டைம் லூப் நம்பர்_67"

"டைம் லூப் நம்பர்_67"

(அறிவியல் சிறுகதை )

#ரா_பிரபு

தலைக்குள் மெல்லிய மிக்சி சப்தம் போல் கேட்டு நினைவுக்கு வந்தேன்.
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த குழந்தை போல திரு திரு .
அறை யின் அரை இருட்டு கண்ணுக்கு பழகி இருந்ததது..
கையில் வைத்திருந்த அந்த பொருள் தனது உடல் எங்கும் சிறு வெளிச்சங்களை இறைத்து தனது எலக்ட்ரானிக்ஸ் கண்ணை கொண்டு என்னை பார்த்து கண் அடித்து  கொண்டிருந்ததது கொஞ்சம் சூடாக இருந்தது.

சடாரென அறை கதவுகள் திறந்து கொண்டு அம்மாவின் சப்தம் அபாயமான டெசிபலில் ஒலித்தது...
அல்லது முதலில் ஒலித்த பின் அறை கதவு திறந்ததா ??
குழப்பமாக இருந்தது . எதுவாய் இருந்தாலும் இதை உடனே மறைக்க வேண்டும் கடந்த முறை செய்ததை உடைத்து தள்ளியதை  போல இதை உடைத்து தள்ள அனுமதிக்க முடியாது  ஐயையோ எனது உழைப்பு மீண்டும் வீணாகி போகும்...

எங்கே ஒளித்து வைக்கலாம் ??
கட்டில் அடியிலா எனது ஸ்கூல் பேகிலா... 
எனது மூளை எலெக்ட்ரான் வேகத்தில் யோசித்தது ஆனால் அம்மா அதற்குள் ஒளியின் போட்டான் வேகத்தில் உள்ளே நுழைந்து இருந்தாள். கண்ணில் 415 வோல்ட்க்கு  குறையாமல் மின்சாரம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மீது டிஸ்சார்ஜ் செய்ய போகிறாள்.
நான் சடாரென" அதை" முதுகுக்கு பின்னால் மறைத்தேன்.

" திரும்ப அந்த கருமத்தை தான் பண்ணிட்டு இருக்கியா.. உன்னால இது வரைக்கும் மொத்தம் 5 கடிகாரம் 2 டிவி 6 ரேடியோ நஷ்டம்... உன் கூட தானே படிக்கிறான் அந்த M. கணேஷ் ..எப்ப பாரு புக்கும் கையும் தான். நீ வேணா பாரு பிற்காலத்தில் அவன் தான் பெரிய ஆளா வருவான். நீயும் இருக்கியே எப்போ பாரு அதை உடை இதை சால்டர் பன்னுனு ஏண்டா பொம்மை தான் பிடிக்கும் னா நான் வாங்கி தர்றதுல விளையாடேன் ஏண்டா வீட்டு பொருளை நாசம் பண்ற " (அந்த M .கணேஷ் வீட்டில் என்னை ஒப்பிட்டு அடிக்கடி அவனை திட்டுவார்கள் என்று சொல்லி இருக்கிறான்.. ஸ்கூல் பசங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் )

என்னது பொம்மையா ???

எனக்கு கோபம் தலைக்கு ஏறியது...
எத்தனை வாட்டிமா சொல்றது இது பொம்மை இல்லை "டைம் டிராவல் மெஷின் " உனக்கு இதெல்லாம் புரியாது  இதெல்லாம் புரிஞ்சிக்க நீ அந்த M. கணேஷ்  அம்மா மாதிரி அறிவாளி அம்மாவா இருக்கனும் "

அம்மா முகத்தில் நவரசம் தெரிந்தது பிறகு கோபம் மறைந்து சிரிப்பு எட்டி பார்த்தது
" அதை மொதல்ல இங்க கொடு மரியாதையா 3 எண்ணுறதுகுள்ள கொடுத்துட்டு படிக்கிற வேலையை பாரு "

அம்மா கதவை விட்டு தள்ளி நின்ற ஒரு நொடியில் அறையில் இருந்து ஓடி எஸ்கேப் ஆக பார்த்தேன் மீனை கவ்வும் கொக்கு போல பாய்ந்து பிடிக்க பட்டேன்

" டேய் உன் தங்கச்சி டியூஷன் போய் ரொம்ப நேரம் ஆச்சி உன் கால வண்டில போய் கூட்டிட்டு வரலாம் வா "

அம்மா கிண்டலாக சொல்லி கொண்டே அதை சுக்கு நூறாக்கினாள் 
'போச்சே போச்சே இதுவும் போச்சே'

"உனக்கு சொன்னா புரியாதுமா இது பொம்மை இல்ல கால இயந்திரம்
ஒரு நாள் இதுல டிராவல் பண்ணி காட்றேன் பாரு அப்போ ஒரு ரைடு கூட்டிட்டு போடான்னு கெஞ்சுவ பாரு அப்போ என்ன கெஞ்சினாலும் உன்ன கூட்டிட்டே போக மாட்டேன் "

நான் போட்ட சப்தத்தில்.... சபதத்தில் .. மங்கமா எட்டி பார்த்தாள்.

☸            ☸            ☸             ☸            ☸

கால சக்கரம் பெட்ரோல் விலை போல கிடு கிடு னு ஏறி போன பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நாள்..

அந்த லேப் என்றும் இல்லாத புதிய பரபரப்பில் இருந்ததது...
சுற்றி பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்து இருந்த வெளிநாட்டு விஞ்ஞானிகள் முகத்தில் அதீத ஆர்வம் தெரிந்தது.
இந்த பக்கம் எனது டீம் முகத்தில் தெரிந்ததது கவலையா இல்லை சந்தேகமா இல்லை ஆர்வமா என்று சரியாக தெரிய வில்லை.
மேலே கண்ணாடிக்குள் மானிடர் முன்னாடி அமர்ந்து இருந்தவனை பார்த்து சைகை செய்தேன் . கணினி ரீடிங்குகளை பார்த்து விட்டு அனைத்தும் ஓகே என அவன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.

அனைவர் பார்வையும் நடுவே மேடை போல் இருந்த அமைப்பில் வைக்க பட்டு இருந்த அந்த சிக்கலான அமைப்பின் மேல் இருந்ததது.

அந்த அமைப்பு வர்ணிப்பது சிரமம். நான் அதை நெருங்கினேன் அடடா எத்தனை வருட உழைப்பு . ஒரு முறை அதை சுற்றி பார்வையை சுழற்றினேன் ஆங்காங்கே சர்கியூட்.. டியுப்கள் ..
வண்ண வண்ண ஒயர்கள்... அப்புறம் நடுவே அந்த மிஷின் இதய பகுதியில் வைக்க பட்டு இருந்த அந்த கதிரியக்க பொருள் அதான் அதன் எரிபொருள். பார்க்க மெல்லிய நீல கதிர் ஒளிகளை வீசி கொண்டே இருந்த அதன் இதயத்தை இழுத்து மூடினேன்.  பேட்டரிகள் பக்கா...  ஒரு முறை மானிட்டரில் காட்டிய தகவல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சரி பார்த்து கொண்டேன்.
200 சத திருப்தியில் தான் நான் இருந்தேன் ஆனால்....
அந்த கணத்தில் மானிட்டரில் தெரிந்த "டைம்  லூப் நம்பர் 67 " எதை குறிக்கிறது என்பது தான் புரிய வில்லை.
இது ஏதேனும் 'மால்பங்க்ஷனா '?
பயணத்தை நிறுத்தி விடலாமா ??

மேலே கண்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து இருந்த M. கணேஷ் இன்னுமொரு முறை கட்டை விரலை உயர்த்தி காட்டினான் . ரீடிங் எல்லாம் பக்கா என்று சைகையில் சொன்னான்.
சொல்ல மறந்துட்டேன் படித்து விட்டு வேலை இல்லாமல் கஷ்ட படுவதாக M. கணேஷ் ஒரு முறை போன் பண்ணி இருந்ததை அடுத்து நான் தான் அவனுக்கு லேபில் ஒரு சிறு வேலை போட்டு கொடுத்து இருந்தேன்..டேட்டா மானிடரிங்...

இனி பயணத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை.

" கால இயந்திரம் தனது இயக்கத்திற்கு தயார் "
என்று சத்தமாக நான் அறிவித்ததை அந்த விஞ்ஞானிகள் முன் வைக்க பட்டு இருந்த பிரத்யேக கருவி மொழி பெயர்த்து அவர்கள் முன் ஒலித்தது..
சுற்றி பல கேமராக்கள் ஓடி கொண்டு இருந்தாலும் சில ஆர்வமான டீம் மெம்பர்கள் அப்புறம் இதை நேரில் பார்க்க வந்து இருந்த சில அரசு அதிகாரிகள் தங்கள் மொபைல் கேமராவை ஆன் செய்து கொண்டார்கள்.

பல வருடமாக போராடி ..தன்னை நிரூபித்து ஒரு வழியாக அனுமதி வாங்கி நீண்ட ஆய்வுக்கு பின் எனது கனவு இயந்திரத்தை வடிவமைத்து இருந்தேன்.
எனக்கு இதன் வெற்றி வாய்ப்பில் எலக்ட்ரான் அளவு சந்தேகம் கூட இல்லை. தியரி படி எல்லாமே தெளிவாக உள்ளது. இது தோல்வியாக சாத்தியமே இல்லை..
'மறக்காமல் அம்மாவை ஒரு ரைடு அழைத்து போக வேண்டும் 'என்று நினைத்து கொண்டேன் . ஆனால் முதலில் டெஸ்ட் ரைட்....

நான் தீர்க்கமாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கருவிக்கு உள்ளே சென்று அமர்ந்தேன்  உள்ளே ஓரளவு பார்க்க சுத்தி சுத்தி மானிடர் பொறுத்த பட்ட கொஞ்சம் பெரிய சைஸ் சொகுசு கார்  போல காட்சி அளித்தது .
திரையில் விரலை தட்டியதும் கதவுகள் மூடி கொண்டன. கண்ணாடி வழியே வெளியே அனைவரின் ஆர்வமான கண்களும் என்னையே பார்த்தது எனக்குள் பெருமிததை கொடுத்தது.
திரையில் சில தட்டு தட்டிய பின் " இயந்திரம் கிளம்புகிறது " என்று அழகிய தமிழில் அறிவித்தது.
நான் மூச்சை இழுத்து பிடித்து கொண்டேன். கடைசி நொடியில் டைம் லூப் நம்பர் 67 ஒளிர்ந்ததை பார்த்தேன்

   ☸              ☸              ☸                ☸

இயந்திரத்தின் சக்தி வாய்ந்த பேட்டரிகள் இயந்திரத்தின் ஒவ்வொரு மூலகூறுகளையும் குறிபிட்ட அலைவரிசையில் அதிர செய்யும். ஆரம்பத்தில் பார்க்க ஏதோ மசாஜ் வைப்ரேட்டர் இல் உட்கார்ந்தது  போல இருந்தாலும் இதன் பிரிக்குவென்சி படி படியாக அதிகரித்து கொண்டே போய்...
மெஷினில் உள்ள அனைத்து அனுவையும் வெறும் அதிர்வாக மாற்றும்.
 ஒலி மின்காந்த அலையாக மாற்ற பட்டு மீண்டும் ஒலியாக மாறும் சாதாரண தொலைபேசி தொழில் நுட்பம் போல தான் இது.

இதில் பொருட்கள் மாலிக்கியுளாக பிரியும் தனக்கே உரிய அதிர்வெண்ணில் அதிரும் அந்த நிலையில் வெளி உலகின் பார்வையில் மெஷின் மறைந்து போகும். இது ஒரு டெலிபோர்டேஷன்..
பிறகு  ஐன்ஸ்டைனின் time slice ஐ தேடி பிடிக்கும் அதாவது ஸ்பேஸ் டைமை ஒரு பிரெட் துண்டு போல நினைத்து கொண்டு கத்தியால் வெட்டினால் உண்டாகும் slice பல டைம் லைன்களை கொண்டு இருக்கும் . ஐயோ விளக்க இப்போ நேரம் இல்லை "slicing the space time loaf " என்று google பண்ணி பார்த்து கொள்ளுங்கள் நான் அவசரத்தில் இருக்கிறேன்.
தனக்கு தேவையான டைம் லைன் மேட்ச் ஆனதும் அதில் இந்த அதிர்வுகள் செங்கல் செங்கலாக பிரித்து இருந்த "மேட்டர் "ஐ  மீண்டும் கண்ணால் காணும் பொருளாக மாற்றும்.

இந்த மாதிரி பயணத்தில் மனித உடல் என்ன ஆகும் என்று நானே கூட சோதித்தது இல்லை தான் பரவா இல்லை இதோ இன்னும் சில விநாடிகளில் தெரிந்து விட போகிறது..

        ☸           ☸           ☸           ☸

அந்த லேபின் நடுவே இருந்த அந்த இயந்திரம் ஒரு விசித்திர அதிர்வையும் சப்தத்தையும் வெளி படுத்தியது.
 பிறகு....
எதிர்பாராத ஒரு கணத்தில் க்விக் என காணாமல் போனது ...
மொத்த லேபும் ஓ என ஆர்ப்பரித்து கத்தியது ..
லேபின் pest control ஐ மீறி உள்ளே நுழைந்த ஈ ஒன்று  M. கணேஷின் திறந்த வாய்க்குள் 2 முறை சென்று வந்தது.

      ☸          ☸             ☸              ☸

தலைக்குள் மெல்லிய மிக்சி சப்தம் போல் கேட்டு நினைவுக்கு வந்தேன்.
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த குழந்தை போல திரு திரு ....
அறை யின் அரை இருட்டு கண்ணுக்கு பழகி இருந்ததது..
கையில் வைத்திருந்த அந்த பொருள் தனது உடல் எங்கும் சிறு வெளிச்சங்களை இறைத்து தனது எலக்ட்ரானிக்ஸ் கண்ணை கொண்டு என்னை பார்த்து கண் அடித்து  கொண்டிருந்ததது கொஞ்சம் சூடாக இருந்தது.

அட பாவமே "மாலிக்கியுல் ரீ அசைனிங் வெரி புவர் "
கையில் இருந்த அதை பரிதாபமாக பார்த்தேன் . கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி இருந்தது அது.

அப்போது சாடாரென கதவை திறந்து கொண்டு அம்மா நுழைந்தாள்...

"டேய் உன் தங்கச்சி டியூஷன் கிளாஸ்க்கே போயிட்டு வந்துட்டா  இன்னும் ரூம்ல என்னடா பண்ற "
ஹை டெசிப்பலில் கத்தி கொண்டு வந்தவள் கையில் இருக்கும் அதை பார்த்தாள்...

" திரும்ப அந்த கருமத்தை தான் பண்ணிட்டு இருக்கியா... உன் கூட படிக்கிற M. கணேஷை பார்த்து திருந்து என அதை வாங்கி உடைத்து போட்டாள்.

" ஐயோ அம்மா ஒரு அது பொம்மை இல்லை டைம் மெஷின்  ஒரு நாள் உன்ன ரைடு கூட்டிட்டு போக சொல்லி கெஞ்ச போற பாரு "
என்று சொல்லி கொண்டு அதை பொறுக்க தொடங்கினேன்...

டைம் லூப் நம்பர் 67 என்று ஒளிர்ந்து அடங்கியது...
அறையை விட்டு வெளியே ஓடினேன்.

68 ஆவது முறையாக எனது ஒரே வாழ்க்கையை மீண்டும் வாழ தொடங்கினேன் என்பது எனக்கே தெரியாது.

Comments

  1. very nice and impressive story. any other related stories there?

    ReplyDelete
  2. மிகவும் அர்த்தம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"