கால பயணம் சாத்தியம் என்ன (பாகம் 2) வார்ம் ஹோல்


கால பயணம்
சாத்தியம் என்ன (பாகம் 2)
வார்ம் ஹோல்

அறிவியல் காதலன்

(கருத்தும் எழுதும்: ரா.பிரபு)

(இம்முறை கட்டுரை கொஞ்சம் நீ..ளம்....நண்பர்கள் பொறுத்து கொள்ளவும்...)
time travel என்று வரும் போது உண்மையாகவே யாராவது time travel பண்ணி இருக்கிறார்களா..
அப்படி யாரையாவது நாம் சந்தித்து இருக்கிறோமா இல்லையா என்ற கேள்வி எல்லோருக்கும் வருவது இயல்புதான்.
(இருக்கிற கூட்ட நேரிசல்ல டைமுக்கே travel பண்ண முடில அப்புறம் எங்கேயிருந்து டைம் டிராவல் என்கிறீர்களா)

அவ்வபோது உலகத்தில் திடீரென்று ஆங்காங்கே பல பேர் தான் கால பயணம் செய்ததாக.... அங்கே எதிர் அல்லது கடந்த காலத்தில் தன்னையே பார்த்ததாக அல்லது எதிர்கால நிகழ்வுகள் பார்த்ததாக எல்லாம் சொல்லுவார்கள்... அடித்து சத்தியம் கூட செய்வார்கள்...
அவர்களில் பெரும்பாலானவர்கள் time travel குறித்து நமக்குள்ள curiosity ஐ ஊறுகாய் ஆக்கி புகழ் தேடுபவர்கள்..

என்றாலும்...

சில பேர் அதாவது போலி புகழ் தேடாத... பொய் சொல்ல அவசியம் இல்லாத பல பேர் பல விதமான விசித்திர கால மாறுபாடு அனுபவங்களை சொல்வது உண்டு....
உதாரணமாக ஒரு பைலட் ஒருமுறை தனது பயணத்தில் சில வினாடி நேரத்திற்கு கண்மூடி திறந்த போது ஏதோ திடீர் காட்சி மாற்றம் போல உணர்ந்தார்... என்னடான்னு உத்து பார்த்தால் தான் மிக சில வினாடிக்கு முன் இருந்த இடத்திலிருந்து பல ஆயிரம் மைல் வெளி மற்றும் காலத்தை சும்மா மேஜிக் பன்னி கடந்தது போல கடந்துள்ளார்...

இப்படி நிறைய அனுபவ கதைகள் இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் ஆதாரம் ..போட்டோ... வீடியோ எல்லாம் கேட்டால் ஒன்னும் இல்லையே தம்பி அடுத்த முறை வேணா எடுத்து வைக்கிறேன் என்பார்கள்..(இதில் என்ன விசேஷம் என்றால் பரபரப்புக்காக திட்டமிட்டு கதை விடுபவர்கள் நாம் நம்பும் விதமான எக்கச்சக்க ஆதாரம் வைத்திருப்பார்கள்)
எது எப்பிடி ஆயினும் அறிவியல் ஆதார அடிப்படையில் மட்டுமே பேச பட மற்றும் ஏற்று கொள்ள படுவதால்...
ஏற்று கொள்ள பட்ட டைம் டிராவல் என நாம் யாரை சொல்லலாம் என்றால்...அது Sergei Vasilyevich Avdeyev போன்றவர்களை தான்..

யார் இந்த S V A என்றால் (பெயர் அநியாயத்துக்கு எடக்கு முடக்காக இருப்பதால் சுருக்கி விட்டேன்)  இவர் 1989 வாக்கில் இருந்த ஒரு ரஸ்ய விண்வெளி வீரர்.
(பார்க்க இணைப்பு படம்)
இவர் விண்வெளியில் மொத்தம் 747.59 நாட்கள் தங்கி இருந்தவர் மேலும் 11968 முறை பூமியை அதன் சுற்றுவட்ட பாதையில் சுற்றியவர்...515,000,000 கிமி யை கடந்தவர்...
எனவே சிறப்பு சார்பியல் கோட்பாடு படி அவர் டைம் டைலேஷனை சந்தித்தவர்... இவர் கிட்ட தட்ட 750 நாள் விண்வெளியில் சுற்றி இவர் பயணம் செய்த கால பயணம் எவ்வ்ளவு தெரியுமா.. 0.02  வினாடி .
அதாவது 20 மில்லி வினாடி...
அதாவது பூமியில் உள்ளவரை ஒப்பிடும் போது இவர் 0.02 வினாடி இளமை யாகி இருப்பார்...இதை செய்த ஒரே மனிதர் இவர் அல்ல..  இன்னும் பல பேர் நம்ம SVA வின் சாதனை யை முறியடித்தாலும் அவர்கள் வெளியில் தங்கி இருந்தது சில நாட்களுக்கு மட்டும் தான்...

சொல்ல போனால் விண்வெளி வீரர் மட்டும் அல்ல நாம் ஒவ்வொருவருமே பஸ்சிலோ அல்லது ட்ரெயினிலோ பயணம் செய்யும் போதும் கோட்பாட்டின் படி காலத்தில் பயணம் செய்யத்தான் செயகிறோம்... ஆனால் அது பல கோடியில் ஒரு பிரிவு என்கிற அளவு நடப்பதால் அதை எந்த வகையிலும் நாம் உணரவோ அல்லது உலகின் எந்த கருவியை கொண்டும் அலக்கவோ முடியாது...

அடுத்ததாக சில ஆய்வாளர்கள்  பிரமிட்களின் அருகில் time dilation ஏற்படுவதாக சொல்கிறார்கள் அங்கே அருகில் போய் மிக நுட்பமாக படம் பிடிக்கும் கமெரா கொண்டு வீடியோ எடுத்து பார்த்தால் தூரத்தில் இருப்பபவை எல்லாம் கொஞ்சம் பார்ஸ்ட் பார்வட் இல் நிகழ்வதை போல வேகம் கூடி இருப்பதை போல தெரிவது தெரிகிறதாம்.
அதாவது பிரமிட் அருகில் காலம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. இங்கேயும் வித்யாசம் மிக மிக சிறியது என்பதால் நம்மால் அதை இயல்பாக உணர முடியாது.

 இந்த கட்டுரை முதல் பாகத்தில் கால பயன சாத்திய கூறை ஆராய்வதில் ஒளி வேகத்தில் மற்றும் அசாத்திய ஈர்ப்பு விசையை என்ன நேரும் என்று விரிவாக சொன்னேன் கூடவே worm hole பயன்படுத்தி time travel பண்ணலாம் என்பதை ரத்தின சுருக்கமாக சொல்லி இருந்தேன்.
இந்த worm hole டைம் ட்ராவலில் முக்கிய பங்கு வகிப்பதால்
அது என்ன ஏது சமாச்சாரம் என்பதை அறியாதவர்களுக்கு மட்டும்...அதை பற்றி கொஞ்சம் விரிவாக இப்போது சொல்லாம் என்று இருக்கிறேன்.

(குறிப்பு: இப்போது பின்னால் தரப்போகும் பதிவு முழுக்க முழுக்க என்னுடைய "வாரம் ஹோல் பிரபஞ்சத்தின் ஷார்ட் கட்" என்ற கட்டுரையின் காபி பேஸ்ட் ஆகும்)

இந்த worm hole அதாவது தமிழில் புழு துளை என்று சொன்னால் என்னையா பேரு இது என்று நினைப்பீர்கள் ஆனால் பின்னால் இதன் பெயர் காரணத்தை விவரிக்கும் போது ஏற்று கொள்வீர்கள்.

இந்த வார்ம் ஹோல் பிரபஞ்சத்தின் ஷார்ட் கட் என்று சொல்லலாம். ஓளி வேகத்தில் பாய்ந்தும் பல ஆயிரம் ஆண்டுகள் கடக்கும் காலத்தையும் வெளியையும் இதை பயன்படுத்தி வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடக்கலாம்.
இந்த worm hole ஐ புரிந்து கொள்ள எனது 'சார்பியல் எனும் சமுத்திரத்தில் '3 வது பாகத்தில் நான் சொன்ன அதே எடுத்துகாட்டை மீண்டும் பயன்படுத்து கிறேன்.

அதாவது நீங்கள் மயிலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது அந்த புள்ளியில் நீங்கள் தலையை விட்டால் மாயாஜால படத்தில் வருவதை போல நாகர்கோவிலில் எட்டி பார்ப்பீர்கள் அந்த புள்ளிக்கு பெயர் தான் worm hole .
இயற்கையில் இது மயிலாப்பூரில் இல்லை ஆனால் பிரபஞ்சத்தில் நிறைய இடத்தில உள்ளது .இதை வைத்து பல ஒளி ஆண்டு தொலைவை ஒரே வீநாடிக்கும் குறைவான நேரத்தில்  கடக்கமுடியும்.
அப்படி வெளியை கடந்தால் இன்னொன்றையும் தானாகவே நாம் கடக்க வேண்டிவரும் அதுதான் காலம்..

உதாரணமாக நமக்கு மிக அருகில் இருக்கும் அடுத்த காலக்சி  பெயர் ஆன்றோமீடா இதை நாம் சென்றயடைய 25 ஒளி ஆண்டுகள் ஆகும் . அதாவது ஒளி வேகத்தில் சென்றால்....ஆனால் இவ்வளவு பெரிய தூரம் மற்றும் வெளியை worm hole பயன்படுத்தி ஒரே வினாடியில் சென்று வரலாம்.
ஐன்ஸ்டைன் கூற்றுப்படி வெளியை சுருட்ட.. வளைக்க ..விரிக்க முடியும்..அப்படி சுருட்டி ஒண்ணா 'பின் 'போட்ட புள்ளி தான் வார்ம் ஹோல்.. புரியலயா? சரி விடுங்கள்.

 ஒரு வெள்ளை தாளை எடுத்து கொள்ளுங்கள்... இப்போது இது பேப்பர் அல்ல இதான் வானம் அல்லது வெளி என்று நினைத்து கொள்ளுங்கள் இதில் இடது பக்கத்தில் தொடக்கத்தில் ஒரு புள்ளியை வையுங்கள் இதுதான் நாம் இருக்கும் பால் வெளி திரள் நமது galaxy... இப்போது வலது பக்க கடைசில ஒரு புள்ளி வையுங்கள் .இதுதான் ஆந்திரா... சாரி ஆண்ட்ரோமிடா.. நமது பக்கத்துக்கு galaxy.. இப்போது இந்த ரெண்டு பள்ளியையும் பென்சிலை கொண்டு இணையுங்கள்... இந்த கோடுதான் 25 ஒளி ஆண்டுகள் .அதாவது இந்த புள்ளியிலிருந்து அந்த புள்ளியை அடைய நீங்கள் இந்த கோடு வழியாக தான் சென்றாக வேண்டும் (அவ்வளவு காலம் மற்றும் தூரம்)

இப்போது அந்த பேப்பரை அப்படியே சுருட்டி அந்த ரெண்டு புள்ளியை இணையுங்கள் ... சந்திக்கும் இடத்தில ஒரு குண்டு ஊசியை குத்துங்கள் ...அந்த புள்ளிதான் வார்ம் ஹோல்..

இப்போது இரு புள்ளிகளுக்கிடையான கால மற்றும் வெளி இடைவேளை எவ்வளவு... அது கிட்ட தட்ட zero .. இந்த புள்ளி முடியும் அதே புள்ளியில் அந்த புள்ளி தொடங்குகிறது. .
இரு வானங்களை இணைக்கும் இந்த சுரங்கம் மாதிரியான அமைப்பை கொண்டு நாம் விண்வெளியில் கற்பனை பண்ண முடியாத தூரம் பயணம் பண்ணலாம் .

இரண்டு ப்ரபஞ்சகளுக்கு இடையிலான கதவு தான் இந்த worm hole இதை பயன் படுத்தி சென்று விட்ட உங்களை பிடிக்க பூமியிலிருந்து அதிவேக ராக்கெட் எடுத்து கொண்டு கிளம்பும் உங்கள் நண்பர் உங்களை பிடிக்க பல லட்சம்...கோடி ஆண்டுகள் ஆகும்.(Thore படத்தில் இந்த worm hole ஐ பயன்படுத்தி தான் நமது பூமிக்கு வந்து சேருவார்.. சுத்தி மன்னன் தார்..)

ஒரு ஆபிளில் மேல் தட்டையான இரண்டு புழுக்கள் அமர்ந்திருந்தன..
அவைகளின் பார்வையில் ஆப்பிள் ஒரு தட்டை பரப்பு 2d வடிவம் என நம்பி கொண்டிருந்தன... (நாம் நீண்ட காலமாக பூமியை நம்பிக்கொண்டிருந்தை போல) அதில் ஒரு புழு ஆப்பிலின் அடுத்த முனையை தேடி புறப்பட்டது..
அது நகர்ந்து செல்ல செல்ல ஆப்பிள் வளைவில் மறைவதை புழு நம்பர் ஒன் கவனித்தது(கடலில் செல்லும் கப்பல் கடற்கரையிலிருந்து கவனிக்கும் போது பூமி வளைவு காரணமாக குறிப்பிட்ட தூரம் சென்ற பின் வளைந்து மறைவதை போல)... அடடா இவ்ளோ நாளா நாம நம்பி வந்தது மாதிரி ஆப்பிள் ஒரு 2d அமைப்பு அல்ல அது வளைந்து உருண்டையாக 3d வடிவத்தில் உள்ளது என்பதை அது கண்டு கொண்டது ...எனவே அந்த ஆப்பிளை அப்படியே துளையிட்டு அடுத்த முனைக்கு தனது நண்பணை விட வேகமாக சென்றடைந்து லேட்டா வந்த நண்ப புழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது...

Worm hole கு என்னடா பேர் வைக்கலாம் என்று விண்ஞாணிகள் குழம்பி கொண்டிருந்த போது இந்த எடுத்து காட்டை சொல்லி விட்டு ஜான் அர்ச்சிபால்ட் வீலர் என்பவர் அந்த துளைக்கு புழு துளை( worm hole) என பெயரிட்டார்.

வாரம் ஹோல் எங்கே இருக்கு அதை கண்டு பிடித்து விட்டார்களா என்றால் அது இருக்கு ஆனா இன்னும் பயன்படுத்தும் விதமா இல்ல மற்றும் கண்ணுக்கே தெரியாத மிக சின்ன வடிவில் இருக்கு .... அது கணிக்கவே முடியாத மிக குறுகிய காலத்தில் உண்டாகி மறைகிறது ...இப்படி பல கதைகளை சொல்கிறார்கள்...
எது எப்படியோ எதிர்காலத்தில் நாம் ஸ்பேஸ் டிராவல் பண்ண வேண்டும் என்றால் இந்த நேஷனல் ஹைவேசை பயன்படுத்தினால் தான் முடியும்..

கால பயணதின் சாத்தியங்கள் தொடரும்...

உங்கள் பின்னூடத்தை மறக்காமல் பதிவிடுங்கள்...

உங்கள் அண்பு நண்பன்
அறிவியல் காதலன் .. ரா.பிரபு

Comments

  1. தொடருங்கள் தோழரே..
    தொலைபேசி

    ReplyDelete
  2. அறிவியல் ஈனக்கு மிகவும்பிடிக்கும்

    ReplyDelete
  3. வார்ம்ஹே ால் என்பது ஒரு பாதை..அண்டவெ ளியை நாம் வளைக்க முடி யாது..அதற்கு கருந் ளை மட்டுமே உதவிட முடியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"