"குவார்ட்ஸ் வாட்ச் ஒரு குறுக்கு பார்வை"

.      





   "குவார்ட்ஸ் வாட்ச் ஒரு குறுக்கு பார்வை"

(கருத்தும் ,எழுத்தும் : ரா_பிரபு)

கடிகாரங்களில் இந்த குவார்ட்ஸ் கடிகாரங்கள் இருக்கிறதே... அதில் ஒரு அறிவியல் அடங்கி இருக்கிறது (எதுலதான் அறிவியல் இல்ல?)
Quartz என்பது என்ன பொருள் அது கடிகார இயக்கத்திற்கு எப்படி பயன்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்...

முதலில் சாதாரண பெண்டுல கடிகாரம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம் .
கடிகாரத்தை இயக்க அதன் முட்களை நகர்த்த நாம் எந்த விதமான விசையை பயன்படுத்தினாலும் அதற்கு ஒரு கண்டிஷன் மிக முக்கியமானது அதாவது நாம் கொடுக்கும் விசை ஒரே சீரானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கடிகாரம் ஒரு நேரம் வேகமாக ஒரு நேரம் மெதுவாக ஓடி தவறான நேரத்தை காட்டும்.
பெண்டுல கடிகாரத்தில் இப்படியும் அப்படியும் அலைந்து ஆடும் அந்த பெண்டுலம் இருக்கிறதே .அது ஒரே சீரான வேகத்தில் அலைய கூடியது.. எனவே அதனுடன் இணைக்க பட்ட கியர் அமைப்பின் மூலம் கடிகார முட்களுக்கு சுழற்சியை கொடுத்தால் அது ஒரே சீராக இருக்கும்.
மேலும் அந்த பெண்டுலத்தின் நீளத்தை ஒரு குறிப்பிட்ட அளவு வைப்பதன் மூலமாக சரியாக ஒரு வினாடி நேரத்திற்கு ஒரு அலைவு உண்டாகிற மாதிரி செய்யப்பட்டிருக்கும் அதாவது ஒரு வினாடிக்கு ஒரு நகர்வை அதால கொடுக்க முடியும்
 அந்த நகர்வு விசை படி படியாக வினாடி முள் மற்றும் நிமிட முள்ளுக்கு கடத்த பட்டு கடிகாரம் இயங்கும்..
அந்த பெண்டுலம் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு நின்று விடாமல் இருக்க அதற்கு தொடர்ந்து விசையை கொடுக்க  ஒரு சுருள் கம்பி அமைப்பு (spring) இருக்கும். அதை சாவி கொடுத்து முறுக்கி விட்டால் அதன் சுருள் முறுக்கி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரிலீஸ் ஆகி வர வர பெண்டுலத்திற்கு சக்தி அளித்து கொண்டிருக்கும் சுருள் முழுதும் விடுபட 24 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் அதற்குள் நாம் அடுத்த முறை மீண்டும் சாவி கொடுத்து விடுகிறோம் .

இந்த பெண்டுலம் ஒரே சீராக ஊசலாடுவது... அதன் நீளம் அதிகமானால் வேகம் குறைவாக இருப்பது நீளம் குறைந்தால் வேகம் அதிகமாக இருப்பது இதையெல்லாம் முதலில் கவனித்து ஆராய்ந்தது யார் தெரியமா அது வேற யாரும் இல்ல நம்ம கலிலியோ தான்.(ஆமா...ம் கலிலியோக்கு இன்னும் நாம கட்டுரை ஏதும் போடல இல்ல... ரைட்டு சாருக்கு சீக்கிரம் ஒரு கட்டுரை போட்டுட வேண்டியது தான்)

ஒரு சர்ச்சின் மேர்கூரையில் தொங்கி கொண்டிருந்த ஒரு விளக்கு காற்றில் இப்படியும் அப்படியும் ஆடுவதை பாராக்கு பார்த்து கொண்டிருந்தார் கலிலியோ அப்போது  அந்த விளக்கு ஒரே சீராக ஊசலாடுவதை கவனித்தார். அதை தொடர்ந்து தான் ஊசல் தத்துவத்தை குறித்து பல வகை சிந்தனை தோன்றியது .(விளக்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிடிச்சு)

இப்போது quartz என்பது என்ன அது எப்படி கடிகாரத்திற்கு பயன் படுகிறது என்பதை பார்ப்போம்..

குவார்ட்ஸ் நமக்கு இயற்கையில் கிரிஸ்டல் வடிவத்தில் கிடைக்கிறது. இது கிடைக்காத அறிய பொருள் எல்லாம் இல்லை பூமி தட்டில் மிக அதிகமாக கிடைக்கும் கனிமங்களில் குவார்ட்ஸ் இரண்டாம் இடம் வகிக்கிறது (முதல் இடத்தில வகிப்பது feldspar)
இது சிலிகான் டை ஆக்ஸைடு என்ற வேதி கூட்டு பொருளால் ஆனது.
முக்கியமாக இது piezoelectric தன்மையை கொண்டது இந்த தன்மைதான் இதை கடிகாரத்திற்கு பயன்பட தகுதியுள்ளவையாக ஆக்குகிறது.

Piezoelectric என்றால்... அந்த கனிமத்தை நீங்கள் முருக்கினால்...அல்லது வளைத்தால்.. அது electric pulse களை வெளியிட கூடியது...என்று பொருள்..
இந்த உண்மையை... இந்த தன்மையை...அவைகள் தலைகீழாகவும்
செய்யும் அதாவது நீங்கள் எலக்ட்ரிக் pulse ஐ கொடுத்தால் அது வளையும்.

குறிப்பாக Quarts வாட்ச்களில் பயன் படுத்த படும் quarts கள் பேட்டரி கொண்டு சிறிய மின் சப்ளை கொடுக்கும் போது...மிக சரியாக 32768 முறை துடிக்க கூடியது அதற்கு மேலும் அல்ல கீழும் அல்ல ...அந்த சீரான துடிப்பு ஒரு மைக்ரோ சிப்பால் உணர பட்டு அதை சாதாரண எலக்ட்ரிக் பல்ஸாக மாற்றுகிறது.. என்ன விசேஷம் என்றால் சரியாக ஒரு வினாடிக்கு ஒரு எலக்ட்ரிக் pulse கொடுக்கிறது... அது சிறிய அளவு மின்சாரம் ஒரு மிக சிறிய ஸ்டெப்அப் மோட்டரை இயக்கு கிறது அந்த மோட்டர் கியர் அமைப்பினால் கடிகார முல்லை இயக்குகிறது

அடுத்த முறை quarts watch ஐ பார்த்தால்  அடே எப்பா உள்ள இவ்ளோ மேட்டர் நடக்குதா? என வியக்கலாம்....

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"