" GPS ஒரு அற்புத கருவி"
.
" GPS ஒரு அற்புத கருவி"
(கருத்தும் எழுத்தும்: ரா_பிரபு)
உங்களுக்கு புவியிடம்காட்டி தெரியுமா? தெரியாதா? சரி உலக இடநிலை உணர்வி...? அதும் தெரியாதா..அட நம்ம GPS தாங்க... தமிழ்ல சொன்னேன்..
இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லா மொபைல்களிலும் உள்ள இந்த GPS பற்றி கொஞ்சம் பாப்போம்..
முதல் முதலில் இந்த GPS பயன் படுத்த பட்டது மக்கள் பயன்பாட்டுக்கு அல்ல இது ராணுவ தேவைக்காக . 1978 இல் லான்ச் செய்ய பட்டு ராணுவத்தால் சிறப்பாக பயன் படுத்த பட்டு பிறகு 1980 களில் மக்கள் பயன்பாட்டுக்காக அளிக்க பட்டது..
Global positioning system என்பதன் சுருக்கம் தான் இந்த GPS . இதை கொண்டு உலகில் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்கள் இருப்பிடம் மற்றும் உங்கள் நேரத்தை கச்சிதமாக கண்டுகொள்ள முடியும்.
இது மொபைலில் குடி புகுந்த பின் இதால் உங்களுக்கு விளையும் நன்மைகள் பல பல.
GPS கொண்டு இயங்கும் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் உங்கள் இருப்பிடம் குறிப்பிடுபவை.
சாதாரணமான app களில் GPS இணைந்தால் இதன் பலன் வெறுவிதமானவை மேலும் துள்ளியமானவை.
உதாரணமாக map இல் வரைபடங்கள் மட்டும் பார்த்து கொண்டிருந்த நமக்கு அதில் GPS இணைந்தபின் நீங்கள் வரை படத்தில் இருக்கும் இடம் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வழிகாட்டி ரூட் உடன் உங்களுக்கு கிடைக்க GPS தான் உதவுகிறது. .
வானிலை app இருக்கிறது அதில் நீங்கள் இருக்கும் இடத்திற்கான வானிலை அல்லது வெப்பநிலை எப்படி தெரிகிறது ?காரணம் GPS.
just dial மாதிரியான enquiry சைட்டு கு போகிறீர்கள்... உங்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனை சினிமா ஹால் ஷாப்பிங் மால் அல்லது ATM அல்லது restaurant இப்படி எதையும் துல்லியமாக காட்ட உதவுவது GPS .
ஸ்பீடோ மீட்டர் app ஏதாவது திறந்து வைத்து ஓடும் பஸ் அல்லது ரயிலில் நீங்கள் பார்த்தால் அது செல்லும் வேகத்தை பார்க்க முடியும்.. GPS ஐ பயன்படுத்தும் app கள் நூற்று கணக்கில் உள்ளன. ola போன்ற ஆட்டோ சர்வீஸ் ஆகட்டும் அல்லது ..navigation app களாகட்டும் GPS இன் பயன்பாடு இன்றியமையாதது .
என்ன..... GPS உங்கள் மொபைல் பேட்டரி யை கொஞ்சம் அதிகம் சாப்பிடுபவை அது ஒன்னு தான் பிரச்னை.
இந்த அதிசய app எப்படி வேலை செய்கிறது என்று பாப்போம்.. (பின்ன அத சொல்லாம விட்டுடுவோமா என்ன)
இது இயங்க உங்கள் மொபைல் சிக்னல் தேவை இல்லை இது வானத்தில் உள்ள செயற்கை கோளுடன் நேரடி தொடர்பு கொண்டது..
இதற்காக 24 செயற்கை கோள்கள் 24 மணிநேரமும் செயல் படுத்த படுத்த படுகிறது. எல்லாமே இன்னமும் அமெரிக்க ராணுவத்தால் நிர்வகிக்க படுபவை தான்..
இந்த செயற்கை கோள்கள் ஒரு நாளைக்கு 2 முறை பூமியை சுற்றிவருகின்றன. இதிலிருந்து 24 மணிநேரமும் சிக்னல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் .GPS ரிசிவர்கள் இந்த சிக்னலை பெற்று கொள்கின்றன 3 அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கை கோள்கலிருந்து சிக்னல் பெற்று கொண்டால் latitude மற்றும் landitude மூலம் உங்கள் இருப்பிடத்தை இவை தெரிந்து கொள்கின்றன.
சிக்னல் அனுப்ப பட்ட நேரம் மற்றும் பெற்று கொண்ட நேரத்தை ஒப்பிட்டு ரிசீவருக்கும் செயற்கை கோளுக்கும் உள்ள தூரத்தையும் கணக்கிட முடியும்.
இதை பயன்படுத்த நீங்கள் வீட்டுக்கு உள்ளே இல்லாமல் நன்கு வானத்தை பார்த்தபடி வெளியில் இருந்தால் நன்கு வேலை செய்யும்.
Cowboy எனும் மாடு மேய்ப்பவர்களின் முரட்டு பயன்பாடுகாக கண்டுபிடிக்க பட்ட ஜீன்ஸ் பேண்ட் இன்று நமது பேஷன் பேண்டாக மாறியதை போல(அடடே தகவலுக்குள் தகவல் சொல்லியாச்சா) ராணுவ பயன்பாட்டுக்காக கண்டுபிடிக்க பட்ட கருவி நமக்கு அன்றாட பயன்பாட்டுக்கு பயன் படுவது மகிழ்ச்சிதானே.
உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு
Superb
ReplyDeleteGood job
DeleteThanks for sharing this wonderful information about
DeleteGPS systems in my own language in Tamil please continue your self service
Through
Your servant leadership
Beloved friend
ReplyDeleteI feel extremely happy this morning
After learning about GPS system through you in Tamil
It is more helpful to whole worl
Globally also
R.Govindarajan
Global network leader
Coimbatore Tamil Nadu India
Please contact me when you are free
9360481645