#தேடல்_பெஞ்ச்(4.8.16) "#உலகை_வியந்து_நோக்கும்_குழந்தை'' (கருத்தும் எழுத்தும் :#ரா_பிரபு)

.              #தேடல்_பெஞ்ச்(4.8.16)

"#உலகை_வியந்து_நோக்கும்_குழந்தை''

(கருத்தும் எழுத்தும் :#ரா_பிரபு)

நண்பர் தினேஸ் செல்வமுத்து என்பவர் பெர்முடா பற்றி கேட்டிருந்தார் . எழுதுவதாக சொல்லி விட்டு அவரிடம் ஒன்றை சொன்னேன்.
அதாவது பல பேர் பல முறை பல இடத்தில் அளசிவிட்ட ஒன்றையே ஏன் கேட்கிறீர்கள் ஏதாவது புதுமையாக கேட்கலாமே என்றேன்.

ஸ்ரீ கிஷோர் என்பவர் கூட உங்கள் பகுதி மிக பயனுள்ளதாக புதுமையாக தனித்துவமாக இருப்பதாக சொன்னார் ஆனால் சொல்லிவிட்டு jack the rippar ,gost ..alian..evil world's most deadliest emperor இதை பற்றி எல்லாம் எழுத சொன்னார். பல பேரை போல நாங்களும் மீண்டும் இதையே எழுதினால் அப்புறம் நீங்கள் எங்களை பாராட்டிய புதுமை எங்கே?

இதை பற்றி எழுதுவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை இடை இடையே இதெல்லாம் எழுத தான் போகிறோம் ஆனால்
நம்மை சுற்றி நாம் உள்வாங்காத இன்னும் புரிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள் ,தெரிந்து கொள்ளவேண்டிய அறிவியல் உண்மைகள் , உணர்ந்து கொள்ள வேண்டிய இயற்கையின் ஆச்சரியங்கள் தான் எத்தனை எத்தனை...
மிகவும் சின்ன சின்ன விஷயத்திலும் நாம் இன்னும் அறிந்து கொள்ளாத உண்மைகள் தான் எவ்வளவு...

உதாரணமாக சமீபத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மரம் வளர்ப்பை பற்றி பேச்சு வரும் போது மரம் இருந்தாதானே மழை வரும் என பேச்சு வந்தது.. ஆமா...ம்... மரம் இருந்தா மழை வரும்னே சொல்லிட்டு இருக்கோமே.. மரம் எந்த வகையில் மழை வர காரணமாக இருக்கிறது மழை வர அது செய்யும் செயல் தான் என்ன என கேட்ட போது.. ஒருவருக்கும் சரியாக பதில் தெரியாமல் முழிக்க தொடங்கினோம்.

விறுவிறுப்பாக மர்மமாக விஷயங்களை சொல்லி மனிதனுக்கு ஒரு கிளர்ச்சியை திகிலை ஏற்படுத்துவதை விட அந்த கிளர்ச்சியை விட அதீத ஆச்சரியங்கள் நம்மை சுற்றி நிகழ்வதை எடுத்து காட்டவே எங்கள் பேஜ் விரும்புகிறது..

இருட்டை காட்டி ஐயையோ அங்க என்ன இருக்கு தெரியுமா என ஒருவனை பயமுறுத்துவதை விட அவன் கையில் டார்ச் கொடுத்து இருட்டின் மர்மத்தை அவனே புரிந்து கொள்ள வழி செய்வதே சிறந்தது...
கிரைம் நாவல் படித்து த்ரில் அடைவதை போன்ற விஷயங்கள் பொழுது போக்குக்கு சிறந்தவை ஆனால் அவை அறிவு வளர்ச்சிக்கு உதவாதவை. எது ஒருவனை அறிவு தாகம் கொள்ள செய்கிறதோ அதையே எங்கள் பேஜ் முதலில் பரிந்துரைக்கும்.
 அதற்காக முற்றிலும் 100 சதம் சப்ஜெக்ட்டிவான சீரியஸ் பேர்விழியாக இருந்து விடாமல் திகில் விரும்பிகளுக்காக மனம் எனும் மாய பிசாசு போன்ற தொடர்களை நாங்கள் கொடுத்து கொண்டு தான் இருப்போம் .(அதிலும் யாரும் அறியாத வண்ணம் சைகாலஜி என்ற அறிவியலை உட்புகுதுவோம் என்பது எங்கள் மைண்ட வாய்ஸ்)

நம்மை விட குழந்தைகள் அதிகம் curiosity யோடு இருப்பதை பார்த்திருக்கிறீர்களா அதற்கு காரணம் நம்மிடம் உள்ள நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனபான்மைதான். ஆனால் குழந்தை இந்த உலகை வியந்து நோக்குகிறது. அதற்கு எல்லாமே ஆச்சர்யம் தான்.அப்படி உலகை வியந்து நோக்கும் குழந்தையாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

பெர்முடாவில் என்ன உள்ளது?.
அதில் நடந்த அமானுஷ்ய விஷயங்கள் ,காணாமல் போன விமானங்கள் கப்பல்கள் பற்றிய தகவல்கள் எல்லோரும் அறிந்ததே...
எனவே அதையே மீண்டும் நான் விளக்க போவதில்லை ..ஆனால் அங்கே ஏதோ நடந்தது என்றால் அந்த ஏதோ வுக்கு என்னவெல்லாம் சாத்திய கூறு இருக்கிறது என்பதை அராய்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்த்தால்...
அங்கே உள்ள அதீத ஈர்ப்பு விசை காந்த சக்தி கொண்ட பாறைகள் தான் அந்த விபத்துகளை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு கோஷ்டி.
அப்படி அல்ல அது பக்கா ஏலியன் ஸ்பாட் ..அது வரநேரத்துக்கு நீங்க போய்ட்டா அது உங்கள அடிச்சிடும் (நம்ம ஊரு முனி கதை போல) என்பது இன்னொரு குழுவின் நம்பிக்கை..
இப்படி அதை பற்றி சொல்ல பட்ட யூகங்கள் ஏராளம் ..

ஆனால் இதில் என்னை கவர்ந்த கருத்து என்ன தெரியுமா?

 பெர்முடாவில் ஒரு மண்ணும் இல்லை சில  தற்செயல் விபத்துகளையும் பல போலி கதைகளையும் தவிர...
இந்த கதைகள் பரப்ப பட்டது திகில் விரும்பி புரளி விரும்பிகளால் தான் என்ற போதிலும் அந்த கதைகளை கட்டி விட்டது யார் தெரியுமா ? அமெரிக்க அரசாங்கம். எதையோ மறைக்க இதை பரப்பினார்கள் என்ற உண்மையை  சொன்னது யார் தெரியுமா? அவர்கள் தான் அரசாங்கத்துக்கே சிம்மசொப்பணமாக திகழும் "காண்பரசி தியரிஸ்ட்டுகள்."

அப்போ உண்மையில் உலகத்தில் மர்மம் என்பதே இல்லயா என்கிறீர்களா? ஏன் இல்லை வெகு நிச்சயமாக இருக்கிறது..
அது ஒரு காட்டுவாசி கிராமம் அங்கே பல வருடமாக ஒரு மர்மம் நிலவி வந்தது .அதாவது அங்கத்தி பெண்கள் நன்றாக இருக்கிறார்கள் திடீரென்று பார்த்தால் மூழ்காமல் ஆகிவிடுகிறார்கள்.. வயிற்றில் திடீரென குழந்தை வருவது எப்படி என்பது அவர்களது நீண்ட நாள் மர்மம்.
அப்புறம் நாகரீகம் வளர வளர பிரக்னன்சி  எதனால் உண்டாகிறது என்பதை புரிந்து கொண்ட போது அட பாவிங்களா இது தெரியாம இருந்து விட்டோமே என சிரித்து கொண்டார்கள்.

அதாவது மர்மத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ஒரு விஷயத்தை பற்றி உண்மை தெரியும் வரை தான் அது மர்மம். தெரிந்து விட்டால் அதன் பின் மர்மம் என்று ஏதும் இல்லை.
ஆனால் ஒரு விஷயத்தை பற்றி உண்மை வெளி வர வர தான் அதில் அறிவியலே வளர்கிறது அதன்பிறகு தான் அதில் கோட்பாடு சமன்பாடு எல்லாம் உருவாகிறது என்ற தகவலோடு இன்றைய தேடல் பென்ச் பகுதியை நிறைவு செய்கிறேன்..

பின் குறிப்பு :

ஒரு க்ளாஸ் தண்ணீரில் நீங்கள் உப்பை கொட்டி கலக்குங்கள் ஒரு அளவு கரைந்த பின் அதன் பிறகு உங்களால் உப்பை கரைக்க முடியாது அந்த நிலைக்கு தெவிட்டு நிலை என்று பெயர்.
இதே போல கடலில் இருந்து ஆவியாகி போன நீராவியில் தண்ணீரை ஓரளவுதான் தேக்க முடியும். அதன் தெவிட்டு நிலை தாண்டி நீராக இருப்பது மழையாக பெய்யும்.
சுற்றுசூழலில் நீர்தெவிட்டு நிலையை ஏற்படுத்துவதோடு இல்லாமல் சுற்றுசூழலை குளிர்வாக வைப்பதன் மூலம் மரங்கள் மழை வர காரணமாக உள்ளன.

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு

எங்கள் கட்டுரைகள் பிடித்திருந்தால்..
Search us at facebook by following username..@ariviyalkadhalan

LIKE OUR PAGE >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

JOIN OUR GROUP >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"