கால பயணம் சாத்தியம் என்ன (பாகம் 5) (குவாண்டம்)

கால பயணம்
சாத்தியம் என்ன (பாகம் 5)
(குவாண்டம்)

#அறிவியல் காதலன்

(கருத்தும் எழுத்தும் :ரா.பிரபு)

#கால_பயணம்
#சாத்தியம்_என்ன (பாகம் 5)
#குவாண்டம்

#அறிவியல்_காதலன்

கருத்தும் எழுத்தும் :ரா.பிரபு

"உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் நாம் திடீரென விமானம் மூலம் இங்கிருந்து நேரம் வேறுபடும் வேறு பகுதிக்கு சென்று விட்டால் அங்கே டைம் வேறு தானே அப்போ நாம் time travel எளிதில் பண்ணி விடலாமே "

இப்படி ஒரு சந்தேகத்தை நமது புதிதாக தொடங்க பட்ட வாசகர்கள் வாட்ஸ் அப் குழுவில் ஒரு நண்பர் என்னிடம் கேட்ட்டார்.

அப்படியென்றால் விமானம் மூலம் வேறு நாட்டிற்கு பயணம் செல்லும் எல்லோருமே time traveler அகிவிடுவார்களே...
அப்படி அல்ல .
ஒரு பேச்சுக்கு இன்று உங்களுக்கு பிறந்தநாள் இன்றோடு உங்களுக்கு வயது 20 என்று வைத்து கொள்ளுங்கள் . இன்றைக்கு நீங்கள் ஃபிளைட் பிடித்து அமேரிக்கா சென்று இறங்கி விட்டால் உங்களுக்கு ஒரு நாள் வயது குறைந்தவராக ஆகி விட வேண்டும் ஆனால் அப்படி நடப்பது இல்லையே... எனவே இதெல்லாம் time  travel ஆகாது என்று அவருக்கு பதில் அளித்து இருந்தேன்..

காலம் ஒரு நதியை போலவா அல்லது சாலையை போல வா என்று முந்திய பாகத்தில் கேட்டிருந்தேன். ஐன்ஸ்டைன் இதை ஒரு நதியை போல தான் என்கிறார் நதி எப்படி புவி ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு ஒரு இடத்தில் வேகமாகவும் ஒரு இடத்தில மெதுவாகவும் ஓடுகிறதோ அப்படி தான் காலமும் ஈர்ப்பு விசையால் பாதிக்க பட்டு இடத்துக்கு தகுந்தாற் போல் மாறி ஒடுகிறது என்றார்.

காலபயணத்தின் பலவித நடைமுறை சாதியக்கூறை இந்த கட்டுரையில் நாம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்...முதல் பாகத்தில் சார்பியல் தத்துவ அடிப்படையில் மற்றும் அதீத ஈர்ப்பு விசை கொண்டும் இரண்டாம் பாகத்தில் வார்ம்ஹோல் சாத்யத்தையும் மூன்றாம் பாகத்தில் டெலிபோர்டிங் டெக்னாலஜி யை வைத்தும்..நான்காம் பாகத்தில் அது ஒரு மாயையா என்கிற ரீதியிலும் ஆராய்ந்தோம்.. அணைத்து சாத்திய கூற்றிலும் நமக்கு சில முரண் இருந்தது கொண்டு இடித்து கொண்டு தான் இருந்தது .
குறிப்பாக கடந்த காலத்திற்கு செல்வதில்.
 அதீத ஈர்ப்பு விசை கொண்ட பிளாக் ஹோல் மாதிரியான இடத்தின் அருகில் பயணிப்பதன் மூலம் நமது காலத்தை சிறிது நிறுத்தி வைத்து பிறகு நாம் நமது அன்றாட காலத்திற்கு திரும்பி வருவது மூலம் எதிர்காலதிற்கு டைம் ட்ராவல் செய்யலாம் என்பதை ஏதோ ஒரு வகையாக ஒத்து கொண்டாலும் கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமாக தெரியவில்லை அதற்கு காரம் பல அதில் ஒன்று grand father paradox நம்மை போலவே Stephan halpkins அவர்களுக்கும் கடந்த காலத்தில் செல்வது நடக்காது என்ற சந்தேகம் உண்டு.. காரணம் g. f paradox முரண்பாட்டை எதாலும் கடந்து வர முடியாது என்று நமக்கு தெரியும்.

ஆனால்..

அந்த முரண்பாட்டை கடக்க நமக்கு வேனுமானால் முடியாமல் போகலாம் குவாண்டம் துகளுக்கு அது சாத்தியம் என்கிறார்கள்.

அது எப்படி .?

இதை புரிந்து கொள்ள குவாண்டம் துகள் எப்படி பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சாதாரண உண்மை ..'ஒரு பொருள் ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது' என்பது.இது ஒரு எளிய பவுதிக உண்மை..
ஆனால் இதெல்லாம் நம்ம உலகத்தில் தான். அணு உலகத்தில் அல்ல .குறிப்பாக குவாண்டம் உலகத்தில் அல்ல.

நீங்கள் ஒரு பேச்சுக்கு மிக மிக மிக மிக மிக சின்னவராக ஆகி  சப் அடமிக் லெவலுக்கு இறங்கி அங்கே உலகம் எப்படி இருக்கு என ஆராய்வதாக கொண்டால்.. அங்கு நீங்கள் நிறைய முரண்பாட்டை பார்க்கலாம். அந்த ரூமில் அங்கு ஒரு துகள் உங்கள் கண் முன் இருக்கும் திடீரென அங்கிருந்து மறைந்து ரூமின் வேறு மூலையில் அது தோன்றும்.. அந்த மாஜிக்கை கூட நீங்கள் ஏற்று கொள்வீர்கள்..
ஆனால் ,
இங்கே இருந்து மறைவதற்கும் அங்கே தோன்றுவதற்கு இடையிலான ஒரு சிறு மைக்ரோ கணத்தில் அந்த புள்ளி இங்கேயும் இருக்கும் அங்கேயும் இருக்கும் அதாவது ஒரே நேரத்தில் ஒரு துகள் இரண்டு இடத்தில்...இது எப்படி இருக்கு..?

Double hole experiment என்று ஒன்று உண்டு குவாண்டம் மெசிகாணிசத்தில். அதாவது இரண்டு ஓட்டை உள்ள ஒரு தடை வழியாக போட்டனை அனுப்பினால் அது இந்த ஓட்டை வழியா அல்லது அந்த ஓட்டை வழியா சென்று அதற்கு முன்னால் வைக்க பட்டுள்ள திரையை தாக்கும்.. ஆனால் இது எப்போது என்றால் ஆய்வாளர் இந்த சோதனையை பார்த்து கொண்டு இருந்தால் மட்டும் தான் .
அவர் இதை பார்க்க வில்லை என்றால் அப்போது திரையில் பரவலாக அணைத்து பாகங்களும் தாக்க பட்டிருப்பதை கண்டார்கள் அந்த நேரத்தில் அது ஒரு அலை போல பிரயாணம் செய்து இரண்டு ஓட்டையை அலை போல் கடந்தது தான் காரணம் என கண்டு பிடித்து ஆச்சார்ய பட்டார்கள்.
இதென்ன கூத்து தன்னை பார்க்கப்படுவதால் ஒரு சோதனை எப்படி மாறுபட முடியும் என நீங்கள் நினைக்கலாம் இந்த மாயாஜாலம் தான் குவாண்டம் பிஸிக்ஸ் ஸ்டைல் .இங்கு கண்காணிப்பாளரின் கண்ணுக்கு வரும் ஒளியால் அந்த துகள்கள் பாதிக்க படுகின்றன அந்தளவு அவைகள் நுணுக்கமானவை..
(குவாண்டம் பிஸிக்ஸ் பற்றிய தனி கட்டுரையில் விரிவாக சொல்லுகிறேன் இங்கே அதில் தேவையான அளவு மட்டும் பார்க்கலாம்)

எலக்ட்ரானின் இருப்பிடத்தை ஆராயும் விஞ்ஞாணி தானும் அந்த ஆய்வுபடு பொருளில் ஒரு அங்கம் ஆகிறார்..
அந்த இரு துளை சோதனையில் போட்டான் நாம் பார்த்தால் ஒரு மாதிரியும் பார்காவிட்டால்  ஒரு மாதிரியும் திரையில் மோதுவதை சொன்னேன் அது திரையில் மோத போகும் அந்த கணத்தில் திடீரென கவனித்தால் என்ன நடக்கிறது என்று பார்த்த போது ஆச்சர்யம் இருமடங்கானது ..
இந்த கனத்திலும் பார்வையால் பாதிக்க பட்டு அந்த துகள் மீண்டும் ரிவர்ஸில் தனது மூலஸ்தானத்திற்கு சென்று இரு வேறு துளை வழியாக வெளியேறியது அதாவது துகள் கொஞ்சம் கடந்த காலத்திற்கு பயணம் பண்ணியது.

ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருக்க கூடிய சாத்தியத்தை கொண்ட குவாண்டம் துகள்கள் Grand father paradox ஐ கடக்க முடியும் இதில்  ஒரு மனிதனுக்கு பதில் இந்த துகள் பயணம் சென்றால் அங்கு தனது தாத்தாவை சுட்டுவிட்டு அவர் அழியும் அதே கணம் தானும் அழிய ....தான் அழியும் அதே கணம் தனது இன்னோரு தான் நிகழ் காலத்தில் பிரயாண பட்டு வந்து விட அங்கே தான் அழிந்தாலும் அங்கு மறைந்து இங்கு.... இந்த நிகழ் காலத்தில் அது தப்பி வந்து இருக்கமுடியும் என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

கால பயணம் சாத்தியத்தை தொடர்ந்து ஆராய்ந்து வந்தோம் இதன் முடிவில் நீங்கள் "கால பயணம் சாத்தியம் தான்" என்பதை உணர்ந்தால் அது சரி தான் ..
"சாத்தியம் அல்ல" என்று உணர்ந்தால் அதுவும் சரிதான் .
காரணம் அதன் சாத்தியகூறு ஊசலாட்டத்தில் இன்னமும் இன்றைய மஹா விஞ்ஞாணிகளே தடுமாறி கொண்டு தான் இருக்கிறார்கள்..
என்னை பொறுத்தவரை கால பயணம் சாத்தியமா இல்லையா என்றால்... சாத்தியம் தான் ஆனால் அதற்கு நாம் இன்னும் மிக மிக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இந்த தொடர் ..கால பயணத்தில் என்னுடன் சேர்ந்து பயணித்ததற்கு நன்றி.. அடுத்த முறை வேறு ஒரு தலைப்பில் சந்திக்கிறேன்..(குவாண்டம் பிஸிக்ஸ் ??????)

பின்னூட்டத்தை மறக்காதீர்கள்...

அன்பு நண்பன்
அறிவியல் காதலன் : ரா.பிரபு

Comments

  1. உங்கள் அருமை தமிழ் நடை எளிது இனிது. அருமை அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"