" வாயேஜர் ஒரு வியப்பான வண்டி"




.              

        "வாயேஜர் ஒரு வியப்பான வண்டி"

(கருத்தும் எழுத்தும் :#ரா_பிரபு)

உங்களுக்கு வாயேஜர் 1 என்ற வண்டியை பற்றி தெரியுமா? ஏதோ புது மாடல் கார் என்று எண்ணிவிட வேண்டாம். இது ஒரு செயற்கைகோள் .
எத்தனை இசை அமைப்பாளர் வந்தாலும் இளையராஜா ஒரு தனி இடத்தை பிடித்து இருப்பதை போல விண்கலங்களிலேயே விஞ்சாணிகள் மனதில் தனி இடம் பிடித்துள்ள விண்கலம் தான் வாயேஜர் 1.
நேற்றைக்கு விட்ட ராக்கெட் இந்திய பெருங்கடலிலும் முந்தாநாள் விட்ட ராக்கெட் பசிபிக் கடலிலும் விழுந்து  கிடக்க 1977 இல் விட்ட ஒரு வண்டி கிட்டத்தட்ட  40 ஆண்டுகள் கழித்து இன்னும் கடமை உணர்ச்சி தவறாமல் வேலை செய்கிறது தகவல் அனுப்பி கொண்டு உள்ளது என்பது எவ்வளவு ஆச்சர்யம்?

இப்போது அது எங்கே உள்ளது? புவி சுற்றுப்பாதையிலா அல்லது நிலவின் சுற்று பாதையிலா? அது நமது சூரிய குடும்பத்திலேயே இல்லை.

சூரியனிலிருந்து புறப்படும் சூரிய காற்று (solar wind) ஒரு பிளாஸ்மா சமாச்சாரம் அதாவது திட திரவ வாயு இது மூன்றும் கடந்த நிலை. இது மின்சுமை கொண்ட அயணிகள் கொண்டுள்ளதால் மின்காந்ததால் உந்தப்படுபவை இதன் காரணமாக உண்டாகும் ஆற்றலை கொண்டு சூரியனின் ஈர்ப்புவிசையை மீறி புறப்பட்டு வருபவை. இவை சூரியனின் ஈர்ப்பு விசை எல்லையாகிய ப்ளூடாவின் சுற்றுவட்டம் வரை கண்ணுக்கு தெரியாத ஒரு bubbles போன்ற அமைப்பை உருவாக்கி வைத்துள்ளது சூரியனின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த bubbles போன்ற அமைப்பின் பெயர் helospiar .அந்த சூரிய காற்று இந்த எல்லையை தாண்டி போக முடியாதவை . அந்த எல்லையை தாண்டினால் அதன் பின் அந்த ஏரியா பெயர் interstellar. (அம்மாங்க அந்த movie பெயர் இதனால் தான்)
அந்த எல்லை தாண்டி சென்ற ஒரே வாகனம் வாயேஜர்.

2012 இல் heliosphere எல்லையை வெற்றிகரமாக கடந்தது வாயேஜர் 1. மனிதன் கண்டுபிடித்த பொருளில் பூமியை விட்டு மிக தொலைவு சென்றுள்ள ஒரே பொருள் வாயேஜர் 1
நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்றது மட்டுமே வாயேஜரின் சாதனை அல்ல. அது எடுத்து அனுப்பிய சில படங்கள் மிகவும் இன்றியமையாதவை .

முதல் முதலில் வையேஜர் அனுப்ப பட்ட பொது அதன் பெயர் marinar probs. சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் மற்றும் அதன் நிலவுகளை ஆராய்வதுதான் அதன் வேலை..பின்னாளில் தான் அதற்கு வாயேஜர் என்ற பெயர் வந்தது. வாயேஜர் 2 என்று ஒரு விண்கலத்தையும் அனுப்பினார்கள் நீங்கள் நினைபதை போல வாயேஜர் 1 கு பிறகு அனுப்ப பட்டது அல்ல .வையேஜர் 2 விண்கலம் வையேஜர் 1 கு முன்னாள் அனுப்ப பட்டது அதுவும் தனது கடமையை சிறப்பாகவே செய்தது.

 வெளிகிரகத்தை ஆராயும் முதல் செயற்கை கோல் இது அல்ல pioneer போன்ற விண்கலங்கள் பூமியை விட்டு பல காத தூரம் சென்று ஆராய்ச்சி செய்தவை என்ற போதிலும் அதை எப்போதோ தாண்டி சென்று விட்டது வாயேஜர்.
இது எடுத்து அனுப்பிய வியாழன் மற்றும் சனி யின் மேற்பரப்பு மற்றும் அதன் நிலவுகளின் புகைப்படங்கள் (கிட்டத்தட்ட 3 லட்சம் கிமி நெருங்கி எடுத்தவை) வைத்து தான் அந்த கோள்கள் குறிப்பாக அதன் நிலவுகள் பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிந்தது அதையெல்லாம் புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் இதுதான்.

வாயேஜர் நிறைய வகையில் நம்மை ஆச்சர்ய படுத்துகிறது. இது தகவல் அனுப்ப பூமியை நோக்கியே எப்போதும் இருக்கும் வண்ணம் வைக்க பட்டுள்ள ஆன்டெனா வெறும் 12 அடி தான் .அதை கொண்டு தான் இவ்வளவு தூரம் இன்னும் தகவல் அனுப்பி கொண்டு உள்ளது என்ன..... அதை ரிசிவ் செய்து கொள்ள தான் பூமியில் 100 அடி விட்டமுள்ள பிரமாண்ட ஆன்டெனா கொண்டு படாத பாடு பட வேண்டி உள்ளது.

 ப்ளூடோவை எல்லாம் எப்போதோ தாண்டி சென்றுவிட்ட வாயேஜர் இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 69 A U தொலைவு(A U எனபது astronomical  unit ஒரு AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தோராய தொலைவு)
இப்போது வாயேஜர் என்ன  வேகதில் சென்று கொண்டிருக்கிறது தெரியுமா? வினாடிக்கு 17 கிலோமீட்டர் என்ற அசாத்திய வேகம். இவ்வளவு வேகத்தை கொடுத்தது அந்த வண்டியில் உள்ள வேகமூட்டும் கருவிகள் அல்ல .
இது வியாழன் மற்றும் சனியை நெருங்கிய போது அதன் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி தன்னை வேக படுத்தி கொண்டது.

இவ்வளவு வேலையை செய்யும் அந்த வாயேஜரின் தொழில்நுட்பம் உண்மையில் உங்களின் ஐ போனை விட பல மடங்கு குறைந்தது .
மேலும் அது பயன்படுத்தும் திறன் வெறும் 420 வாட்ஸ் அதாவது கிட்டத்தட்ட ஒரு ஹாலஜன் பல்பு அளவுதான் (எல்லாம் 1977 இல் இருந்த தொழில்நுட்பம் அவ்வளவுதான்)

 இது போற போக்கை வைத்து எதிற்காலத்தில் எங்கே செல்லும் என்றெல்லாம் கூட இப்போதே கணித்து வைத்து விட்டார்கள் அதாவது இன்னும் 300 ஆண்டுகள் கழித்து oort cloud என்ற நட்சத்த்திர கூட்டத்தில் இது நுழையும் அந்த கூட்டத்தை கடக்க  3000 ஆண்டுகள் எடுத்து கொள்ளும் மேலும் இன்னும் 4000 வருடங்களுக்கு அதன் ஜாதக பலன் படி அது எந்த நட்சத்திரத்திலும் மோதாது..
இதையெல்லாம் சொன்னாலும் அதன் பிரோக்ராம் படி 2025 கு பின் வாயேஜர் செயல் படாது என்று சொல்கிறார்கள் அதன் சென்சார் மற்றும் பல வகை உணற்கருவிகள் ஆயுட்காலம் காரண்டி வாரண்டி பீரியடெல்லாம் முடிந்து விடுவதால் செயல் படாமல் போய்விடும்.

இதையெல்லாம் தவிர வாயேஜரில் ஒரு சுவாரஷ்யஷயமான சங்கதி ஒன்று உள்ளது அதில் ஒரு தங்க தகட்டில் பூமியின் பல வகை ஒலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குழந்தையின் அழுகை கடல் அலையின் ஓசை..அமெரிக்க ப்ரெசிடென்டின் உரை இப்படி பல... அங்க ஆளே இல்லாத கடையில யாருக்காக இந்த டீ ஆத்தி இருக்காங்க தெரியுமா வேற்றுகிராகத்தில் மனிதனை போல அறிவுவளர்ச்சி அடைந்த உயிரினங்கள் இருந்தால் அது பூமியை தொடர்பு கொள்ள. (அது predator ,indipendansday Pacific rim, போன்ற படத்தில் உள்ளது போன்றவைகளாக இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை)
இருந்தாலும் வாயேஜர் என்பது ஒரு வியப்பான வண்டி என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு


Comments

  1. அருமையான் எழுத்து நடை! மகத்தான வாயேஜரை வண்டி என குறிப்பிடும் எளிமை+நகைச்சுவை. சூப்பர் ப்ரோ. By this time it may be abondent. நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"