தேடல் கேள்விகள்" (கேள்வி 2 )

"தேடல் கேள்விகள்" 
(கேள்வி 2 )
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 
கேள்வி : Bro van allen belts patri konjam post podunga regardings to nasa moon landing

-Raj kumar ips -
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

📝 பதில் : ஒரு நாட்டிற்கும் அடுத்த நாட்டிற்கும் உள்ள எல்லை பகுதியை கடக்க முயன்றால் அங்கே எல்லையில் பாதுகாப்பும் கெடுபிடியும் ஆபத்தும் அதிகம் இருப்பதை போல... பூமியை கடந்து வெளியில் செல்ல வேண்டும் என்றால் பூமியின் எல்லையில் அதாவது பூமியில் இருந்து கிட்ட தட்ட ஒரு 1000 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு ஆபத்தான பகுதி ஒன்று உள்ளது.

நமது பாட புத்தகத்தில் காந்தத்தின் படத்தை பார்த்து இருப்பீர்கள். காந்தத்தின் இரண்டு முனைகளிலும்  காந்த புலம் அரைவட்ட வடிவில் வரைந்து இருப்பார்கள். கண்ணால் பார்க்க முடியா விட்டாலும் உண்மையில் ஒரு காந்தத்தை சுற்றி அதன் புலம்  மாய உருவில் அந்த வடிவத்தில் தான் இருக்கும்.
நமது இந்த பூமி ஒரு மிக பெரிய காந்தம் என்று நமக்கு தெரியும் எனவே இதற்கும் அந்த புல வடிவம் இருக்கிறது.
அந்த புலத்தில் கண்ணுக்கு தெரியாத இரண்டடுக்கு பாதுகாப்பு வளையம் ஒன்று உள்ளது . நமது எல்லையை பாதுகாக்கும் அந்த பாதுகாப்பு வளையம் தான் "van allen belt "

1958 ஆம் வருடம் அது...
Explorer 1 என்ற U.S செயற்கைகோள் ஒன்று கதிர்வீச்சை அளக்கும் கருவி மற்றும் ஒரு டேப்ரிகார்டர் சகிதம் ஏவ பட்டது.  அதில் கிடைத்த தகவல்களை வைத்து முதல் முதலில்
Lowa பல்கலை கழகத்தை சார்ந்த இயற்பியலாளர் ஒருவர் இந்த மாதிரி பெல்ட் இருப்பதை கண்டு பிடித்து சொன்னார். அந்த ஆய்வாளர் பெயர்
"James Van Allen " எனவே அந்த பெல்ட்டுக்கு  van allen பெல்ட் என்ற பெயரை வைத்து விட்டார்கள்.

அதற்க்கு பின் அடுத்தடுத்து 3 செயற்கைக்கோள்கள் ஏவ பட்டன
(Explorer 3, Explorer 4 மற்றும் Pioneer )
இவைகள் கண்டு சொன்ன உண்மை மூலமாக தான் அந்த பெல்ட் ஒன்று அல்ல மொத்தம் 2 என்பதை கண்டு கொள்ள முடிந்தது. அதன் பிறகு 2012 இல் அனுப்ப பட்ட van allen probe மூலம் மேலும் பல உண்மைகள் அறியப்பட்டன்.
உண்மையில் பெல்ட் 2 மட்டும் அல்ல 3 ஆவதாக ஒரு தற்காலிக பெல்ட் அவ்வபோது தோன்றி மறைவதையும் கண்டார்கள்.

சரி இந்த பெல்ட் அப்படி என்ன தான் பாதுகாப்பை தருகிறது.. ? எந்த ஆபத்தில் இருந்து இது நம்மை காக்கிறது??
நாம் குளிர்காலத்தில் இதமாக வெயிலில் நிற்கிறோம் ...நினைத்தபோது எல்லாம் வெயிலில் ஜாலியாக நடக்கிறோம் அல்லவா. ஒருவேளை நீங்கள் செவ்வாயில் இருந்தால் இதுபோன்ற வெயிலில் எல்லாம் நிற்க முடியாது  அதற்குக் காரணம் சூரியனின் ஒளி உண்மையில் மனித உடலுக்கு ஏற்றது அல்ல . அது உடனடி புற்றுநோயை கொடுக்கக்கூடியது.

வேகமான காற்றில் அடித்துக் கொண்டு வரும் ஒரு தூசு மண்டலத்தின் நடுவில் நீங்கள் நிற்பதாக கற்பனை செய்யுங்கள் அப்படி சூரியனில் இருந்தும் இதர நட்சத்திரங்களில் இருந்தும் எல்லா நேரமும் வந்து கொண்டிருக்கும்  தீங்குவிளைவிக்கும் பல துகள் மண்டலத்திற்கு நடுவில் தான் பூமி நின்று கொண்டிருக்கிறது . (சரி.... சரி... சுழன்றுகொண்டிருக்கிறது.)
இந்த பயங்கர துகளை தடுத்து நிறுத்தும் கேடயமாக நமக்கு இயற்கை கொடுத்து இருக்கும் கொடை தான் "van allen belt "

இந்த துகள்கள் எல்லாம் சூரியனில் உண்டாகும் சூரிய புயலில் இருந்து கிளம்பி வரக்கூடியவை. அவைகள் என்ன ஐட்டம் என்று பார்த்தால் எல்லாம் சார்ஜ் பார்ட்டிகள் , எனர்ஜி பார்ட்டிகல் ,ஐயான்கள், காஸ்மிக் கதிர்கள், மின்னேற்றம் பெற்ற துகள்கள், ஆல்பா துகள்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்பு அரண் இல்லாமல் பூமிக்கு  அனுப்ப பட்டால் என்ன ஆகும் தெரியுமா ?

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பூமியில் எந்த உயிரினமும் இல்லாமல் சுத்தமாக துடைத்து விடும்.
ஆம் இவைகள் முதலில் வளிமண்டலத்தில் உள்ள காற்றை கிழித்து பிரித்து அவைகளை கரைத்து பூமிக்கு வளிமண்டலமே இல்லாமல் செய்ய கூடியவை (காந்த புலம் போதிய வலிமையில் இல்லாததால் செவ்வாய்க்கு இந்த கதி தான் இப்போது நேர்ந்து உள்ளது. ) பூமியில் உள்ள மொத்த உயிரினங்களுக்கும் ஒரு உலகளாவிய புற்றுநோயை இவைகள் உண்டு பண்ணும். காஸ்மிக் கதிர்கள் நேரடியாக உங்களை தீண்டினால் நீங்கள் உங்கள் கண்களை இறுக்கி மூடினாலும் மூடிய கண்ணுக்குள்  பயங்கர வெளிச்சத்தை காண முடியும்.
(சில astronaut கள் தங்களை cosmic ray கடந்து செல்லும் போது மூடிய கண்ணுக்குள் பிளாஷ் வெளிச்சத்தை பார்த்ததாக சொல்லி இருக்கிறார்கள் )
இந்த காஸ்மிக் கதிர்கள் நமது D.N.A
வையே பாதித்து அவைகளை மாற்றி அமைக்க கூடியவை.
அப்புறம் குறிப்பாக நமது தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் மின்சாரத்தை ஸ்தம்பிக்க செய்யும்.
அதாவது இவைகளை பூமிக்கு தொடர்ந்து அனுமதித்தால் இவைகள் படிப்படியாக பூமியில் உயிரினங்கள் ,வளிமண்டலம் ,கடல், காற்று ..தொழில்நுட்பம்....எல்லாவற்றையும் துடைத்து எறிந்து கால போக்கில் பூமியை பாலைவனமாக்கிவிடும்.

இப்படி பட்ட ஆபத்துகளில் இருந்து தான் van allen பெல்ட் நம்மை காத்து வருகிறது.
இரண்டு பெல்ட் இருப்பதாக சொன்னேன் . அதில் பூமியை ஒட்டிய  முதல் பெல்ட் (inner belt) கிட்ட தட்ட 1000 கிலோமீட்டர் தொடங்கி 6000 கிலோ மீட்டர் வரை இருகிறது .  இங்கே தான் அதிக சக்தி வாய்ந்த charge partical கள் தடுத்து நிறுத்த படுகின்றன . காரணம் வெளி அடுக்கை மீறி உள்ளே நுழைந்த கொலைகார துகள்கள் இங்கே தடுத்து நிறுத்த படுகின்றன.  இங்கே அதிகம் காண படுவது சார்ஜ் செய்ய பட்ட புரோடான்கள். இவைகள் 10 யிலிருந்து 100 மெகா எலெக்ட்ரான் வோல்ட் (100 mev ) சக்தியை கொண்டவை.
(ஒரு Electron volt என்பது ஒரு வோல்ட் மின்சாரத்தில் முடுக்கம் பெரும் ஒரு எலக்ட்ரானால் செய்ய படும் வேலையில் வெளி படும் ஆற்றலின் அளவு. )

வெளி அடுக்கில் குறைந்த சார்ஜ் புரோட்டானும் அதிக சார்ஜ் எலக்ட்ரானும், ion களும் காண படுகின்றன இவைகளின் சக்தி 10 kev முதல் 10 mev வரை .
நமது இந்த பாதுகாப்பு பெல்ட் எப்போதும் ஒரே மாதிரி நிலையான அளவில் வடிவம் கொண்டிருப்பதில்லை இவைகள் எப்போதும் அளவு மாறிக் கொண்டே இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மனிதன் பயன்படுத்தும் low frequency டிவைஸ்கள் (உதாரணமாக நீர்மூழ்கியை தொடர்பு கொள்ளும் தொலைத்தொடர்பு சாதனம் ) இவைகளை ஓரளவு பாதிக்கின்றது. இவற்றைச் சுற்றி ஒரு bubble ஐ உண்டு பண்ணுகிறது.

பொதுவாக இந்த van allen பெல்ட் ஆபத்தான சார்ஜ் பார்டிகல்களை கொண்டிருப்பதால் இந்த பகுதியை கடக்க ஸ்பேஸ் ஷிப்கள் அதீத பாதுகாப்பு கேடயத்தை கொண்டிருக்க வேண்டியது முக்கியம்.
அதுவும் மனிதர்கள் செல்லும் விண்கலம் என்றால் ஆபத்து இன்னும் அதிகம். தற்போது  மனிதர்களை ஆபதில்லாமல் இந்த அபாய எல்லையை கடக்க orian வகை  விண்கலங்களை தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது உங்களில் பலருக்கு அந்த நியாயமான சந்தேகம் வந்து இருக்கலாம். " இப்போ தான் மனிதன் வான் ஆலன் எல்லையை கடக்க ஆராய்ச்சி நடக்கிறதா அப்படி என்றால் 1969 இல் மனிதனை நிலவுக்கு அனுப்பிய அப்போலோ விண்கலம் எப்படி இதை கடந்தது .??"

இந்த கேள்வியை நாசாவுக்கு கேட்டால் அது பல பதில்கள் வைத்து இருக்கிறது என்றாலும் அதன் மைண்ட் வாய்ஸ் " நாங்க நிஜமாவே நிலவுக்கு போய் இருந்தா தானே பாஸ் அதை பற்றி கவலை படுவதற்கு " என்று இருப்பதாகவே தோன்றுகிறது.

Comments

  1. Now I shared your words from my YouTube channel with your permission thank you sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"