"அணுகரு பிளவு அணுக்கரு இணைவு அதிசய நிகழ்வு"



°          

              அணு_கரு_பிளவு....
              அணு_கரு_இணைவு.....
              அதிசய_நிகழ்வு.

(கருத்தும்,எழுத்தும் :#ரா_பிரபு

அணு என்பது தான் ஒரு பொருளில் உள்ள மிக சிறிய அலகு அதை அதற்கு மேல் பிரிக்க முடியாது என்று ஒரு காலத்தில் நம்பி வந்துள்ளோம்.
ஆனால் பிற்காலத்தில் அதை பல பேர் பிரித்து மேய்ந்து விட்டார்கள். உள்ளே உள்ள சப் அட்டமிக் பார்டிகள்ஸ்களை எல்லாம் எப்போதோ நலம் விசாரித்து விட்டார்கள். தற்போதய அறிஞ்ஞர்கள் நூற்றினோ போன்ற சில துகள்களை எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் (நூற்றினோ பற்றி விரிவாக அறிய எனது "நியூட்றினோ ஒரு அடங்காத துகள்" கட்டுரையை படித்து பாருங்கள்.

அனால் அணுவை பிளந்து பார்க்கும் போது அணுவை பிளந்தாலும் சரி இணைத்தாலும் சரி கனகிலடங்காத சக்தி வெளி படுவதை பார்த்தார்கள்..

அதை ஒவொன்றாக பாப்போம்.

முதலில் அணு கரு இணைவு..
இதை பற்றி சொல்லும் முன் ஒரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும் அதாவது ஒரு பொருளை நாம் எரிபொருளாக பயன்படுத்தி அதில் சக்தியை எடுப்பதை போல அதை முழுவதமாக அப்டியே மிச்சம் வைக்காமல் ஆற்றலாக மாற்ற முடிந்தால் அது நம்மை வியக்க வைக்கும் அளவு ஆற்றலை கொடுக்கும் . (உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலை போட்டால் போதும் உங்கள் பைக்கை நீங்கள் வாழ்நாள் முழுதும் ஓட்டலாம் அப்போதும் டேங்க்கில் நிறைய மிச்சம் இருக்கும் என்றால் எப்படி இருக்கும்) இதை பற்றி விரிவாக எனது E=MC 2  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.. படிக்காதவர்கள் படித்து பாருங்கள்.
இப்படி ஆற்றல் மாற்றம் நடக்கும் இயற்கையின் மிக பெரிய எடுத்துக்காட்டு நமது சூரியன். அந்த சூரியனில் நடப்பது என்ன வென்றால் அணு கரு இணைவு தத்துவம் தான்.

அணு கரு இணைவு எங்கே நடந்தாலும் அதில் வெப்பம் மிகுதியாக இருக்கும்.
அணுக்கரு இணைவில் நடப்பது என்ன? இரண்டு அணுக்கள் ஒன்றிணைந்தது வேறு அணுக்கள் உருவாகும் .
இப்படி அணுவை ஒன்றிணைப்பதற்கு ஏதாவது லேசான அணுவை தான் ஒன்றிணைப்பார்கள். நமக்கு தெரிந்து இருப்பதிலேயே மிக லேசான அணு ஹைட்ரஜனுடையது. (ஒரே ஒரு புராட்டனை ஒரே ஒரு எலக்ட்ரான் சுற்றிவந்தால் அது ஹைட்ரஜன் அணு)

இதை ஒன்றிணைக்கும் போது இரண்டு புரோட்டானை இரண்டு எலக்ட்ரான் சுற்றிவரும் அணுவாகிய ஹீலியமாக இது மாறுகிறது.. அப்படி மாறும் போது ஆரம்ப நிலையில் இருந்த ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களின் எடை தானே இந்த ஹீலியத்தின் எடையாக இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் எடை சற்று குறைந்து காண படுகிறது... அந்த குறைந்த எடை எங்கே போச்சு என தேடி பார்த்தால் அது முழு ஆற்றலாக மாறி வெளியேறி இருப்பதை பார்க்கலாம்.

மனிதர்கள் உருவாகும் ஹைட்ரஜன் குண்டு இந்த தத்துவத்தில் தான் வேலை செய்கிறது... இதில் வெளிப்படும் ஆற்றல் அணுக்கரு பிளவில் வருவதை போல கதிர்வீச்சு அல்ல இது சுத்தமான வெப்ப ஆற்றல். இந்த தத்துவத்தில் ஒரு கிலோ நிலக்கரி யை வைத்து ஆற்றல் எடுத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு அதை கொண்டு அடுப்பு எரிக்கலாம்... அனால் அதில் ஒரு பிரச்னை உள்ளது ஒரு கிளாஸ் தண்ணீரை சுட வைக்க குறைந்தது 70 முதல் 100 ஆண்டுகள் ஆகும்.. அவ்ளோ slow prosses

அடுத்து அணுக்கரு பிளவை  பற்றி பாப்போம்..

அணுக்கரு இணைவில் ஹைட்ரஜன் குண்டு உண்டாகுகிறார்கள் என பார்த்தோம் அதே போல அணுக்கரு பிளவில் அணுகுண்டு உற்பத்தி செய்கிறார்கள்..இதன் தத்துவத்தை கண்டு பிடித்தவர்கள் ஆட்டஹான் ஸ்ட்ராஷ்மான்.
அணுவை எப்படி பிளக்கிறார்கள்?
ஒரு எடுத்து காட்டுக்கு நிலக்கரி பெட்ரோல் எல்லாம் சொன்னேனே தவிர ஆற்றலை எடுக்க நாம் எல்லா தனிமத்தையும் பயன் படுத்த முடியாது..அணுகரு இணைவில் லேசான தனிமம் பயன்படுவதை பார்த்தோம் ஆனால் இதற்கு நமக்கு யுரேனியம் போன்ற தன்னிச்சையாக கதிர்வீச்சு ஆற்றலை வெளி படுத்தும் ஒரு கணமான தனிமம் தேவை U 235 என்று குறிப்பிடப்படும் யுரேனியம் மிகவும் கனமான ஒரு தனிமம் அதன் அணுவை சுத்தியை வைத்து எல்லாம் பிளக்க முடியாது ...எனவே நியூற்றானை கொண்டு பிளபார்கள் .
அப்போது அந்த அணு பேரியம் மற்றும் க்ரிப்டானாக மாறும் அப்போது அளப்பரிய ஆற்றலை வெளி படுத்தும் .

அணு இணைவில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை பார்த்தோம் ஆனால் இதன் ஆற்றல் கதிர்வீச்சு ஆற்றல்.. இதன் அழிவு சக்தி மிகவும் அபாரமானது . ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் அது அப்போதைக்கு வெப்பத்தால் ஏற்படுத்தும் அழிவு மட்டும் தான் அதன் பாதிப்பு.. ஆனால் அணு பிளவில் அதாவது அணுகுண்டில் உள்ள ஆற்றல் வெடித்த பல வருடம் கழித்த பின்பும் தனது பாதிப்பை ஏற்படுத்தும் .. இதன் கதிர்வீச்சு நீர் நிலம் காற்று அனைத்திலும் பரவி கலக்கும் இது உயிரி செல்லில் மரபணு மாறுதலை ஏற்படுத்த கூடியது. இதில் கட்டுப்பாடான செயலை அணு உலையில் பயன் படுத்துவார்கள். மற்றும் கட்டுப்பாடற்ற செயின் ரியாக்சனை அணுகுண்டில் பயன்படுத்துவார்கள்.

அணுக்கரு இணைவு பயங்கர வெப்ப நிலையில் நிகழ்வது... ஆனால் அணுக்கரு பிளவை அறை வெப்பநிலையில் கூட உருவாக்கலாம்.
இந்த அணுக்கரு பிளவு மற்றும் இணைவு இந்த தொழில் நுட்பத்தில் உள்ள சக்தி ... மொத்த மனித குலத்தையே அழிக்கும் அளவு சக்தி வாய்ந்தது .


Comments

  1. மிக மிக நல்ல தகவலை விளங்க கூடிய வகையில் நன்றாக சொல்லியுள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு
    மிகவும் அருமையான தலைப்பு
    இதிலிருந்து அதிக points தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  3. அருமை
    Mendeleevʼs finding was that “The elements, if arranged according to their atomic weights, exhibit an evident stepwise variation of properties”.
    பற்றி விளக்கமாக தமிழில் எழுதவியலுமா ?

    ReplyDelete
  4. எப்படி அணுவை பிளக்கிறார்கள்,அந்த ஒரு அணுவை பிளப்பதற்கு நியுட்ரான் எங்கு இருந்து கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. முதல் செயற்கையாக உடைக்கப்படும் அணுவில் இருந்து 3 நியுட்ரான்கள் வெளியில் வரும். இந்த 3 நியுட்ரான்கள் அதன் அருகில் உள்ள அணுக்களை உடைக்கும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"