Synesthesia பற்றி தெரியுமா

Synesthesia பற்றி தெரியுமா ?



#அறிவியல்_காதலன்
#ரா_பிரபு

சில எளிமையான கேள்விக்கு பதில் கூறுங்கள் நண்பர்களே...
1)புதன் கிழமையின் நிறம் என்ன. (அல்லது )நம்பர் 6 என்ன நிறம் ?
2 ) காரின் ஒலி என்ன சுவையில் இருக்கும் ?
3 ) பியானோ ஓசை என்ன நிறத்தில் இருக்கும் ?
4 ) மஞ்சள் நிற ஒளி விளக்கின் ஒளி உங்கள் உடலை தொடுவது எப்படி உணர்வீர்கள் ? சிகப்பு ஒளி தொடும் போது என்ன வித்தியாசம் ?
5 ) இந்த கட்டுரையில் வரும் அ என்கிற எழுத்து மட்டும் என்ன நிறத்தில் காண்கிறீர்கள்..?
6 ) பருத்தி துணி தொட்டால் என்ன இசை கேட்கும் ?

மேலே கேட்க பட்ட கேள்வி நமக்கு அர்த்தமற்ற அபத்தமாக தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு'' Synesthesis "  ஆக இருந்தால் உங்களுக்கு இது அர்த்தமற்ற கேள்வி அல்ல.
மொத்த உலக தொகையில் வெறும் 4 சதம் ஆட்களே..Synesthesis ஆட்கள் உள்ளனர். இது 2000 பேரில் ஒருவருக்கு இருக்கும் திறன்.

நாம் நமது புலன்கள் வாயிலாக இந்த உலகை உணர்கிறோம். அந்த புலன்களின் ஒரு விசித்திர விளையாட்டு இந்த Synesthesia. அதாவது இரு புலன்கள் தங்களுக்குள் பாலம் அமைத்து கொள்வது.
அதாவது ஒரு புலனின் உள்ளீடு அடுத்த புலனின் வெளியீடாக மாறுவது.
இந்த ஆசாமிகள் நம்முடனே உலகத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் காணும் உலகம் வேறு.
ஒரு 'சினஸ்திஸ்' தனது சொந்த குரலில் பேசும் போது எல்லாம் தனது தலைக்கு மேலே ஒரு ஆரஞ்சு வண்ண மேகம் தோன்றி மறைவதை காணலாம்.. அவரிடம் நாம் பேசும் போதெல்லாம் நமது குரலுக்கு வேறு நிறம் காண்பார்.ஒரு சொடக்கு போட்டு இப்ப என்ன கலர் பார்த்த ? என்று அவனை கேட்கலாம்.

இசையை நாம் கேட்க மட்டும் தானே முடியும் அந்த ஆசாமிகள் உடலில் அதை உணர முடியும். ஒரு குறிப்பிட்ட இசை கேட்டால்  ஒரு மாய கை தோன்றி அவர்கள் உடலை வருடி கொடுப்பதை அனுபவிக்க முடியும். ஒரு கருப்பு வெள்ளையில் 10 வரை அச்சடிக்க பட்ட நம்பர்களை காட்டினால் அவர்கள் அதில் 6 மட்டும் சிகப்பாக இருப்பதாய் காண்பார்கள்.அவர்கள் உலகமே வித்தியாசமானது. (உடலில் எந்த இரு புலன்களும் இப்படி கூட்டணி வைத்து கொள்ளலாம் சினஸ்தீஸியாவில் பல ரகம் உண்டு ) இதில் விசித்திரம் என்ன என்றால் தான் இப்படி விசித்திரமாக இருப்பதை  அவர்களுக்கு யாரும் விளக்கி சொல்லும் வரை உணர மாட்டார்கள். அதாவது அனைவருமே இப்படி தான் உணர்கிறார்கள் போல என்று அவர்கள் நினைத்து வருவார்கள். ஆனால்
அவர்கள் இந்த உலகை உணர்வது நம்மை விட மிக வேறு பட்ட தளத்தில் இருக்கும்.

இது எப்படி நடக்கிறது என்று பல ஆய்வுகள் நடந்தது. சிலர் மரபியல் மாற்றம் மூளையில் சேர்ந்து புலன்களில் காட்டும் வித்தை என்றார்கள். சிலர் நமது முன்னோர்கள் அவர்கள் உள்வாங்கிய உள்ளீடு DNA வழியே கடத்த படுகிறது என்றார்கள்.மூளை முன்னவே இவற்றை இது என முன் முடிவோடு செயல் படுகிறது என்றார்கள். அதாவது உங்களுக்கே தெரியாமல்  5 என்றால் அது சிகப்பு என்று மூளை ஒரு முடிவு பண்ணி வச்சி இருக்காம்.

நமது அனைவர் மூளையிலும் இந்த திறன் இருக்கிறது. சிலருக்கு தான் இது வெளி படுகிறது என்கிறார்கள். மேலும் மூளையின் முன் முடிவை பல ஆய்வுகள் மூலம் நிரூபித்தும் இருக்கிறார்கள்.

சரி உங்கள் மூளையின் முன் முடிவை ஒரு சுவாரஸ்யமான ஆய்வு மூலம் நிரூபிக்கலாமா...?
இதற்கு பெயர்  booba ,kiki ஆய்வு.

கட்டுரையில் இணைக்க பட்ட படத்தை கவனியுங்கள். இரு உருவங்கள் கொடுக்க பட்டு இருக்கிறது ஒன்று கூரான முனை கொண்ட உருவம் இனொன்று வளைவான முனைகள் கொண்ட உருவம்..இதில் ஒன்றின் பெயர்' கிகி 'இனொன்று பெயர் 'பூபா ' அந்த படத்தை பார்த்ததும் உங்கள் மனதில் எதன் பெயர் கிகி எதன் பெயர் பூபா என்று தோன்றுகிறது என்று கூறுங்கள்.

(ஒரு நிமிடம் ..
உங்கள் விடையை கூறிவிட்டு மேலே படிக்க  தொடருங்கள்.....)

இப்போ நீங்கள் இந்த படத்தை காட்டி உங்கள் நண்பர்களிடம் சோதனை செய்து பாருங்கள் ஒரு உண்மை தெரிய வரும் அதாவது... 100 க்கு 99 பேர் கூர் முனை கொண்ட உருவத்தை கிகி எனவும் வளைந்த முனைகள் கொண்ட உருவத்தை பூபா எனவும் கூறுவதை காணலாம். இந்த உருவத்திற்கு இதான் பெயர் என்று உங்கள் மனதில் ..மூளையில் முன்னமே பதிய வைத்தவர் யார் அல்லது எது ?? என்று சிந்தியுங்கள்.

குறிப்பு : சில அசாதரண சூழலில் (உடல் நிலை பாதிப்பு.. ட்ரக்ஸ்...) சாதாரண மனிதர்கள் சில நேரம் இந்த Synesthesia வை அனுபவிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. உங்களுக்கு ஏதும் அனுபவம் இருந்தால் குறிப்பிடுங்கள்.

மேலும் தகவலுக்கு வீடியோ லிங்க்..

https://youtu.be/88s6guf9egs

Comments

  1. இது வரை நான் அறிந்திராத தகவல், நன்றி.

    ReplyDelete
  2. Neraya tym spend panni day and night paakama wrk pannunga neraya detail learn pannalam ungakitta irundhu keep it up awesome work... anf hats off to ur searching

    ReplyDelete
  3. நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"