"Wireless charger எப்படி வேலை செய்கிறது ?"

"Wireless charger
எப்படி வேலை செய்கிறது ?"

ரா_பிரபு

Samsung galaxy s10, Sony xperia xz3, nokia 9 ,google pixel 3 போன்ற பல மொபைல்கள் wireless charger இல் சார்ஜ் ஆவதை பார்த்து இருப்பீர்கள். இந்த வயர் அற்ற சார்ஜர்கள் எப்படி வேலை செய்கின்றன? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன ?

மின்னியலில் induction என்ற ஒரு விஷயம் உண்டு. யாராவது கொட்டாவி விட்டால் பக்கத்தில் இருக்கும் நமக்கும் கொட்டாவி வருவது போல ஒரு நிகழ்வு இது.
அதாவது ஒரு coil ஐ எடுத்து கொண்டு அதில் மாறுதிசை மின்னோட்டம் (ac curent) கொடுத்தால் அந்த காயிலில் ஒரு electro magnetic flux உண்டாகி காற்றில் கொஞ்சம் தூரம் கண்ணுக்கு தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கும்.

அந்த காந்த அலைகள் அலையும் எல்லையில் இன்னொரு காயிலை கொண்டு வந்து வைத்தால் அதில் அந்த காந்த புலன்கள் விட்டு விட்டு வெட்டுவதால் காயிலில் மின்சாரம் உண்டாகும். (பொதுவாகவே காந்த புலத்தில் வேகமாக கடத்தி கடந்தாலோ அல்லது கடத்தி உள்ள இடத்தில் காந்த புலம் வேகமாக கடந்தாலோ மின்சாரம் உண்டாகும்) இந்த நிகழ்வுக்கு பெயர் தான் இண்டக்ஷன்.

நாம் பார்க்கும் டிரான்ஸ்பார்மர்கள் (மைக்கேல் பே எடுத்த படம் அல்ல ) மற்றும் இண்டக்ஷன் ஸ்டவ் எல்லாமே வேலை செய்வது இந்த தத்துவத்தில் தான்.

மொபைல் கம்பி அற்ற சார்ஜரில் ஒரு காயிலில் AC மின்சாரம் செலுத்த படும்.  அதில் உண்டாகும் electro magnatic flux இன் எல்லையில் மொபைலை நாம் வைக்கும் போது மொபைலுக்குள் இருக்கும் சிறிய காயிலில் induction நடந்து மின்சாரம் உண்டாகிறது. உள்ளே உள்ள சர்க்கியுட் board அதை dc கரண்ட் ஆக மாற்றி மொபைல் பேட்டரிக்கு சார்ஜ் செய்கிறது.

அப்புறம்....

Wireless சார்ஜரை வீட்டில் வைத்து விட்டு 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள உங்கள் ஆபிஸில் சார்ஜ் பண்ணலாம்...
Wireless மின்சாரத்தை பல நூறு கிலோ மீட்டர்வரை கூட கடத்தலாம்....

ஆனால்....

அதற்கு டெஸ்லா னு ஒருத்தர் மீண்டும் உயிரோடு வர வேண்டும்.
இப்போதைக்கு சில மீட்டர்களே அதிகம்.

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"