" அடுப்படி_அறிவியல்"




.            

               "  அடுப்படி அறிவியல்"

(கருத்தும் எழுத்தும் : ரா_பிரபு)

மைக்ரோவேவ் ஓவன் பார்த்திருப்பீர்கள் அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
சாதாரண மின் வெப்ப கருவிக்கும் இதற்கும் மிக பெரிய வேறுபாடு உள்ளது .மற்ற எல்லா வகை அடுப்புகளும் பொருட்களை மேலேயிருந்து உள்நோக்கி தானே சூடு படுத்தும் ஆனால் இது பொருட்களை உள்ளேயிருந்து வெளி நோக்கி சூடு பண்ணும் ஆச்சர்யமாக இருக்கிறது அலல்லவா.

காரணம் இதன் வேலை செய்யும் விதத்தில் பக்கா அறிவியல் இருக்கிறது.

இது சூரியன் நம்மை சுடுவது எதை கொண்டோ அதே போல தான் பொருளை சூடாக்குகிறது அதாவது கதிர் வீச்சை கொண்டு.
 நம் வீட்டில் உள்ள ரேடியோ டிவி போல மைக்ரோவேவும் எலெக்ட்ரோமாக்னடிக்கில் வேலை செய்யும் ஒரு கருவியாகும்.

மற்ற மின் அடுப்பை போல் இதில் பொருளை சூடாக்க heating element போன்ற எந்த பகுதியும் இல்லை.
அதற்கு பதில் மைக்ரோ வேவ் ஐ உற்பத்தி செயும் ஒரு சாதனம் உள்ளது அதற்கு meganetran என்று பெயர் அதில் உற்பத்தி செய்ய படும் ரேடியோ அலைகள் இடையில் ஒரு தட்டில் வைக்க பட்டுள்ள உணவு பொருளில் பீச்சி அடிக்க படுகிறது மேலும் அவனின் கண்ணாடி போன்ற பரப்பு மீண்டும் மீண்டும் அலைகளை எதிரொலிக்கிறது
சாதாரணமாக எலெக்ட்ரோமேக்னடிக் பல பொருட்களின் அணுக்கள் வாயிலாக ஊடுருவ கூடியது..எனவே வைக்க பட்ட உணவின் உள்ளே ஊடுருவி அதன் மூலகூரை அதிர்வடைய செய்து அதை சூடாக்குகிறது.

ஒரு எச்சரிக்கை
சாதாரணமாக மைக்ரோவேவ்கள் உயிருள்ள தசைகளை தாக்கி அழிக்க கூடியது எனவே மைக்ரோவேவ் அவன் பக்கா பாதுகாப்பாக மூட பட்டிருக்கும் அதில் அஜாக்ரதையாக இருப்பது ஆபத்தானது.

சாதாரமாக நாம் பயன்படுத்தும் மைக்ரோவேவ்வனிலும் மகத்தான அறிவியல் உள்ளது தான் அல்லவா.?

சரி மைக்ரோ வேவ் ஓவன் பத்தி தெரிஞ்சாச்சு .. இந்த இண்டெக்ஷன் ஸ்டவ் பார்த்திருப்பீர்கள் அது மட்டும் என்னவாம் அது வேலை செய்யும் விதத்திலும் பக்கா அறிவியல் உள்ளது தெரியுமா?அதிலும் சூடாக்க heating element ஏதும் இல்லை.

தெருவோரத்தில் நாம் காணும் ட்ரான்ஸ்பார்மரும் induction stove உம் ஒரே தத்துவத்தில் தான் வேலை செய்கிறது தெரியுமா?

ட்ரான்ஸபார்மரில் ப்ரைமரி காயில் செகண்டரி காயில் ரெண்டு இருக்கும் அதில் ப்ரைமரியில் alternative current கொடுக்க படும் போது அது ஒரு மாறுபடும் electro magnetic flux ஐ உற்பத்தி செய்யும் அது செகண்டரி காயிலில் மோதி அங்கே கரண்ட் உற்பத்தி ஆகும் (கூடவே ட்ரான்ஸ்பார்மர்
ரொம்ப சூடும் ஆகும். )

இந்த induction stove இலும் ப்ரைமரி காயிலில் மாறுபடும் magnetic flux உற்பத்தி ஆகும் ..ஆனால் அது வெட்டுவது செகண்டரி காயிலில் அல்ல நாம் வைக்கும் பாத்திரத்தில்..எனவே பாத்திரத்தில் உணர முடியாத அளவு குறைந்தளவு மின்சாரமும் அதிக அளவு வெப்பமும் உண்டாகும்..

உற்று கவனித்தால் அடுபடியிலும் பல அற்புத அறிவியல் பொதிந்து கிடக்கிறது அல்லவா...

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு


Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"