ஜெட் வேக கதை 4


 "ஜெட் வேக கதை "4


ரா.பிரபு


செல்வராஜ் தனது பள்ளி படிக்கும் மகனும் பக்கத்து வீட்டு சிறுவனும் பேசிக்கொள்வதை தூர இருந்து அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தார்.


"டே உனக்கு உங்க அம்மாவை பிடிக்குமா டா.. "


"ஆமாம் டா ரொம்ப பிடிக்கும் "


"இல்ல நீ பொய் சொல்ற " என்றான் பக்கத்து வீட்டு பையன்


"நான் ஏண்டா பொய் சொல்றேன் எங்க அம்மானா எனக்கு உயிர். " என்றான் செல்வராஜ் மகன்.


"அப்படியா.. அது உண்மைனா எங்க எனக்கு ஒரு 20 ரூபாய் கொடு பார்ப்போம். அப்போ தான் நம்புவேன் " என்று அவன் கூறியதும் மகன் உடனே அவனுக்கு பாக்கெட் மனிக்கு கொடுக்க பட்ட பணத்தில் 20 ரூ கொடுப்பதை பார்த்து செல்வராஜ் அதிர்ந்தார்..


"டே இங்க வாடா முட்டாள் பயலே " என்று கத்தினார்.


அவன் பயந்து அப்பாவிடம் வர.. அந்த உஷார் சிறுவன் ஓடி ஒளிந்து இருந்தான்


" ஏண்டா உனக்கு அறிவு இல்ல அவன் உன் அம்மா பாசத்தை பயன்படுத்தி உண்ண ஏமாற்ற பார்க்கிறான்.. உனக்கு புரியலையா..."


"அவன் அம்மா பாசத்தை சொன்னான் பா அம்மாவை விட்டு கொடுக்க முடியுமா...பா.. அதான்.." என்று மகன் குறைந்த ஸ்தாயியில் பதில் சொல்ல..


"டே ஒன்னு தெரிஞ்சிக்க உன் பலமே உன் பலவீனமாயிட கூடாது.. பாசம் என்கிற  விஷயத்தை உன் வீக்னசா பயன் படுத்தி உன்னை அவன் கட்டு படுத்த நீ அனுமதிக்கலாமா. அப்படினா... நீ ஒரு முட்டாள் னு அர்த்தம் "


சொல்லி கொண்டிருக்கும்போது செல்வராஜன் போன் மணி அடித்தது.


"நம்ம தலைவர் கூட்டி இருகாரா ..எப்போ.. என்ன திடீர் கூட்டம்...

யாரை.. .அட நம்ம ஜாதி காரனயா அடிச்சிடாங்க ... தலைவர் கூப்பிட்டு போகாம இருக்க முடியுமா..இதோ இப்ப வரேன். "


போனை வைத்தவர்..

உன் கிட்ட அப்புறம் பேசறேன் அப்பாவுக்கு அவசர வேலை இருக்கு... செல்வராஜ் கிளம்ப..


'அப்பா பக்கத்து வீட்டு பைய்யன் பாசத்தை வைத்து என்னை முட்டாள் ஆக்கின மாதிரி உங்க தலைவர் ஜாதியை வைத்து உங்க வீக்கனஸ் ஐ பயன்படுத்தி உங்களை கட்டுப்படுத்தறாரே உங்களால் அதை புரிஞ்சிக்க முடியலையாபா.. என்ன சொல்லிட்டு நீங்க எனக்கு மேல பெரிய முட்டாளா இருக்கீங்களே.......'


இப்படி... சொல்லும் அளவு அந்த சிறுவனுக்கும் முதிர்ச்சி இல்லை..

அதை கேட்கும் அளவு அவன் அப்பனுக்கும்.. இல்லை.....

Comments

  1. வழி மாறும் போது தடம் பதியும் ஐந்தாயினும் சரி ஐம்பது ஆயினும் சரி...

    அருமை சகோதர

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"