"குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்''



"குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்''

ரா.பிரபு

குற்ற உலகில் யார் பெரியவர்? போலீஸா ?குற்றவாளியா ? கெத்து காட்டுவது யார் ? என்ற கேள்வி க்கு எப்போதும் கலவையான பதில்கள் தான் கிடைக்கும்.
சில நேரம் குற்றவாளிகளின் கை ஓங்கி இருக்கும் போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளிகள் என்று பத்திரிகைகளில் பார்த்து இருக்கலாம் ஆனால் சில நேரம் மிக திறமையாக செயல் பட்டு குற்றவாளியை பிடித்தது போலீஸ் என்றும் பத்திரிக்கையில் வரும்.

எனவே இது ஒரு முடிவில்லா விளையாட்டு திருடன் போலீஸ் விளையாட்டு... இந்த விளையாட்டில் நிறைய சுவாரஷ்யங்கள் அவ்வபோது இருதரப்பிலும் இருந்திடும். சில நேரம் குற்றவாளிகளின் திறமை வாய் பிளக்க வைக்கும் சில நேரம் காவல் துறையின் திறமை ஆச்சர்ய படுத்தும்.
இன்று சிக்கிய சில குற்றவாளிகளின் சில சுவாரஷ்ய சம்பவங்களை பார்க்க போகிறோம்.

நிஜ குற்ற சம்பவங்கள் பார்க்கும் முன் ஒரு கதையை சொல்கிறேன்...
இதை கிராம புறத்தினர் பல பேர் கேள்வி பட்டு இருக்கலாம். வாய் வழியாக சொல்ல படும் கதை இது.(இப்படி ஒரு க்ரைம் ஸ்டோரி யார் எழுதினது தெரில)

கதை இது தான். ஒரு விவசாயி இரவில் நிலா ஒளியில் படுத்து இருக்கிறான் திடீர் என்று நிலாவை பார்த்து சிரிக்கிறான். மனைவி அவனை புதிராக பார்க்கிறாள். அவன் மனதிற்குள் சில நாள் முன்பு நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. இவனும் பக்கத்து வயல்  விவசாயியும் இரவில் வயலில் வேலை செய்யும் போது இருவருக்கும் சண்டை வருகிறது.
இவன்  மற்றொருவனை அடித்து சாகடித்து புதைகிறார். அவன் சாகும் போது தன்னை காக்க ஆள் யாரும் இல்லையே என்று வருத்த படுகிறான். அந்த குற்றவாளி அவனிடம் ..
"உன்னை நான் கொலை பண்றதை பார்த்த ஆள் யாரும் இல்லை ..இந்த நிலா தான் பாக்குது இந்த நிலா வா வந்து சாட்சி சொல்ல போகுது ?"
 என்கிறான் .
இக்கதையை ஆர்வ கோளாரில் மனதில் வைத்து இருக்க முடியாமல் மனைவியிடம் உளருகிறான்.
ஒரு பெண்ணுக்கு ஒரு ரகசியம் தெரிந்தால் அதன் பின் அது ரகசியம் அல்ல. அவள் பல பேரிடம் இதை சொல்கிறாள் இறுதியில் அவன் மாட்டுகிறான். (இறுதியில் நிலா சாட்சி சொல்லி தான் விட்டது . அவன் அன்றைக்கு நிலாவை சாட்சிக்கு அழைக்க வில்லை என்றால் அவன் மாட்டி இருக்க போவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்)

உண்மையில் இப்படி யாரும் ஆர்வ கோளாறு காரணமாக தானே உளறி மாட்டுவார்களா??
எக்க சக்க ஆட்கள் இப்படி மாட்டி இருக்கிறார்கள்.
மதன் எழுதிய மனிதனுக்குள் ஒரு மிருகம் புத்தகத்தில் கூட ஒரு சம்பவம் சொல்லி இருப்பார். ஒரு சைக்கோ கொலையாளி அவனை சந்தேகத்தில் பிடித்து இருப்பார்கள் ஆனால் ஆதாரம் ஏதும் இருக்காது. நடந்த கொலைகளை வைத்து ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கொலையாளி இப்படி தான் இருப்பான் என்று சில வர்ணனை சொல்லி இருப்பார் அதை படித்து காட்டிய போது அந்த சைக்கோ ஆர்வம் தாங்காமல் அட என்னை கரெக்ட்டா வர்ணித்து இருக்காரே (கண்ணுக்கு கண்ணாடி போட்டிருப்பான் என்று முதற்கொண்டு) என்று உளரியதை தொடர்ந்து மாட்டி கொண்டான்.

இந்த சம்பவத்தை பாருங்கள்...
அவன் ஒரு பேங்க் தொழிலாளி.. வேலை முழுக்க முழுக்க கணினியில் தான். கணினி செயல் பாட்டில் கொஞ்சம் அறிவு உள்ள ஆசாமி அவர்.
எனவே ஒரு முறை ஒரு காரியம் செய்தார். தனது பேங்க்க்கு வரும் பல மில்லியன் கணக்கு டாலர்களை பதிவேற்றம் செய்யும் போது அதில் உள்ள சில்லறைகள் மட்டும் தனது அக்கவுண்ட் இல் வந்து சேரும் படி ஒரு ஏற்பாடு செய்தார்.
குறைவது சில்லறை தான் என்பதால் யாரும் கவனித்து இருக்க நியாயம் இல்லை.. ஆனால் நாள் தோறும் பல பேரிடம் பெற படும் சில்லறை என்பதால் ஆசாமிக்கு லாபமோ கண ஜோர்.

6 வருடங்கள் முழுதாக 6 வருடங்கள் அவர் செய்த தகிடு தித்ததை யாருமே கண்டு பிடிக்க வில்லை. அதன் பின் இருப்பு பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தனது புகழை தானே பாட தொடங்கினார் அந்த புத்திசாலி. தன்னை யாருமே கண்டு பிடிக்க வில்லை என்பதையும் தம்பட்டம் அடித்து கொண்டார்.
அவர் 'பெருமை' தீ போல பரவ தொடங்கியதை தொடர்ந்து கால போக்கில் மிக விரைவில் கைது செய்ய பட்டார். (வாய வச்சிட்டு கம்முன்னு இருந்து இருக்கலாம் என்று ஜெயிலில் வருத்த பட்டு இருப்பார் பாவம்).
மேலே நாம் பார்த்த 3 சம்பவங்களிலும் குற்றவாளி சிக்கியதற்கு ஒரே காரணம் தான். "ஆர்வ கோளாறு."

அடுத்ததாக இந்த சிக்கிய குற்றவாளிக்கு நடந்த சுவாரஷ்யத்தை பாருங்கள்...
அந்த காவல் நிலையத்தில் அவன் அமர வைக்க பட்டு இருந்தான். இளைஞன் பார்க்க நல்ல படிப்பாளி தோற்றத்தை அவன் அணிந்திருந்த கண்ணாடி கொடுத்தது. தலைமுடி கலைந்த நிலையில் அவன் முகத்தை உயர்த்தினார் காவலர்.
 "அந்த பாதுகாப்பு புரோகிராம் ..... அதை எப்படி பிரேக் பண்ண சொல்லு "

"அதை சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது" என்றான் அவன் மெதுவாக.
மீண்டும் ஒரு அடிக்கு அவனை கை உயர்த்திய காவலரை இடைமறித்தார் உயர் அதிகாரி.

"வேணாம் ...இந்த வழக்கை தொடுத்த அந்த நிறுவன பெரும் முதலாளிகள் இவனை நேரே பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வருகிறார்கள் "  என்றார்.

அந்த இளைஞன் ஒரு ஹேக்கர் உலகின் யாராலும் தகர்க்க முடியாத பாதுகாப்புகாக உண்டாக்க பட்ட ஒரு சாப்ட்வேரை உடைத்து உள்ளே புகுந்து அதை நீர்த்து போக செய்து இருந்தான்.
சில நிமிடங்கள் கழிந்த நிலையில் சொகுசு காரில் வந்த சிலர் அவனை சந்தித்தார்கள்.

" எங்கள் மென்பொருள் மிக பெரிய அறிவாளிகளால் உருவாக்க பட்டது அதை எப்படி உடைத்தாய் " என்றார்கள்.

"ஆம் உங்களிடம் சொல்லலாம் சொன்னால் உங்களுக்கு புரியும் " என்றான் அவன் தான் செய்ததை விரிவாக விளக்கினான்.
சில கலந்தாலோசனைக்கு பிறகு அவர்கள் சொன்னது சுவாரஷ்யமானது.

"ஆபீசர் இவன் மேல் போட்ட வழக்குகள் அனைத்தையும் நாங்கள் வாபஸ் வாங்கு கிறோம். இவன் இருக்க வேண்டிய இடம் ஜெயில் அல்ல எங்கள் ஆபீஸ் யாராலும் தகர்க்க முடியாத ஒன்றை இவனால் தகர்க்க முடியும் என்றால் இவன் தான் நாங்கள் தேடும் தொழிலாளி. இவன் திறமை மதிக்க பட வேண்டும் இல்லையேல் இப்படி திருடனை தான் அது உண்டாக்கும்."

அவனுக்கு தனது கம்பெனியில் வேலை போட்டு கொடுத்தார்கள். இது அமெரிக்காவில் நிஜத்தில் நடந்த சம்பவம்.

சரி கதையை வெளிநாட்டில் இருந்து  உள்நாட்டிற்கு ...சென்னைக்கு கொண்டு வருவோம்...
சில ஆண்டுகளுக்கு முன் ATM மோசடி நிறைய இடங்களில் நடந்தது நாம் அறிந்த விஷயம் தான். அது சாதாரண திருட்டு அல்ல மிக படித்தவர்கள் மிக அறிவாளிகள் உருவாக்கிய மதிநுட்ப... தொழில் நுட்ப ரீதியான ஹைடெக் திருட்டு.
அதாவது உங்கள் ATM கார்டில் பின் பக்கம் ஒரு ஸ்ட்ரிப் இருக்கிறதே கருப்பு நிற பட்டை.. ATM கார்டின் மொத்த பிரைவேட் தகவல்களும் அடங்கி உள்ள தகவல் நினைவகம் அது தான். மோசடி காரர்கள் அதை தான் காப்பி செயகிறார்கள் . அதை எப்படி காபி பண்ண முடியும் ?
அதற்க்கு உதவும் கருவி பெயர் தான் SKIMMER இதை ATM கார்டு ஸ்லாட்டில் பொருத்தி விட்டால் பார்க்க வித்யாசம் தெரியாது ஆனால் அடுத்ததாக உள்ளே சொருகி எடுக்கும் கார்டின் அணைத்து தகவலையும் ஸ்கேன் பண்ணி கொள்ளும். அடுத்ததாக உங்கள் பின் நம்பரை காபி பண்ண இரண்டு வழிமுறைகளை திருடர்கள் கையாண்டர்கள். ஒன்று பின் போடும் இடத்திற்கு மேலே சின்னதாக ஒரு ஸ்பை கேம் வைத்து பதிவு செய்வது. அல்லது கீ பேட் இன் மேலே ஒரு மெல்லிய ஜவ்வு போல ஒரு ரப்பர் உரை போன்ற ஒன்றை ஒட்டி வைப்பார்கள்..
அதில் எண்களை தட்டும் போது தட்ட பட்ட என்னை கண்டு கொள்ள முடியும்.
அதில் எண்கள் நாம் போட்ட வரிசை படி பதிவு செய்ய முடியும்.
இந்த இரண்டையும் வைத்து கொண்டு போலி அட்டையை தயாரித்தால் போதும். யார் அகௌண்டிலோ உள்ள பணத்தை அள்ளி விளையாடலாம்.

இப்படி ஒரு அறிவு பூர்வமான மோசடி செய்பவர்களை பிடிப்பது என்பது சாதாரண விஷயமா?? அங்கே சாதா திருட்டு போல தடயங்கள் ஏதும் கிடைக்காத பட்சத்தில் குற்றவாளி யார் எங்கே இருப்பான் என்று தேடி பிடிப்பது நடக்க கூடியதா??  மிக பெரிய தகவல் சோர்ஸ்.. துப்பு கொடுப்பவர்கள்.. தொடர் கண்காணிப்பு எல்லாம் இருந்தால் கூட பல மாதங்கள்... வருடங்கள் பிடிக்கும் கேஸ் இது.

ஆனால்.....

இதை தமிழக போலீஸ் எதோ டீ சாப்பிடுவது போல அசால்ட்டாக துப்பறிந்து கண்டு பிடித்தார்கள்கள்.. பலத்தை நம்பாமல் மூளையை நம்பும் திருட்டை மூளையை பயன் படுத்தியே பிடித்தார்கள் .
இன்னும் சொல்ல போனால் திருடர்களை அவர்கள் இருப்பிடத்திலேயே.... அந்த கார்டை தயாரிக்கும் பணியில் இருக்கும் போதே கையும் களவுமாக பிடித்து அசத்தினார்கள். அந்த கிரிமினல்கள் போலீஸ் அறிவை கண்டு வாய் பிளந்து இருப்பது உறுதி.

போலீஸ் இதை எப்படி செய்தது.??
இதற்க்கு அவர்கள் செய்தது எல்லாம் 'மாத்தி யோசி ' என்று சொல்ல கூடிய "Lateral thinking " தான்.

என்ன எப்படி என்பதை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

       
                                       ☸          ☸             ☸

குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்.

(பாகம் 2 .  ATM  அட்டகாசம் )

சில குற்றவாளிகள் மிக ஆசுவாசமானவர்கள் பதட்டம் ஏதும் இல்லாத நிதானமானவர்கள் அப்படி பட்டவர்களை பிடிப்பது கொஞ்சம் சிரமம் காரணம் அவர்கள் பதட்டத்தில் செய்யும் தவறுகளை செய்வது இல்லை.

ஒரு அபார்ட்மெண்ட் பக்கத்தில் இருக்கும் நகை கடை அது . அதில் இரவோடு இரவாக கொள்ளை போய் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போலீஸ் அங்கே நிறைய சின்ன சின்ன துண்டு ஸ்டிக்கர் பேப்பர்கள் கிடப்பதை பார்த்தார்கள் அவைகள் நகையில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்கள். கொள்ளையர்கள் அந்த நகை அனைத்திலும் உள்ள ஸ்டிக்கரை நிதானமாக உட்கார்ந்து அங்கேயே பிரித்து போட்டு விட்டு சென்றிருந்தார்கள்.  அப்போ சாவகாசமாக அவர்களுக்கு எவ்வளவு நேரம் இருந்து இருக்கிறது பாருங்கள்.
அடுத்த ஆச்ரயம் அந்த கடையில் ஒரு ஆணியை தொடர்ச்சியாக அடித்தால் கூட பக்கத்துக்கு அபார்ட்மென்டில் கவனிக்க படும் அளவிற்கு அருகாமையில் குடியிருப்புகள் இருந்தன. அவர்களுக்கு தெரியாமல் சப்தம் வராமல் சுவரில் எதை கொண்டு ஓட்டை போட்டார்கள் என்பது புரியாத புதிர். அந்த கேஸ் கடைசி வரை கண்டுபிக்க முடியாத பெண்டிங் கேஸ் ஆகவே இருந்து விட்டது.

இப்படி போலீஸ் கோட்டை விட்ட சம்பவங்கள் ஏராளம் என்றாலும் போலீஸ் மிகுந்த அறிவு திறனோடு குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்த சம்பவங்களும் ஏராளம் உண்டு.
உதாரனமாக முந்திய பாகத்தில் கடைசியில் நான் குறிபிட்ட அந்த ATM கொள்ளை.

சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ச்சியாக நடந்த atm மோசடியை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் துறை திணறிய போது அது பலத்தை நம்பாமல் மூளையை பயன்படுத்தியது.
ATM கொள்ளை நடந்த விதத்தை உற்று கவனித்த போது போலி கார்டுகளை கொண்டு லட்ச கணக்கில் கொள்ளை அடித்து சென்ற சம்பவங்கள் எல்லாமே இரவு மணி 12 க்கு கொஞ்சம் முன்பும் 12 க்கு கொஞ்சம் பின்பும் மட்டுமே நடந்ததை கவனித்தார்கள்.

அதற்க்கு ஒரு அறிவு பூர்வமான காரணம் இருந்தது. பெரிய தொகையை ஒரே அகௌண்டில் எடுக்கும் போது அது  கவனத்தை ஈர்ப்பதை தவிர்க்கும் யுக்தி அது. 12 மணிக்கு சில நிமிடங்கள் பிறகு அது அடுத்த நாள் கணக்கில் வருவதால் அடுத்ததாக எடுக்கும் பெரிய தொகை அடுத்தநாள் கணக்கில் வருவதால் குறைவாக கவனிக்க படுவதோடு இல்லாமல் ஒரு நாளைக்கு இவ்ளோ தான் எடுக்க முடியும் என்ற தடையால் பாதிக்க படாமல் இருக்கவும் உதவியது.

இந்நிலையில் போலீஸ் ஒரு காரியம் செய்தது குற்றம் நடந்த ATM களை தேர்ந்தெடுத்து  அருகாமையில் அந்த பகுதிகளில் உள்ள நெட்ஒர்க் சேவைகளை உதவிக்கு அழைத்தது .12 மணிக்கு அருகாமையில் நடந்த போன் கால்கள் என்ன என்ன என்று அந்த நேரத்திற்கு கிட்ட நடந்த போன் உரையாடல்கள் அதன் நம்பர்கள் மற்றும்  முகவரிகளை அணைத்து சிம் நிறுவங்களிடமும் கோரி பெற்றன. (இநேரத்தில் அவர்கள் ஆப்ரேஷனுக்கு கண்டிப்பாக போன் தொடர்பு இருந்திருக்கும் என்பதில் போலீஸ் க்கு ஐயம் இல்லை)
அதன் அடிப்படையில் கிடைத்த முகவரிகளை நேரடியாக படையுடன் சென்று ஒவ்வொரு முகவரியாக விசிட் அடித்தார்கள் .அதில் ஒரு முகவரியில் போலி கார்டுகளை தயாரிக்கும் பணியில் இருக்கும் போதே கையும் களவுமாக குற்றவாளிகள் சிக்கினார்கள்.

                                      ✴               ✴                 ✴                ✴

சில நேரங்களில் குற்றவாளிகள் இனம் காண முடியாத சக்தியால் மாட்டி இருக்குறார்கள். அவர்களை மாட்டி விட்டது எது என்று நம்மை நீண்ட நேரம் யோசிக்க வைத்து விடும் சம்பவங்கள் உண்டு.
பின் வரும் இந்த கதையை கேளுங்கள்..(வசதிக்காக நாவல் டைப்பில் சொல்லி இருக்கின்றேன் )

அந்த மலை பகுதி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட். மிஸ்டர் ஜானும் அவர் மனைவியும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள் (பெயர் நினைவு இல்லை ஜான் என்று வைத்து கொண்டேன்)
"ஹேய் ஹனி நீ அந்த இடத்தை பார்த்தே ஆக வேண்டும் . அங்கே சென்று நாம் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் நமது மகிழ்ச்சியின் தருணங்களை கைது செய்ய..."

அவள் காதலுடன் நிமிர்ந்து பார்த்தாள் ..
"ஆனா டியர் அங்கே அந்த முனை வரை செல்ல அரசு தடையை விதித்து உள்ளதே "

"பல காதலர்கள் அந்த தடை எல்லையை கடந்து சென்று அங்கே புகை படம் எடுப்பதை பார்க்க வில்லையா"

"நாம் என்ன காதலர்களா"??

"யார் சொன்னது நாம் காதலர்கள் இல்லை என்று...உலகம் உள்ள வரை உன்னை காதலித்து கொண்டே இருப்பேன்"
 அவள் கையை பிடித்து அழைத்து சென்றான் ஜான்.
சற்று நேரம் கழித்து அவர்கள் அடைந்து இருந்த இடம் ஒரு சூசைட் பாயிண்ட்.. குனிந்து பார்த்தால் குலை நடக்கும் உயரம்.
"இதோ இங்கே நில் ஒரு படம் எடுக்கிறேன்" என்று நிற்க வைத்து ஒரு ஒரு புகை படம் க்ளிக்கினான்

"இங்க நிக்கவே பயமா இருக்குங்க"

"நான் இருக்கும் போது என்ன பயம் .இங்கே வா இதோ இங்கே குனிந்து பாரேன் செம த்ரில்"

அவள் பயந்து பயந்து குனிந்து பார்த்தாள். அவன் மெல்ல கொஞ்சம் பின் வாங்கினான் அவள் தன்னை மறந்து குனிந்து வேடிக்கை பார்த்த ஒரு கணத்தில் ...
மிக தீர்க்கமாக அவளை இடித்து தள்ளினான் . முடிவில்லா ஆழத்தில் விழுந்து அவள் உயிர் விட்டதை நின்று வேடிக்கை பார்த்தான் சிரித்தான். "எவ்ளோ நாள் ..காத்திருப்பது இந்த நாள்காக ... இனி எனக்கும் ஜூலிக்கும் தடை ஏதும் இல்லை (பெயர் நினைவு இல்லை ஜூலி என்று வைத்து கொண்டேன்)

அதன் பிறகு வீட்டை அடைந்தான் கொஞ்ச நாளைக்கு ஊர் உலகத்திடம் தானும் தனது ஆசை மனைவியும் டூர் சென்றதாகவும் அங்கே அவள் கால் தவறி விழுந்து விட்டதாகவும் நாடகம் செய்தான். தான் கவலையில் உச்சத்தில் இருப்பதாக காட்டி கொண்டான் கொஞ்சம் நிலைமை சீரானதும் மிக தற்செயலாக நடப்பது போல ஜூலியை திருமணம் செய்தான்.
புது மனைவி உடன் ஜாலியாக எங்கேயாவது செல்லலாம் என்றபோது அதே மலை பகுதியை தேர்ந்தெடுத்தான். இருவரும் அதே மலை அதே உச்சி அதே சூசைட் பாயின்டில் இருந்தனர்.
"ஹேய் ஹனி அங்கேயே நில் ஒரு படம் எடுத்து கொள்கிறேன் "

அவள் கொஞ்சம் பயந்து
 "ஏங்க உங்க பழைய மனைவி இங்கே தானே கால் தவறி விழுந்தார்கள்..
இப்போ அவர் ஆவி நம்மை பார்த்து கொண்டு இருக்கும் இல்ல " என்றாள்

அவர் அவசரமாக முகத்தில் வந்த வியர்வையை துடைத்தார்.
"ச்ச ச்ச... அவள் ஆவி எனக்கு நல்ல மனைவி கிடைத்ததை நினைத்து இன்னேரம் வாழ்த்தி கொண்டு இருக்கும்...என்ன செய்ய அவள் பிரிவை மறக்க முடியாமல் தான் மீண்டும் இதே இடத்துக்கு வந்து என் ஆற்றமையை தீர்த்து கொள்கிறேன் "

"அடடே பீல் பண்ணாதீங்க டியர் நான் பழையதை நினைவு படுத்தியதற்கு சாரி "
"ஹ்ம்ம் நான் மறந்தால் தானே நீ நினைவு படுத்த ....சரி அங்கேயே நில் "

என்று சொல்லி ஒரு போட்டோ கிளிக்கி கொண்டான். மனதில் சிரித்து கொண்டான். 'நடிகண்டா ...ஜான் நீ நடிகண்டா ' என்று புகழ்ந்து கொண்டான்.
பிறகு சாவகாசமாக வீட்டுக்கு சென்றார்கள் வாழ்க்கையை கொண்டாடினார்கள் .மகிழ்ந்தார்கள். ஜான் தனது போட்டோகளை கழுவி எடுத்து புது மனைவியை பார்த்து ரசிக்க புகை படத்தை முகத்துக்கு எதிரே பிடித்த போது காத்திருந்தது அதிர்ச்சி..
புது மனைவியின் புகை படத்தில் பின்னால் நின்று கொண்டு ஒரு ஆவி போல ட்ரான்ஸ்பரண்ட் உருவம் நின்று இருந்தது தெளிவாக தெரிந்தது . உற்று பார்த்த போது அது ஜானின் பழைய மனைவி தான் அதுவும் இறந்த அன்று பிட்டிருந்த அதே உடையில்.  அதிர்ச்சியில் உறைந்து ஜான் தனக்கு ஏதோ பிரமை என்று நினைத்தான் ஜூலியிடம் அந்த புகை படத்தை ஒன்றும் சொல்லாமல் காட்டினான். பார்த்த அவள் முகத்தில் பேர் அதிர்ச்சி "என்னங்க இது என் பின்னாடி உங்க பழைய மனைவி ஆவி நிக்குது "

அவ்ளோ தான் ஜானுக்கு 'ஜானே' போய் விட்டது (ஹிந்தியில் ஜான் என்றால் உயிர் ) பயம் தன்னை தாக்க அலறினான் .பின் ஜூலியிடம் அணைத்து உண்மையையும் உளறினான்.  ஜூலி அதை உலகிற்கு பரப்பியதை  தொடர்ந்து பிடிப்பட்டான் .

இதில் சுவாரஷ்யமான சங்கதி என்ன என்றால் .போட்டோவை ஆராய்ந்தவர்கள் அது ஏதோ டபுள் எக்ஸ்போஸ் சங்கதி என்றார்கள் . அதாவது பழைய மனைவியின் எடுக்க பட்ட போட்டோ தவறுதலாக புது மனைவி யின் புகை படத்தில் பதிந்துள்ளது.  இரண்டு போட்டோவும் ஒரே ஸ்பாட்டில் எடுக்க பட்டது என்பதால் பழையது ..புதியத்துக்கு பின்னால் நின்று கவனிப்பது போல இருப்பதாய் ஜான் குழப்பி கொண்டார். இந்த கேஸில் ஜானை மாட்டி விட்டது யார் அல்லது எது அந்த பெண்ணின் ஆவியா அல்லது தற்செயலா அல்லது ஜானின் பயம் பதட்டமா?

                           ✴                 ✴                 ✴                    ✴

இதே போன்ற மனைவியை வெறுத்த இதே போன்ற புகை படத்தால் மாட்டிய இன்னோரு கிரிமினல் பற்றி நாம் இப்போது பார்க்க போகிறோம்.
அவன் ஜான் போல பதட்டமானவன் இல்லை. மிக நேர்தியானவன் மிக திட்டமிட்டு ஸ்லோ பாயிசன் கொடுத்து மனைவியை கொன்றான் என்பதால் அங்கே தடயம் எனும் பேச்சுக்கே வாய்ப்பு இல்லை.
இருந்தும் எதற்கு ரிஸ்க் என்று அவளது அணைத்து பொருட்களையும் ஒன்று விடாமல் எரித்தான் . அவள் கை பட்ட பொருள் என்று வீட்டில் ஒரு துரும்பு கூட விட்டு வைக்க வில்லை.
போலீஸ் இது ஒரு சாதாரண ஹார்ட் அட்டாக் என்று கதையை முடித்தது. அவள் நினைவாக போனா போகுதே என்று ஒரே ஒரு புகை படத்தை மட்டும் விட்டு வைத்தான்...ஹாப் சைஸ் புகை படம் . அதை ஹாலில் மாட்டி வைத்தான்.
அந்த புகை படத்தால் அவன் எப்படி மாட்டினான் என்பது மிக சுவாரஷ்யமானது. மிகவும் எதிர் பாராதது.

அதை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.


                                   ☸                   ☸                 ☸


குற்றவாளிகளின்
சுவாரஷ்ய_கதைகள்.

(பாகம் 3 சிக்கிய சுவாரஷ்யங்கள் )

சில நேரங்களில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் பல நூதனங்களை கையாள்வது உண்டு.
சிலது டைமிங் இல் தோன்றும் ஐடியாக்கள் பலனளிப்பதுண்டு.

எழுத்தாளர் lev sheynin அவர்களின்  "diary of the criminologist " என்ற புத்தகத்தில் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் சொல்லி இருக்கிறார்.
ஒரு நாடக நிகழ்ச்சியில் ஒரு பார்வையாளரை போலீஸ் குறி வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன் வேறு பெயரில் (நம்ம ஊரு ப்ளேடு பக்கிரி ...அருவா ஆறுமுகம் போல...ஒரு அடை மொழி பெயர் அது ) ரௌடிசம் பண்ணின ஆளு இவன் தான் என்று ஒரு சந்தேகம் அவர்களுக்கு. நீண்ட நாள் கழித்து சிக்கி இருக்கிறான் ஆனால் இவன் தான் அவன் என்பதை எப்படி கண்டு பிடிப்பது நேரே அவனிடம் சென்று கேட்டால் சொல்ல போகிறானா என்ன ?

போலீஸ் இவன் அவன் தான் என்பதை உறுதி செய்ய ஒரு வி்சித்திர காரியம் செய்தது. நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே நாடக நடிகர்களை சில பேரை கரெக்ட் செய்தது .. நாடகத்தில் ஒரே ஒரு வசனம் மட்டும் இணைக்க சொன்னது. அதாவது நாடக கதாபாத்திரத்தை அந்த சந்தேக கேஸ் ஆசாமியின் பெயரை சொல்லி கூப்பிட சொன்னது .அதாவது நாடகம் பார்த்து கொண்டு இருப்பவன் அருவா ஆறுமுகம் என்றால் நாடகத்தில் திடீரென அருவா ஆறுமுகம் என்று வசனம் வந்தால் எப்படி இருக்கும்.
அப்படி அவன் பழைய பெயரை உச்சரிக்கும் கணத்தில் போலீஸ் மறைந்திருந்து அவன் முகத்தை உத்து கவனிக்க அவன் அதிர்ந்து திடுகிட்டதை பார்த்தார்கள் . ஆஹா இவன் அவனே தான் பா என்று உறுதி செய்தது.

சரி இப்போ கடந்த பாகத்தின் கடைசியில் நான் சொன்ன கதைக்கு வருவோம்.
அந்த ஹாலில் உள்ள மனைவியின் படத்தை தவிர மற்ற அனைத்தையும் அந்த கணவன் அழித்து இருந்தான்.
அதனால் அவனை சந்தேகத்தோடு துருவி கொண்டிருந்த ஒரே ஒரு போலீசுக்கு அதை காட்டினான் . அவள் பொருள் என்று இதை தவிர வேறு இல்லை என்றான். அந்த ஒரு குறிபிட்ட காவல் அதிகாரிக்கு உறுத்தலே அது தான்.
ஏன் அவள் பொருட்கள் ஒன்று கூட இல்லை.. அப்போ இவன் எதையோ மறைக்க தானே பார்க்கிறான்.
சரி என்று கிடைத்த புகைப்படத்தை கொண்டு போய் தோண்டி துலக்க தொடங்கினார்.
பெண்ணே உ்னக்கு  அநீதி இழைக்க பட்டிருந்தால் இந்த புகை படம் தவிர வேறு தொடர்பு நூல் ஏதும் இல்லை புகை படத்தில் என்ன உண்மை கண்டு பிடிக்க முடியும்.?

ஆனால் ரத்தத்தில் சந்தேகமும் குணத்தில் பிடிவாதமும் ஊறி இருந்த அந்த காவல் அதிகாரி மனம் தளர வில்லை .அந்த புகை படத்தை பெரிது பெரிதாக என்லார்ஜ் செய்தார். முகத்தை உற்று உற்று கவனித்தார். அந்த சிரிப்பில்...அந்த பல் வரிசையில் கொஞ்சமே கொஞ்சம் மஞ்சள் நிறம் படிந்து இருந்தது அது வழக்கமாக பல்லில் படியும் மஞ்சள் அல்ல..
ஸ்லோ பாய்சனின் ஒரே சைடு எபெக்ட்.
அதை மருத்து நிபுணர் சிலரிடம் உறுதி செய்தார்.
பிறகு....
சில நாளில் தனது வழிமுறையை பயன்படுத்தி  அவன்  அவள் சாப்பாட்டில் ஸ்லோ பாய்சன் கலந்தது ஒத்து கொள்ள செய்தார்.
பாவம் கணவன் அந்த போட்டோவை வைத்ததை நினைத்து வருந்தி இருப்பான்.

                              ✳                 ✴              ✳                  ✴

 அடுத்ததாக சொல்ல போகும் இந்த கதையில் குற்றவாளி எப்படி விசித்திரமாக சிக்கினான்  பாருங்கள்.
இது Colin Pitchfork Case என்ற பெயரில் பிரபலம்.

1983 இல் இங்கிலாந்தில் ஒதுக்கு புறமான இடம் ஒன்றில் 15 வயது லிண்டா மென் என்கிற பென்னின் சடலம் கிடைக்கிறது . அவள் கற்பழிக்க பட்டு கொலை செய்ய பட்டு இருப்பது தெரிகிறது. அப்போதைய தொழில் நுட்ப வளர்ச்சி படி... குற்றவாளி A டைப் வகை ரத்தம் கொண்டவன் என்று மட்டும் போலீஸ் அறிகிறது. குற்றவாளி சிக்க வில்லை
3 ஆண்டுகள் கழித்து 1986 இல் Dawn Ashworth என்கிற பெண்ணின் சடலம் கிடைக்கிறது. அவளும் கற்பழிக்க பட்டு கொலை செய்ய பட்டிருக்கிறாள். அவளுக்கும் வயது 15. இந்த இரண்டு வழக்குகளிலும் உள்ள ஒற்றுமை இரண்டு கொலையும் செய்தது ஒரே ஆள் தான் என்பதை போலீசுக்கு உணர்த்துகிறது. பழைய சம்பவதில் கிடைத்த DNA sample கையில் உள்ளது
என்றாலும் அதை யாருடன் ஒப்பிட்டு பார்ப்பது ? எனவே போலீஸ் ஒரு காரியம் செயதது. இந்த குற்றத்தை செய்தது நிச்சயம் ஒரு உள்ளூர் காரனாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையோடு அந்த ஊரின் மொத்தம் 1000 பேர்களின் dna வை சோதனை செய்ததது. ஒன்று கூட மேச் ஆக வில்லை. இது ஒரு முடியாத கேஸ் என்று போலீஸ் தளர்ந்ததது.

இந்நிலையில் தான் பாரில் ஒரு பெண்மணி தன் பக்கத்து மேஜை யில் ஒருவன் பேசி கொண்டிருந்ததை ஒட்டு கேட்டாள் (பல பெண்களுக்கு உள்ள பழக்கம் தான்.) Iyan kelly என்கிறவன் தனது நண்பன் Colin pitchfork என்பவனுக்காக ரத்தம் கொடுத்ததை பற்றி பேசி கொண்டிருந்தான். பெண்மணிக்கு ஏதோ பொறி தட்ட காவல் துறைக்கு இதை பற்றி சொல்லி இருக்கிறாள். அந்த Colin pitchfork ஐ தேடி விசாரித்ததில் அவன் கொடுத்த ரத்த சாம்பிள் அவனுடையது அல்ல அது அவன் நண்பனது என்று தெரிந்தது. அத்துடன் அவன் ரத்தத்தை சோதித்து பார்த்ததில் இரண்டு கொலையில் கிடைத்த DNA உடன் ஒத்து போனது.
குற்றவாளி பிடிபட்டான்.
எனவே இந்த சம்பவத்தில் குற்றவாளியை சிக்க வைத்தது எது ? பென்களின் ஒட்டு கேட்கும் பழக்கம் .
ஆச்சர்யம் தான் அல்லவா?

குற்றங்கள் தொடரும்.............


                                   
                             ☸                  ☸             ☸


குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்

(பாகம் 4 : அசத்தும் வைர கொள்ளை)

இம்முறை நான் சொல்ல போகும் குற்றவாளியின் கதை இருக்கிறதே  இது எதுனா ஹாலிவூட் படத்தின் கதையா என்று உங்களை ஆச்சர்ய பட வைக்கும்.
உண்மையில் இது ஹாலிவுடை மிஞ்சும் நிஜ கதை ஒரு கொள்ளை கதை .சாதா கொள்ளை இல்லை ரொம்ப காஸ்ட்லியான வைர கொள்ளை.

பெல்ஜியமில் உள்ள Antwerp என்னும் இடத்தில் உள்ளது" Antwerp diamond center " எனும் மகா பாதுகாப்பான வைர வைர வங்கி. மொத்தம் 160 பாதுகாப்பான பிரமாண்ட பெட்டகம் கொண்ட பல கோடி மதிப்பிலான வைரங்களை கொண்ட ஒரு வைர காப்பகம்.
இங்கே இந்த வளாகத்தில் அவ்வளவு எளிதாக யாரும் வாகனங்களை கொண்டு வர முடியாது ஆயிரத்தெட்டு சோதனை ஆயிரத்தெட்டு வழிமுறை.
நடந்து வரும் யாரும் அந்த காம்பவுண்ட் குள் நுழையும் கணத்தில் இருந்து எண்ணிலடங்கா கேமரா மூலம் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்க படுவார்.
உள்ளே லாக்கரை இயக்க சிறப்பு அனுமதி பெற்றவர்களுக்கு ...வைர வியாபாரிகளுக்கு மட்டும் தான் அனுமதி யாரோ குப்பனோ சுப்பனோ போய் தனது வைரங்களை அவ்வளவு எளிதில் அங்கே சேமிக்க முடியாது .. நபர்கள் நம்பகமானவர்களா என்பதை வங்கி  தீவிரமாக கண்காணிக்கும்.
உள்ளே போனால் பாதுகாப்பு அறைகள் லாகர்கள் எல்லாமே பூமிக்கு இரண்டு தளம் கீழே அமைக்க பட்டவை.
அந்த இடத்திற்குள் இறங்கினால் ஒவொரு இன்ச்சும் பல சர்வைலன்ஸ் கேமரா மூலம் சல்லடை போட்டு சலிக்க படும்.

உள்ளே உள்ள பொருட்கள் யாவும் பத்து அடுக்கு பாதுகாப்பின் கீழ் பத்திர படுத்தி வைக்க பட்டிருக்கும். அங்கே உள்ள இடம் முழுதும் மனித நடமாட்டத்தை காட்டும் infra red கேமரா ,மற்றும் ஹீட் டிடக்டர் மற்றும் அதிர்வை உணரும் seismic சென்சார்.
மற்றும் பொருட்களின் இடமாற்றத்தை உணரும் Doppler reder, கொண்டு பாதுகாக்க பட்டிருக்கும். அங்கே உள்ள லாகரின் கதவுகள் லாக்கில் இருக்கும் போது கதவுகளுக்கு இடையே ஒரு காந்த புலத்தை உண்டாக்கி வைத்திருக்கும் . அதாவது யாரவது தவறான நபர் வேறு நோக்கத்தோடு கதவை திறந்தால் அந்த புலம் பாதிக்க பட்டு உடனே அலாரம் கதறும்.

இதை தாண்டி அந்த நவீன லாக்குகள் ஒரு லட்சம் காம்பினேஷன்களை உள்ளடக்கிய நம்பர்களை கொண்ட பூட்டுகளால் பாதுகாக்க பட்டிருந்தது.
அசம்பாவிதம் நடந்தால் தடுக்க ADC கம்பெனி காரர்கள் போலீசுக்கு காத்திருக்க வேண்டியதில்லை . அவர்களுக்கு தனியாக சிறப்பு பாதுகாப்பு படை வைத்து கொள்ள அனுமதி இருந்தது மொத்தத்தில் ADC பாதுகாப்பில் இருக்கும் வைரத்தை கொள்ளை அடிப்பது என்பது யாரும் கனவிலும் நினைக்க துணியாத ஒன்று.
Its a " impossible  mission ."

இந்த சூழ்நிலையில் தான் அந்த சாத்தியமற்ற கொள்ளையை செய்தான் எங்கிருந்தோ வந்த பலே கில்லாடி dhoom 2 வின் தாத்தா Notarbartolo என்கிற வைர திருடன்.
அவன் அதை எப்படி செய்தான் தெரியுமா ?

அந்த வளாகத்தில் முதலில் ஒரு வைர வியாபாரியை போல நுழைந்து வளாகத்தில் வியாபாரிகளுக்காக ஒதுக்க பட்ட பாதுகாப்பு அறைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்தான். ஒரு நிஜ வைர வியாபாரியாக தன்னை காட்டி கொள்ள மற்றும் அவர்கள் நம்பிக்கை பெற அங்கே அவன் நீண்ட நாள் தொடர்ந்து இருக்க வேண்டி இருந்ததது.
உள்ளே சிறப்பு லாக்கர்களை கையாள மற்றும் உள்ளே நுழைய சிறப்பு ID கார்டு தேவை அதை நம்பகமானவர்கள் தான் பெற முடியும் என்பதால் அந்த நம்பக தன்மை காக அங்கேயே ஒரு மாதம் இருந்தான் .இரு மாதம் இருந்தான் 6 மாதம் இருந்தான் .1 வருடம் இருந்தான் .2  வருடம் இருந்தான்.
ம்ஹூம் ஒரு பாம்பின் பொறுமையை போல மொத்தம் இரண்டரை ஆண்டுகள் கழித்து ஒரு நாள்.....
அவன் அந்த வாலட்டுகளில்  24 மணி நேரத்தில் எப்போதும் சென்று வர கூடிய ID யை கிடைக்க பெற்றான்.

ஓற்றை கால் கொக்காய் 2 ஆண்டுககுக்கு மேலாக மிக பொறுமையாக பல்லை கடித்து காத்திருந்த Notarbartolo  அதன் பின் நேரத்தை வீணடிக்க வில்லை. இந்த திருட்டை செய்ய தனி ஒருவனின் சக்தி போதாது என்று உணர்ந்த அவன் தனக்கென்று ஐவர் குழு ஒன்றை அமைட்த்திருந்தான்.
ஒரு வீக் எண்டில் ஒரு சுபமுகுர்த்த நாளை குறித்தார்கள் அந்த நாள் feb 15  2003 ஆம் ஆண்டு..

மிக பொறுமையாக 2 ஆண்டுகளாக உள்வாங்கி இருந்த தகவல்களை கொண்டு ஒவொரு பாதுகாப்பு அமைப்பையும் பொறுமையாக தகர்த்து அந்த குழு. ஒவொரு சென்சாரையும் செயலியக்க வைத்தார்கள்.
காந்த புலமாவது மன்னாவது கதவுகளில் காந்த புல கருவியை கதவில் ஒட்டி கொண்டே இருக்கும் படி வெட்டி எடுத்தார்கள். கடைசியாக  அவர்கள் அங்கே இருந்த 160 சேப்டி டெபாசிட் பாக்சில் 123 ஐ உடைத்து வைரம் மட்டும் அல்ல நிறைய நகைகளையும் சேர்த்து கொள்ளை அடித்து சென்றார்கள். அவர்கள் எடுத்து சென்ற பொருள் மதிப்பு 100 மில்லியன் டாலர்.
எந்த பிசிறும் விட்டு விட கூடாது என்று தங்கள் சம்பந்த பட்ட cc tv footage களையும் வந்து திருடி சென்றார்கள்.

கொள்ளையை பார்த்த நிர்வாகத்தினர் மற்றும் போலீஸ் அதிர்ச்சியில் உறைந்தது.
இவ்ளோ பொருட்களை அள்ளிக்கொண்டு போகிறதே சிரமம் ஆச்சே என்று புலம்பினார்கள்.  அவர்கள் எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்தார்கள் என்பதை முழுமையாக கண்டு பிடிக்க முடியாமல் திணறினார்கள்.
கொள்ளை அடித்து பின் உடனே தலைமறைவு ஆகி விட வில்லை அவன். தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க வழக்கம் போல தொடர்ந்து சென்று கொண்டு இருந்தான் . கொள்ளை போனதை பறி கொடுத்தவர்கள் புலம்பும் போது தானும் கூட சேர்ந்து புலம்பினான் .யார் இந்த கொள்ளையை செய்தது அவன் இநேரம் உலகில் எந்த மூலையில் இருக்கிறான் என்று புரியாமல் போலீஸ் திணறியது.
இந்த கொள்ளைக்கு பின்னால் உள்ள சாகசங்கள் நான் சொன்னது மிக குறைவு.."Antwerp Diamond Heist" என்று தேடி பாருங்கள் புரியும்.

இப்படி பட்ட  மிக நிதானமாக யோசித்து மிக மிக நிதானமாக திட்டமிட்டு நேர்த்தியாக கொள்ளையை முடித்த ஒரு மகா திருடன் எப்படி சிக்கினான் என்று நான் அடுத்ததாக சொல்ல போவது தான் மிக சுவாரஷயம்.
சம்பவம் நடந்த இடத்தில் ஒரு சாண்ட்விச்சை கண்டெடுத்தது போலீஸ் பாதி தின்னு வைக்க பட்ட சாண்ட்விச்....
அது notarbartolo சாப்பிட்டுவிட்டு வைத்திருந்த சாண்ட்விச். பாவம் கொள்ளை நேரத்தில் கொலை பசி போல...
பேங்கின் செக்கியுரிட்டி சிஸ்டங்களை பற்றி தெரிந்த அவனுக்கு ஒரு பாதி கடித்து வைக்க பட்ட பொருளில் இருந்து DNA எடுக்க முடியும் என்று தெரியாமல் போனது ஆச்சர்யம் தான்.

அவனை கைது செய்து 10 ஆண்டு சிறை கொடுத்தது நீதி மன்றம்.
ஆனால் கடைசி வரை கொள்ளை அடிக்க பட்ட பொருட்களில் இருந்து 5 பைசா கூட இன்று வரை மீட்க பட வில்லை என்பது குறிபிட தக்கது.

         ✴     ✴        ✴       ✴

ஆமா...ம்..   உங்கள் வீட்டில் வேக்குவம் கிளீனர் இருக்கா ?
அதை வைத்து என்னலாம் செய்யலாம்?
கீழே கிடக்கும் குப்பையை எடுக்கலாம் வீட்டை சுத்தம் செய்யலாம் இதென்ன கேள்வி ? என்கிறீர்களா ....

வேக்குவம் கிளீனர் வைத்து கொள்ளை அடிக்கலாம் தெரியுமா?
அந்த கதை அடுத்த பாகத்தில்.

(பிளஸ் அடுத்த பாகத்தில் ஒரு பரபரப்பான கொலை கேஸ் ...காத்திருங்கள் )

குற்றங்கள் தொடரும்....................


                                          ☸                      ☸                     ☸



குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்

(பாகம் 5 : இரட்டை கொலை மர்மம்)

உலகில் கொலை கொள்ளைகளில் இருந்து தப்ப பாதுகாப்பை உறுதி செய்ய புதிய புதிய தொழில் நுட்பங்கள்
வந்தாலும் கூடவே அதை மீறி கொள்ளை அடிக்கும் திருடர்களின் தொழில் நுட்பமும் வளர்ந்து கொண்டே வருவது தவிர்க்க முடியாதது.
பொருளை காப்பாற்ற தான் பெரிய பெரிய தொழில் நுட்பங்கள் தேவை. அதை கொள்ளை அடிக்க சில நேரங்கில் சாதாரண தொழில் நுட்பங்கள் சாதாரண பொருட்கள் போதுமானதாக இருக்கிறது
உதாரணம் "வேக்குவம் கேங்க் " என்று அழைக்க பட்ட பிரான்சின் வேக்குவம் கிளீனர் கொள்ளையர்களை சொல்லலாம்.

2006 வாக்கில் பிரான்சில் பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் ஒரு தொழில் நுட்பம் கையாள பட்டு வந்ததது. அதாவது கல்லாவில் அதிகம் பணம் வைத்திருந்தால் ஆபத்து என்று குறிபிட்ட பணம் சேர்ந்த பின் அதை ஒரு கவரில் போடுவார்கள் . அவர்களுக்கு அருகே ஒரு குழாய் அமைப்பு போல இருக்கும் ஒரு கருவியில் அதை போட்டால் நேரே அந்த குழாய் பண பொட்டலத்தை சேப்டி லாக்கரில் கொண்டு போய் உண்டியல் பணம் போல போட்டு விடும்.

இந்த ஏற்பாடை கவனித்த கொள்ளை கும்பல் ஒன்று சிம்பிளாக ஒரு காரியம் செய்ததது.
அந்த குழாயில் வழியில் ஒரு இடத்தில ஓட்டையை போட்டு அங்கே சக்தி வாய்ந்த வேக்குவம் க்ளீனரை வைத்து உறிஞ்சினால் .....
லாக்கர் போகும் பணத்தை வழியிலேயே சுருட்ட முடியும் என்று கண்டு கொண்டது.

வருடத்தில் இந்த கொள்ளை மொத்தம் 15 முறை நடந்தது.
மொத்தம் 6 லட்சம் யூரோ கொள்ளை அடிக்க பட்டது. ஆனால் போலீஸ் கடைசி வரை உதவாத சில cc tv footage  ஐ தவிர எதையும் உருப்படியாக கண்டு பிடிக்க முடிய வில்லை...
அந்த கேஸ் இன்று வரை பெண்டிங் கேஸ் தான்.

                     ✴     ✴       ✴  

சரி கொள்ளை இருக்கட்டும் இப்போ ஒரு பரபரப்பான ....மெய் சிலிர்க்க வைக்கும்.... க்ரைம் நாவல் கதைகளை மிஞ்சும் ஒரு கொலை கேஸை பார்க்கலாமா ?
உத்தர பிரதேஸ் மாநிலத்தில் உள்ள noida நகரத்தில் நடந்த கொலை கேஸ்...
அதுவும் ஒரு கொலை அல்ல ...இரட்டை கொலை... சிபிஐ யை முழி பிதுங்க வைத்த  மர்ம கொலை...noida double murder case எனும் புகழ் பெற்ற ஒரு கேஸை தான் இப்போ நாம் பார்க்க போகிறோம்.

அது மே 2008 நொய்டா நகரில் உள்ள ஜல்வாயு விஹார் எனும்  அப்பார்ட்மென்டில் பிளாட் நம்பர் L 32..
அங்கே வசித்து வந்தவர் தான் ராஜேஷ் தல்வார்... இவர் ஒரு டென்டிஸ்ட்..  மற்றும் கோல்ப் விளையாட்டு வீரர். இவர் மனைவி நுபூர் தல்வார் அவரும் ஒரு டென்டிஸ்ட் .
இவர்களுக்கு 14 வயது ஒரு மகள் ...அருஷி தல்வார்.

அன்றைக்கு மே 15.. 2008 இரவு வழக்கம் போல தனது பெற்றோர்களிடம் குட் நைட் சொல்லி விட்டு தூங்க போனாள் அருஷி...
அடுத்த நாள் அவளுக்கு விடிய போவதில்லை என்பதை பாவம் அவள் அறிந்திருக்க வில்லை..
அடுத்த நாள் 16 ஆம் தேதி காலை அந்த வீட்டின் அழைப்பு மணியை ஆச்சரியத்தோடு அமுக்கி கொண்டிருந்தார் பாரதி மண்டல் எனும் அந்த வீட்டின் பணி பெண் .
காரணம் வழக்கமாக ஹேம்ராஜ் வந்து இன்நேரம் கதவை திறந்து இருப்பானே... என்னாச்சு ? ஹேம்ராஜ் பஞ்சாடே அந்த வீட்டின் நீண்ட நாள் வேலை காரன்.

நீண்ட நேரம் கழித்து நூபூர் தல்வார் வந்து சின்ன திறப்பு வழியாக  எட்டி பார்த்தாள் அவளிடம் கதவு வெளி பக்கமாக பூட்டி இருப்பதாக சொன்னாள் பணிப்பெண் பாரதி  .
அந்த ஹேம்ராஜ் பால் வாங்க போய்ட்டான் போல ...ஏன் வெளில பூட்டிட்டு போனான் என குழம்பிய வாரே
மீண்டும் உள்ளே சென்ற நூபுர் பாரதியை கீழே வந்து எட்டி பார்க்கும் படி சொன்னாள் .தான் பால்கனி வழியாக சாவியை கீழே போடுவதாக சொன்னாள்.
மீண்டும் படி இறங்கி கீழ் நோக்கி போனால் பாரதி அவளுக்கு பால்கனி வழியாக சாவியை போட்டாள் நூபுர் . இதற்கிடையே தூக்கம் கலைந்து எழுந்து வந்த ராஜேஷ் தல்வார் ஹாலில் ஒரு விசித்திரத்தை கவனித்தார். ஒரு காலி விஸ்க்கி பாட்டில் ...கொஞ்சமே கொஞ்சம் மிச்சம் வைக்க பட்ட விஸ்க்கி பாட்டில்....
"ஹேய் நூப்பூர் இதை யார் இங்கே வைத்தது "
என ஆச்சர்யமாக கேட்டு கொண்டே வந்தவர் இனொன்றையும் கவனித்தார் . தனது மகள் அருஷி யின் படுக்கை அறை லேசாக திறந்து இருந்தது. அவள் படுக்கை அறை கதவு ஆட்டோமேட்டிக் லாக்கை கொண்டது என்பதை அவர் அறிவார் அதை சாவி கொண்டு வெளியில் திறப்பது அல்லது அருஷி உள்ளே இருந்து திறப்பது அல்லது லாக்கை உடைப்பது இவை மூன்று தான் கதவு திறந்திருக்க சாத்தியம். நேற்று தன் கண் முன்னே தான் உள்ளே சென்று பூட்டி கொண்டாள் அருஷி...

மெல்ல சென்று கதவை திறந்தவர் கண்ணுக்கு தரையில் கிடந்த அருஷி கிடைத்தாள் உடல் பெட்ஷீட்டால் மூட பட்டு இருந்தது.
இதற்க்கு இடையில் மேலே ஏறி வந்த வேலை காரி...
''அம்மா இது வெளி பக்கம் பூட்ட லாம் இல்ல உள்ள லேட்ச் போட்டு இருக்கு அவ்ளோ தான்.. "
என்று சொல்லி திறந்து கொண்டு வந்தாள்.
அங்கே ராஜேஷ் தரையில் கிடந்த பெட்சீட்டை பிரித்த போது உள்ளே அருஷி தலையில் பலமாக தாக்க பட்டு கழுத்து அறுக்க பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்தார் வீடு அதிர அலறினார்..

போலீஸ் வந்து தனது வழக்கமான வேலைகளை செய்தது .. ஆதாரம் சேகரித்ததது .பிணத்தை மார்ச் வரிக்கு கொண்டு போனது...
இடையில் கொலை குற்றவாளி யார் என்று தீர்மானித்தது .. சந்தேகமில்லாமல் தலை மறைவாகி போன வேலைக்காரன் ஹேம்ராஜ்.
அருஷி உடல் பாலியல் ரீதியான துன்புறுத்த பட்டதா என்று ஆய்வு செய்ய பட்டது. இந்த கேஸில் ஒரு விஷயம் புதிராக இருந்தது. அது வீடு அணைத்து பக்கத்திலும் உள்ளே சாத்த பட்ட நிலையில் ஹேம்ராஜ் தப்பியது எப்படி.

அந்த வீட்டை ஆராய்ந்த போலீஸ் அங்கே ஓபன் டெரஸ் வழியை பயன் படுத்தி இருக்க முடியும் என்பதை கண்டது ஆனால் ஆச்சர்யம் அந்த மொட்டை மாடி செல்லும் கதவு உள் பக்கமாக பல நாளாக பூட்ட பட்டு இருந்தது. ராஜேஸிடம் சாவியை கேட்ட போது பூட்டி நீண்ட நாள் ஆச்சு சாவியை காணோம் என்று சாவி தொலைந்து போனது தெரிந்தது.
அப்போ நேற்று இரவு வீட்டுக்குள் இருந்த ஹேம்ராஜ்  தலை மறைவாகி போனது எப்படி. பால்கனி கீல்கனி எல்லாம் ஆராய்ந்த போலீஸ் இந்த வழிகள் சாத்தியம் இல்லை என்று உறுதியாக கண்டு கொண்டது .
மர்மம் புரியாமல் திணறியது.

பிறகு 17 ஆம் தேதி. அருஷி உடலை சாம்பலாக்கி  கொண்டு ராஜேஷ் தம்பதிகள் வீட்டை அடைந்த போது வீட்டிற்கு வந்திருந்த சொந்த காரர் ஒருவர் அந்த மொட்டை மாடி க்கு செல்லும் வழியில் உள்ள கதவில் ரத்த கரை இருப்பதை கவனித்து போலீஸ் க்கு சொன்னார்.
எனவே மீண்டும் சாவி தேடி பார்த்த ராஜேஷ் அது வச்ச இடத்தில இல்லை. என்று சொல்லி பூட்டை உடைக்க சொன்னார்.

இதற்கிடையில் தலைமறைவாகி போன
ஹேம்ராஜ் அவன் சொந்த ஊருக்கு தப்பி சென்றிருப்பான் என்று போலீஸ் யூகித்து  அந்த ஊருக்கு போலீசை அனுப்பியது.
இங்கே மொட்டை மாடி கதவை உடைத்து மாடி க்கு சென்ற போலீஸ் இந்த உயரத்தில் யாரும் இங்கிருந்து கீழே போகவோ... வெளியில் இருந்து உள்ளே வரவோ சாத்தியம் இல்லை என்பதை கண்டது.
மொட்டை மாடியை சுற்றி ஆராய்ந்த போது தான் அதை கண்டது க்ரில் ஐ தாண்டி ....என்ன அது...

கிட்டே சென்று பார்த்த போது.....

அது......

டெட் பாடி.....

இவர்கள் தேடும் ஹேம்ராஜின் டெட் பாடி சற்றே அழுகிய நிலையில்....
தலையில் அடி பட்டு கழுத்து அறுக்க பட்டு.... அதே அருஷி கொலை ஸ்டைலில்...

முற்றிலும் உள்ளே நுழைய முடியாத வீட்டில் உள்ளேயும்....
முற்றிலும் அணுக முடியாத மொட்டை மாடியிலும் வந்து உள்ளே தூங்கி கொண்டிருந்த இருவருக்கு தெரியாமல் இரட்டை கொலைகளை செய்தது யார். செய்து விட்டு தப்பியது எப்படி...??
போலீஸ் அக்கம் பக்கம் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து இருந்தது அதன் படி அந்த இரண்டு நாளில் யாரும் சந்தேக படும் படி வந்திருக்க வில்லை...
பக்கம் அக்கம் அந்நியர்கள் யாரையும் மக்கள் பார்க்க வில்லை...
Cc டிவி கேமராவில் சந்தேக படும் படி ஏதும் பதிவாக வில்லை.

இந்த பேய் தனமான கேஸில் போலீஸ் திணறியது.
கேஸ் CBI க்கு கை மாறியது.

கேஸ் மொத்தம் 6 வருடம் இழுத்து அடித்தது. கடைசியில் CBI கிடைத்த எல்லா ஆதரங்களையும் வைத்து சல்லடை போட்டு சலித்து அன்று நடந்தது என்ன என் பதை கண்டு பிடித்தது.

அந்த கண்டுபிடிப்பு அந்த இரவு நடந்த நிகழ்வு....
அணைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது....

அன்று நடந்ததது....என்ன என்பதை பற்றி..........

ஆம் சரி தான்... அடுத்த பாகத்தில் தான் சொல்வேன்...

குற்றங்கள் தொடரும்................


                                 ☸                    ☸                      ☸



குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்

(பாகம் 6 : மர்ம முடிச்சுக்கள்)

நொய்டா இரட்டை கொலை போலீஸையும் CBI யையும் நீண்ட நாள் சுத்தில் விட்டு இருந்தது. உள் பக்கமாக பூட்டி கொள்ளும் அருஷி கதவை திறந்து இருந்தது ஏன் அப்போ வந்தவன் தெரிந்தவனா ? அவளே திறந்தாளா....
அந்த வீடு உள் பக்கம் பூட்டி வைக்க பட்டிருக்க கொலையாளி தப்பியது எப்படி.
மொட்டைமாடி செல்லும் வழி பூட்ட பட்ட நிலையில். ஹேம் ராஜ் எனும் வேலைக்காரன் பிணம் மொட்டை மாடியில் கிடந்தது எப்படி. ?
இப்படி பல கேள்விகள் போலீசை தினறடித்தது. 6 வருடங்கள் கழித்து குற்றவாளிகளை கண்டு பிடித்தது CBI.

இரண்டு பிணங்களிலும் கிடைத்த காயங்கள் குறித்த ரிபோர்டை உற்று கவனித்த போது இரண்டும் ஒரே மாதிரி இருந்தது மட்டும் அல்ல. அந்த தலையில் அடிபட்டிருந்த காயம் அதற்க்கு உதவிய ஆயுதம் ஒரு V அல்லது U வடிவ பொருள் என்று ரிப்போர்ட் சொன்னது.
 உதாரணமாக கோல்ப் விளையாடும் ஸ்டிக் போல.
அப்புறம் அந்த கழுத்தில் அறுக்க பட்ட மார்க்...அது ஒரு நேர்த்தியாக வெட்ட பட்ட ..சொல்ல போனால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குழாயை சரியாக வெட்ட பட்ட ஒரு பிளவு.
வெட்டுவதற்கு பயன் படுத்த பட்டது
நிச்சயம் டாக்டர்கள் பயன்படுத்தும் "சார்ஜிக்கல் நைப் " ஆக இருக்கலாம் என்றது ரிப்போர்ட்.
மேலே உள்ள தகவலை படித்த உங்களில் எத்தனை பேருக்கு இரண்டு முறை மூளையில் மணி அடித்தது ? அவர்கள் எல்லாம் தங்களை தாங்களே பாராட்டி கொள்ளுங்கள்..

ஆம் அருஷியின் தந்தை ராஜேஷ் ஒரு கோல்ப் விளையாட்டு வீரர் என்று சொல்லி இருந்தேன். ஆம் அவர் ஒரு டாக்டர் என்றும் சொல்லி இருந்தேன்.
கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த கொலைகளை செய்தது ராஜேஷ் தல்வார் தான் .அவர் மனைவி நுபூர் தல்வார் அதற்க்கு உடந்தை என்பதை கண்டு கொண்டு இருவருக்கும் ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தது CBI.
ஆனால் காரணம் ?? கொலையின் மோடிவ்.??

என்ன தான் ராஜேஷ் தம்பதியருக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டினாலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறியது சிபிஐ....
எனவே தனக்கு தெரிந்த மூன்று திரை கதைகளை சொன்னது...

ஒன்று.... ராஜேசுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த விஷயம் தனது பெண் அருஷிக்கு தெரிந்து விட இதை சொல்லி விட்டு விட சொல்லி தொடர்ந்து வற்புறுத்த இந்த உண்மையை வேலைகாரனுக்கும் சொல்லி அவனையும் பேசி பார்க்க அருஷி வற்புறுத்த ....கௌரவம் போய் விட கூடாதே என்று இருவரையும் கொண்றார் ராஜேஷ்...
இரண்டு ...அருஷியை ஹேம்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து கொன்று விட அதை நேரில் பார்த்த ராஜேஷ் ஹேம்ராஜை கொன்றார்.
மூன்று... வீட்டுக்கு திரும்பிய ராஜேஷ் அருஷி ரூமில் சப்தம் வருவதை கேட்டு அங்கே சென்றால் இருவரையும் தவறான நிலையில் பார்க்க நேருகிறது கோபத்தில் கோல்ப் ஸ்டிக் ஐ வைத்து ஹேம் ராஜை தாக்கு கிறார் அதில் ஒரு தாக்குதலில் ஹேம் ராஜ் நகர்ந்து கொள்ள அருஷி தலையில் அடி படுகிறது. பிறகு ஹேம் ராஜை கொன்று மொட்டை மாடியில் ஒளித்த பின் குற்றுயிராக இருக்கும் சாகும் தருவாயில் உள்ள அருஷியை கழுத்தை அறுக்கிறார். பிறகு விஸ்கியை சாப்பிடுகிறார்.

சிபிஐ இப்படி நிறைய கதை சொன்னாலும் சரியான காரணம் இது தான் என்பது அறிய படாமலே போய் விட்டது. அவர்கள் சொன்ன கதைகள் எல்லாம் கொஞ்சம் பொருந்தியும் அதிகம் பொருந்தாமலுமே இருக்கிறது.
ஆனால் குற்றவாளி இவர்கள் தான் என்று உறுதி செய்ய பட்டு ஆயுள் வழங்க பட்டது.
இந்த கேஸ் நாட்டை உலுக்கியது இதை வைத்து பல சர்ச்சை பல கதைகள் வந்தது. பிற்காலத்தில் இதை வைத்து எடுக்க பட்ட தல்வார் எனும் ஹிந்தி படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்தவர் தனக்கு ராஜேஷ் தல்வார் இக்கொலையை செய்து இருபார் என்பதில் நம்பிக்கை இல்லை அவர் குற்றமற்றவர் என்று கருத்து தெரிவித்தார்.
தமிழில் எடுக்க பட்டுள்ள அர்ஜுன் நடித்த நிபுணன் திரைப்படம் இந்த சம்பவ அடிப்படையில் எடுக்க பட்டது தான்.
ராஜேஷ் மற்றும் அவர் மனைவி தண்டனை வழங்க படுவதற்கு முன் செய்தியாளர்களுக்கு.... தனியார் தொலைக்காட்சிக்கு...கொடுத்த பிரத்தியேக பேட்டிகள் நிறைய யூ டியுபில் இருக்கிறது. பார்த்தால் தெளிவாகுமா என்றால்...ம்ஹூம் இன்னும் குழம்பி போவீர்கள்.

அன்று தல்வார் குடும்பத்தில் அருஷி க்கும் ஹேம்ராஜ் க்கும் உண்மையில் நடந்தது என்ன என்கிற மர்ம முடிச்சுக்கள் இன்று வரை முழுதாக அவிழ்க்க பட வில்லை.

                              ✴                  ✴                   ✴                      ✴

ரொம்ப சீரியஸான கதை படித்து விட்டு சீரியஸ் மூடுக்கு போயிட்டு இருப்பீங்க..
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம் வாங்க...
கிரிமினல்கள் எல்லோருமே நாம் நினைப்பதை போல மிக இருக்கமானவர்கள் அல்ல...மிக புத்திசாலியும் அல்ல....
சில பின் வரும் கிரிமினல் கேஸை கவனிங்க....

ஒரு அபார்ட்மென்டில் கணவன் மனைவி இருக்கிறார்கள்....அப்போ கணவன் ஏதோ ஜோக் சொல்ல ...இருவரும் சிரிக்கிறார்கள் ..இரண்டு சிரிப்பு சப்தத்துக்கு இடையே அடக்க முடியாமல் மூன்றாவது சிரிப்பு சப்தம் ஒன்று மேலே இருந்து கேட்கிறது யாரென்று சென்று பார்த்தால் அங்கே திருட வந்த ஒரு திருடன்... பாவம் ஜோக் கேட்டு கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து இருந்தான்.

சென்னையில் இரண்டு காலேஜ் பசங்க...
பணம் சம்பாதிக்க ஒரு பயங்கர திருட்டு பிளான்... அதாவது பக்கத்து அக்கது அபார்ட்மெண்ட்ல இருக்கும் பணக்காரர்கள் வீட்டில் உள்ள காஸ்டலி நாய்களை திருட வேண்டியது பிறகு அதை olx இல் விற்று காசு சம்பாதிக்க வேண்டியது...
ஆரம்பமெல்லாம் என்னவோ அசத்தலாக தான் இருந்தது பாவம் பினிஷிங் தான் சரி இல்லை...
Olx இல் நாயின் போட்டோவை போட்டு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் கொடுத்து வைக்க அதை அந்த நாய்க்கு சொந்தகாரரே பார்த்து தொலைக்க நாய் திருடர்கள் பாவம் அட்ரஸ் தேடி போய் பிடிக்க பட்டார்கள்.

S. மகேஷ் னு ஒரு கொலையாளி மாட்டிய விதம் பாருங்கள்...
ராஜாராம் என்பவரை கொலை செய்தவர் இவர்...கொலை செய்து சில மணி நேரம் கழித்து மீண்டும் கொலை நடந்த ஸ்பாட்டுக்கே விசிட் அடித்து இருக்கார். போலீஸ் அவரை லம்பாக பிடித்தது "ஏன் யா திருப்பி இங்க வந்த" என்று கேட்டதற்கு மகேஷ் சொன்ன பதில்...
"போலீஸ் , விசாரணை எல்லாம் பண்ணரங்களா னு பாக்க வந்தேன்.."

Job done என்கிற ரீதியில் ஸ்டேட்டஸ் போட்டு செய்த காரியத்தை போட்டோ போட்டு பேஸ் புக் வாயிலாக மாட்டிய குற்றவாளிகளின் எண்ணிக்கை மட்டும் கனக்கில் அடங்காத அளவு உள்ளது...

                                     ✴              ✴              ✴                ✴

சரி ரிலாக்ஸ் பண்ணியாச்சா...
இப்ப திரும்ப ஒரு கதை க்கு வருவோம்...
ரொம்ப விச்சித்திர கதை இது...
அதாவது குற்றவாளிகளே புதிர்கள் தான். இதுல புதிர் போடும் குற்றவாளி இருந்தால் எப்படி இருக்கும்...
தான் செய்யும் ஒவ்வொரு கொலைக்கும் தன் கைப்பட போலீஸ் க்கு பத்திரிக்கைக்கு..ஒரு புதிரை அனுப்பி வைக்கும் ஒரு புதிரான கொலைகாரனை பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

குற்றங்கள் தொடரும்..................


                                          ☸       ☸         ☸.      



குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்

(பாகம் 7 : ஒரு புதிர் கொலையாளி )

உலகில் ...குற்ற உலகில்...சைக்கோ கொலையாளிகளுக்கு பஞ்சம் இல்லை..குறிப்பாக மேற்கில்.
சைக்கோ கொலையாளிகள் மிக விபரீதமானவர்கள் நாம் அறிவோம். ஆனால் விபரீதம் தாண்டி சில கொலையாளிகள் விசித்திரமானவர்கள். அடுத்ததாக பார்க்க போகும் zodiac killer அந்த வகை ஒரு ஆசாமி தான்.

வடக்கு கலிபோர்னியாவில் 1968 தொடங்கி 1974 வரை போலீசை தினறடித்த ஜோடியாக் கில்லர் உலகளவில் இன்று வரை மிக பிரபலம்.
அவனை தழுவி எடுக்க பட்ட நாவல்கள் திரை படங்கள் ஏராளம்.
அவன் மேல் மொத்தம் 37 கொலை காண குற்றம் உள்ளது அதில் 5 தான் போலீஸால் மிக உறுதியாக அறிய பட்டது. அவனது இரண்டு இரை தப்பியதும் உண்டு.
அந்த தொடர் கொலையாளி ஒவ்வொரு கொலைக்கு பின்பும் ஒரு விச்சித்திர காரியம் செய்தான். போலீசுக்கு பத்திரிகைகளுக்கு தனது கொலை பற்றிய தகவல்களை தன் கை பட எழுதி அனுப்பினான் .
ஆனால் அவைகள் எல்லாமே புதிர் வடிவத்தில் இருந்தது.
இந்த சம்பவங்களை பாருங்கள்..

அது டிசம்பர் 20 ,1968. இரவு நேரம்...
கலிபோர்னியாவுக்கு ஒதுக்கு புறமாக
Lake Herman road என்ற ரிமோட்டான ஏரியாவில் ....
17 வயது டேவிட் பேரடே என்பவன் தனது 16 வயது கேர்ள் பிரண்ட் ' பெட்டி லூயி ஜென்சன்' என்பவளுடன் (அநியாய வயது தான் ) தனது காரை பார்க் செய்து விட்டு ஓய்வாக இருந்த சமயத்தில் ஒரு மர்ம நபரால் இருவரும் சுட பட்டார்கள். அந்த கேஸை ஆராய்ந்த போலீசுக்கு தடையமோ குற்றவாளியோ சிக்க வில்லை..

இது நடந்து சில மாதங்கள் கழித்து ஜூலை 5 , 1969 அதிகாலை. முன்பு பார்த்தது போலவே ஒரு ரிமோட் ஏரியாவில் Mike mageau எனும் 19 வயது பய்யன் ...Darlene ferrin எனும் 22 வயது கேர்ள் பிரண்ட் உடன் (ஆம் இது அதை விட அநியாய வயது ) காரை பார்க் பண்ணிவிட்டு ஒரு இடத்தில அமர்ந்திருந்த போது ஒரு மர்ம மனிதன் கையில் பிளாஷ் லைட்டுடன் அவர்களை அணுகினான்... அவர்கள் சுதாரிக்கும் முன் இருவரையும் தாறுமாறாக சுட்டான். அந்த பைய்யன் ஸ்பாட்டில் இறந்து போக பெண் கடுமையான காயத்திற்கு ஆளானார்.

பிறகு ஆகஸ்ட் 1 , 1969 சான் பிரான்சிஸ்க்கோ எக்சாமினர்க்கு மற்றும்  சான் பிரான்சிஸ்க்கோ குரோனிக்கல் எனும் பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்து இருந்ததது.
அது மதிப்பிற்குரிய எடிட்டர் அய்யா..
அந்த நான்கு கொலைகள் செய்த கொலையாளி நான் ....என்று தொடங்கி இருந்தது. அதன் பின் அதில் தரப்பட்ட கொலை பற்றிய தகவல்கள் எல்லாமே cryptogram என்ற  புதிர் வடிவில் இருந்தது.

அதாவது அங்கே கொடுக்க பட்ட எழுத்துக்களுக்கு வேறு எழுத்துக்கள் பொருளாக இருக்கும்.. உதாரணமாக  OK  என்று சொல்ல வேண்டும் என்றால்  15, 16 என்று குறிப்பிடுவதை போல .
(ஆங்கில எழுத்து O 15 ஆவதாக உள்ளதால் K  16ஆவதாக இருப்பதால். )
அப்படி வேறு பொருள் படும் படி வார்த்தைகளை அமைத்து தகவல்களை அனுப்பி இருந்தான்.
மேலும் அவன் தன்னை zodiac என்று அடையாள படுத்தி கொண்டான். தனக்கான சிக்னேச்சர் என்று ஒரு சிம்பளை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான் .
அதாவது ஒரு வட்டம் வரைந்து அதில் குறுக்காக இரு கோடுகளை சிலுவை போல ...முனைகள் வட்டத்தை விட்டு சற்று நீட்டி இருக்கும் படி வரைந்து வைத்தான். மேலும் தனது இந்த கடிதம் பற்றி அதன் புதிர் பற்றி பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் வந்ததாக வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருந்தான்.
அந்த புதிரை டீகோட் செய்ய முடியாமல் போலிஸ் திணறியது.

சில நாட்கள் கழித்து இன்னோரு கடிதம் வந்து சேர்ந்தது.... அதே போல மதியிற்குரிய எடிட்டர் அய்யா என்று தொடங்கி.
இம்முறையும் கொலை பற்றிய தகவல்களை புதிர் வார்த்தையில் அனுப்பி இருந்தான். மேலும் கடந்த கடிதத்தின் புதிரை விடுவிக்க முடியாத போலீசை இந்த கடிதத்தில் நக்கலாக சாடி இருந்தான்.
சில நாட்கள் கழித்து டொனால்ட் ஹார்டன் என்கிற ஹை ஸ்கூல் டீச்சர் ஒருவர் தனது மனைவி உடன் இனைந்து அந்த புதிரை டீகோட் பண்ணி கொடுத்தார். அது இப்படி தொடங்கி இருந்தது.......

 “I like killing people because it is so much fun.”

நாம் ஒரு சைக்கோ கொலையாளியை கையாண்டு கொண்டு இருக்கின்றோம் என்று அப்போது தான் போலீஸ் புரிந்து கொண்டது. அதன் ஆபத்தை உணர்ந்தது.
கடிதத்தின் சீல் கடிதத்தின் கைரேகைகள் என்றெல்லாம் போலிஸ் தனது வழக்கமான வழிமுறைகளில் முயன்று பார்த்தது. அந்த zodiac குறித்த எந்த தகவலும் சிக்க வில்லை.

இதற்கிடையே செப்டம்பர்  27,  1969 அன்று ஊருக்கு ஒதுக்கு புறமாக ஓய்வாக இருந்த  Cecelia Shepard மற்றும் Bryan Hartnell  என்கிற தம்பதிகளை நோக்கி ஒரு மர்ம மனிதன் வந்தான் அவன் சட்டையில் வட்டம் மற்றும் குறுக்கு கோடு கொண்ட டிசைன் இருந்தது. அவர்களை நெருங்கிய அவன் தீடீரென பாய்ந்து அவர்களை முரட்டு தனமாக தாக்கினான். பிறகு இருவரையும் கட்டி போட்டான்.
பிறகு இருவரையும் சாவகாசமாக சித்திரவதை செய்ய தொடங்கினான் அவர்கள் குற்றுயிர் கொலை உயிர் ஆகும் வரை தொடர்ந்து அவர்களை அடித்து கொண்டே இருந்தான். பிறகு அவர்கள் இறக்கும் தருவாயில் விட்டு விட்டு அவர்கள் காரின் கதவில் போலீசுக்கு மெசேஜ் எழுதினான். கிளம்பி சென்றான்.

ஆம்புலன்ஸ் வந்து இருவரையும் அள்ளி சென்ற போது சித்திரவதை தாளாமல்  Shepard உயிர் பிரிந்தது இருக்க Hartnell கடுமையான காயங்களுடன் உயிர் தப்பி இருந்தார்.

அதன் பிறகு oct 11, 1969 அன்று 29 வயது Paul Stine எனும் டாக்சி டிரைவர் கொல்ல பட்டான்.
அந்த கொலை இவனக்கு சொந்தமா என்பதில் போலீசுக்கு சந்தேகம் இருந்தது .
 காரணம் இது வழக்கமான கொலைகளுடன் ஒத்து போகவில்லை.
ஆனால் 3 நாள் கழித்து ஒரு கடிதம் வந்து சேர்ந்தது.
அதில் அந்த டாக்சி டிரைவரின் கிழிந்த சட்டை துண்டு ஒன்றில்  ரத்தத்தால் சிம்பல் வரைந்து அனுப்பி இருந்தான் ஜோடியாக்.
மேலும் இம்முறை அடுத்ததாக ஒரு குழந்தைகள் நிரம்பி உள்ள ஸ்கூல் பஸ்ஸை தேர்ந்தெடுத்து அதில் அனைவரையும் கொல்ல போவதாக செய்தி அனுப்பி இருந்தான்.

போலீஸ் தீ பிடித்தது போல பரபரப்பானது.... டாக்சி டிரைவர் கொல்ல பட்ட இடத்தில இருந்த ஒரு கண்ணால் பார்த்த சாட்சியை போலீஸ் பிடித்தது அவன் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து அவனது முக அமைப்பை வரைந்தது. ஊரெல்லாம் சல்லடை போட்டு சலித்தத்து.. ம்ஹூம்.... கடைசி வரை zodiac என்பவனின் நிழலை கூட போலீஸால் தொட முடியவில்லை.
ஆனால் zodiac தனது பணியை தொடர்ந்து செய்து வந்தான். பதிரிக்கைகளுக்கு புதிர் வருவதும் கொலை நடப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

திடீர் என்று..

1974 இல் கடிதாசிகள் நின்று போனது ..கொலைகளும் தான். மொத்தம் 37 கொலைகள் அவன் மேல் சுமத்தப்பட்டது ஆனால் Zodiac கேஸில் கடைசி வரை சந்தேக அடிப்படையில் கூட ஒருவர் கூட கைது செய்ய பட வில்லை. பிற்காலத்தில் அந்த சம்பவங்களை வைத்து ஏக பட்ட நாவல்கள் ,புத்தகங்கள், திரைப்படங்கள் வந்தது தான் மிச்சம்.
(Zodiac killer என்ற படம் மற்றும் நம்ம iron man ஹீரோ ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்த zodiac படம் இப்படி நெறய )

2004 வரை 30 வருடங்கள் மாங்கு மாங்கு என்று மசாலா அரைத்து பார்த்து விட்டு சீ போ என்று கேஸை இழுத்து மூடியது போலீஸ் துறை...
அப்புறம் என்ன நினைத்ததோ.... 2007 இல் மீண்டும் அதை திறந்தது..
இன்றும் இரண்டொரு நகரங்களில் அந்த கேஸ் நிலுவையில் இருப்பதாக தகவல்.

எது எப்படியோ... குற்ற வரலாற்றில் zodiac ஒரு புதிர் கொலையாளியாக மாறி போனான் என்பது மறுக்க முடியாது.

                               ✴                  ✴                  ✴                 ✴


குற்றவாளிகளின் கதை பொதுவாக நமக்கு ஏன் இவ்வளவு சுவாரஷ்யமாக இருக்கிறது ?
காரணம் நம்மை விட குற்றவாலிகள்  அதிக விழிப்புடன் செயலாற்றுபவர்கள்.
அவர்கள் செயல்பாடு பொதுவாக சாதா மனிதர்களை விட அதிக புத்திசாலி தனம் நிரம்பியதாக இருக்கும்.
அவர்களின் சில செயல்கள் நம்மை திகைப்பில் ஆழ்த்தி ஆச்சர்யத்தில் மூழ்க செய்து விடும்.
அப்படி வேறு கோணத்தில் சிந்தித்து நம்மை திகைப்பில் ஆழ்த்திய சில அதி புத்திசாலி தனமான குற்றவாளிகளை பற்றி அவர்கள் செய்த க்ரைம் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

குற்றங்கள் தொடரும்................


                                         ☸             ☸               ☸


குற்றவாலிகளின் சுவாரஷ்ய கதைகள்

(பாகம் 8 : அதி புத்திசாலிகள் )

ஒரு பேங்கில் வேலை செய்யும் மேனேஜரை விட.... பேங்கை கொள்ளை அடிப்பவன் பல மடங்கு அதிகம் சிந்திக்கிறான். திட்டமிடுகிறான்.
பல கோணத்தில் யோசிக்கும் போலீசை விட அதிக கோணத்தில் குற்றவாளிகள் யோசிக்கிறார்கள்.
அவர்கள் யோசித்த விதம் செய்த செயலில் உள்ள புத்திசாலிதனம்.... புதுமை.... இவற்றை சில நேரம் ரசிக்காமல் இருக்க முடியாது. கொள்ளை சார்ந்த திரை படங்கள் அதனால் தான் நம்மால் ரசிக்க படுகின்றன.

சில குற்றவாளிகள் மிக நூதனமானவர்கள் ... உதாரணமாக ...ஊர் பக்கமாக நகை சுத்தம் செய்து தரப்படும் என்று கால் நடையாக வரும் சிலரை சொல்லலாம்..
பழைய நகையை கொடுத்தால் அவர்கள் எதோ கெமிகலில் போட்டு கண் முன்னே கழுவுவார்கள்  நகைகள் பளிச்சென்று ஆகி விடும்.
ஆனால் அவர்கள் கழுவின தண்ணீரை கீழே ஊதாமல் எச்சரிக்கையாக எடுத்து செல்வார்கள் அதில் தங்கத்தை அறித்தெடுக்கும் ராசயணம் கலந்து இருக்கும் அந்த தண்ணீரின் அடியில் கரைக்க பட்ட தங்க தூள் கிடைக்கும். இப்படி பல வீடு சென்று நகையை பளிச்சாக்கி வந்த மீதியை சேகரித்தால் கணிசமான தங்கம் சேரும்.
இவர்கள் நூதனம் ஆச்ரய பட வைக்கிறது அல்லவா....
இனி சொல்ல போகும் சில குட்டி கதைகள் உங்களை மேலும் ஆச்ரய பட வைக்கும்.
வாருங்கள்... புத்திசாலி தனமான சில சின்ன சின்ன க்ரைம்களை பார்க்கலாம்.

🔎 நாம் பொருள் வாங்க பயன் படுத்தும் flip kart இன் வரலாற்றில் மறக்க முடியாத கதை இது.
ஹைதராபாத்தில் ஒரு 32 வயது இளைஞன் அவன்...
Flip kart இல் ஒரு பொருளை ஆர்டர் செய்து இருந்தான். அந்த பொருள் கிடைக்க பெற்றதும்  அடுத்த நாள் அதில் குறை இருக்கிறது என்று பொருளை கேன்சல் செய்தான். பொருளை flip kart பிரதிநிதி இடம் ரிட்டர்ன் செய்தான்.
ஆஹா இன்றய ஆபரேஷன் சக்ஸஸ் என்று நினைத்து கொண்டான். கடந்த சில மாதத்தில் பல பொருளை வாபஸ் செய்து இருந்தான். தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க பக்கத்து வீட்டு காரர் பெயரில் ,அம்மா பெயரில் ,அப்பா பெயரில், நண்பன் பெயரில் என மாற்றி மாற்றி ஆர்டர் செய்வான்... மற்றும் ரிட்டர்ன் ஆப்ஷனுக்கு பயன் படுத்த பல பேங்க் அக்கவுண்ட் களை பயன் படுத்தி வந்தான்.
அவன் செய்து வந்த செயலில் உள்ள நூதனம் என்ன தெரியுமா ???
அவன் ரிட்டர்ன் அனுப்பும் பொருள் எதுவுமே பிலிப் கார்ட் இவனுக்கு கொடுத்த பொருள் அல்ல...அதை போலவே இருக்கும் போலி.
 ஒரிஜினல் பொருளை வாங்கி கொண்டு ரிட்டர்ன் கொடுக்கும் போது அதை போலவே போலி தயாரித்து கொடுத்திருந்தான் அவன் .அதில் சீரியல் நம்பர் கூட ஒத்து போனதாம்.
அவனை பிடித்த போது மொத்தம் 200 பர்சேஸ் செய்து இருந்தான் மொத்தம் 20 லட்சம் சம்பாதித்து இருந்தான்.

🔎  அந்த நகரத்தின் மிக பெரிய ஸ்டார் ஹோட்டல் அது அதில் பல நாளாக தங்கி இருந்தான் சர்த்தக் பாப்ரா . அங்கு உள்ள அனைத்து வசதியும் அனுபவித்த படி.
யார் அந்த பாப்ரா ?
யூனியன் கவர்மென்டின் ரேங்க் ஆபீசர் ஒருவரின் சொந்த காரன் . அந்த ஆபீசரே போன் செய்து இவன் எத்தனை நாள் தங்கினாலும் அதற்கான பணத்தை தன்னிடம் வாங்கி கொள்ள சொல்லியும் அவன் எந்த வசதி கேட்டாலும் செய்து தர் சொல்லியும் சொல்லி இருந்தார். அவன் ஒரு மிக மிக முக்கியமான நபர் என்று சொல்லி இருந்தார்
'அவன் என்ன அவ்ளோ பெரிய அப்படக்கரா' என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அவன் பல நாள் ராஜ வாழ்கை க்கு பின் காலி பண்ணி கொண்டு போன பின் தான் தெரிந்தது அந்த போன் காலே இவன் தான் செய்தான் என்று..... அந்த ஆபிசருக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.. அவன் ஒரு புத்திசாலியான ஏமாற்று பேர் விழி என்று.
அவன் பிளாஷ் பேக்கில் ஒரு சின்ன ஹோட்டலில் ஏமாற்றும் போது போலீஸ் ஆல் பிடிக்க பட்டு எச்சரிக்க பட்டிருந்தான். வெளியே வந்ததும் பழி வாங்கும் உணர்ச்சியுடன் மேற் கண்ட செயலை ஒரு பெரிய ஹோட்டலில் செய்து முடித்தான்.

🔎 1987 ஆம் வருடம் அது...
போலீஸ் க்கு அந்த நகரத்தின் பேங்க் ஒன்றில் இருந்து போன் வந்தது.
போன் பண்ணியவன் ஒரு பேங்க் கொள்ளையன். அந்த பேங்க் இல் அனைவரையும் பனைய கைதி ஆக்கி வைத்திருப்பதாகவும் தனக்கு சில டிமாண்ட் இருபதாகவும் உடனே அங்கே வர வில்லை எனில் விபரீதம் நடக்கும் யென்றும்  எச்சரித்தான். தான் ஒரு கும்பல் என்று தெரிவித்தான்.
போலீஸ் தனது படை பரிவாரங்களுடன் உடனே அங்கே விரைந்தோடியது ...
அங்கே போய் பார்த்தால் பேங்க் வழக்கம் போல மிக அமைதியாக இயங்கி கொண்டிருந்தது.
குழம்பி போன போலீஸ் மீண்டும் ஸ்டேஷன் திரும்பிய போது தான் தெரிந்தது.
போலீசை இந்த பேங்க் அனுப்பி விட்டு லாப் சிங் என்பவன் தனது கூட்டாலிகளுடன் அங்கே பக்கத்தில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஐ தடை ஏதும் இல்லாமல் கொள்ளை அடித்து சென்று இருந்தான்.

🔎  அதே 1987 ஆம் வருடம் ... ஆனால் வேறு ஒரு இடத்தில வேறு ஒரு சம்பவம் இது அதை விட நூதனம்.
அரவிந்த் இனாம்தார் என்கிற காவல் துறை அதிகாரிக்கு ஒரு போன் கால் வந்தது . ஓபேரா ஹவுசில் சில அசம்பாவிதம் நடக்கிறது உடனே வாங்க.
அரவிந்த் அரக்க பரக்க கிளம்பினார் காரணம் ஒபேரா ஹூவுஸ் என்பது அந்த நகரத்திலேயே பெரிய பெரிய நகை கடைகள் கொண்ட காம்ப்ளெக்ஸ்.
அங்கே சென்ற போது ஆச்சர்ய்ய பட்டார் காரணம் அங்கே இதற்க்கு முன்பே CBI குவிக்க பட்டிருந்தது ..இந்த CBI எதுக்கு வந்து இருக்கு என ஆராய்ந்த போது அங்கே CBI .."Tribhovandas Bhimji Zhaveri" என்ற புகழ் பெற்ற நகை கடையில் ரெய்டு நடத்தி கொண்டிருந்தது தெரிந்தது.
வேலை ஆட்கள் ரெய்ட் முடியும் வரை யாரும் உள்ளே வர கூடாது என்று கதவுகள் சாத்த பட்டு இருந்தது.
கொஞ்ச நேரம் காத்திருப்பிற்கு  பின் இரு விசித்திரம் காண கிடைத்தது அந்த சிபிஐ குழுவின் தலைவரை காண வில்லை.. நீண்ட நேரமாய். அங்கே என்ன நடந்தது என்று புரிந்த போது அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கி போனார்கள்.

அந்த டீமில் யாருமே சிபிஐ கிடையாது இதில் விசித்திரத்திலும் விசித்திரம்  என்ன வென்றால் அது அவர்களுக்கே தெரியாது .
அவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு தான் "Dynamic Graduates for Intelligence Officers Post and Security Officers Post".  என்ற வரிகளுடன் சிபிஐ இல் ஆள் தேவை என்று பத்திரிக்கை விளம்பரம் பார்த்து ஒரு ஹோட்டலில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு 25 பேர் வெற்றி பெற்றிருந்தார்கள் ..
" நீங்கள் சிபிஐ இல் இணைகிறீர்கள் நமது முதல் டாஸ்க் ஒரு நகை கடை க்கு நாம் ரைட் செல்ல வேண்டும் "
என்று  அவர்கள் சொல்ல பட்டார்கள் . தாங்கள் இப்போது சிபிஐ இல் வேலை செய்கிறோம் என்று நம்பி கொண்டு (இதில் சில பேர் தாங்கள் செய்து வந்த அரசு வேலை எல்லாம் கூட ராஜினாமா செய்து விட்டு வந்தவர்கள் ) ரெய்ட் போன போது அந்த மாஸ்டர் மைண்ட் குழு தலைவன் மோகன் சிங் என்பவன்
நகைகளை ஒரு பையில் அள்ளி போட்டு கொண்டு இதோ பக்கத்து கடைக்கு போயிட்டு வந்துடறன் என்று சொல்லி கிளம்பியவன் தான் அதன் பின் திரும்ப வில்லை.

🔎  அடுத்தது இந்த கதையை பாருங்கள்....
மும்பை துறை முகத்தில் ஒரு நாள் ஒரு விலை உயர்ந்த  கண்சைன்மண்ட்  வந்து இறங்கியது . ஒரு புத்திசாலி கேங்கின் ஆட்கள் ஒரு சிறு காரியம் செய்தார்கள் அந்த கான்சைன்மெண்ட் இன் பெயரை மட்டும் கொஞ்சம் மாற்றி விட்டார்கள்.
பிறகு அந்த ஒரிஜினல் பெயரை தேடி தேடி அலுத்து போன அதிகாரிகள் அந்த பேக்கேஜ் ஐ மிஸ்ஸிங் என அறிவித்தனர் ...
அந்த பேக்கேஜிற்கான இம்போர்ட்டர் அதிருப்தி ஆகி கடைசியில் இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணி 100 சத தொகை யை பெற்றார்.
அதன் பின் அந்த புத்திசாலி கும்பலின் ஆட்கள் அந்த இம்போர்டரை  அணுகி சரக்கு பத்திரமா இருக்கு ஆனா ஒரு டீல் அந்த  சரக்கை பாதி விலைக்கு தர முடியுமா என்று கேட்டார் . ஏற்கனவே முழு தொகை பெற்று விட்ட தால் இப்போ ஒரு முறை பாதி விலைக்கு விற்க கசக்குமா என்ன உடனே ஓகே சொன்னார் அவர்.
அப்படி புத்திசாலி தனமாக  செயல் பட்ட கேங்க் யாருடையது ? அந்த தலைவன் யார் தெரியுமா? அவன் தான் பாம்பே வின் புகழ் பெற்ற தாதா ... தாவூத் இப்ராஹிம்.

                                      ✴                ✴                ✴                  ✴

என்ன நண்பர்களே குற்றவாளிகளின் ஐன்ஸ்டைன் லெவல் மூளை யை பார்த்து ஆச்சர்ய படாமல் இருக்க முடியல இல்ல.
சரி... மேற்கண்ட குற்றவாளிகளின் செயல்கள் அவர்கள் குற்றவாளிகள் என்பதை தாண்டி ஏதோ ஒரு வகையில் நம்மை ரசிக்க வைக்கிறது.

ஆனால் இனி நான் சொல்ல போகும் குற்றவாளிகள் கொஞ்சம் வேற ரகம். உங்களால் அவர்களை ரசிக்க முடியாது.
மனித தன்மைஅற்ற ... கொடூர ... குரூர ..சேடிஸ்ட் களுக்கு வரலாற்றில் பஞ்சம் இல்லை.
நமது கட்டுரை இங்கே கொஞ்சம் கியர் மாற்றபடுகிறது..
அடுத்த பார்ட்டிற்கு அநேகமாக U சர்டிபிகேட்டை பிடுங்கி கொண்டு A சர்டிபிகேட் கொடுக்க வேண்டி இருக்கும்.
எனவே அடுத்த பார்ட்டிற்கு.............

கொஞ்சம் மனோதிடதுடன் வாருங்கள்.


குற்றங்கள் தொடரும்.................


                                       ☸               ☸                ☸


குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்

(பாகம் 9 : குரூர டாக்டர்  )

கட்டுரையின் இந்த பாகத்தை பொறுத்த வரை குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள் என்பதை விட குற்றவாளிகளின் கொடூர கதைகள் என்ற தலைப்பு அதிகம் பொருந்தும்.
வரலாற்றில் டிசைன் டிசைனாக சைக்கோக்கள் , சாடிஸ்ட்கள், கொடூரர்கள் இவர்களுக்கு பஞ்சம் இல்லை..
ஹிட்லர், செங்கிஸ்கான்,கலிகுலா, இவான், ஜாக் தி ரிப்பர் , டெட்பண்டி, சிக்காடிலோ,  நீரோ, இப்படி அது பெரிய லிஸ்ட் (மேற்கண்டவர்கள் பற்றி நீங்கள் அனைவரும் போதும் போதும் என்கிற அளவு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன் எனவே அவர்களில் யாரை பற்றியும் நான் கட்டுரையில் சொல்ல போவதில்லை என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன் )

 கொடூர கொலைகள் சித்தரவதைகள் செய்த பல பேர் தாங்கள் ஒரு குற்றவாளிகள் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தான் கொடுமை .
உதாரணமாக இன்று நாம் பார்க்க இருக்கும் கொடூர டாக்டர் Josef mengele யை சொல்லலாம்.
ஹிட்லரின் புகழ் பெற்ற சித்ரவதை கூடமான " Auschwitz concentration camp" இல் angel of death என்ற பெயரில் அறிய பட்ட  ஒரு குரூர டாக்டர் இவன்.

ஹிட்லரின் புகழ் பெற்ற கொல்லும் தளமான கேஸ் சேம்பர் ஐ பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் அல்லவா அங்கே இவர் தான் பொறுப்பதிகாரி.
அதாவது பொதுவாக யூத அடிமைகளை மற்றும் கைதிகளை கொத்து கொத்தாக பிடித்து வருவான் ஹிட்லர் அதில் அடிமை வேலைக்கு பணி ஆட்களாக தேர்ந்தெடுக்க உடல் ஆரோக்கியமும் பலமும் உள்ளவர்களை தனியாக பிரித்து கொள்வார்கள் . மொத்த கூட்டத்தில் கால் பங்கு ஆள் தான் அதில் வேலை க்கு தேறுவார்கள் மீதி முக்கால் பங்கு அதாவது பெண்கள்,குழந்தைகள்
ஊனமுற்றோர் , நோயாளிகள், நோஞ்சான்கள் இவர்கள் எல்லாம் தகுதி அற்றவர்கள்.
அவர்கள் உடனடியாக கேஸ் சேம்பர் க்கு அனுப்ப பட்டு விஷ வாயு செலுத்த பட்டு கொல்ல படுவார்கள்.
(அந்த தேர்ந்தெடுக்க பட்டவர்கள் தங்கள் சக்தி தீரும் வரை வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டே இருந்து முடியாமல் கீழே விழும் போது சுட்டு கொல்ல படுவார்கள் என்பது வேறு விஷயம்)

அந்த கேஸ் சேம்பருக்கு யாரை அனுப்ப வேண்டும் ..யாரை அனுப்ப கூடாது என தகுதி பரிசீலித்து தேர்ந்தெடுக்கும் அதிகாரி தான் அந்த Josef mengele .
சுவற்றில் இரு 5 அடி உயரத்தில் கோடு கிழித்து விட்டு அந்த கோட்டில் தலை எட்டாத குழந்தைகள் நேரே கேஸ் செம்பருக்கு போங்க என்று அனுப்பி வைப்பது அவனுடைய இயல்பாக இருந்தது.
வீட்டில் ரேடியோ போன்ற பொருட்கள் கெட்டு போனால் இனி உதவாது என்று தூக்கி போட்டால் சிறுவர்கள் அதை தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்டு நோண்டுவதை பார்த்து இருக்கிறீர்களா. அப்படி அங்கே சாகடிக்க தேர்ந்தெடுத்தவர்களை சாகடிக்கும் முன் தனது ஆய்வுக்கு ஆராய்ச்சிக்கு பயன் படுத்துவான் ஜோசப்.
இடையில் அவர்கள் இறந்தால் தூக்கி வீசி விடுவான்.
அந்த ஆய்வுகள் எல்லாமே கொடூரமானவை கொஞ்சமும் மனித தனம் அற்றவை.

ஒரு முறை தனது 11 வயது குழந்தையை பிரிய மாட்டேன் என்று ஆடம் பிடித்தாள் ஒரு தாய் அந்த தாய் மகள் இருவரையும் ஈவு இரக்கம் இல்லாமல் உடனே சுட்டு கொன்றான் ஜோசப்.
ஒரு முறை கும்பலில் நோய் தொற்று இருக்கும் என சந்தேகிதான் எனவே உடனே 600 பேரை ஒரே முறை கேஸ் சேம்பர் அனுப்பி கொன்றான்.

இந்த மேலே சொன்ன இரண்டு சம்பவங்கள் தான் அநேகமாக அவனிடம் சொல்ல முடிய கூடிய மிக குறைந்த குரூர சம்பவம் .
மற்ற படி அவன் செய்தது எல்லாமே எக்ஸ்ட்ரிம்.
பொதுவாகவே மனித உயிர் அவனுக்கு எந்த அளவிலும் ஒரு பொருட்டே இல்லை. உயிரை எடுப்பது அவனுக்கு காபி சாப்பிடுவதை விட மிக இயல்பான ஒன்று.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

ஒரு முறை அவன் தனது நண்பர்களிடம் அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றான். அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம். அதாவது அவர்கள் பிடித்து வைத்திருக்கும் ஒரு சிறுவனுக்கு நுரையீரல் தொற்று இருக்கு என்றும் இல்லை என்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம். இதில் அவனுக்கு நோய் தொற்று இல்லை என்பது ஜோசப் வாதம்.
ஒரு முடிவுக்கு வராத நீண்ட வாதமாக அது போனதால் . இடையில் எழுந்த ஜோசப் " எக்ஸ்கியூஸ் மீ கய்ஸ் பேசிட்டு இருங்க நான் இதோ வந்துட்றன்" என்று சொல்லி விட்டு சென்றான்.
பிறகு கொஞ்ச நேர இடைவெளிக்கு பின் வந்த ஜோசப் அவர்களிடம் " சாரி பிரண்ட்ஸ் நான் கூறிய கருத்து தவறு தான் ஒத்து கொள்கிறேன் அவனுக்கு நோய் தொற்று  ஏதும் இல்லை  "
என்றான்.
"இப்போ மட்டும் எப்படி ஒத்துகிறீங்க " என்று கேட்டதற்கு
"இப்ப தான் அவனை கொன்று அவன் நுரையீரலை அறுத்து பார்த்து பரிசோதித்து விட்டு வறேன் " என்றான்.

அடிமைகள் மேல் கொஞ்சமும் மனித தன்மை அற்ற பல சோதனைகளை செய்தான் ஜோசப் உதாரணமாக அவர்களை உயிரோடு மயக்க மருந்து ஏதும் கொடுக்காமல் வைத்து அவர்கள் உடலை அறுத்து அறுவை சிகிச்சை செய்வான். உடல் உறுப்புகளை வெட்டி எடுப்பான்.
கை கால் களை துண்டித்து கொஞ்ச கொஞ்சமாக அவர்களை சித்ரவதை செய்வான். தனது ஆய்வுக்கு எந்த வயதில் எந்த உயரத்தில் எந்த மாதிரி அடிமை தேவை என்பதை ஜோசப் ஆர்டர் செய்தானேயானால் அவன் அறுத்து மகிழ அதற்க்கு பொருத்தமான அடிமைகள் அவனுக்கு அனுப்பி வைக்க படும்.

அடிமைகளை தொடர்ச்சியாக ஆய்வுக்கு பயன் படுத்தி வந்தவன் குறிப்பாக குள்ளர்கள் மற்றும் உடல் ஊன முற்றவர்களை கொடூர ஆய்வுக்கு பயன் படுத்துவது அவனுக்கு பிடித்து இருந்தது.
கால போக்கில் அவன் டேஸ்ட் மாறி அவனை மிக கவர்ந்தது இரட்டை குழந்தைகள்.
பல பொம்மைகளை கொண்டு விளையாடும் குழந்தைக்கு பேவரட் பொம்மை ஒன்று இருக்கும் இல்லையா அப்படி ஜோசப்புக்கு இரட்டை குழந்தைகள்னா உயிர். அதாவது உயிரை எடுக்க உயிர். அவர்கள் உடலில் தனது மனதில் தோன்றிய அத்தனை குரூர பரிசோதனைகளையும் செய்து மகிழ்ந்தான்.

குறிப்பாக எல்லா குழந்தைகளுக்குமே அவர்களின் இமைகள் மற்றும் பிறப்புறுப்பை முதலில் துண்டித்து எரிந்து விடுவான்.
(அறுவைக்கு  மயக்கம் மருந்து பயன் படுத்தும் பழக்கம் அவனுக்கு இல்லை.)
பிறகு அவர்களின் கண்ணில் ராசாயனங்களை பீச்சி கண்ணின் நிறம் மாறுகிறதா என சோதிப்பான்.
அவர்களின் கை கால் களை துண்டு துண்டாக வெட்டி விட்டு ட்ரீட்மெண்ட் மூலமாக மீண்டும் வளருகிறதா என்று சோதிப்பான்.
இரட்டை குழந்தைகளை ஆறாய்வதின் மூலம் பிற்காலத்தில் ஜெர்மன் மக்களை அதிக இரட்டை குழந்தைகள் பெற வைத்து ஜெர்மன் மக்கள் தொகையை விரைவாக பெருக்க முடியுமா என்று யோசித்தான்.
பொதுவாக இரட்டையர்களில் ஒருவர் இறந்து விட்டால் உடனே அடுத்த ஆளுக்கு இதயத்தில் குளோரோபாம் ஊசியை நேரடியாக ஏற்றி கொன்று விடுவான்.

பொதுவாக ஒருவர் உடலில் உள்ள ரத்தத்தை அடுத்தவர்கள் உடலில் மாற்றி மாற்றி ஏற்றி பரிசோதித்தான். அதில் பல குழந்தைகள் பிழைக்க வில்லை என்பதை கண்டான். ஒரு முறை ஒரு குழந்தை நோய் தொற்றில்  இறந்து விட மொத்தம் 14 குழந்தைகளை இதயத்தில் குளோரோபாம் செலுத்தி கொன்றான். பிறகு விடிய விடிய 14 பேரையும் போஸ்டமாடம் செய்து எண்ணத்தையோ ஆராயுந்து கொண்டிருந்தான்.
ஆபரேஷன் செய்து ஆன் குழந்தையை பெண்ணாகவும் பெண் குழந்தையை ஆணாகவும் மாற்ற முடியுமா ? என்பதை அவன் அடிக்கடி பரிசோதித்து வந்தான்.

அங்கே அவனிடம் சிக்கி இறந்தது பல்லாயிர கணக்கான குழந்தைகளில் உயிர் தப்பியது மிக சிலரே அவர்கள் பிற்காலத்தில் வளர்ந்து பல கதைகளை சொன்னார்கள்.
குழந்தைகளுக்கு அவ்வபோது சுவீட் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பானாம் அந்த கொடூரன்.

ஒரு முறை அங்கே வேலை செய்த வேலை காரி தனது அனுபத்தை பகிர்ந்து கொண்டாள்.. அவள் சொன்ன அந்த ஒரு அனுபவம் போதும் கேம்பில் எந்த மாதிரி கொடூர சூழல் இருந்தது என்பதை உலகிற்கு காட்ட.
இவள் அங்கே வேலைக்கு சென்ற போது ஒரு நாள்...
ஒரு பெண்மணி நீண்ட நேரமாய் டாக்டர் காலில் விழுந்து எதுக்கோ கெஞ்சி கொண்டு இருந்தாளாம். அநேகமாய் உயிர் பிச்சையாய் இருக்கும் என்று அவள் நினைத்தாள்.
காரணம் நாம் தெருவில் நிற்கும் போது பிச்சைக்காரர்கள் பிச்சை கேட்டு நாம் கண்டுக்காமல் போவதை போல கேம்பில் உயிர் பிச்சை என்பது சாதாரணம்.

ஆனால் அவள் கேட்பதை கூர்ந்து கவனித்து கேட்ட பணி பெண் அதிர்ந்து இருக்கிறாள் .காரணம் அந்த தாய் கெஞ்சி கொண்டிருந்தது தனது குழந்தைகளை கொன்று விடுமாறு.
ஒரு தாயே தன் குழந்தையை கொல்ல ஏன் இப்படி கெஞ்சுகிறாள் என்று கவனித்த போது..
அவருடைய இரட்டை குழந்தைகள் இருவரையும் பிடித்து அவர்களை அறுவை மூலம் ஒட்டி பிறந்த இரட்டையாக மாற்ற முடியுமா என்று சோதிக்க அந்த டாக்டர் இருவர் முதுகு பகுதி சதைகளை பிய்த்து விட்டு இரண்டு முதுகையும் ஒன்றாக சேர்த்து வைத்து தைத்து இருந்தான்.
அக்குழந்தைகள் பல நாளாக  சாப்பாடு தூக்கம் இல்லாமல் இரவு பகலாக நாள் முழுதும் தொடர்ச்சியான அழுது  கொண்டே இருந்தன. அந்த தொடர் அழுகையை தாங்க முடியாமல் தான் அத்தாய் தனது குழந்தைகளை கொன்று விடுமாறு மன்றாடி கொண்டிருந்தாள்.

ஒரு தாயே தனது குழந்தையை கொல்லும் படி கெஞ்சி கேட்க வைத்த அந்த மனித பிறவிக்கு தகுதி அற்ற டாக்டரை யாரும் அவன் குற்றத்திற்கான தண்டனையை கொடுக்க வில்லை.
போர் காலத்திற்கு ரஷ்யாவால் கைது செய்ய பட்டு அமெரிக்காவால் போர் குற்றவாளியாக எடுத்து செல்ல பட்டான் ஆனால் போர் குற்றவாளி லிஸ்ட் இல் இவன் பெயர் இல்லை. கையில் அவர்களின் குறிபிட்ட டாட்டூ இல்லை.
என்று விடுதலை செய்ய பட்டான்.
பிறகு தனது பெயரை "fritz ullman " என்று போலி ஆதாரங்கள் கொடுத்து தப்பி வந்தான்.
இடையில் லைசென்ஸ் இல்லாத நர்சிங் ஹாம் நடத்தி சட்ட விரோத கரு கலைப்பு செய்து பிடிபட்டான்.  (கைது பண்ண வேண்டிய விஷயத்துக்கு எல்லாம் விட்டுட்டு இதுக்கு கைதாகி இருக்கான் பாருங்க )அங்கே ஜட்ஜுக்கு கணிசமான தொகை லஞ்சம் கொடுத்து தப்பித்தான்.
பிறகு ஒரு நாள் 1979 இல் நீச்சல் அடித்து கொண்டிருந்த  போது வலிப்பு வந்து செத்து போனான்.

தனது பணியை சிறப்பாக செய்ததற்கு பரிசு எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்ம டாக்டர்...
உலகில் இப்படி கௌரவிக்க பட்ட குற்றவாளிகள் எத்தனையோ ......

                                   ✴                  ✴                 ✴                ✴

அந்த டாக்டரை நினைத்தால் அருவெறுபாக வெறுப்பாக இருக்கிறது அல்லவா.
உஷார்...அடுத்த பாகத்தில் நாம் பார்க்க இருக்கும் ஒரு குற்றவாளி..... இந்த டாக்டரை விட அதிக அறுவெறுப்பானவன்.

குற்றங்கள் தொடரும்.................



                                 ☸                  ☸                   ☸      



குற்றவாளிகளின்  சுவாரஷ்ய கதைகள்

(பாகம் 10 )

இந்த தொடரில் நாம் சின்ன 10 ரூபாய் திருடன் முதல் பெரிய வைர கொள்ளை வரை ,சாதா வன்முறையாளன் முதல் சைக்கோ கொலையாளி வரை பல வகை கிரிமினல்களின் கதைகளை பற்றி அலசி உள்ளோம் அதில் சிலது சுவாரஷ்யமானது , புத்திசாலித்தனமானது சிலது கொடூரமானது , மனித தன்மை அற்றது.
இம்முறை நாம் பார்க்க இருப்பதும் கொடூர லிஸ்ட் ஆசாமி தான்.

(இங்கேயே A சர்டிபிகேட் போட்டு விட வேண்டியது எனது கடமை )

சைக்கோ கொலையாளி என்றால் நாம் ஒரு கொடூர மனிதனை ...பார்க்க ஆஜானுபாகுவானவனை அல்லது முகத்தில் முரட்டு தனமானவனை கற்பனை செய்து கொள்வது தவறு என்று அறிவோம். (நம்ம ஊர் சைக்கோகளை பற்றி நான் எழுதிய மனம் எனும் மாய பிசாசு கட்டுரையில் இதை நான் குறிப்பிட்டு இருந்தது நினைவு இருக்கலாம் )
பிடி பட்ட பல சைக்கோ ஓடிசல் தேகம் பால் வடியும் முகம் என்று இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
ஆனால் அதே சமயம்  சைக்கோவை நன்கு வளர்ந்த ஆள் என்கிற ரீதியில் தான் நாம் கற்பனை செய்வோம். அது மிக பெரிய தவறு சிறுவர்கள் கூட சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்று நிரூபித்தவன் தான்.
Edmund kemper .இவன் co-ed killer என்ற பெயரில் அறிய பட்டவன்.

கலிபோர்னியாவில் 1948 இல் பிறந்த இவன் சிறு வயதிலேயே மிக புத்திசாலியான குழந்தை என்ற பெயர் வாங்கியவன். ஆனால் அந்த புத்திசாலித்தனத்தை அந்த சிறுவன் தனக்குள் ஒளிந்துள்ள சைக்கோ மிருகத்துக்கு ஊட்டமளிக்க பயன் படுத்தினான் என்பது தான் வருத்தமான விஷயம்.

சைக்கோகளில் பாதிக்கு மேற்பட்ட சைக்கோகளின் சிறுவயது கொடுமையான தாய் தந்தை அல்லது புறக்கணிக்க பட்ட சூழல் அல்லது தாழ்வு மனப்பான்மை ,கைவிட பட்ட நிலை யால் உருவானது .
எட்மண்டும் இதற்க்கு விதி விலக்கு அல்ல கணவனிடம் டைவர்ஸ் பெற்றுவிட்ட ஒரு குடிகார தாயால் மிக மோசமாக வளர்க்க பட்டான் எட்மெண்ட். அடிக்கடி தாயால் இருட்டு அறைக்குள் போட்டு பூட்டி வைக்க பட்டான். மோசமான படிப்பினை காரணமாக கீழ்த்தரமான ரசனைகளை கொண்டவனாக மாறினான். சிறுவனாக இருக்கும் போதே சின்ன சின்ன விலங்குகளை பிடித்து வைத்து கொடூரமாக சித்ரவதை செய்வது அவனுக்கு மிக இன்பத்தை அளித்த ஒரு விஷயம்.
குறிப்பாக காமத்தை மிக தவறான முறையில் அவன் மனம் உள் வாங்க தொடங்கியது.

தாயின் கொடுமை தாங்க முடியாமல் 14
வயதில் வீட்டை விட்டு ஓடினான். தனது தந்தையை தேடினான். கண்டும் பிடித்தான் ஆஹா இனி தந்தையுடன் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தான் ஆனால் அவனது தந்தை
அவனை ஏற்று கொள்ள வில்லை.
 நிராகரித்து தந்தையால் மீண்டும் துரத்தி விட பட்டான்.
அதன் பிறகு தனியே வாழும் தனது பாட்டி மற்றும் தாத்தாவை நாடினான் அவர்கள் இவனை சேர்த்து கொண்டார்கள். எட்மண்ட் நிம்மதி அடைந்தான்.

ஆனால் அவன் நிம்மதி நிலைக்க வில்லை.. அவன் பாட்டியின் ஒழுக்கம் மற்றும் கட்டுபாடு இவனை மிகவும் வெறுப்புக்கு ஆளாக்கின. மீண்டும் தனது சுதந்திரம் பறி போனதை உணர்ந்தான். தன்னை எதற்கெடுத்தாலும் கண்டிக்கும் அந்த கிழவி அவன் தாயின் மறு உருவமாக வே தெரிந்தாள்.
 அப்போது தான் அவனுக்கு இவளை கொலை பண்ணிட்டா என்ன என்று ஒரு எண்ணம் வந்தது. அந்த எண்ணம் கொடுக்கும் குறுகுறுப்பு அவனுக்கு மிக பிடித்து இருந்தது.
அதாவது நமக்கு பகல் கனவு வரும் இல்லையா ...ச்ச நான் ஒரு ஹீரோ வா இருந்தா எப்படி இருக்கும்..என்றோ...
நான் MLA ஆனா எப்படி இருக்கும் என்றோ ஒருவன் நினைத்து கற்பனை செய்து இன்புறுவதை போல ...
இந்த கிழவியை அப்படியே நிக்க வச்சி ஷூட் பண்ணா எப்படி இருக்கும் என்ற குறுகுறுப்பு அவனை ஆட்கொண்டது.

பல நாள் எண்ணங்கள் ஒருநாள் செயலாகும், பல நாள் செயல்கள் ஒரு நாள் பழக்கமாகும் ,பல நாள் பழக்கங்கள் உங்கள் குணாதிசியமாக மாறும் என்ற கூற்று நம்மை விட சைக்கோகளுக்கு அதிகம் பொருந்தும்.
எனவே அவனுக்குள் ஒளிந்திருந்த சைக்கோ மிருகம் 15 வயதில் வெளிப்பட்டது. ஒருநாள் தனது எண்ணத்தை செயலாக்கினான் .தனது பாட்டியை தனது ஆசை படி தலையிலேயே சுட்டு கொன்றான். (பிற்பாடு பிடிபட்ட போது "ஏன் கொன்றாய் "என்று போலீஸ் கேட்டதற்கு " சுட்டா எப்படி இருக்கும் னு பார்க்க ஆசையாய் இருந்தது அதான் சுட்டேன் " என்று மிக நேர்மையாக ஒத்து கொண்டான்.)

'ஆ..மா..... பாட்டி சுட்டுட்டா தாத்தா வந்து பார்த்தா திட்டுவாரே ...என்ன பண்ணலாம் ???
சரி அவரையும் சுட்டுட்டா போச்சி... '
எனவே ...
தனது தாத்தாவையும் பாட்டியுடன் துணைக்கு அனுப்பி வைத்தான் எட்மெண்ட்.

இதன் பின் அந்த கொடூர சிறுவன் தனது செயலுக்காக கைது செய்ய பட்டான் தண்டனை கொடுக்கும் அளவு வயது இல்லை என்பதால்  சிறுவர் சீர்திருத்தம் ஒன்றில் வைக்க பட்டான்.
5 ஆண்டுகள் சிகிச்சை மற்றும் கவனிப்புக்கு பின் 1969 இல் திருந்தி வாழ அவன் தாயிடம் ஒப்படைக்க பட்டான்.

ஆனால் ........

அவன் மனதுக்குள் இருக்கும் மிருகம் சாக வில்லை மாறாக முன்பை விட அதிக ஊட்டம் கொடுத்து அதை வளர்த்திருந்தான் என்பதை யாரும் அறிய வில்லை.
1972 இல் அந்த மிருகம் தனது கோர பற்களுடன் வெளியே வந்தது.
ஹைவேவில் சென்று நின்று கொண்டு அங்கே வரும் மாணவிகளில் ஒருத்தியை கடத்தி கொண்டு போய் ஊருக்கு ஒதுக்கு புறமாக வைத்து கொடூரமாக சித்ரவதை செய்து கற்பழித்து கொன்றான். இந்த வேட்டை அந்த மிருகத்துக்கு தனி உற்சாகம் கொடுத்து விட ... மொத்தம் 6 மாணவிகள் அடுதடுத்து அவனுக்கு இரை ஆனார்கள்.

அப்போது தான் தனக்குள் ஒளிந்திருந்த மிருகத்தின் இன்னோரு கோர முகம் அவனுக்கே தெரிந்தது . அதாவது "நெக்ரோபிலியாக் " என படும் பிணத்துடன் காதல் கொள்ளும் கொடூர மன நோய் அவனுக்கு இருந்தது.
முழுமையாக இருக்கும் பெண்ணை விட தலை வேறு உடல் வேறாக இருக்கும்
பெண் தான் அவனை அதிகம் கவர்ந்தாள். தனது அபார்ட்மென்டில் வெட்ட பட்ட தலையை கொண்டு வந்து வைத்து கொண்டு அதனுடன் கொஞ்சி பேசி விளையாடி மகிழ் தொடங்கினான்.

பிறகு ...
1973 இல் தனது நீண்ட நாள் கனவான ஒரு விஷயத்தையும் செய்தான் அதாவது தன் தாயை கொன்றால் எப்படி இருக்கும் என்ற குறுகுறுப்பு அவனை ஆட்கொள்ள தொடங்கியது.
தனது மனத்திடம் அதிகம் போராடாமல் அதிகம் பேரம் எல்லாம் பேசாமல் உடனே செயலாற்றினான் தனது தாயை ஒரு good Friday அன்று சுத்தியால் அடித்து மண்டையை உடைத்து கொன்றான்.
கூடவே இலவச இணைப்பாக அவள் தோழி ஒருத்தியை கழுத்தை நெருக்கியும் கொன்றான்..
பிறகு மிக அருவருக்க தக்க வகையில் தாயின் தலையை வெட்டி எடுத்து இதற்க்கு முன் வெட்ட பட்ட பெண்கள் தலையை பயன்படுத்தியதை போலவே பயன் படுத்தினான் பின்...
போலீசுக்கு போன் பண்ணி அவனே நடந்ததை விளக்கமாக சொன்னான்.

அவன் சொன்னதை போனில் கேட்ட
போலீஸ் முதலில் நம்ப மறுத்து பிறகு உண்மை என்பதை அறிந்து திடுக்கிட்டு வந்து கைது செய்து கொண்டு போனது. அவன் மேல் 8 கொடூர கொலை வழக்கு போடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் U.S இல் இல் மரண தண்டனை தடை செய்ய பட்டிருந்ததால் ஆயுள் தண்டனை வழங்க பட்டது.
பொதுவாக உண்மைகளை நேர்மையாக ஒத்து கொள்ளும் பழக்கம் இருந்தது அவனிடம்.
சிறையில் கைதிகளை பேட்டி எடுக்க வந்த நிருபர் ஒருவர் அவனிடம் "உன் தாயை கொன்ற பிறகு வேறு பெண்களை பார்க்கும் போது உன் மனதில் என்ன ஓடும்" என்று கேட்க அதற்க்கு அவன்
" அவளிடம் பேச வேண்டும் பழக வேண்டும் என்று தோன்றும் கூடவே இன்னொரு மனம் இவள் தலை ஒரு குச்சியில் தொங்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும் " என்றான் நேர்மையாக.
அவன் பேட்டியை  பார்க்க ஆசையாக இருந்தால் ..1984 இல் நல்லா சோடா புட்டி போட்டு கொண்டு அவன் சொந்த கதையை அவனே சொல்லும் வீடியோ... அப்புறம் 1991 இல் கொடுத்த பேட்டி எல்லாம் you tube இல் உள்ளது தேடி பாருங்கள்.

பிற்காலத்தில் காமிக்ஸ்களில் இன்டர்நெட்டில் கதைகளில் இவனை வைத்து நிறைய கதைகள் எடுக்க பட்டது.
பிற்காலத்தில் 2008 இல் Kemper:  the co-ed killer என்ற திரைபடமும் அவனை வைத்து எடுக்க பட்டது.


                                        ✴                 ✴                  ✴                 ✴

பொதுவாக நிறைய வகை குற்றவாளிகளை வரலாறு பார்த்து இருக்கிறது.
குற்றங்களை குற்றவாளிகளை தடுப்பது உருவாகாமல் காப்பது மிக கடினமான ஒன்று என்றாலும் அதில் ஒரு விஷயம் மிக முக்கியமானது.....நமது கையில் இருப்பது.
அநேகமாக நமது இக்கட்டுரை தொடர் கொடுக்கும் ஒரு மெசேஜ் என்று கூட இதை வைத்து கொள்ளலாம்.

அதாவது எந்த ஒரு மனிதனின்  மொத்த
குணாதிசயமும் 90 சதம் அவனது 7 வயதுக்கு முன்பு நிர்ணயிக்க படுகிறது என்கிறார்கள்.
ஒருவனை முதல் 7 வயது வரை மிக சிறப்பானதை சொல்லி கொடுத்தால் போதும் அவன் 90 சதம் சிறந்தவனாக இருப்பான்.
அந்த மீதி 10 சதம் ???
நமது செயலுக்கு நாமே பொறுப்பு நமது மனம் நேற்று என்ன நினைத்தது அதுவாக தான் நாம் இன்று இருக்கின்றோம். இன்று நாம் நினைபது என்னவோ அதுவாக தான் எதிர்காலத்தில் இருக்க போகிறோம் என்ற உண்மையை உணர்ந்து மனதை நண்பனாக்கி கொண்டால் அந்த மீதி 10 சதத்தையும் வென்று எடுத்து வெற்றியாளனாக மாறலாம்.

(பரவா இல்லையே மெசேஜ் எல்லாம் சொல்ல தொடங்கிட்டேன்)

அடுத்த முறை வேறு தலைப்பில் வேறு கட்டுரையில் சந்திக்கிறேன்.

நண்பன்

ரா.பிரபு

-குற்றங்கள் முற்றும் -


   ☯      ☸       ☯       ☸        ☯       ☸

கட்டுரை குறித்த கருத்துகளுக்கு
வாட்ஸ் அப் எண் : 9841069466

  ☯      ☸       ☯       ☸        ☯       ☸
                   

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"