'Imax எனும் அசத்தல் தொழில்நுட்பம் "





'Imax எனும் அசத்தல் தொழில்நுட்பம்

ரா.பிரபு.

நிறைய ஆங்கில படங்களின் போஸ்டரில் அடியில் Imax என்று போட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அது என்ன அந்த imax என்பதை யோசித்து இருக்கிறீர்களா.
அது ஒரு அசத்தல் தொழில் நுட்பம். அந்த தொழில் என்ன ஏது என்பதை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.

Image maximum என்பதன் சுருக்கம் தான் இந்த imax .
நாம் சாதாரணமாக பார்க்கும் படத்திற்கும் இதற்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்டீர்களேயானால்....  எல்லாமே வித்யாசம் தான்.
ஒரு கருப்பு வெள்ளை படத்திற்கும் கலர் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விட அதிகம் வித்யாசம் என்று கூட சொல்லலாம்.

பீரங்கி குண்டுகளை பீரங்கியில் வைத்து தான் சுட முடியும்.... கைத்துப்பாகியில் அல்ல...
அது போல imax தொழில் நுட்பத்தில்.. imax கேமரா வை கொண்டு எடுக்க பட்ட படத்தை பார்க்க imax திரையில் தான் முடியும்.
அந்த திரை எந்த வகையில் நம்ம சாதா திரையில் இருந்து மாறுபட்டது ??
முதலில் அதன் பிரமாண்டம்.....குறைந்த பட்சமாக 16 மீட்டர் உயரம்...22 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட திரை இது (52 அடி உயரம் ...72 அடி அகலம் அதாவது கிட்ட தட்ட 6 மாடி கட்டிடதை அருகே நின்று பார்ப்பதை போன்றது )
குறைந்த பட்சம் என்று சொன்னதை கவனிக்க வேண்டும் காரணம் உலகில் மிக பெரிய imax திரை 98 அடி உயரம் (கிட்ட தட்ட 10 மாடி அளவு ) கொண்டது.
இவ்வளவு பெரிதை அன்னாந்து பார்த்து கொண்டு இருக்க முடியாது... அதனால் அந்த தியேட்டர்கள் தனி தன்மையுடன் அனைவரும் திரையை பார்க்கும் படி வடிவமைப்புடன் கட்ட பட்டு நன்றாக பார்க்கும் படி (6 மாடி கட்டிடத்தை அருகே நின்று பார்க்காமல் பக்கத்து பிலடிங் போய் 4 வது மாடி ஜன்னல் வழியே பார்ப்பதை போல ) வடிவமைக்க பட்டு இருக்கும்.
அடுத்ததாக அந்த திரையே நமது சாதாரண திரை போன்ற வடிவில் இல்லாமல் டூம் அமைப்புடம் வளைவாக
கட்ட பட்டு கிட்ட தட்ட நீங்கள் திரையால் சூழ பட்டு இருப்பதை போல வடிவமைக்க பட்டு பார்க்கும் இடத்தில எல்லாம் திரைதான் இருக்கு என்று சொல்லும் படி இருக்கும்.

இப்படி பட்டதை ஒளி பரப்பும் புரோஜக்டரும் ரீலும் சாமான்யமாக இருக்குமா என்ன ?? அதிலும் பிரமாண்டம் தான். சாதாரண ரீல் 35 mm என்று அழைப்பார்கள் காரணம் அதன் அகலம் 35 mm. மேலும் பார்க்க பிலிம் ரோல் நீட்டு வாட்டத்தில் இருந்தாலும் திரை நமக்கு கிடைமட்டமாக தான் இருக்கிறது என்பதால் போக்கஸ் இல் அதை கிடைமட்ட வடிவாக மாற்றி ஒளி பரப்புவர்கள் . மேலும் அது ஓடும் வேகம் வினாடிக்கு 24 பிரேம்கள்.
ஆனால் imax இன் பிலிம் ரோல்கள் 15 x 70 mm கொண்ட ரோல்கள் அவைகளை போகஸ் இல் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இதன் வேகம் வினாடிக்கு 48 பிரேம்கள். (நாம் சாதாரணமாக கேள்வி படும் 70 mm படம் என்பதுடன் இதை குழப்பி கொள்ள கூடாது இது 15 x 70 mm என்பது வேறு )
இதன் இமேஜ் சாதாரண பிலிமை விட 10 மடங்கு பெரிது என்று சொல்லலாம்.

இப்படி பட்டதை ஒளி பரப்ப சாதாரண ப்ரொஜெக்டர் வேலைக்கு ஆகாது. இதற்கென உள்ள சிறப்பு ப்ரொஜெக்டரால் தான் இது சாத்தியம்.
சாதா ப்ரொஜெக்டரில் பிலிம் மேலிருந்து கீழாக ஓடுவதை பார்த்து இருப்பீர்கள் இதில் படங்கள் இடம் இருந்து வலமாக ஓடும்..
மேலும் இதன் எடை கிட்ட தட்ட 2 ஆயிரம் கிலோ .
அப்புறம் இனொன்று சாதாரண பிலிமில் சைடில் ஆடியோ பதியும் ட்ராக் இருக்கும் ஆனால் இதில் ஆடியோ வை மொத்தமாக வேறாக ரெக்கார்டு பண்ணி தனியாக இணைப்பார்கள் . (ஓரளவு dts இல் இதை நாம் உணர்ந்து இருப்போம் )

இப்படி பட்ட படங்களை உண்டாகுவதில் இரண்டு தொழில் நுட்பம் உண்டு ஒன்று..
சாதா 35 mm ஐ imax கு தகுந்தாற் போல மாற்றுவது.
இனொன்று... உண்மையான imax கேமராவில் அதை பதிவு செய்வது.
அந்த உண்மையான imax கேமரா என்று சொன்னேனே அது பிரம்ம பிரயத்தனம் செய்து படம் எடுப்பதை போன்றது.
காரணம் அந்த கேமரா மொத்தம் 3 நிமிடம் தான் ஒடுமாம் அப்புறம் 20 நிமிடம் ஒய்வு கொடுக்கணுமாம் அது ரீலோட் ஆக.
ஓடும் போது செயின் சா... ஓடற மாதிரி சப்தம் கேட்குமாம் நடிகர்களே திசை திரும்புவார்களாம். அதே போல சாதா கேமரா வெறும் 18 கிலோ என்றால் இது 100 கிலோ எடை கொண்டதாம். அளவில் வழக்கத்தை விட மிக பெரிது என்பதால் அதை கையாள அதற்கென இருக்கும் சிறப்பு க்ரேன் சிஸ்டம் கூடவே எடுத்து கொண்டு சுற்ற வேண்டுமாம். விலை தாருமாறா இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... இன்னோரு விஷயம் உலகத்தில் மொத்தமே 2 imax கேமரா தான் இருக்கிறதாம்.

இவ்வளவு ஏற்பாடுகள் இவ்வளவு பிரமாண்டங்கள் எதற்கு தெரியுமா ?? இது வரை உணராத புதிய அனுபவத்திற்கு தான்.
சாதா 35 mm போல இதில் பிரேம் நகர்வை துளி கூட கண்டு பிடிக்க முடியாது என்கிறார்கள்.
இருட்டு மழை போன்ற காட்சிகளில் சாதா 35 mm பிலிம்கள் காட்சி நகர்வில் பிலிமை ஓட்டி ஏமாற்றி விடலாம். ஆனால் imax இல் உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது . மழை காட்சி என்றால் மழையின் ஒவ்வொரு துளியும் உங்களால் உணர முடியும்.
இது வரை கண்டிராத அசாத்திய துல்லியம் தான் இதன் சிறப்பு.
நெடு வாட்டத்தில் இருந்து கிடைமட்டமாக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை என்பதால் இதன் அனுபவம் வேறு விதமாக இருக்கும். மேலும் வேகம் 48 பிரேம் என்பதால் துல்லியம் அள்ளும்.

திரையில் காட்சியின் நகர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புதிதாக imax போன சில பேருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போன கதைகள் கூட உண்டு என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

உங்கள் அடுத்த கேள்வி நம்ம ஊர்ல இருக்கா இல்லையா அதை சொல்லுங்க முதல்ல என்பது புரிகிறது.
நம்ம ஊரில் சென்னையில் வேளச்சேரியில் உள்ளது தமிழ் நாட்டின் முதல் imax தியேட்டர்.இனொன்று வடபழனியில் உள்ளது.
நேரம் கிடைத்தால் போயிட்டு வாங்க.
சரி...நம்ம ஊர்ல imax படங்கள் எடுபங்களா...?
அதற்க்கு கொஞ்சம் நாள் ஆகும் என்று தோன்று கிறது.
அப்படியே எடுப்பதாய் இருந்தாலும் முதலில் நான் குறியிட்ட 35 ஐ imax ஆக மாற்றுவது..... அந்த தொழில் நுட்பத்தை தான் முதலில் பயன்படுத்துவார்கள்.
நேரிடையாக imax படம் எடுக்கும் வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான்.

மனிதனை மகிழ்விக்க புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் பொழுது போக்கு துறையில் imax  ஒரு மைல் கல் என்பதில் சந்தேகம் இல்லை

Comments

  1. Waiting for பொன்னியின் செல்வன் பாகம் 1 Shot in IMAX

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"