முழுமை எனும் உண்மை (பாகம் 2) ஆன்மீகத்தின் அறிவியல் அலசல்


முழுமை எனும் உண்மை (பாகம் 2)
ஆன்மீகத்தின் அறிவியல் அலசல்

கருத்தும்,எழுத்தும்( ரா.பிரபு)

நாம் பார்க்கும் உலகை மாயை என்கிறார்களே அதை  அறிவியல் ரீதியாக விளக்க முடியுமா?
சொல்கிறேன் ...
தொடர்ந்து படியுங்கள்..

 அப்பாலுக்கு அப்பால் பிரபஞ்சத்தில் என்ன உள்ளது என்பதை எட்டி பார்க்கும் போது மனிதனால் ஒரு கட்டத்துக்கு மேல் விஷயங்களை கற்பனையில் கூட  புரிந்து கொள்ள முடியவில்லை உண்மையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் அது முழுமையாக இருப்பது தான் என்பதை போன கட்டுரையில் நான் விளக்கி இருந்தேன்.

சரி நமது புரிதல் எல்லைக்கு உட்பட்டு நாம் புரிந்து கொண்ட அனைத்தும் அறுதியிட்டு உண்மை என சொல்ல முடியுமா..என்றால்.. முடியாது..

எனது ஐன்ஸ்டைன் கட்டுரைகளில் ஆரம்பத்தில் சொன்னதை போல பல உண்மைகளை நாம் உண்மை என சொன்னாலும் அது நமது கண்ணோட்டத்தில் மட்டும் தான் உண்மை..
 அது உண்மையான உண்மை அல்ல.. உதாரணமாக ஒரு இருட்டை பார்த்து நாம் இது இருட்டு என முத்திரை குத்துகிறோம் .ஆனால் அது நமக்கு மட்டும் தான் இருட்டு அக சிவப்பு பார்வை கொண்ட பாம்பு மற்றும் முதலை போன்ற உயிரினங்களுக்கு அது இருட்டு அல்ல.. அவை முழு இருட்டில் உயிரினங்களை மிக சிறப்பாக பார்க்க கூடியவை..
இப்படி மனிதன் கண்டு கொண்டதாக சொன்ன எதுவும் .. அவனை பொறுத்த வரை தான் அது உண்மை ...உண்மையான உண்மை அல்ல...

பூமி மிக பெரிய பந்து.. யாரை பொறுத்த வரை என்றால் மனிதனை பொறுத்த வரை...பூமியை போல 10 லட்சம் மடங்கு பெரிய சூரியனையும்...அந்த சூரியனை விட 10 லட்சம் மடங்கு பெரிய நட்சத்திரத்தை.. அதை போன்ற பல மடங்கு நட்சத்திரத்தை அதை போன்ற பல கோடி நட்சத்திரங்களை கொண்ட நமது பால் வெளி திரள் என்ற கேலக்சியை... இதை போன்ற பல கோடி காலக்சிகளை கொண்ட இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி... நமது சூரியன் இவைகளை பெரிசு என்று சொன்னால் அது மிக பெரிய காமெடி..

 எனவே நாம் பெரிது எண்று நம்புவது பெரிது அல்ல சிறுது என்று நம்புவது சிறிதும் அல்ல வெளிச்சம் என்று நம்புவது வெளிச்சம் அல்ல இருட்டு என நம்புவது இருட்டு அல்ல ஆக மொத்தத்தில் இந்த உலகம் இந்த பிரபஞ்சம் நாம் பார்க்கும் விதமாக புரிந்த கொண்ட விதமாக உள்ளதெல்லாம் நமக்கு மட்டும் தான் உண்மையான உண்மை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது..

வெளி உலகில்.. அறிவியல் ரீதியில் விடுங்கள்..அன்றாட வாழ்வியலில் நீங்கள் புரிந்த கொண்ட விஷயங்கள்..உலகத்தின் நல்லது கேட்டது... இன்னார் நல்லவர் இன்னார் கேட்டவர்.. பாவம் புண்ணியம் தர்மம் எல்லாவற்றையும் உங்கள் கன்னோட்டத்தில் மட்டும் தான் புரிந்து கொண்டுள்ளீர்கள்..உண்மையான உண்மையை அல்ல.. எனவே நீங்கள் பார்க்கும் இந்த உலகத்தை (உங்களை பொறுத்த வரை )மாயை என்று சொல்லலாமா?

இந்த ரீதியில் சில பேர் சிந்திக்க தொடங்கினார்கள்..நாம் உணர்வது பார்ப்பது மாயை என்றால் அப்போது உண்மை என்பது எது அது  எப்படி பட்டது...
உலகத்தில் அறிவியல் தாகம் கொண்ட பல பேர் அண்டவெளி அணுக்கரு என பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருக்க இன்னும் சில வகை விஞ்ஞாணிகள் தனக்குள் என்ன இருக்கிறது என்பத்தில் தேடல் கொண்டார்கள். உண்மையான ஆன்மீகத்தின் வித்துக்கள் அவர்கள் தான்.

தினம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவது ..பூஜை செய்வது ..விரதம் இருப்பது.. இதை செய்து விட்டு ஆன்மீக உச்சத்தை அடைந்து விட்டதாக சொல்பவர்களின் கதை எப்படி பட்டது என்றால் தினம் கடற்கரை சென்று கடலை பார்த்தவர்கள் நான் கடலை பார்த்திருக்கிறேன் என சொல்வதை போல .

உன்மையில் அதுவா கடல்.? அது எவ்வளவு ஆழம், அகலம் , அற்புதம், மற்றும் அசாத்தியங்களை கொண்டது?
அந்த ஆழத்தை எட்டி பிடித்தவர்களை தான் உண்மையில் கடலை கண்டவர்கள் என்று அழைப்பது நியாயம்..

அதனால் இந்த கட்டுரை தொடரில் நான்  பூஜை புனஸ்காரத்தை பற்றி ராமனின் முருகனின் பிள்ளையாரின் பெருமைகளை பற்றி எல்லாம் பேச போவதில்லை அவ்வளவு ஏன் கடவுளை பற்றியே பேச போவதில்லை.. கடவுளை பற்றி பேசாமல் ஆன்மீக கட்டுரையா என கேட்டால் உங்களுக்கு இரண்டு பதில்... ஒன்று இது ஆன்மீக கட்டுரையே அல்ல முழுக்க முழுக்க அறிவியல் கட்டுரை... என்ன... இம்முறை தனக்குள்ளே தேடுகிறது...
பதில் இரண்டு... கடவுளே இல்லாத மதமே உள்ளதே (புத்தம் சமணம் தாவோ.. ஜென்..) கட்டுரை இருக்க முடியாதா..

எனவே ஐன்ஸ்டைன் இந்த புற உலகை ஆராய்ந்து என்ன சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்வதை போல அக விஞ்ஞாணிகள் என்ன உண்மைகளை கண்டு சொன்னார்கள் என்பதை தான் மிகுந்த அறிவியல் பார்வை கொண்டு பார்க்க போகிறோம்.

சரி இப்போ தனக்குள் உற்று பார்த்தவர்கள் என்ன கண்டு சொன்னார்கள் என்பதை பாப்போம்..

நிலாவில் யாரவது பாட்டியையும் அவர் சுட்ட வடையையும் தேடி போய்அங்கே அப்படி ஒன்னும் இல்லயே என ஏமாந்தால் எப்படி இருக்கும் அப்படி தனக்குள் உள்ள மனதை அது என்ன மனது எப்படி பட்டது என்பதை ஆராய முற்பட்டவர்கள் மனம் என்ற ஒன்றே நமக்குள் இல்லை என்பதை கண்டு திகைத்தார்கள்.
இது என்னையா கூத்து நமக்குள் இருந்து நம்மை இயக்குவது நம்மை கோப பட வைப்பது சிரிக்க வைப்பது வருத்த பட வைப்பது எல்லாம் மனம் தானே அதை போய் இல்லைனு சொன்னா எப்படி என்று அவர்களிடம் கேட்டால்.. சாரி மனம் என்ற ஒன்று மனிதனுக்கு இயற்கை வழங்கிய ஒன்று அல்ல என்பது தான் எங்கள் ஆய்வு முடிவு சொல்கிறது என்கிறார்கள்...

 தனக்குள்ளான தேடல் பாதையில் உள்ள ரமணர் ... ராமகிருஷ்ணர்.. விவேகானந்தர்..புத்தர்...மகாவீரர் இப்படி எல்லோரின் முடிவும் ஒன்றாக இருக்கிறது' நமக்குள் மனம் என்ற ஒன்று இல்லை'
அதை எப்படி நீங்கள் கண்டு கொண்டீர்கள் என கேட்டால் மனம் இல்லாத நிலையில் நாங்கள் இருந்து பார்த்தோம் என்கிறார்கள் அப்படி எப்படி இருக்க முடியும் என்று கேட்டால் தியானம் என்கிறார்கள்..

ஐயா தியானம் ஆழ்நிலை புரிதல் உள்ளொளினு எல்லாம் பேசாம எங்களுக்கு புரியர மாதிரி சொல்லுங்கள் மனம் இல்லாத நிலையை நாம் உணர்ந்து பார்க்க என்ன செய்ய வேண்டும் எனக்கு தியானம் செய்ய எல்லாம் டைம் இல்ல என நீங்கள் கேட்டால். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் உங்களையே அறியாமல் நீங்கள் பல இடத்தில பல முறை மனம் அற்ற நிலையை  உணர்ந்து இருக்கீறீர்கள்.. நீங்கள் சாலையில் வண்டி ஒட்டி கொண்டு ஏதோ சிந்தனையில் செல்கிறீர்கள் திடீரென ஒரு தண்ணீர் லாரி உங்களை இடிக்கு குறுக்கே வந்தால் திடீரென்று உங்கள் சிந்தனை எல்லாம் காணாமல் போய் ஒரு அலர்ட்னஸ் கு வந்து விடுகிறீர்கள் அந்த கணத்தில் அந்த ஒரு நொடியில் உங்களிடம் மனம் இருப்பது இல்லை.. நீங்கள் முழு விழிப்பில் இருக்கிறீர்கள் ..இப்படி பிளான் பண்ணி இப்படி நகர்ந்து தப்பிக்க வேண்டும் என்று உங்கள் மனதில் எதையும் யோசித்து நீங்கள் தப்பிப்பது இல்லை.. அது விழிப்புணர்வால் அனிச்சையாக நடக்கிறது..

நாலு பிரன்ட்ஸ்களுடன் ஜாலியாக கதை பேசி சிரிக்கிறீர்கள் மிக அதிகமாக சிரித்து விட்டால் அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா அதற்கு காரணம் சிரிப்பு உங்கள் மனதை துடைத்து சிந்தனை அற்றதாக ஆக்கி விட்டதால் நீங்கள் மனம் அற்று போகிறீர்கள்..
கனவுகள் இல்லாத மிக ஆழ்ந்த உறக்கத்தில் உங்களிடம் மனம் இருப்பது இல்லை..சிறு குழந்தையாக குறிப்பிட்ட வயது வரை நம்மிடம் மனம் இருப்பது இல்லை..அதீத உயிர் ஆபத்தில் மனம் இருப்பது இல்லை..

சரி மனம் இல்லாத போது நமக்குள் என்ன இருக்கிறது என கேட்டால் அதற்கு ஆன்மீக விஞ்ஞாணிகள் சொல்லும் பதில்.." மனம் ஒரு மேகம் போல தான் படர்ந்துள்ளது அதை வானம் என நம்புகிறோம் மனம் எனும் மேகம் விலகினால் தெரிவது பரிசுத்த வானம் அந்த வானத்தின் பெயர் விழிப்புணர்வு " என்கிறார்கள்..

தன்னை உணர்தல் என்ற விஞ்ஞாணத்தின் அச்சாணியே இந்த விழிப்புணர்வுதான்... அதை மையமாக வைத்துதான் அணைத்து ஆன்மீகமும் சுற்றி வருகிறது.
தியானத்தில் என்ன கிடைக்கிறது என்றால் விழிப்புணர்வு என்கிறார்கள்..அந்த விழிப்புணர்வு என்பது என்ன அது எப்படி பட்டது...
ஆமாம்...... விழிப்புணர்வு அடைவதை ஆன்மிகம் என்கிறீர்களே அப்போ கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது தவறா... அப்படி நம்பிக்கை வைப்பவர்களை எப்படி எடுத்து கொள்வது..அப்போ பக்தி என்பதின் அர்த்தமே இல்லயா... ?

தனக்குள் தேடும் தேடல் ......தொடரும்.....

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"