"நிகோலா டெஸ்லா ஒரு மறைக்க பட்ட மகா வி்ஞ்ஞானி"



.        

"நிகோலா டெஸ்லா 
ஒரு மறைக்க பட்ட மகா வி்ஞ்ஞானி"

(கருத்தும், எழுத்தும் :ரா_பிரபு)

உஷார் இம்முறை நான் எழுதி இருப்பது ஒரு controversial அதாவது சர்ச்சை குரிய கட்டுரை இது உங்கள் நம்பிக்கைகளை கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் ஜாக்கிரதை..

ஐன்ஸ்டைன் மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் உண்டு என் faverat விஞ்ஞாணி அவர் ... இதை நான் பல கட்டுரைகளில் ஆங்காங்கே(என்னையே மீறி) வெளிப்படுத்தி இருப்பேன்.
அதே போல எனக்கு அவ்வளவாக பிடிக்காத விஞ்ஞாணிகளும் உண்டு அதில் குறிப்பிட்ட ஒருவர் பெயரை சொன்னால் நீங்கள் அதிர போவது உறுதி .. அவர்தான் பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்.
உலகதுக்கே ஒளி கொடுத்த உத்தமரை நான் குறை கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை..

முதலில் அவரை ஒரு விஞ்ஞானியாக ஏற்பதில் எனக்கு தயக்கம் உள்ளது காரணம் நம்மை சுற்றி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அறிவியலை புரிந்து கொண்டவர் அதை உள்வாங்கி கொண்டு புதிதாக ஒரு பொருளை கண்டு பிடிப்பவனை நாம் விஞ்ஞானி எனலாம் ஆனால் ஏற்கனவே உள்ள ஒரு கண்டுபிடிப்பு அல்லது தொழில் நுட்பத்தை மேம்படுத்தி அன்றாட வாழ்க்கைக்கு உதவுபவையாக மாற்றி கொடுப்பவரை நாம் என்ஜினீயர் என்று வேனால் செல்லலாம்.அந்த வகையில் எடிசன் ஒரு என்ஜினீயர் ஆனால் விஞானி அல்ல.

மின்சாரத்தை பயன் படுத்தி எரியும் தெருவிளக்கை எடிசனுக்கு முன்னாடியே பல பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை சொன்னால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள். பலப் ஐடியா மட்டும் அவருக்கு முன்னாடியே 22 போர்களால் தரப்பட்டது என்றால் உங்கள் ஆச்சர்யம் இன்னும் கூடும்.
 ஆனால் அதில் இருந்தது ஒரே ஒரு பிரச்சனைதான் அது இப்போதைய பல்புகளை போல தொடர்ச்சியாக ஏறிய முடியாதவை.. மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு போல கொஞ்ச நேரம் எரிஞ்சி விட்டு பிறகு "எரிந்து" போக கூடியவை. அப்படி எரியாமல் தொடர்ந்து வெப்பத்தை தாங்கும் ஒரு பொருளை மிகுந்த தேடலுக்கு பின் கண்டுகொண்டது தான் எடிசன் செய்த விஷயம் ..இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் முயற்சியை பாராட்டி அவரை சிறந்த விஞ்ஞானியாக கொண்டாடலாம் தான் தப்பில்லை . அனால் அவர் ஒரு திருடன் என்பது தான் நமக்கு அவர் மேல் உள்ள மரியாதையை குறைக்கும் விஷயம் .

என்னது திருடனா என அதிர்ச்சி அடையாதீர்கள் பிறர் உடமையை திருடுபவன் மட்டும் திருடன் அல்ல பிறர்
உழைப்பை ,பிறர் படைப்பை, பிறர் திறமையை,பிறர் கண்டுபிடிப்பை ,பிறர் ஐடியாவை திருடுபவனை நீங்கள் திருடன் என ஒத்து கொண்டால் மேலே சொன்ன அணைத்து திருட்டையும் ஒருங்கே செய்தவர் தான் எடிசன்.(இன்றைக்கும் நம்மிடையே கட்டுரை முதல் கதை வரை...சிந்தனை முதல் செயல்பாடுகள் வரை திருடுபவர்கள் இருக்கிறார்கள்)

எடிசனிடம் தனது  திறமையை, கண்டுபிடிப்பை ...  அறிவை ..பறிகொடுத்த பரிதாப மனிதர் யார் தெரியுமா அவர் தான் உலகத்தால் மறைக்க பட்ட விஞ்ஞாணி நிகோலஸ் டெஸ்லா...


ஆமாம் யார் இந்த டெஸ்லா?

டெஸ்லா ஒரு சேர்பிய நாட்டு விஞ்ஞாணி 1856 இல் பிறந்தவர் எடிசனின் சக காலத்து விஞ்ஞானி பிற்காலத்தில் அமெரிக்கா சென்று குடியேறிய பின் 1884 முதல் எடிசனுக்காக அவருடன் வேலை செய்துவந்தார். டெஸ்லா ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் ,மெக்கானிக்கல் இன்ஜினியர் ,இயற்பியலார் ,மற்றும் futurist எனப்படும் எதிர்கால அறிவியல் சாதியத்தை சிந்திக்க கூடியவர்..
பல இடங்களில் ஆலோசகராக பணியாற்ற கூடியவர். குறுகிய காலத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன்ஹவுஸ் உடன் ஆலோசகராக வாடகைக்கு அமர்த்த பட்டார் அவர் பெயரில் உள்ள ac இண்டக்ஷன் மோட்டார் , மற்றும் ட்ரான்ஸபார்மர் இன் பேடன்ட் உரிமத்திற்கான லைசன்ஸ் வழங்கியது இவர் தான்..
இவர் பெயரில் மொத்தம் 700 கு மேல் பேடன்ட் உரிமம் இருக்கிறது என்றாலும் AC கரண்ட் என்று இன்றளவும் நாம் பயன்படுத்திவரும் சாதாரண அல்டெர்னேட்டிவ் கரெண்ட் இவருடைய கண்டுபிடிப்புதான் என்பது குறிப்பிட தக்கது.

 எடிசன் உடன் இவர் பணியாற்றிய போது இவர் AC கரண்ட் இல் தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை செய்து கொண்டிருக்க எடிசன் DC கரண்ட் எனப்படும் டைரக்ட் கரண்டில் (நமது பாட்டரிகளில் இருபது dc கரண்ட் தான்) கவனம் செலுத்தி கொண்டிருந்தார்.
அப்போது இவரது AC கரண்ட் ஐ மிகுந்த தீமை உள்ளதாக காட்ட எடிசன் செய்த செயல்கள் மிக கீழ்தனமானவை..
திடீரென பக்கத்துக்கு அக்கத்து வீட்டு நாய் பூனை போன்றவைகள் காணாமல் போயின.. அவற்றை கடத்தி கொண்டு வந்து கொடுக்க பள்ளி சிறுவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது ... அந்த கடத்தலை செய்வித்தவர் எடிசன்..
மக்கள் முன்னிலையில் சிறு விலங்குகளின் மேல் AC மின்சாரத்தை பாய்ச்சுவார் எடிசன் அவைகள் துடிப்பதை காட்டி "ஆகையால் மக்களே டெஸ்லா கண்டுபிடித்து கொண்டிருக்கும் இது மிக ஆபத்தானது" என்று ஸ்பீச் கொடுப்பார்.

டெஸ்லா தனது கண்டுபிடிப்பு நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல அது ஒரு அற்புத பயனளிக்கும் சக்தி சரியாக பயன்படுத்தினால் மொத்த மனித இனதுக்கே அது பயன்படும் என் மக்களுக்கு எடுத்து சொல்ல படாத பாடு பட வேண்டியதாயிற்று...
கடுப்பான டெஸ்லா ஒரு முறை மக்களை ஒன்று திரட்டி 1 லட்சம் வோல்ட் மின்சாரத்தை பரப்பி கொண்டிருக்கும் கருவியை காட்டினார் மக்கள் அதில் சக்தி வாய்ந்த மின்சாரம் இருப்பதை கண்கூடாக பார்த்தனர்.. அப்போது மக்கள் முன்னிலையில் அந்த கருவியை மிகுந்த லாவகத்தோடு தானே பயன்படுத்தி காட்டினார். மின்சாரம் நமது எதிரி அல்ல அது அற்புத சக்தி கொண்ட நண்பன் என்பதை நேரடியாக மக்களுக்கு புரிய வைத்தார்..

எடிசனுடன் பணியாற்றிய காலங்களில் அவர் நெறைய பொருட்களை கண்டுபிடித்தார் . டெஸ்லாவுக்கு இயற்கையை ... தன்னை சுற்றி உள்ள அறிவியலை உற்று கவனிக்க தெரியும் அதை கவனித்து ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகளை வெளி கொண்டுவர தெரியும் ஆனால் அதை கொண்டு பேர்வாங்க தெரியாது.. அதற்கு தனது பெயரில் பேடன்ட் எடுத்து வைக்க தெரியாது ..அதை கொண்டு பணம் பண்ண தெரியாது.. அனால் இவை அனைத்தையும் ஒன்று விடாமல் செயதார் எடிசன்.. அதுவும் டெஸ்லாவின் கண்டு பிடிப்புகளை கொண்டு...
டெஸ்லா வின் கண்டுபிடிப்புகள் ஐடியாக்கள் திருடி பணம் பண்ணும் ஒரு பிஸ்னஸ்மேனாக தான் திகழ்ந்தார் எடிசன்.

தனது கண்டுபிடிப்புகள் வேற யார் பெயரிலோ இருப்பதை கண்டு மனம் நொந்து போனார் டெஸ்லா..
இவரது அறிவை பயன் படுத்தி கொண்டது எடிசன் மட்டுமே அல்ல உலகத்தில் நாம் காணும் பல கண்டுபிடிப்புகள் டெஸ்லாவால் முன் கூட்டியே கண்டுபிடிக்க பட்டு ஆனால் முறையாக வெளிஇடபடாமல் ,பேடன்ட் வாங்கபடாமல் விட பட்டவை.

உதாரணமாக ரேடியோ தொழில் நுட்பத்தை மாற்கொணி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே டெஸ்லா கண்டு பிடித்து விட்டிருந்தார். அனால் தனது பெயரில் பதிவு செய்ய தவறி இருந்தார். பின்னாளில் மக்கள் அவரிடம் என்னப்பா உன் கண்டுபிடிப்பு அவர் பெயர்ல இருக்கே என கேட்டதற்கு "மாற்கொணி ஒரு நல்ல மனிதர் பாவம் அவர் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டும் இது மட்டும் அல்ல மொத்தம் எனது 17 கண்டு பிடிப்புகள் அவர் பெயரில் தான் உள்ளது" என்றார் கூலாக ...(இருவருமே இறந்த பின் 6 மாதம் கழித்து ரேடியோ காண பேடன்ட் மீண்டும் டெஸ்லா பெயரில் மாற்றி அமைக்க பட்டது குறிப்பிட தக்கது)

அதே போல இந்த ரேடார் கருவி இருக்கிறதே.1935 இல் வாட்சன் வாட் எனும் பிரிட்டிஷ் விஞ்ஞானியால் கண்டுபிடிக்க பட்டது அனால் 1917 இலேயே அந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடித்து விட்டிருந்தார் டெஸ்லா மேலும் அது ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார் (1917 முதல் உலக போர் கால கட்டம் என்பதை கவனிக்க...) ஆனால் அந்த சமயத்தில் US நேவி யின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் இன் பொறுப்பதிகாரி.. இது ஒன்னும் ராணுவத்துக்கு பெரிசா உதவாது என்று அதை புறக்கணித்தார்.. அந்த நல்ல உள்ளம் கொண்ட பொறுப்பதிகாரி வேறு யாரும் அல்ல எடிசன் தான்.

X rey வை கண்டு பிடித்தது ராண்டஜன் என நமக்கு தெரியும் ஆனால் அதை அதற்கு முன்பே டெஸ்லாவால் கண்டு பிடிக்க பட்டு எடிசனால் தவறாக பயன்படுத்த பட்டு தனது உதவியாளர் கை போவதற்கு காரணமாவும் அவர் சொந்த கண்ணுக்கே பாதிப்பு ஏற்பட்டு அதை கண்டு பயந்து அதை கை விட்ட கூத்து எல்லாம் நடந்தது..

நேர் மின் நிலையத்தில் எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதை எனது "மின்சாரம் என்ன ஏது எப்படி" கட்டுரையில் சொல்லி இருந்தேன் அல்லவா நயாகரா பால்சில் அதை முதல் முதலில் செய்து காட்டியவர் டெஸ்லா தான்.

ராக்கெட் இல் பயன் படுத்த படும் cryojenik engine (கேஸை குறைந்த வெப்பநிலையில் நீர்ம நிலையில் வைத்து பயன் படுத்தும் இன்ஜின்)  இதை கண்டு பிடிப்பதற்கு கிட்ட தட்ட 50 ஆண்டுக்கு முன்பே அதை சோதனை செய்த்து பார்த்தவர் டெஸ்லா.
தனது உழைப்பு திருட பட்டிருப்பது தெரிந்தும் யாரையும் பெரிதாக வெறுகாதவர் டெஸ்லா.. ஒரு முறை இவர் மேடையில் பேசிக்கொண்டும் மக்களால் பாராட்ட பட்டு கொண்டும் இருப்பதை பார்த்து பொறுக்க முடியாமல் கூட்டத்திலிருந்து நழுவி வெளியேறினார் எடிசன் ... ஆனால் அவரை கண்டு கொண்ட டெஸ்லா அவரை மேடைக்கு அழைத்து அவரை புகழ்ந்து பேசி பாராட்டை பெற்று தந்த மாண்புக்கு சொந்த காரர் தான் டெஸ்லா..

பிற்காலத்தில் ஒரு மிக அற்புத கண்டு பிடிப்பை ஆராய்ந்தார் டெஸ்லா அதாவது கம்பி இல்லா தகவல் தொடர்பு போல கம்பி இல்லா மின்சாரம்... அதாவது இன்று நாம் மின்சார்த்தை கொண்டு செல்ல பயன்படுத்தும் இத்தனை கம்பிகள் ..கம்பங்கள்... சப் ஸ்டேஷன் கள் எதுவும் தேவை இல்லை ... நேரே distribution point இல் இதை பாய்ச்சினால் நேரே நம் இடத்தில அதை பெற்று கொள்ளலாம்..இந்த அற்புத கண்டுப்பிடிப்பு உலகத்தை மாற்ற கூடியது ஆனால் இது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று டெஸ்லா காலத்தில் அவரை அனைவரும் மிரட்ட தனது அற்புத கண்டு பிடிப்பை உலகத்திற்கு வெளியிடாமலேயே இறந்து போனார். அந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க இன்றளவும் விஞ்சாணிகள் முயன்று வருகிறார்கள் .

Facebook இல் தற்செயலாக எடிசன் மற்றும் டெஸ்லா போட்டோவை (எடிசன் என்றால்:லைக்.   டெஸ்லா என்றால்: கமெண்ட் போடவும் ) பார்த்து அதில் காமென்டில் வெளிநாட்டவர்கள் டெஸ்லாவை புகழ்ந்தும் எடிசனை பயங்கரமாக கலாய்த்தும் எழுதி இருப்பதை பார்த்து அதிர்ந்தேன் .. என்ன விஷயம் என்று பின்னணியை நெடில் உட்கார்ந்து ஆராய்ந்து பார்த்ததில் மேலும் அதிர்ந்தேன். அந்த அதிர்ச்சியை தான் மேலே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். யாருக்காவது மாற்று கருத்து இருந்தால் தகுந்த ஆதாரத்துடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள் தவறில்லை...
டெஸ்லா என்ற உன்னத மனிதரை உலகம் மறந்திருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் அவரை தலை தாழ்ந்து தனது வணக்கத்தை ..மரியாதையை செலுத்துவோம்...

Comments

  1. prestiege படத்துல இத பத்தி சொல்லியிருப்பங்க

    ReplyDelete
  2. prestiege படத்துல இத பத்தி சொல்லியிருப்பங்க

    ReplyDelete
  3. prestiege படத்துல இத பத்தி சொல்லியிருப்பங்க

    ReplyDelete
  4. prestiege படத்துல இத பத்தி சொல்லியிருப்பங்க

    ReplyDelete
  5. prestiege படத்துல இத பத்தி சொல்லியிருப்பங்க

    ReplyDelete
  6. எதை கண்டுபிடித்து என்ன பயன் ஒட்டு மொத்த உலகும் அழிவின் விளிம்பில் நிற்பதற்கு இவர்கள் கண்டுபிடித்த நவீன விஞ்ஞானம்தான்
    பல்லாயிரம் ஆண்டுகள் இந்த பூமியில் பரினமித்த உயிர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுகள் நிகழ்ந்தேறிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் தங்களின் கடைசி நொடிகளை எண்ணிக்கொண்டு இருக்கின்றன..

    ReplyDelete
  7. டெஸ்லா தி கிரேட்

    ReplyDelete
  8. 👏👏👏👏👏👏👏Theriyaathavargal mattume ethirppu /maruppu therivippaargal... Unmai methuvaaga theriya nernthaalum, nilaitthirukkum. Tesla pugazhum athu pole... Ungalin uzhaippum viraivil theriya neralaam... Naanum thangalin uzhaippinai YouTube-il veru nabargal payanpadutthuvathai kandaen nanbarae....

    ReplyDelete
  9. சூப்பர் அருமை இன்று தான் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  10. உண்மையை எங்களைப் போன்ற எளியவர்களுக்கு சொன்னதற்கு நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"