" கொலம்பஸ் எனும் கொடூர கொலையாளி"



.            

      கொலம்பஸ் எனும் கொடூர கொலையாளி

(கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு)

டெஸ்லா கட்டுரை ஒன்றில் எடிசன் பற்றிய மக்கள் அறியாத புது கோணத்தை ...அவரது இன்னொரு முகத்தை பற்றி கூறி இருந்தேன். இன்றைக்கும் எனது கட்டுரை அதை தான் செய்ய போகிறது.

இன்றைக்கு நான் வெளிச்சம் போட்டு காட்டஇருக்கும் முகத்திற்கு சொந்தக்காரர் அணைத்து மாணவர்களும் நன்கு அறிந்த ஒருவர் அவர்தான் அமெரிக்காவை கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்..

நமது பாட புத்தகங்களில்  கோலம்பஸ் ஐ ஒரு நல்ல கண்டுபிடிப்பாளர் ரேஞ்சுக்கு புகழ்ந்து மரியாதையாக சொல்லப்பட்டிருக்கிறது.. ஆனால் உண்மையில் கொலம்பஸ் என்ற அந்த மனிதன் எப்படி பட்டவன் தெரியுமா?

அது 1492 கால கட்டம் ...
ஐரோப்பா கண்டம் உலகின் பல பகுதிகளில் காலணிகளை அமைத்து அவர்களது ரத்தத்தை உறிஞ்சி கொழுத்து கொண்டு இருந்த காலம் இன்னும் வேற எங்கெல்லாம் இளிச்சவாய் நாடு இருக்கு போய் அடிமை படுத்தலாம் என்ற அதிகார வெறி கொண்டு அலைந்து கொண்டு இருந்த போது.. இந்தியா அவர்கள் கண்ணை உறுத்தியது... ஐரோப்பாவிலிருந்து அப்படியே கிழக்கே நில பகுதி வழியாக சென்றால் இந்தியாவை சென்றடையலாம் என்று அவர்களுக்கு தெரியும் ஆனால் அதை எளிமையாக மேற்கு நோக்கி கடல் வழியே சென்றடைய முடிந்தால் நன்றாக இருக்கும் என சிந்தித்தார்கள் .. இத்தாலியை சேர்ந்த கொலம்பஸ் தான் இந்த ஐடியாவை கொடுத்தார்..

பிறகு ஏசுபாணிய பேரரசு இவர் கேட்ட பொருள் உதவிகளை செய்து இவரை கடல் பிரயானத்திற்கு அனுப்பியது... இந்தியாவின்  கடல் மார்க்க வழியை கண்டுபிடிப்பது தான் இவர் நோக்கம்.
அந்த நோக்கத்தின் நோக்கம் ....அடிமையாக்க ஒரு புது நாட்டை தேடுவது..

மேற்கு நோக்கி அப்படியே பிரயாணம் செய்து கொண்டு போய் 1492 இல் இந்தியாவை கண்டு பிடித்து விட்டேன் என்று கூவி கொண்டு அவர் கண்டு பிடித்தது அமெரிக்காவை...
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிக்கும் முன்பே அதில் ஜப்பான் உள்ளிட்ட  பல நாடுகளில் இருந்து பழங்குடியினர் சென்று குடியேறி இருக்கும் நிலையில் கொலம்பஸ் தான் அமெரிக்காவை கண்டு பிடித்தது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? வெளி உலகுக்கு தெரியாமல் இப்படி ஒரு கண்டம் இருப்பதை உலகிற்கு விளம்பரம் செய்தார் கொலம்பஸ் அவவளவு தான்.

இன்னோரு கொடுமை என்ன வென்றால் தன் வாழ்நாள் முழுதும் தான் கண்டு பிடித்தது இந்தியாவை தான் என்று நம்பிகொண்டே இருந்து கடைசிவரை உண்மை தெரியாமல் இறந்து போனார். அவருக்கு பின் அமெரிக்கா வை சென்றடைந்த அமெரிகொ வேஸ்புகி தான் அட லூசு பசங்களா இது இந்தியா இல்ல டா என்று கண்டு சொன்னார் எனவே அந்த நாட்டிற்கு அவர் நினைவாக அமேரிக்கா என பெயர் இட்டனர்...

கொலம்பஸ் எதையும் உருப்படியாக கண்டு பிடித்த கண்டுபிடிப்பாளன் அல்ல என்பதை பார்த்தோம் இனி அவனது கொடூர முகம் எப்படி பட்டது என்பதை பார்ப்போம்..

அவர் முதல் முதலில் அமெரிக்காவில் ( அவரை பொறுத்த வரை இந்தியாவில்) காலடி எடுத்து வைத்த போது அங்கே குடி இருந்தவர்கள் அரவாக் எனும் பழங்குடிகள். இவரது கப்பல் தரைத்தட்டியதும் இவரது சரக்கு களை மீட்க ஆட்களை கப்பலில் இருந்து இறக்க அங்கிருந்த பழங்குடியினர் அன்பாக ஓடி வந்து உதவினார்கள் பாவம் அவர்களுக்கு தெரியாது வந்திருப்பது அந்த இனதுக்கே எமன் என்பது.
வந்திருப்பவனின் நோக்கம் புரிந்த போது காலம் கடந்து விட்டிருந்தது.. அந்த இடத்தில் தங்க  சுரங்கத்திற்கு வேலை செய்ய அங்கத்தி ஆட்களையே பயன்படுத்தினான் கொலம்பஸ் ..உழைப்பாளராக அல்ல அடிமையாக .

 ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தங்கத்தை எடுத்து தராத பழங்குடியினரை கையை வெட்டி தண்டனை கொடுத்தான் கொலம்பஸ்.. தனக்கு அடிப்பணியாத மக்களை வரிசையாக வைத்து காலை வெட்டினான் .. அவர்களது பெண்களை தனது ஆட்களுக்கு பரிசாக அளித்தான் கொலம்பஸ்..
நன்றாக வேலை செய்யும் தனது ஊழியர்களுக்கு  கொலம்பஸ் கொடுக்கும் பரிசு..அரவாக் இன பெண்கள்.

அவர்களது குழந்தைகளை எறியும் நெருப்பில் போட்டு பொசுக்கினான் ஆண்களை இழுத்து வந்து கூடாரத்தில் கட்டி போட்டான் பல ஆயிரகணக்கானவர்களை தனது அடிமையாக ஆக்கினான்.
திரும்பி ஊருக்கு போகும் போது நூற்று கணக்கான சிறுமிகளை அள்ளி சென்று ஐரோப்பாவில் விற்று காசாக்கினான்..
தனது மூன்றாவது பயணத்தில் இத்தாலி சென்ற இந்த கொலம்பஸ் வரும் போது வேட்டைநாய்களை கொண்டு வந்தான் .. எதற்கு தெரியுமா தன்னிடம் மாட்டி கொண்ட பல பெண்களை குற்றுயிர் குலைஉயிர் நிலையில் வைத்திருந்தான் கொலம்பஸ் அவர்கள் அனைவரையும் நாய்களுக்கு இறையாக்கினான்..

இந்த நாய் கேம் அவனுக்கு மிக பிடித்து போயிற்று... பிறகு தனக்கு மதிக்காத பழங்குடியினர் களை வெட்டி நாய்க்கு போட்டான். ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அரவாக் இன மக்கள் பல பேர் கும்பலாக கூட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்..
குறிப்பாக சிறுமிகள் மிக கேவலமாக சீரழிக்க பட்டார்கள்.
தனது டைரி குறிப்பில் ஒரு முறை இப்படி குறிப்பிட்டான் கொலம்பஸ் "வயது வந்த பெண்களின் எண்ணிக்கை குறைந்து போன காரணத்தால் எங்கள் ஆட்கள் 10 ..12 வயது சிறுமிகளை தேடி சென்றார்கள்)

இவ்வளவு செய்திருக்கிறார்களே அந்த அரவாக் இண மக்கள் எதிர்த்து போராட வில்லையா என நீங்கள் கேட்கலாம்.. அவர்கள் சண்டைபோட அவர்களிடம் ஆயுதமே இல்லை ..காரணம் அவர்கள் இனத்தில் சண்டை சச்சரவு ஏதும் இருந்திருக்க வில்லை... ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக அன்பாக அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் மிகவும் அப்பாவியான வெள்ளந்தி மனிதர்கள் அரவாக் இனத்தவர்கள்..

இது வரை நான் சொன்னது உங்களுக்கு கொலம்பஸ் மேல் கோபத்தை வெறுப்பை உண்டு பண்ணாமல் இருக்கலாம் ஆனால் இப்போது சொல்ல போவது உங்களை கொலம்பஸ் ஐ வெறுக்க வைக்கும் ..அதாவது சற்றே சிந்தித்து பாருங்கள்.. அந்த இனத்தை இந்தியர் என நினைத்து தான் இவ்வளவு கொடுமைகளை செய்துள்ளான் கொலம்பஸ் ஒரு வேலை உண்மையிலேயே அவன் உண்மையான இந்தியாவை வந்தடைந்து இருந்தால் அவன் வந்தடைந்த இந்திய இடம் எப்படி பட்ட கொடுமையை சந்திதிருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள் ....

Comments

  1. மிகவும் வருத்தமான உண்மை... கோபம், கல்வியாளலர்கள் மீது தான். இப்படி பட்ட ஈன பிறவிகளை புகழ்ந்து, வரலாற்றினை திருத்தி தவறான பாடங்களை நமக்கு இன்றளவும் தந்த வண்ணம் உள்ளனர்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"