தொலை தூர கோள்கள் கண்டு பிடிப்பது எப்படி ?

"தொலை தூர கோள்கள்
கண்டு பிடிப்பது எப்படி ?

#அறிவியல்_காதலன்
#ரா_பிரபு

விண்வெளியில் நீண்ட தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை சுற்றி வரும் கோள்களின் இருப்பை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் தெரியுமா..?

பல ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து நமக்கு வரும் ஒளியை ஆராய்ந்து அந்த நட்சத்திரம் இருக்கும் தொலைவை எப்படி சொல்கிறார்கள் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். ஆனால் அந்த நட்சத்திரத்தை ஒரு கோள் சுற்றி வருகிறது என்பதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் ?

ஒரு கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும்போது அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பினால் கிரகம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கிரகத்தின் ஈர்ப்பினால் நட்சத்திரமும் சிறிதளவு பாதிக்கப்பட தான் செய்கிறது.

இரு நபர்கள் ஒன்றோடொன்று கையை கோர்த்துக் கொண்டு தட்டாமாலை சுற்றுவது போல கற்பனை செய்து கொள்ளுங்கள் அதில் ஒருவர் திடகாத்திரமாக மாமிச மலை போல இன்னொருவர் மிகச்சிறிய ஒரு சிறுவன் போலவும் கற்பனை செய்து கொள்ளலாம்.
இப்படி சுற்றும் போது இதில் பெரியவர் சிறியவர் ஐ அதிகமாகவும் சிறியவர் பெரியவரை குறைந்த அளவும் பாதிப்புக்கு ஆளாக்குகிறார்கள்.

உதாரணமாக நமது வியாழன் சூரியனை சுற்றி வருகிறது என்பது ஒரு தவறான கருத்து சொல்லப்போனால் வியாழனும் சூரியனும் சேர்ந்து பொதுவான ஒரு மையப் புள்ளியை சுற்றிவருகிறது என்பதுதான் சரி.
வியாழன் குறைந்த அளவே ஆயினும் சூரியனை தனது ஈர்ப்பினால் சற்றே இழுத்து தலையை ஆட்ட வைக்கிறது. நிற்க போகும்  ஒரு  பம்பரம் தலை ஆட்டுவது போல. (Wobbling ).
இது மிக மிக குறைவான அளவே நடக்கிறது என்றாலும் தூரத்தில் இருந்து நாம் கண்காணிக்கும் போது அந்த நட்சத்திரத்தின் ஒளியில் இது மாற்றத்தை உண்டாக்குவதை கவனிக்க முடிகிறது . (Dim bright ) இதை கொண்டு அந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றி வருகிறது என்று சொல்லி விடுகிறோம்.

இதைத் தவிர இரண்டாவது வழிமுறை ஒன்று உண்டு அது அந்த கோள் அந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் போது அந்த நட்சத்திரத்தின் ஒளியை அது மறைப்பதை நாம் தொலைநோக்கி மூலம் கண்காணிக்க முடியும் .
மிக மிக சிறிய ஒரு புள்ளி அளவே இது கிடைக்கும் என்றாலும் நுணுக்கமாக கவனித்து இதை கண்டு கொள்ள முடியும்.
இந்த இரு வழி முறைகளை வைத்துதான் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் கோள்கள் சுற்றி வருகிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கிறார்கள்

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"