒரு ஞானியும் ஒரு பைத்தியமும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள். உலகம் பல முறை பைத்தியங்களை ஞானி என்றும்  ஞானியை பைத்தியம் என்றும் தவறாக புரிந்து கொண்டது உண்டு.

"Vincent van Gogh " அந்த இரண்டாம் வகை பரிதாப ஜீவன்.
"வான் கோக் " போலந்தில் பிறந்த ஒரு மகா ஓவியன். அவனிடம் சில விசித்திரங்கள் இருந்தது.
பொதுவாகவே விஞ்ஞானிகளைவிட கலைஞர்கள் குறிப்பாக ஓவியர்கள் இயற்கைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள்.
 இயற்கைக்கு நெருக்கம் என்று சொல்லும் போது உடல் சார்ந்த விஷயத்தை நான் சொல்ல வில்லை. அவர்கள் உடல் இயற்கை இடங்களுக்கு செல்லாமல் ஒரு பூட்ட பட்ட அறையில் இருக்கலாம். ஆனால் அவர்கள் இயற்கையுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பவர்கள். அப்படி பட்டவர்களிடம் மட்டுமே இயற்கை தனது ரகசியங்களை வாரி இறைத்து இருக்கிறது. ஐன்ஸ்டைன் தனது பூட்ட பட்ட அறையில் தான் பல உலக மகா... சாரி பிரபஞ்ச மகா ரகசியத்தை கண்டு பிடித்தார். மேரி கியூரி தீர்க்க முடியாத சமன் பாட்டை தூக்கத்தில் எழுந்து தீர்பார்.

வான்கோக் அப்படி  இயற்கையை தொடர்பு கொண்ட ஒரு ஓவியன். முதலில் அவர் ஓவியத்தை பார்ப்பவர்களுக்கு பெரிதாக ஒன்றும் இல்லையே என்றே தோன்றும் ஆனால் அவைகள் எல்லாமே இயற்கையை மிக ஆழமாக உள்வாங்கி வரைய பட்ட அபூர்வ ஓவியங்கள்.

வான்கோக் தனது அணைத்து ஓவியத்திலும் மரங்களை வானை முட்டும் உயரத்திற்கு வரைந்தார். குறிப்பாக நட்சத்திர மண்டலங்களை சுருள் வடிவில் மட்டுமே வரைந்தார். அதை முதலில் பார்த்தவர்கள் .."வானத்தில் சில்லறை இறைத்தத்து போல தானே நட்சத்திரங்கள் இருக்கிறது அவைகளை ஏன் சுருள் வடிவில் வரைகிறீர்கள் " என்று கேட்டார்கள் அதற்க்கு அவர்
" இல்லை அவைகள் சுருள் வடிவில் வரைய வேண்டும் என்றே எனது உள்மனம் சொல்லுகிறது... எனது உள்மனம் சொல்வதை மட்டுமே நான் ஓவியமாக வரைவேன் என்றார். "
காலக்சிகள் சுருள் வடிவில் அமைந்துள்ளன என்பதை உலகம் அறியாத காலம் அது.  வான்கோகின் உள்ளுணர்வு அவற்றை சுருள் வடிவில் வரைய சொல்லி சொன்னது.

ஒரு முறை சூரியனை வரைய முயன்றார் வான்கோக் அதற்காக தினமும் சூரியனை நீண்ட நேரம் வெறித்து பார்த்தபடி நின்று இருப்பார். பளிச்சென்று கொஞ்சமாக ஓவியம் தீட்டுவார். அதன்பின் அடுத்த நாள் மீண்டும் வந்து மணிக்கணக்காக சூரியனை முறைத்துக் கொண்டு நிற்பார்.
அவர் நண்பர்கள் அவரிடம்
" சூரியனை அப்படியென்ன தினமும் மணிக்கணக்கில் முறைத்து பார்க்கிறீர்கள் ஒருநாள் பார்த்ததுதானே தினமும் இருக்கும் " என்று கேட்டார்கள்
அதற்க்கு வான்கோக்
" அதுதான் இல்லை நீங்கள் நினைப்பது போல தினமும் ஒரே சூரியன் இருப்பதில்லை சொல்லப் போனால் ஒரு வினாடி இருக்கும் சூரியன் அடுத்த வினாடி இருப்பதில்லை அது வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கிறது... நீங்கள் நினைப்பது போல சூரியன் நிலையானதாக இல்லை அது ஒரு முறை இருந்ததைப் போல அடுத்த முறை இருப்பதே இல்லை அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது அந்த மாறுதல் என்னால் பார்க்க முடிகிறது அதனால்தான் வரைவது கடினமாக இருக்கிறது "
என்றார்.

தினம் சூரியனை முறைத்து  பார்த்து பார்த்து அவருக்கு நிரந்தரமாக பார்வை பறிபோய் விட்டது . அப்போது தனது ஓவியத்தில் பாதியை தான் முடித்து இருந்தார் வான்கோ. ஆனால் மிக ஆச்சர்யமாக மீதி ஓவியத்தை பார்வை இல்லாத நிலையிலேயே வரைந்து முடித்தார் அவர்.

அவர் வாழ்நாளில் அவர் உலகம் போற்றும் ஓவியராகவோ புகழ் பெற்ற மனிதராகவோ இருந்திருக்க வில்லை.
மாறாக அவரிடம் இருந்த "பைத்தியக்கார தனம் " மக்களுக்கு அவரின் மேல் அச்சம் கொள்ள செய்தது. அவர் அண்டை வீட்டார்கள் அவருக்கு வைத்த பட்ட பெயர் " the red headed mad man "
மேலும் அவருக்கு எதிராக அவரை கைது செய்ய கோரி கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். போலீஸ் அவரை கைது செய்து மருத்துவமனையில் ஒப்படைத்தது. நீண்ட நாள் மன நல காப்பகத்தில் தொடர்ந்து கழித்தார் வான்கோ.

மிகுந்த ஏழ்மையில் சாப்பிட வழி இல்லாமல் வாழ்ந்த அவருக்கு அவரது சகோதரர் தான் பணத்தை அனுப்பி உதவி கொண்டிருந்தார். ஆனால் அனுப்பிய பணத்திற்கு சாப்பிட ஏதும் வாங்காமல் அனைத்துமே ஓவியம் சார்ந்த பெயிண்ட் ..பிரெஸ்... என்று வாங்க செலவு செய்து விட்டு வழக்கம் போல பிரெட் ஐ சாப்பிட்டு விட்டு வாழ்வார் வான்கோ. அவரது உணவு பிரட் , காபி , மற்றும் புகையிலை மட்டும் தான் இதை தான் பல ஆண்டுகளாக உணவாக உட்கொண்டு வந்தார் அவர்.

பொதுவாக ஓவிய கலை ஊறியவர்களை குழந்தையாக இருக்கும் போதே தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே ஓவியத்தை கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் வான் கோ மிக விசித்திரமாக  தனது 27 வயது  வரை எந்த ஒரு ஓவியத்தையும் வரையவில்லை. ஆனால் அதன் பின் அவர் செய்தது தான் இண்ணும் விசித்திரம். சராசரியாக 36 மணி நேரத்துக்கு ஒரு ஓவியம் என அடுத்த 10 ஆண்டுகளுக்கு கிட்ட தட்ட 2000 ஓவியங்களுக்கு மேல் வரைந்து தள்ளினார் நமக்கு செல்பி எடுக்கும் பழக்கம் இருப்பதை போல அவருக்கு செல்ப் போர்ட்ரெட் செய்யும் பழக்கமும்  இருந்தது... கிட்ட தட்ட 37 "செல்பிகளை" வரைந்து வைத்தார்... தீடீரென பேய் புகுந்தது போல் 10 ஆண்டுகள் தொடர்ந்து வரைந்து தள்ளி விட்டு 37 ஆவது வயதில் இறந்து போனார்.

அவர் 27 ஆவது வயதில் திடீரென ஓவியம் வரைய தொடங்கியது எப்படி என்று யாருக்கும் தெரியாது.
ஒரு முறை நண்பர் ஒருவருடனான சண்டையில் தனது காதை தானே அறுத்து கொண்டார் என்று சொல்கிறார்கள். (நண்பர் தான் அறுத்து விட்டார் என்றும் சொல்கிறார்கள் )
அதனை தொடர்ந்து பல நாட்கள் மன நல காபகத்தில் கழித்தார்.
மருத்துவர்கள் அவர் ஹாலுசினேஷன் ஆல் பாதிக்க பட்டதாக சொன்னார்கள்.. மேலும் schizophrenia, porphyria, syphilis, bipolar disorder, மற்றும் epilepsy  யால் அல்லது இவை அணைத்தாலும் கூட பாத்திக்க பட்டு இருக்கலாம் என்றார்கள்.

ஒரு மிக பரிதாபமான உண்மை என்ன வென்றால் வான்கோக் தனது வாழ்நாள் பூரா தன்னை ஒரு தோல்வியாளனாக கருதினார். அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் வரைந்த ஓவியங்கள் உலக அளவில் மிக பெரிய படைப்புகள் என்பது அவருக்கே தெரியாது.. தனது படைப்புகள் ஏதோ மிக மட்டமான மிக சுமாரான ஒன்று என்று அவர் கருதினார். தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் தனது ஓவியம் ஒன்றை விற்றார் அந்த ஓவியத்தின் பெயர் "
The Red Vineyard. " அந்த ஓவியத்தின் விலை நம்ம ஊர் மதிப்பிற்கு 75 ரூபாய்.
ஆனால் அவர் இறந்த பின் விற்க பட்ட ஓவியங்களில் உலக அதிசயம் காத்து இருந்தது.

அவரது மிக புகழ் பெற்ற ஓவியமான
"Starry night " ஐ அவர் வரைந்தது மனநல காபகத்தில் இருந்து தான். (1889 ஆம் ஆண்டு ). அதில் பல பருவ காலங்களை சொல்ல போனால் ஒரே நாளின் பல நேர மாறுபாட்டை தானிருந்த இடத்திலிருந்து பார்த்த ஒளி மாறுதல் மற்றும் பருவநிலை மாறுதலை ஒரே ஓவியத்தில் வரைந்திருப்பார். அதில் நட்சத்திர மண்டலத்தை சுருள் வடிவில் காட்டியிருப்பார். மேலும் நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் சூரியனைப்போல ஜொலிப்பதை போல வரைந்திருப்பார்.
மலைகளை மடிப்பு மடிப்பாக காட்டியிருப்பார்.
தான் வரைந்த கிறுக்குத்தனமான ஏதோ ஒரு ஓவியம் என்று தானே நினைத்துக் கொண்டார். ஆனால் அந்த ஓவியம் இன்றுவரை சாதாரண டீ கப் டிசைனில் இருந்து டீ ஷர்ட் டிசைனில் இருந்து பெரிய பெரிய ஆர்ட் களில் தனது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அவரது இறுதிச் சடங்கின்போது அவரது அண்ணன் அவர் நினைவாக அவரது நண்பர்களுக்கு அவர் ஓவியங்கள் சிலவற்றை கொடுத்தார்.
மேலும் சில ஓவியங்களை அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு  கொடுத்தார்.
அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு அவரது ஓவியதின் அருமையை பற்றி உலகத்திற்கு தெரியாது. அதன்பின்தான் இவை ஒவ்வொன்றும் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் என்பதை உலகம் கண்டது.
அவைகள் ஒவ்வொன்றும் விலைமதிப்பில்லாத அதிசயங்கள்.
இன்று அந்த ஓவியத்தை அமெரிக்க மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

1990 ஆம் ஆண்டு அவரது" Portrait of Doctor Gachet " ஓவியத்தை ஏலத்திற்கு விட்ட போது அது நம்ம ஊர் மதிப்பில் 500 கோடி ரூபாய்களுக்கு மேல் போனது. அவர் உயிரோடு இருந்த போது தனது ஓவியத்திற்கான மதிப்பு வெறும் 75 ரூபாய் என்று நினைத்தார்.
ஆனால் இன்று அவரது ஓவியங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படுகிறது.

1890 இல் மன நோய் முத்திப்போய் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து விட்டார்.
( அது தற்கொலை அல்ல கொலை என்கிறார்கள் ஒரு சாரார் )

மொத்தத்தில் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு துளி அங்கீகாரம் கூட அவருக்கு யாரும் கொடுக்கவில்லை.
அதற்கு காரணம் அவருக்கு தகுதி இல்லாமல் இல்லை. மாறாக அந்த கலைஞனின் திறமையை புரிந்துகொள்ள அவரை சுற்றி இருந்த யாருக்கும் தகுதியில்லை.

இன்று அவரது ஓவியத்தை வைத்து கொண்டு இன்று வரை அதில் இருப்பது என்ன என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பல நேரங்களில் உலகம் நம்மை பார்க்கும் பார்வையே சரியானவை என்று நம்பி நாமும் அதே பார்வையில் நம்மையே பார்த்து விடுகிறோம்.
தனக்குள் இருப்பது என்னவென்பதை நாம் முதலில் உணர்ந்து இருப்பது மிக முக்கியம் என்பதை தான் "vincent van gogh" இன் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

(அவரது ஓவியத்தை தேடி பாருங்கள் அவைகள் மிக சாதாரணமாக தெரிந்தால் நாம் மிக
சாதாரணமானவர்கள்  என்பதை புரிந்து கொள்ளுங்கள் )

Comments

  1. நன்றி நண்பரே

    ReplyDelete
  2. உங்கள் எழுத்து நடை அருமை அண்ணா..

    1)வான்கோ தன் காதலிக்காக தான் தன் காதை அறுத்தார்..

    2) அவர் இறப்பு பற்றிய தகவலும் சரி பாருங்க..
    ஆறு அல்லது ஏழு புத்தகங்களில் அவரை பற்றிய தகவல்கள் படித்திருக்கிறேன்...
    ஆனால் எதுவும் ஞாபகம் இல்லை..

    ஏனெனில் நான் படித்தது 90 களின் இடைப்பட்ட காலத்தில்..

    ReplyDelete
  3. மிக சிறப்பான கட்டுரை... உண்மையில் விசித்திரமான ஓவியர் தான் அவர்.

    ReplyDelete
  4. மிக சிறப்பான கட்டுரை... உண்மையில் விசித்திரமான ஓவியர் தான் அவர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"