"நான் இனி சாக மாட்டேன் "


"நான் இனி சாக மாட்டேன் "
(சிறுகதை )

ரா.பிரபு

(கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சி என்பதால் இன்று ஒரு சிறுகதை .....)

அந்த சிறுவன் மிக விசித்திரமாக இருந்தான் உடல் முழுக்க சுருண்டு சுருண்டு கூன் விழுந்ததை போல.
அவனை அந்த பிறந்த நாள் கூட்டத்தில் அனைவரும் விசித்திரமாக பார்த்தார்கள்.

இந்த விழாவிற்கு திடீரென எங்கே இருந்து வந்தான் இவன்... யார் இவன்..?? என்று ஆச்சரியம் கலந்து இருந்தது அவர்கள் கண்களில்.

அந்த பணக்கார பங்களாவின் மாடியில் அந்த பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. வந்தவர்கள் அனைவர் முகத்திலும் பணக்கார தனம் ஒட்டி இருந்தது.
முகத்தில் சிரிப்பை மறைக்கும் அளவு அலங்காரம் செய்திருந்த பெண்கள் தனி கும்பலாக சேர்ந்து அரட்டை துவங்கி இருந்தார்கள்.  விழா ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது.

அப்போது....தான்.

அந்த கூட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக அந்த சிறுவன் அந்த கூட்டத்தில் நுழைந்திருந்தான். அந்த சிறுவனிடம் ஏதோ விசித்திரம் இருந்தது. அனைவரிடமும் ஏதோ சொல்ல துடித்தது ஆனால் தொண்டையில் வார்த்தை வர வில்லை என்பதை போல சைகை காட்டியது. கைகால் களை வேகமாக ஆட்டி எதையோ சொல்ல நினைத்ததை அனைவரும் வேடிக்கை என நினைத்தார்கள். அந்த சிறுவனின் கண்களில் சொல்ல முடியாத ஏதோ ஒன்று.
உடல் முழுக்க வலியால் துடிப்பதை போல இருந்தான்.

திடீரென .. அந்த மாடியின் விசாலமான ஜன்னல் வழியே கீழே எட்டி பார்த்தான் அந்த சிறுவன். பிறகு ஒரு வினாடி தயக்கத்திற்கு பிறகு ஜன்னலை தான்டி குதித்தான்.
புவி ஈர்ப்பு அவனை ஆசையாக இழுத்து கொண்டது.

"சொத் ......."

        ✴             ✴             ✴               ✴

நிரஞ்சன்..... தனது நிலவரையில் இருந்த அந்த ரகசிய அறை கதவை திறந்து கொண்டு உள்ளே போனான்.
அந்த அறை தனது மனைவியையும் அனுமதிக்காத ரகசிய அறை. நிரஞ்சன் ஒரு முன்னணி சைன்டிஸ்ட். பயோ டெக் நிபுணன். உயிரியல் ஆராய்ச்சி வித்தகன்.
அந்த அறை அதிகம் வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது. மெல்லிய வெளிச்சத்தில் அறையின் நடுவே சங்கிலியால் கட்ட பட்டு தொங்கி கொண்டு இருந்த அவன் தெரிந்தான். ஒரு காற்று போன பலூனை நியாபக படுத்தினான். மடித்து வைக்க பட்ட கம்பளி போல உடல் முழுக்க ஏக பட்ட சுருக்கம். தளர்ந்த உடல். நிச்யம் 60 வயதை கணிக்கலாம். ஆனால் அவன் உண்மையான வயது.........

" மது.... மது... என்னை நிமிர்ந்து பார்... உனக்கு 27 வயசு னு சொன்னா இப்ப என்னாலையே நம்ப முடில " என்றான் நிரஞ்சன். கண்களில் கொஞ்சம் குரூரம் எட்டி பார்த்தது .
பக்கத்தில் இருந்த பிரிட்ஜ் போன்ற சாதனத்தை திறந்து அந்த அடர் மஞ்சள் நிற மருந்தை சிரஞ்சியில் நிறப்பினான்

வலது கையில் ஊசியுடன் நெருங்கி.... அரை மயக்கத்தில் இருந்த அவன் கன்னத்தை இடது கையால் தட்டினான்..
"மது ....மது ...கண்ணை முழிச்சு பார்... நீ கொடுத்து வச்சவன்... ஒரு அறிவியல் கண்டு பிடிப்பிற்காக தனது உடலை  கொடுப்பது எவ்ளோ பெரிய புண்ணியம் தெரியுமா " என்றான்.

அவன் தொடர்ச்சியாக "ஏ...." என ஏதோ உளறி கொண்டு இருந்தான். கொஞ்சம் உற்று கேட்டால் "எ... ன்..னை... வி..ட்டு..டு" என கெஞ்சுவது கேட்கும்.
கடந்த சில நாளாக  இங்கேயே தொங்கி கொண்டு இருந்ததில் ரத்த ஓட்டம் கிட்ட தட்ட சதம்பித்து போய் இருந்தது..

"என்னை மன்னிச்சிடு மது இது நண்பனுக்காக செய்ற தியாகம் னு வச்சிக்கோ.. என் நண்பன் மது ஒரு தியாகி னு நான் பெருமையா சொல்லுவேன். உன்னை மறக்க மாட்டேன் " என்றான்.
"இங்கே பார் மஞ்சள் உனக்கு பச்சை எனக்கு "என்றான். பாக்கெட்டில் இன்னோரு பாட்டலில் பச்சை மருந்து மின்னியது

நிரஞ்சன் ஒரு கிறுக்கு விஞ்ஞானி அவன் கடைசியாக எடுத்து கொண்ட ஆராய்ச்சி 'சாகா வரம்.' ஏஜ் பிராசசிங் ஐ கட்டு படுத்தி வயதே ஆகாத உடலை பெற வேண்டும் என்பது தான் அவன் லட்சியம்.
அதற்கான செய்முறைகளை வெற்றிகரமாக செய்து வந்தான் நிரஞ்சன். அதை யார் உடலிலாவது செலுத்தி சோதனை செய்தால் தான் அந்த சோதனை நிறைவு பெறும்.
ஆனால் அங்கே தான்..ஒரு சின்ன சிக்கல்.  அந்த அற்புத அமுதத்தை வேறு யார் உடலிலும் செலுத்தி சாகா வரத்தை அவன் தர தயாராக இல்லை. அதே சமயம் முதல் தடவை தனது உடலிலேயே செலுத்தி பார்க்கவும் பயம் தயக்கம்.

எனவே ஒரு யோசனை செய்தான். தனது பார்முலாவிற்கு நேர் எதிர் பார்முலாவில் மருந்தை செய்தான். அது எதிர் திசையில் வெற்றி பெற்றால் இதுவும் வெற்றி பெறும் என்று நம்பினான். அதாவது உடனே வயது ஆகும் படி மருந்து.
அதற்க்கு தனது நண்பன் மதுவை வர வழித்து குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்து அவனை கடத்தி வைத்தான்.சில நாளாக அவன் உடலில் அந்த எதிர் பார்முலா மருந்தை சோதிதான். எதிர்பார்த்த படி சில நாளில் மதுவின் ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்து...60 வயது கிழவனாக மாறி போனான்.

"மது இதான் கடைசி டோஸ்... சூப்பர் டோஸ்.. இந்த முறை கொஞ்சம் அப்க்ரேட் பண்ணி இருக்கேன்.. இனி ஒரே ஒரு டோஸ் போதும் உனது வாழ்நாளின் மொத்த முதுமை உனக்கு சில வினாடிகளில் வந்து விடும். அது மட்டும் நடந்தது என்றால் நிச்சயம் எனது இந்த பச்சை மருந்தும் வேலை செய்யும் என் வாழ்நாளின் மொத்த இளமை எனக்கு வந்து விடும்."

சொல்லி விட்டு அவன் உடலில் அதை செலுத்தினான்.
சில வினாடிகளில் அவன் உடல் எலும்புகள் அடர்த்தி குறைந்து கொண்டே போனது அவனை திடீர் உயரமாக்கியது தோல்கள் விரிவாகி ...விரிவாகி.... பார்க்க பயங்கரமாக உடல் வெடித்து சிதறி போனான்.

நிரஞ்சன் முகத்தில் ஆனந்த சிரிப்பு.. இது அப்படி ரிவர்ஸில் நடந்து நான் இளமையோ இளமை ஆவது எப்படி இருக்கும் ??
அதற்க்கு மேல் பொறுக்க முடியாதவனாக பச்சை மருந்தை தனது உடலில் செலுத்தி கொண்டான்.

எனக்கு நேரம் இல்லை... மேலே எனக்கு  நடக்கும் பிறந்த நாள் விழாவில் போய் கலந்து கொள்ள வேண்டும்.

சில நிமிடங்களில் அந்த மாற்றம் உணர்ந்தான். உடல் தசைகள் மிக இளமையாக மாற தொடங்கியது. மகிழ்ச்சியில் அலற தொடங்கினான் நிரஞ்சன்.

ஆனால் .....

அவன் மகிழ்ச்சி நிலைக்க வில்லை.
அவனது எலும்புகள் நிற்காமல் அடர்த்தி கூடி கொண்டே போனது...
தோல்கள் சுருங்கி கொண்டே போனது...
உடல் முழுக்க கத்தியால் குத்துவது போல வலி பிடுங்கியது....
உடல் விசித்திரமாக சுருங்கி முடிச்சி முடிச்சாக மாறியது.. அலற வாயை திறந்து போது... வாயில் சப்தம் வெளி வரவில்லை. தொண்டை எலும்புகள் சுருங்கி போய் இருந்தது. அவசர பட்டு விட்டோம் என்று உணர கூட நேரம் இல்லை அவனுக்கு.
இப்பொது உடல் ஒரு கூன் விழுந்த சிறுவனை போல ஆகி இருந்தது

மௌனமாக அலறி கொண்டே  மேலே விழா நடக்கும் இடத்தை நோக்கி ஓடினான்.

அதன் பின் நடந்ததை தான் நீங்கள் முதல் பாராவில் படித்தீர்கள்.

..முற்றும்...


Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"