கால பயணம்_" சாத்தியம் என்ன( பாகம் 1)

"கால பயணம்_"
சாத்தியம் என்ன( பாகம் 1)

அறிவியல் காதலன்

(கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு)

நண்பர்கள் சமீபமாக போட்ட சில கமெண்ட் களின் வாயிலாக நிறைய பேர் time travel இல் ஆர்வம் இருப்பதாக அறிகிறேன்.
எனவே டைம் ட்ராவல் ஐ ...அதன் சாத்திய கூறை.... அதன் அறிவியலை முடிந்தளவு எளிமையாக புரியும் படி விளக்கும் முயற்சி தான் இந்த கட்டுரை...

தொடங்கும் முன்.....

'டைம் ட்ராவல் என்பது ஒரு கட்டுக்கதை ..அது திரைப்பட கதைகளில் வரும் கற்பனை தவிர வேறு இல்லை '-என்பதை ஆணித்தரமாக நம்பும் நபரா நீங்கள் எனில் உங்களுக்காக இரண்டு விஷயங்களை நான் சொல்ல வேண்டும் ..

முதலில் ஒரு சம்பவம்..
 இது ஹார்ட்வெட் பல்கலை கழகத்தில் தாவரவியல் ஆய்வாளர்கள் சக்திவாய்ந்த புகை பட கருவியை கொண்டு ஒரு செடியில் மொட்டை படம் எடுத்த போது நடந்தது...
அந்த புகை படத்தில் மொட்டுக்கு பதில் ஒரு மலரின் புகை படம் கிடைத்தது... சரி ஏதோ டபுள் எக்ஸ்போசன் போல சமாச்சாரம் என்று விட்டு விட்டார்கள் அதன் பின் அந்த மொட்டு மலர்ந்த போது காத்திருந்தது ஆச்சர்யம்.
அது அந்த புகை படத்திற்கு 100 சதம் ஒத்திருந்தது.
இது எப்படி நிகழ்ந்தது என விளக்கம் கேட்டதற்கு பல குழப்பத்திற்கு பின்..அவர்கள் கொடுத்த விளக்கம் ..
 ' எதிர்காலம் என்பது இப்போதே இங்கயே வேறு ஒரு லேயரில்... நம்மால் உணர முடியாத பரிமாணத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ..இந்த கருவி அதை புகை படம் பிடித்து இருக்கிறது..'

இரண்டாவதாக...

இன்றைய அதிநவீன அக சிவப்பு கேமராவை கொண்டு ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்து ...எழுந்து சென்ற ஒரு காலி நாற்காலியை படம் பிடித்தால் ஒரு நிழல் உருவமாக அந்த நபர் யார் என்பதை கண்டு கொள்ள முடியும் (அவரது உடல் வெப்பம் கொஞ்ச நேரம் நாற்காலியில் தங்கி இருப்பது தான் காரணம்) எனில் என்ன பொருள்.. அந்த கருவி அந்த நாற்காலியின் கடந்த காலத்தை புகை படம் எடுத்துள்ளது என்று சொல்லலாமா?
இன்றைய தொழில்நுட்பத்திற்கு 5 அல்லது 10 நிமிட காலத்தை பிடிப்பது சாத்தியமாக இருக்கலாம் எதிர்காலத்தில் அது நீட்டிக்கபடலாம்..கூடவே அதில் பயண படவும்...(ஒரு காலத்தில் நிலவை படம் எடுத்தவன் பிறகு ஒரு நாள் அங்கே பயணம் சென்றதை போல)

இந்த time dilation என்கிற கால வேறுபாடு என்பதன் நீட்சிதான் time travel ஆக முடிகிறது.
 time dilation இல் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.. நமது ஈர்ப்புவிசை எல்லையை தாண்டி இருக்கும் செயற்கை கோள்களில் இந்த கால  மாறுபட்டால் அதில் அமைக்க பட்டுள்ள அதி நுட்பமான கடிகாரங்கள் எப்போதுமே பூமியில் உள்ள கடிகாரங்களுக்கு பொருந்தாத தவறான நேரத்தையே எப்போதும் காட்டுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
அது மேட்ச் ஆவதற்கு தன்னை தானே திருத்தி கொள்ளும் படி அவைகள் வடிவமைக்க பட்டிருக்கின்றன.
உலகில் பல மூலைகளில் இருந்து பல பேர் தான் டைம் ட்ராவல் பண்ணதாக (ஏதோ சினிமாக்கு போயிட்டு வந்ததை போல )ஆங்காங்கே பேட்டி கொடுப்பார்கள் அவற்றில் பெரும்பாலும் பக்கா கட்டுக்கதைகள்...

இந்த குருட்டாம் போக்கு நம்பிக்கை...கற்பனை கதை என்ரெல்லாம் இல்லாமல்
இந்த time dilation ..time travel இதெல்லாம் எப்போ எப்படி எந்த சித்தாந்த அடிப்படையில் நடைமுறை சாத்தியம் ??
அதற்கு அறிவியல் ரீதியாக சாத்தியகூறு மற்றும் நிரூபணம் ஏதாவது  இருக்கிறதா? அதை கொஞ்சம் பார்க்கலாம்...

இரண்டு விதமான சூழ்நிலைகள் இருக்கின்றன... இது நடக்க ..

ஒன்று

ஒளியின் வேகத்தில் பிரயானிதால் இந்த விசித்திரம் நிகழ்கிறது..
இனொன்று பிளாக் ஹோல் போன்ற அதீத அக்ரஷன சக்தி கொண்ட பொருள் அருகில் செல்லும் போது காலதில் பயணம் செய்யும் சாத்தியம் உருவாகிறது ..
இது இரண்டு முக்கியம் என்றாலும் மேலும் சில சாத்தியகூறுகளும் இருக்கின்றன..
அதெல்லாம் என்ன எப்படி என்பதை ஒவொன்றாக பார்ப்போம்...

முதலில் ஒளி வேகத்தில் சென்றால் என்ன நடக்கிறது என்று பாப்போம்..
இதை ஆராய்வதற்கு நமக்கு ஒரு மாமேதையின் ...அவருடைய கோட்பாட்டின் உதவி தேவை உலகில் யாராலும் அவர் உதவி இல்லாமல் இந்த டாபிக் ஐ முடிக்க முடியாது... அந்த அப்பாடக்கர் யார் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும்...
ஐன்ஸ்டைன்...
அவருடைய சார்பியல் கோட்பாடுகள் முழுதுமே விசித்தரங்கள் அடங்கிய ....நமது அன்றாட பவுதீக  புரிதலுக்கு அப்பார் பட்டது தான்.. (அவரது கோட்பாடுகள் குறித்து விரிவாக எனது 'சார்பியல் எனும் சமுத்திரம் இல் 5 பாக கட்டுரையாக எழுதி இருந்தது நினைவிருக்கலாம்)
அவர் கோட்பாடு என்ன சொல்கிறது?
ஒளி வேகத்தில் பிரயாணம் செய்தால் நமக்கு நேரும் பல விசித்திர விளைவுகளை... நிகழ்வுகளை .. அந்த கோட்பாடு சொல்கிறது. உதாரணமாக ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க உங்கள் நிறை கூடி கொண்டே போகிறது.... நீங்கள் பயணிக்கும் திசையை நோக்கி நீங்கள் கொஞ்சம் சுருங்குகிறீர்கள்... அப்புறம் ஒளி வேகத்தை எட்டும் போது உங்கள் நிறையும் அதை நகர்த்துவதற்கு தேவை படும் ஆற்றலும் முடிவிலி யாக அதிகரிக்கிறது...(E=mc 2 effect) அப்புறம் உங்கள் காலம்? ? அது சாமாண்யனை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட நின்று விடுகிறது...

ஐன்ஸ்டைனின் ஸ்பெஷல் ரிலேடிவிட்டியை விளக்கும் Paul langevin
என்பவரின் twin paradox (தமிழில் இரட்டை முரண்மை என்று சொல்லலாம்) ஐ நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் .
அதாவது ஒரு இரட்டை சகோதரர்கள்... அவர்களுக்கு ஒரு 10 வயசு இப்போ என்று வைத்து கொள்ளுங்கள் திடீர் என்று ஒரு நாள் அதில் ஒருவர் ஒரு ராக்கெட்டை பிடித்து விண்வெளி பயணம் சென்று விட்டார் என கொள்வோம் ... என்ன... அவர் சென்ற ராக்கெட் ஒளி வேகத்தில் செல்ல கூடியது... (வினாடிக்கு 3 லட்சம் கிமி)இப்படி ஒரு 10 ஆண்டுகள் பயணம் சென்று விட்டு பூமி திரும்பினால் அவர் என்ன காண்பார்??
(500 , 1000 நோட்டுகள்  செல்லாது என்பதை தவிர்த்து)  அவர் இரட்டைக்கு இப்போ வயசு 20 இருக்கும் (அதானே நியாயம்) ஆனால் பயணம் சென்ற சகோதரனுக்கு இப்போ வயசு வெறும் 13 அல்லது 14 ... காரணம் அவர் ஒளி வேகத்தில் செல்லும் போது வெளியை கடக்கும் போது காலத்தையும் சேர்ந்தே கடந்துள்ளார்...ஐன்ஸ்டைன் தத்துவத்தின் படி ஒளி வேக பிரியாணிக்கு இதான் நடக்கும் ..மேலும் அவர் தத்துவத்தின் படி காலமும்( time) வெளியும் (space) வெவேறு அல்ல அது spacetime... நீங்கள் இதில் ஒன்றை கடந்தால் மற்றத்தையும் சேர்ந்தே கடபீர்கள்..

"இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு "
என்று நீங்கள் கேட்பீர்களேயானால்.....
ஐன்ஸ்டைன் காலத்தில் இதை விட பயங்கரமாக அவர் கோட்பாட்டை கேலி செய்தார்கள் .. அதற்கு காரணம் அவரது அற்புத கண்டுபிடிப்புகள் எந்த ஆய்வு கூடத்தில் அவர் சோதித்து பார்த்தது அல்ல ..
அந்தளவு வசதி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அந்த காலத்தில் இருந்திருக்க வில்லை அதன் பின் வந்தவர்கள் கிட்ட தட்ட 20 கிமி சுற்றலவில்  அமைந்துள்ள cern ஆய்வகத்தில் ஹைட்ரான் கொலைடர் எனும் ராட்சத கருவியில் சில நுண்துகள்களை ஒளிக்கு நெருக்கமான வேகத்தில் முடுக்கி பரிசோதித்தார்கள்... அந்த நுண்னுகள் வினாடியில் சில பிரிவில் வாழும் ஆயுட் காலம் கொண்டவை அவைகளை கிட்ட தட்ட ஒளி வேகத்தில் பிரயாணம் செயவித்து பார்த்தபோது ஐன்ஸ்டைன் சொன்னதற்கு இம்மி பிசகாமல் அவற்றின் ஆயுட் காலம் அதிகரித்தது தெரியவந்தது...
ஐன்ஸ்டைன் வெறும் கற்பனையை பயன்படுத்தி பிரபஞ்சத்தின் இவ்வளவு ஆழமான உண்மைகளை எப்படி அவர் கண்டு கொண்டார் என்பது தான் இன்று வரை மகா சஸ்பென்ஸ்..

இரண்டாவதாக ....

ஈர்ப்புவிசை...

அதீத ஈர்ப்புவிசை எதையும் ஈர்க்க கூடியது ...உங்களையும் என்னையும் அப்புறம்....காலத்தையும்...
இதற்கும் நாம் மீண்டும் ஐன்ஸ்டைனையே நாட வேண்டி உள்ளது ஈர்ப்பினால் வெளி வளைகிறது என்று அவர் எந்த ஆய்வும் இன்றி(வழக்கம் போல்) சொன்னார். வெளி வலைந்தால் காலம் வளையும் காரணம் இரண்டும் வெவேரல்ல என்று ஏற்கனவே சொன்னோம் ...
அவரது வெளி வளைவு கொள்கை அவர் சொன்ன பின் 5 ஆண்டுகள் கழித்து சூரிய கிரகணத்தின் போது ஆய்வாளர்களால் சோதித்து பார்க்க பட்டது... அதாவது  சூரியனை சுற்றி உள்ள வெளி அதன் ஈர்ப்பு விசையால் வலைந்துள்ளது உண்மை என்றால் கிரகணத்தின் போது... அதற்கு பின்னால் உள்ள நட்சத்திர கூட்டத்தில் இருந்து வரும் ஒளியானது சூரியனை சுற்றிக்கொண்டு (அதன் வளைந்த வெளி வழியாக) நம்மை வந்து சேரவேண்டும்....
அது கரெக்டாக வந்து சேர்ந்து... ஐன்ஸ்டைனுக்கு சல்யூட் அடித்தது...

பிரபஞ்சத்தின் அதீத ஈர்ப்பு விசை கொண்ட பொருள் யாதெனில் அது  பிளாக் ஹோல் என படும் கரும் பாழ் அல்லது கரும்துளை...
நமது மொத்த பால்வெளி திரலை தாங்கி பிடித்து சுழல செய்து கொண்டிருப்பது ஒரு சூபர்மாசிவ் பிளாக் ஹோல் தான் .அப்படி பட்ட சங்கதிகலின் அருகில் செல்லும் போது காலம் கிட்ட தட்ட நின்று விடும் என்கிறார்கள் ..

அங்கே அதன் அருகில் (interstellar படத்தில் வருவது போல)ஒரு வருடம் டூர் சென்று வந்தால் இங்கே பூமியில் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்...

நமது அடுத்த சாத்திய கூறு பற்றி சொல்லவேண்டும் என்றால் அது பிரபஞ்சத்தின் ஷார்ட் கட்  என்று சொல்லலாம் அதன் பெயர் worm hole இதை பற்றி இரத்தின சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சுக்கு மயிலாப்பூரில் ஒரு இடத்தில் worm hole இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அங்கே நீங்கள் போய் உங்கள் தலையை விட்டால் நேரே மாயா ஜால படத்தில் வருவதை போல திருவண்ணாமலையில் எட்டி பார்ப்பீர்கள் அதாவது இங்கே இருந்து அங்கேகான காலத்தையும் ..... இடைவெளியையும் நீங்கள் கடந்து விடீர்கள்... (worm hole பற்றி "வாம் ஹோல்  பிரபஞ்சத்தின் குறுக்கு வழி " கட்டுரையில் விரிவாக எழுதி இருக்கிறேன்)
 Time travel பற்றி ... அது சாத்தியமானால் ஏற்படும் முரண்பாடுகள் பற்றி (உதாரணமாக grand father paradox) ..அதில் உள்ள நடைமுறை சிக்கல் பற்றி நிறைய பார்ட் கட்டுரை எழுதலாம்...
இந்த கட்டுரை அதன் நடைமுறை சாதியத்தை ஆராயும் ஒரு சிறு அறிமுகம் தான்..
காரணம் இப்போது நவீன விஞ்சாணம் time travel ஐ relativity theory  ஐ வைத்து விளக்கி கொண்டிருப்பதை கொஞ்சம் பின்னால் வைத்து விட்டு quantum mechanism கொண்டு அதிகம் விளக்கு கிறது....
அதற்கு ....
முதலில் குவாண்டம் பிஸிக்ஸ் இன் அறிமுகம் தேவை...
அது என்ன quantum physics
அது....
(முடிந்தால் )அடுத்த தனி கட்டுரையில்......

உங்கள் பின்னூட்டத்தை தவறாமல் செலுத்துங்கள்...

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் ரா.பிரபு

Comments

  1. Enaku YouTube la oru channel iruku athu name (behind earth) intha maathiri oru sila video create paniruken mudinga paarunga

    Ungaloda help venum innum more video poda mudinga enna gmailmail la contact pannunga sir my gmail I'd (mohanrajrajmohan05@gmail.com)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"