" ஒரு_மாம்பழ_மர்மம்"


     

          "   ஒரு_மாம்பழ_மர்மம்"

(கருத்தும் எழுத்தும்: ரா_பிரபு)

சின்னதோ பெரியதோ நம்மை சுற்றி உள்ள அச்சர்யங்களை கவனிப்பதில் தான் அறிவியல் தாகம் தொடங்குகிறது .மாம்பழம் சாப்பிடும் போது எப்பவாவது ஆச்சர்ய பட்டுரிக்கிறீர்களா?மாம்பழத்துல என்ன ஜி  ஆச்சர்யம் என்கிறீர்களா?

மாம்பழம் சாப்பிடும் போது அதற்குள்ள இருக்கும் வண்டை பார்த்திருப்பீர்கள் முழுக்க மூட பட்ட நுழைய இடமில்லாத மாம்பழத்தில் வண்டு உள்ளே நுழைந்தது எப்படி என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இன்றைய தேதிக்கு நீங்கள் மாம்பழம் சாப்பிட்டால் நீங்கள் ஆச்சர்ய பட வேண்டிய விஷயம் வேற உள்ளது ... அதாவது இந்த வண்டு வண்டு னு ஒன்னு இருக்குமே.....
எங்க இப்பல்லாம் ஒரு பழதிலேயும் காணோம்?

நீங்கள் இன்றைய காலத்தில் பழம் விளைவதற்கு பயன் படுத்தும் உரம் ..பூச்சிகொள்ளி  மற்றும் பழம் பழுக்க பயன்படுத்தும் கெமிக்கல் போன்றவற்றால் பூச்சி இனி பழத்தில் வாழாது .
ஒன்று நினைவிருக்கட்டும் பூச்சி உடனே செத்து விட்டது நீங்கள் கொஞ்சம் பொறுமையாக சாவீர்கள் .

 உள்ளே வண்டுடன் கூடிய மாம்பழம் சாப்பிடீர்களே அது தான் இயற்கையாக விளைந்த நல்ல தரமான பக்கவிளைவுகள் அற்ற பழம். பயன்படுத்தும் செயற்கை பொருளை பற்றி அதன் விளைவை பற்றி எல்லாம் சொன்னால் பயம் கலந்த ஆச்சர்ய படுவீர்கள்.

சமீபத்தில் ஒரு துணைநடிகர் புற்றுநோயால் இறந்து போனார்.. இத்தனைக்கும் ஜிம் ..உடற்பயிற்சி ..உணவுகட்டுப்பாடு என உடலை மிகவும் கவனம் செலுத்தி பார்ப்பவர் அவர். அவர் சாவுக்கு மருத்துவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? டயட்டுக்காக தொடர்ச்சியாக பச்சை காய்கறிகளை சாப்பிட்டது தான் அவர் மரணத்திற்கு காரணம்.
பச்சை காய்கறியை சாப்பிட்டால் உடல் இன்னும் ஆரோக்கியமாக தானே இருக்கும் என நீங்கள் கேட்டால்... அதெல்லாம் நல்ல வழிமுறையில் விளைந்த காய்கறிகளை சாப்பிட்டால் தான். இன்று நீங்கள் பயன்படுத்தும் செயற்கை கெமிக்கல்களின் பாதிப்பு ஏதோ நீங்கள் வேகவைத்து உண்பதால் கொஞ்சமாவது  குறைந்து நீங்கள் தப்பித்து வருகிறீர்கள்.

சரி பயமுறுத்துவதை விட்டு விட்டு சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்புறேன்..

 மாம்பழம் பிஞ்சாக இருக்கும் போதே வண்டுடைய மம்மி அதில் முட்டை இட்டு விட்டு பறந்து விடுகிறது .பழம் வளர வளர் உள்ளே முட்டையும் பதமாக வளர்கிறது ..பிறகு முட்டையிலிருந்து வண்டு வெளியே வந்து உள்ளேயே சாப்பிட்டு உள்ளயே வளர்ந்து நீங்கள் வெட்டும் போது வெளியே வரலாம் என காத்திருக்கிறது.

ஆமா...ம். ..அந்த பூச்சி முட்டையை போட்டு பறந்து சென்றது னு சொன்னீங்க உள்ள பறக்க முடியாத வண்டு இல்ல இருக்கு..
எப்படி ?என  கேட்பீர்களேயானால் .... நீங்கள் அவசர பட்டு வெட்டாமல் போதிய காலம் காத்திருந்து வெட்டினால்.. உள்ளே இருந்து பூச்சி பறந்து செல்வதை பார்க்கலாம்.
மாம்பழம் சின்னதானாலும் இன்று சொன்ன மர்மம் பெறுசுதான் இல்லயா.

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு


Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"