தேடல் கேள்விகள் ரா.பிரபு ✴ கேள்வி 7

"தேடல் கேள்விகள்"
ரா.பிரபு

✴ கேள்வி 7
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🎯 கேள்வி : ரத்தத்தில் பல வகை சொல்கிறார்களே.. அவற்றை எப்படி இது இந்த குரூப் என வகை படுத்துகிறார்கள்.?

- செந்தில் -
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
📝 பதில் : முதலில் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன்.. ரத்தத்தில் பார்ப்பதற்கு ஏதோ நிறைய வகை இருப்பது போல தோன்றினாலும்.. உண்மையில் அப்படி இல்லை. ரத்தம் மொத்தமே 4 வகை தான்.
1.A வகை
2. B வகை
3. AB வகை மற்றும்
4. O வகை
இவற்றை தான் ABO பிரிவுகள் என்கிறோம்.

இந்த நான்கிலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உண்டு என்பதால்.. மொத்தம் 8 வகையாக பிரித்து வைத்து இருக்கின்றோம். அதாவது..
(A + , A -, B+, B -, AB+ ,AB - ,O +,O - )

சரி இப்போ இவற்றை எந்த அடிப்படையில் பிரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ரத்தத்தில் கலந்துள்ள ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து தான் இந்த 'வகை பிரிப்பு ' நடக்கிறது. அந்த பொருளின் பெயர் antigens (ஆன்டிஜென் னா வேற ஒன்னும் இல்ல  சர்க்கரை மற்றும் புரதத்தின் ஒரு வகை ) இந்த ஆன்டிஜென் எங்கே இருக்கும் என்றால் ரத்த சிகப்பணுக்களில் இருக்கும்... அப்புறம் antibodies களில் இருக்கும் (இந்த ஆண்ட்டிபாடியென்பது ஒரு வகை புரதம் இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இருக்கும் ) 'சரி பிளாஸ்மா னா என்ன ?என்று  கேட்பீர்களேயானால்.......

ஒரு ஆரஞ்சு ஜூஸ் இல் என்ன இருக்கும் ? சிம்பிள் ஆரஞ்சு இருக்கும் .. அப்புறம் வேறு என்ன இருக்கும் ?ஜூஸில் திரவமாக தண்ணீர் இருக்கும் அல்லவா.
அதே போல ரத்தத்தில் திரவமாக பிளாஸ்மா இருக்கும்.

சரி இப்போ ஒரு விஷயம் பாருங்கள்.. நமது உடலில் உள்ள ரத்தம் செல்களால் ஆனது என்று நாம் அறிவோம் அதே போல நமது உடலில் பல கோடி கணக்கான நுன்னுயிர்கள் வாழ்கிறது என்று நமக்கு தெரியும் அந்த உயிரிகளின் அளவு கிட்ட தட்ட நம்ம செல்கள் அளவு தான் இருக்கும் . எனவே நம்ம உடல் இந்த செல்களில் எது நம்ம செல் எது வேறு உயிரினதின் செல் என்று பிரித்து பார்ப்பதில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது அல்லவா. எனவே நமது உடல் சாராத எந்த விஷயமும் நமது உடல் செல்களுடன் கலந்து விடாமல் இருக்க நமது உடல் இயற்கையாக ஒரு ஏற்பாட்டை செய்து வைத்து இருக்கிறது அது தான் மேலே நாம் பார்த்த 'antibodies ' இந்த ஆண்ட்டி பாடிஸ் நமது ரத்தத்தில் நமது உடல் சாராத பொருள் எது வந்தாலும் அதை அடையாள படுத்தி தனிமை படுத்தி விடும். (இந்த ஆன்டிபாடியை தூண்டுவதே ஆண்டிஜென் தான். )

அதாவது இரு நாட்டு வீரர்கள் போர் புரியும் போது யார் நம்ம ஆள் யார் எதிரி என்ற குழப்பம் வராமல் இருக்க யூனிபார்ம் மற்றும் கொடி பயன் படுத்துவது போல.
இதில் என்ன பிரச்னை னா இந்த ஆன்டிபாடி ரொம்ப கண்டிப்பான ஆளு எனவே மனித ரத்தமாகவே இருந்தாலும் நம்ம வகை இல்லைனா இது அவற்றை எதிரியாக கருதி அழித்து வெளியேற்ற வைக்கும்.
அதாவது ஒரு வான் படை வீரர் நானும் உங்க நாடு தான் உங்க முகாம் இல் தங்கி கொள்கிறேன் என்று  தரை படை வீரர்கள் இடம் சொன்னால் அவர்கள் ஒத்து கொள்ள முடியாது இல்லையா அப்படி .

சரி இப்போ வகை படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.

நமது ரத்தத்தில் உள்ள சிகப்பனுகளின்  பரப்பில் இரண்டு வகை ஆண்டிஜென்கள் காணப்படுகின்றன. ஒன்று A வகை இனொன்று B வகை.
A வகை ஆன்டிஜென் இருந்தால் நாம் A வகை ரத்தம் கொண்டவர்கள் .
B வகை ஆன்டிஜென் இருந்தால் B வகை ரத்தம் கொண்டவர்கள். A வும் B யும் சேர்ந்தே இருந்தால் AB வகை ரத்தம் கொண்டவர்கள்.
 A வும் இல்லை B யும் இல்லை என்றால் நாம் O வகை ரத்தம் கொண்டவர்கள்.

இதில் A ஆண்டிஜென் இருக்கும் உடலில் B யை எதிர்க்கும் ஆன்டிபாடி இருக்கும். (Anti B ) அதாவது இந்த உடலில் B ஆன்டிஜென்னை நுழைந்தால் அந்த ஆன்டிபாடி இதை எதிரி என அடையாளம் கண்டு முத்திரை குத்தி தனிமை படுத்துகிறது. உடலின் மற்ற நோய் எதிர்ப்பு சக்திகள் இவற்றை எதிரியாக நினைத்து அழித்து கழிவாக வெளியேற்றி விடும்.

அதே போல B ஆன்டிஜென் இருக்கும் ரத்தத்தில் A வை எதிர்க்கும் ஆண்ட்டி பாடி இருக்கும். (Anti A )
அப்புறம் AB வகையில் எந்த ஆண்டி பாடியும் இருக்காது. அதாவது... எதையும் எதிர்க்கும் ஆன்டிபாடி அங்கே உண்டாகாது.
O வகை இருபவர்கள் ரத்தத்தில் A வை எதிர்க்கும் ஆன்டிபாடி மற்றும் B யை எதிர்க்கும் ஆன்டிபாடி இரண்டுமே இருக்கும்.

சரி இப்போ இதில் பாசிட்டிவ் நெகட்டிவ் னு ரெண்டு சொல்றாங்களே அது என்ன ?

இங்கே தான் வருகிறது RH சிஸ்டம்.. அதாவது Rhesus system. (முதல் முதலில் rhesus வகை குரங்கில் கண்டு பிடிக்க பட்டதால் இந்த பெயர் )
இது நமது ரத்த சிகப்பு அணுக்களின் பரப்பில் இருக்கும் இன்னோரு வகை ஆண்டிஜென்கள் .. இந்த RH ரத்தத்தில் இருந்தால் அது பாசிட்டிவ்.. இல்லை என்றால் நெகட்டிவ். அவ்ளோ தான்.
அதாவது ஒரு AB வகை ஆள் இருக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் அவர் ரத்தத்தில் இந்த RH ஆண்டிஜென் இருந்தால் அவர் AB + RH இல்லை என்றால் AB - அவ்வளவு தான்.

இந்த RH ஆன்டிஜென்னுக்கும் முன்பு நாம் பார்த்த ABO ஆன்டிஜென்னுக்கும் ஒரு முக்கியமான வித்யாசம் என்ன வென்றால்... RH நெகட்டிவ் இருக்கும் ரத்தம் RH யை எதிர்க்கும் ஆன்டிபாடியை கொண்டு இருப்பது இல்லை. ஆனால் ABO வகையில் குறிப்பிட்ட ஆன்டிஜென் இல்லை என்றால் அங்கே அந்த குறிப்பிட்ட ஆன்டிஜென்னை எதிர்க்கும் ஆண்ட்டி பாடி உள்ளது என்று அர்த்தம்.

சரி எந்த வகை என்பதை ஆய்வகத்தில் எப்படி சோதனை செய்து கண்டு பிடிக்கிறார்கள்.. ?
அதற்க்கு இரண்டு வழிமுறைகள் உண்டு ஒன்று forwed method.. இனொன்று reverse method .. இரண்டுமே மிக எளிமையான சோதனை தான்.

1. Forwed method :

ஆய்வாளர் தன்னிடம் இரண்டு கலவைகளை வைத்திருப்பார் ஒன்று anti A அதாவது A வகை ஆன்டிஜென்னை எதிர்க்கும்
ஆன்டிபாடி. இனொன்று anti B .

ரத்தத்தில் இரண்டு கலவையையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து பார்ப்பார்  ஆன்ட்டி ஏ கலவைக்கு வினைபுரிந்து ரத்தம் கொத்துக்கொத்தாக மாறத் தொடங்கினால் அங்கே B வகை ரத்தம் இருக்கிறது என்று பொருள்.
ஆண்ட்டி B க்கு வினை புரிந்தால் A வகை ரத்தம் இருக்கிறது என்று பொருள்.
இரண்டு கலவை களுக்குமே வினை புரிந்தால் AB வகை இருக்கிறது என்று பொருள்.
இரண்டு கலவை களுக்குமே வினை புரியவில்லை என்றால் O வகை ரத்தம் என்று பொருள்.

2. Reverse methode :

ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்கள் நீக்க பட்ட வெறும் பிளாஸ்மா வை எடுத்து கொள்வார்கள். இதை முன்பே வகை அறிந்த A வகை ரத்தம் மற்றும் B வகை ரத்தத்துடன் தனி தனியாக கொஞ்சம் கலந்து பார்ப்பார்கள்.. எதில் வினை புரிகிறது என்பதை வைத்து கண்டு பிடித்து விடுவார்கள்.

சரி அடுத்த கேள்வி .. அந்த பாசிட்டிவ் நெகட்டிவ் எப்படி கண்டு பிடிப்பார்கள் ?
அதாவது RH இருக்கா இல்லையா என்று ?
இதற்க்கு ஆய்வாளர்கள் RH ஆன்டிபாடி கலவை வைத்து இருப்பார்கள். இதை கலந்து பார்ப்பார்கள். வினை புரிந்தால் பாசிட்டிவ் வினை ஏதும் நடக்க வில்லை என்றால் நெகட்டிவ்.

சரி ரத்தத்தில் உள்ள கொடுக்கல் வாங்கல் தகவல் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்

Universal red cell donors:

O negative ரத்த வகை காரர்கள் ரத்தத்தில் A, B மற்றும் Rh என்று எந்த antigens களும் இருப்பது இல்லை எனவே இவர்கள் எந்த வகை ரத்தம் கொண்டவர்களுக்கும் ரத்தத்தை கொடுக்கலாம் எனவே இவர்கள் யுனிவர்சல் ரெட் செல் டொனர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Universal recipients:

AB வகை ரத்தம் கொண்டவர்கள் A மற்றும் B antigens களை பெற்று இருப்பதால்  அவர்கள் எந்த வகை இரத்தம் இடம் இருந்தும் ரத்தத்தைப் பெற முடியும் எனவே இவர்களை யூனிவர்சல் ரெசிப்ட்டன்ஸ்  என்று அழைக்கிறார்கள் .
மேலும் இந்த AB வகைகளில் எந்த ஆன்டிபாடியும் இல்லாமல் இருப்பதால் இவர்கள் பிளாஸ்மாவை யாருக்கும் கொடுக்க முடியும் எனவே இவர்களை
Universel plasma donar என்று அழைக்கிறார்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று என்னவென்றால் நெகட்டிவ் வகை இருப்பவர்கள் இன்னொரு பாசிட்டிவ் வகை யில் இருந்து ரத்தத்தைப் பெற முடியாது காரணம் நெகட்டிவ் என்றால் RH இல்லாமை என்று பார்த்தோம் இந்த ரத்தத்தில் RH ஆண்டிஜென்னை புகுத்தும் போது அது இதனை எதிரியாக கருதி எதிர்ப்பு உண்டாக்குகிறது. (ஆண்ட்டி RH )
அதுவே பாசிட்டிவ் காரர்கள் பாசிட்டிவ் இடமும் வாங்கலாம் நெகட்டிவ் இடமும் வாங்கலாம்.

எப்பவுமே பாசிடிவா இருக்கிறது நல்லது தானே....

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"