கால பயணம் சாத்தியம் என்ன ( பாகம் 3) (டெலிபோர்டேஷன்)




கால பயணம்
சாத்தியம் என்ன ( பாகம் 3)
(டெலிபோர்டேஷன்)

அறிவியல் காதலன்

(கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு)

மரணப்படுக்கையில் இன்றிரவுக்குள் எப்படியும் காலி என்கிற சூழ்நிலையில் இருக்கும் வீட்டில் என்றைக்காவது இருந்திருக்கீறீர்களா?
அல்லது ஆசிரியர் நமக்கு சுத்தமாக பிடிக்காத சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டிருக்கும் வகுப்பில்....??
அப்போதெல்லாம் காலம் மிக மிக மெதுவாக ஒடுவதாக உணர்ந்திருப்பீர்கள் அல்லவா..
இதுவே நண்பர்களுடனான பார்ட்டி அல்லது காதலியுடன் சாட்டிங் என வரும் போது காலம் ,'போனதே தெரியல பா' என்கிற அளவு வேகமாக ஓடுவதையும் உணர்ந்திருப்பீர்கள்...

இதெல்லாம் ஒரு சைக்கலாஜிகள் திங்...
இதை கால மாறுபாடு என்று சொல்வது அபத்தம் என்று நீங்கள் சொன்னாலும் தனது சார்பியலை எளிமையாக விளக்க இந்த மாதிரி அபத்த எடுத்துக்காட்டுகளை தான்(வேறு வழி இல்லாமல்) உபயோகித்தார் ஐன்ஸ்டைன்.
உங்கள் சார்பியல் கால மாறுபாடு எப்படி இருக்கும் அதை விளக்க முடியுமா என கேட்டதற்கு அவர்," நீங்கள் உங்கள் காதலியுடன் மணிக்கணக்கில் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தாலும் நேரம் போனதை உணர முடியாமல் போகிறது அல்லவா.. அதே நீங்கள் ஒரு சூடான அடுப்பின் மேல் அமர்ந்திருப்பதாக இருந்தால் ஒவ்வொரு நொடியும் மிக நீண்ட காலம் போல் உணர்வீர்கள் அல்லவா அப்படி தான் இருக்கும் சார்பியல் கால மாறுபாடு" _ என்றார்.
அதை கேட்டு கொண்டிருந்த நிருபர் ஒருவர் இதை நீங்கள் ஆய்வு மூலம் சோதனை செய்துகாட்டி நிரூபிக்க முடியுமா என கேட்டதற்கு.. "அந்த பார்க்... காதலி சோதனையை நான் செய்கிறேன்.. அந்த அடுப்பு சோதனை வேணா நீங்க செய்யுங்க வாங்க செக் பண்ணி பார்க்கலாம் " என்றார்.

காலதில் பயணம் செய்ய முதலில் நாம் காலத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் இந்த நீளம்.. அகலம்.. உயரம் கொண்ட 3d உலகில் அடுத்ததாக 4 th dimension.. 4ஆவது பரிமாணம் என்பதாக சொல்லப்படுவது 'காலம்'.
இந்த காலம் என்பது ஒரு சாலை யை போல் அமைந்துள்ளதா அல்லது ஒரு நதியை போலவா என்பது தான் கேள்வி...
காலம் ஒரு சாலையை போல பிரபஞ்சத்தில் விரிந்து சென்று கொண்டிருக்கிறது என்றால் அதில் நாம் கொஞ்சம் வேகமாக ஓடி முன்னால் அல்லது கொஞ்சம் திரும்பி ஓடி பின்னால் பயணிக்கலாம்.
ஆனால் இது ஒரு ஆறு போல அமைந்திருந்தால் அது அடித்து கொண்டு போகிற போக்குக்கு தான் நாம் செல்ல முடியும்.

பொதுவாக காலபயணம் ஒரு வேளை சாத்தியம் என கொண்டால் அது முற்றிலும் வேறு பரிமாணத்தில் இருக்கும் என்கிறர்கள் ... அதில் நீங்கள் பயணம் செல்லலாம் கடந்த கால மானுடர்களை டைனசர்களை காணலாம் ஆனால் அவைகளுடன் எந்த வித தொடர்பும் கொள்ள முடியாது கரணம் நீங்களே அப்போது வேற ஒரு பரிமாணத்தில் இருப்பீர்கள்...
இது உண்மை என்றால் நமது எதிர்கால மாந்தர்கள் இப்போதே நம்முடன் ஏதோ ஒரு மின்காந்த சிக்னல் போல வோ... அல்லது கண்ணுற முடியாத அலைவரிசையில் உள்ள ஒளி அல்லது ஒலியாகவோ இருப்பார்களா என்று என்ன தோன்று கிறது...

ஆனால்.....

இப்படி கால பயண சாதியத்தில் பல சிக்கல் உள்ளது .
உதாரணமாக "grand father paradox." என்ற ஒன்று.
அது என்ன 'grand father paradox '?
அதாவது ஒரு நபர் இப்போதைய காலத்திலிருந்து கால பயணம் செய்து கடந்த காலத்திற்கு சென்று இறந்து போன தனது சொந்த தாத்தா வை கண்டு பிடித்து அவரை சுட்டு விடுகிறான் என்று வைத்து கொள்வோம் (டேய் தாத்தா ஏன்டா எனக்கு சொத்து சேர்த்து வைக்கல..??)  அப்போது என்ன நடக்கும் கடந்த காலத்தில் இவன் தாத்தாவே இல்லை என்றால் இவன் எப்படி உருவாகி இருக்க முடியும் எப்படி கடந்த காலத்திற்கு செல்ல முடியும் எப்படி சுட முடியும் முரண்பட்டு இடிக்கிறது அல்லவா.
 இதான் grand father paradox

இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞாணியான Stephan Hopkins ஒரு முறை ஒரு கிறுக்கு தனம் செய்தார் (விஞ்ஞாணிகள்னாலே கிறுக்கு தானே)
அது ஜூன் 28, 2009 அவர் ஒரு
ஓரு பார்ட்டிகு அரேஞ் பண்ணி இருந்தார் தன்னை சுற்றி ஷாம்பெயன்கள் சூழ ... வர போகும் விருந்தினர்களை வரவேற்கும் வாசங்கள் பளபளக்க.... ஆனால் அந்த பார்ட்டிக்கு கடைசி வரை யாரும் வர வில்லை காரணம் அந்த பார்ட்டீ அவர் ஏற்பாடு செய்திருந்தது time traveler களுக்காக..
அதாவது அப்படி யாரவது இருந்தால் தனது பார்ட்டி அறிவிப்பை பார்த்து அவர்கள் worm hole பஸ்ஸயோ loop hole ட்ரைனையோ பிடித்து வருவார்கள் என சோதித்து பார்த்தார்..

அதன் பிறகு அந்த சோதனை முடிவை அவர்..'I have experimental evidence that time travel is not possible. என்று தெரிவித்தார்.
 மேலும்..
'I gave a party for time-travellers, but I didn't send out the invitations until after the party. என்றார் (ஆமாம் பின்ன இன்விடேஷன் கொடுக்கலனா யார் வருவா)

'ஐன்ஸ்டைன் தியரி கால பயணத்திற்கு சாதியத்தை காட்டுகிறது என்றாலும் அப்படி வண்டி பிடித்து வரவேண்டும் என்றால் அது ஏற்படுத்தும் ரேடியேஷன் மொத்த ஸ்பெஸ் ஷிப்பை... ஏன் மொத்த கால லூப்பையே அழிக்கும் விதமாக தான் இருக்கும்' என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பாகங்களில் கால பயன சாத்தியங்களை ஒளி வேகத்தில்...மற்றும் ஈர்ப்பு விசை கொண்டு.....அப்புறம் worm hole இல் என பல வகை சாத்தியங்களை பார்த்தோம்... இப்போது ஒரு புது வித அடுத்த சாத்தியத்தை பார்க்க போகிறோம் அதன் பெயர் ..

"டெலிபோர்டேஷன்".

அதாவது ஒருவரை அல்லது ஒரு பொருளை இங்கே இருந்து அப்படியே மறைய வைத்து பழைய மாயாஜால படத்தில் வருவதை போல டக்கென்று வேறு ஒரு இடத்தில வர வைப்பது..
இதென்னடா மாயாஜால கதை என்று எண்ணி ஒதுக்கி விட முடியாத அளவு அதில் அறிவியல் உண்மை இருக்கிறது...
இந்த சித்து வேலையை ஏற்கனவே வெற்றிகரமாக செய்து விட்டார்கள்.
என்ன ... இது வரை ஒரு அணு அளவில் தான் இது சாத்திய பட்டிருக்கிறது
இதை எப்படி செய்கிறார்கள் தெரியுமா..?
உதாரணத்திற்கு ஒரு கட்டிடம் எடுத்து கொள்ளுங்கள் அது ஆயிர கணக்கான செங்கல்கள் அடுக்க பட்ட அமைப்பு தான் அல்லவா... இப்போது அதை அப்படியே செங்கல் செங்கலாக  பிரித்து வண்டியில் ஏற்றி வேறு இடம் கொண்டு போய் முன்பு அடுக்க பட்டிருந்த  அச்சு அசல் அதே வடிவத்தில் செங்கலை அடுக்கிவைத்தால் அல்லது பழைய கட்டிட மாதிரி வரை படத்தை கொண்டு அச்சு அசலாக வேறு ஒரு கட்டிடம் கட்டினால் என்ன ஆகும் அந்த அதே கட்டிடம் இங்கே கிடைத்து விடும் அல்லவா இதான் கான்செப்ட் .அதாவது ஒரு பொருளை அனுஅணுவாக பிரித்து அதை வேறு இடத்தில் அந்த மாதிரியை அப்படியே உண்டு பண்ணுவது.(கட்டுரைக்கு சம்பந்தமில்லா தகவல்  ஒன்றை இங்கே பகிர்ந்து விடுகிறேனே.. நமது தாஜ்மஹாலை அப்படியே பார்ட் பார்ட்டாக கழட்டி கொண்டு போய் இங்கிலாந்தில் கட்டுவதற்கு மொத்த பிரிட்டிஷ் என்ஜினீரும் முயன்று முடியாமல் விட்டு விட்டார்களாம்.)

இந்த டெலிபோர்ட் கான்செப்டை வைத்து 1998 இல் ஒரு ஆய்வு செய்தார்கள் ஒளியை சுமந்துள்ள ஒரு போட்டான் அணுவை சோதனைக்கு எடுத்து கொண்டு அதன் நுன்அணு கட்டமைப்பை மிக சரியாக வரை படம் எடுத்து வைத்து கொண்டார்கள் .. அந்த தகவலை பக்கத்தில் வேறு ஒரு இடத்தில கடத்தினார்கள் (அதிக தூரம்லாம் இல்லை சுமார் 1 மீட்டருக்கு )அங்கே இதே போல கட்டமைப்பை கொண்ட அணு கூட்டத்தை ...பழைய அணுவில் இருந்ததை போன்றே அதே வரைபட படி ஒரு போலி போட்டான் ஐ வடிவமைத்து பார்த்தார்கள்.
என்ன ஆச்சர்யம் ! தன்னை போல் ஒருவன் வந்த உடனே அந்த ஒரிஜினல் அணு காணாமல் போய் விட்டது. அதாவது வேறுவிதமாக சொல்லவேண்டும் என்றால் இது இங்கிருந்து அங்கே டெலிபோர்ட் ஆகி விட்டது. இந்த சோதனைகளில் வரைபட தகவலை கடத்துவதும் வேறு ஒரு அனுதான். அதன் பின் கேபிள் ஐ வைத்து கடத்தி பார்த்து வெற்றி பெற்றார்கள்.
2006 இல் லேசரை வைத்து ..அப்புறம் 2012 இல் இதை இன்னும் விரிவாக கிட்ட தட்ட 80 கிமி தூரத்திற்கு
எல்லாம் செய்து பார்த்து விட்டார்கள்.

டெலிபோர்டிங் இல் நாம் டைம் ட்ராவல் மெஷின் போல நேற்று ..நாளை எண்றெல்லாம் போக முடியாதே... சும்மா இங்கே இருந்து அங்கே... என்று தானே டெலிபோர்ட் ஆக முடியும் என்று நினைக்கலாம்... அப்படி இல்லை சார்பியல் கோட்பாடு படி நமக்கு தெரியும் நாம் வெளியை கடந்தால் காலத்தை கடக்க முடியும் என்று..

இதே போல அணு சப் பார்ட்டிகள் அளவில் இன்னும் நிறைய மாயா ஜால சாத்தியங்கள் இருக்கின்றன... உதாரணமாக இங்கே ஒரு அணு துகளை கட்டுப்படுத்தினால் பிரபஞ்சத்தில் வேறு மூலையில் உள்ள ஒரு அணு அதற்கு ஏற்படும் மாறுதலை அப்படியே தலைகீழாக பிரதிபலிக்கும்.. இது வலது புறம் சுற்றினால் அது இடது புறம்...
இதை கையில் வைத்து கொண்டு அந்த அணுவுக்கு நாம் பல கால வெளி இடைவேளை கடந்து தொடரபு கொள்ள முடியும்..(இதை பற்றி விரிவாக விளக்க முன்பு சொன்னதை போல நான் முதலில் குவாண்டம் மேக்காணிசம் என்றால் என்ன என்பதை விளக்க தனி கட்டுரை போட வேண்டும்.)

அதெல்லாம் சரி... ஒரு பொருளை அல்லது அணுவை இங்கே பிரித்து எங்கேயோ கொண்டு போய் சேர்த்து விடலாம் ஆனால் மனிதனை அல்லது வேறு உயிருள்ள பொருளை அணு அணுவாக பிளந்து பல கோடி துண்டாக்கினால் அது எப்படி உயிர் தப்பும்? என நீங்கள் கேட்டால் ....
அதுவந்து..... அது வந்து....அது..... அது....
சரி ..
அடுத்த டாபிக்கு போவோம்....

உங்கள் பின்னூட்டத்தை மறக்காமல் பதிவிடுங்கள்...

 அன்பு நண்பன் அறிவியல் காதலன் ரா.பிரபு

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"