"முழுமை எனும் உண்மை( பாகம் 1)



"முழுமை எனும் உண்மை( பாகம் 1)

கருத்தும்,எழுத்தும் (ரா_பிரபு)

இம்முறை நான் எழுதி இருப்பது எனது வழக்கமான கட்டுரைகளில் இருந்து  சற்று மாறு பட்ட கட்டுரை.
இதை நான் எழுத காரணம் இருக்கிறது ..அதை கட்டுரை முடிவில் சொல்கிறேன்.

இன்றைக்கு அறிவியலை பற்றி பார்க்கப்போவது இல்லை மாறாக அறிவியலை பற்றிய அறிவியலை பார்க்க போகிறோம்..

அறிவியலை கொண்டு கடவுளை விளக்க முடியுமா..?
முடியாது என்பதை உடனே சொல்லி விடலாம். அல்லது பல சோதனைக்கு பின் கடவுள் இல்லை என்ற முடிவை பொறுமையாக சொல்ல வேண்டி வரும்.
காரணம் ,ஒன்றை அறிவியல் பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் அது ஆதாரப்பூர்வமான... அல்லது ஆய்வு மூலம் தெரிந்து கொள்ள கூடிய ..பரிசோதனை முடிவுகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.. கடவுளுக்கு அந்த தகுதி இல்லை...
சரி அந்த ஆளு ரொம்ப சர்ச்சை கூறியவர் என்பதால் அவரை விட்டு விடுவோம்...

நம்மால் அன்றாடம் பயன்படுத்த கூடிய நாம் சாதாரணமாக காண கூடிய எல்லா வற்றையும் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா...பல விஷயங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் சில விளைவுகளை கொண்டு புரிந்து கொள்கிறோம் உதாரணமாக மின்சாரத்தை ஒரு போதும் உங்களால் பார்க்க முடியாது .
 மின்சாரத்தை கொண்டு இயங்கும் விளக்கு வெளியிடும் வெளிச்சத்தை பார்க்கலாம்.. ஆனால் மின்சாரத்தை அல்ல... மின்சாரம் பாயும் கம்பியும் பாயாத கம்பியும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும்..
ஆனால் எலக்ட்ரான் களின் ஓட்டம் தான் மின்னோட்டம் என்பதை அறிந்த நீங்கள் கொஞ்சம் புத்திசாலி தனமாக அந்த கம்பியை எலக்ட்ரான் நுண்நோக்கி கொண்டு ஆராய்ந்து பார்த்தால் அதில் எலக்ட்ரான் களின் ஓட்டத்தை பார்க்கலாம்..." அதானே மின்னோட்டம்" என நீங்கள் மின்சாரத்தை பார்த்ததாக சந்தோஷ படலாம் ஆனால் நினைவிருக்கட்டும் அதுவும் மின்சாரத்தின் விளைவுதான் அது மின்சாரம் அல்ல..

மின்சாரம், காற்று போன்ற வற்றை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அதை நாம் ஆதார பூர்வமாக உணரவாவது முடிகிறது...
அனால் நாம் சோதனையை செய்து பார்த்து விட்டால் ஒரு உண்மையை மிக அறுதியாக சொல்லி விட முடியுமா என்றால் முடியாது... உதாரணமாக நீங்கள் பாட புத்தகத்தில் விலங்கியலில் வைரசை பற்றி படித்திருக்கலாம் .. ஆனால் கூடவே தாவரவியலிலும் அதை படித்திருப்பது நினைவு இருக்கலாம் அதற்கு காரணம் அதை எந்த 'கேட்டகிரி ' யில் சேர்ப்பது என அறிவியலாலர்களுக்கு அறுதியாக சொல்ல முடியவில்லை .
இனப்பெருக்கம் செய்வது..இடப்பெயர்ச்சி செய்வது போன்ற காரணத்தால் இதை விலங்கியளில் சேர்க்கலாம் என பார்த்தால் சூரியனிடம் இருந்து நேரடியாக ஆற்றலை உறிஞ்சி உணவு தயாரிப்பதால் வேறு வழி இல்லாமல் தாவரவியலிலும் சேர்க்க வேண்டி உள்ளது..

பொதுவாக இவைகள் தனியாக இயங்காது இவைகளுக்கு இயங்க ஒரு உயிரினம் தேவை என்பதால் தாவர வைரஸ் விலங்கு வைரஸ் என தனியாக உள்ளது..
சரி ஒரு உயிர் என்றால் அதற்கு வயசு ஆக ஆக முதுமை வரும் பின் கண்டிப்பாக மரணமும் வரும் இதுதானே பொது விதி ஆனால் சில நுண்ணுயிரிகளுக்கு  முதுமையும் இல்லை சொல்ல போனால் மரணமும் இல்லை..
வயதான உடன் அவை இரண்டாக பிரிந்து இன்னும் இளமையாகின்றன..

கிரியாஜேனிக் முறைப்படி ஒரு மீனை பதப்படுத்தி வைத்தால் பல நாள் வைத்திருந்து அதை நீரில் விட்டால் உயிர் வந்து நீந்தும் என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள்.
ஆனால் ஒருவேளை அந்த மீனின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக இருந்து நீங்கள் அதை 50 ஆண்டுகளாக பத படுத்தி வைத்தால் அவைகள் வாழுமா... கண்டிப்பாக முடியாது அல்லவா...அனால் வைரசை நீங்கள் படிகமாக்கி பத்தப்படுத்தலாம் மற்ற எந்த உடலிலும் புகாத வரை முற்றிலும் செயலிழந்து காண படும் வைரஸ் ஐ நீங்கள் 300 ஆண்டுகள் பத படுத்தி வைத்திருந்து அதன் பின் வேறு உடலில் கொண்டு போய் விட்டால் அவை முன் போல இயங்க தொடங்கும் என்றால் என்ன சொல்வது..

இப்படி சில நுண்உயிரிகள் இவைகளை உயிர் என்றே அறுதி யிட்டு சொல்ல முடியாது. உயிர் உள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் இடையில் உள்ளவை இவை.. இருந்தாலும் ... இவைகளையும் நம்மால் எதோ ஒரு வகையில் புரிந்து கொள்ள முடிகிறது..

ஆனால் ..

மனித மூளையால் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாத அதன் கற்பனை சக்திக்கும் அப்பாற் பட்ட ஒன்றை எப்படி புரிந்து கொள்வது? அதை பற்றி நாம் புரிந்து கொள்வது எல்லாம் என்ன வென்றால் நம்மால் அதை புரிந்து கொள்ள முடியாது என்பது தான். உதாரணமாக வானம்...
அதில் தூரம் தூரம் இன்னும் தூரமாக சென்று கொண்டே இருந்தால் என்ன வரும்? இன்னும் வானம்... சரி அதை கடந்து சென்றால்? பல ஒளியாண்டு தாண்டியச்சு அதன் பின் என்ன....நாம் இதுவரை அறிந்த தூரம் 1500 கோடி ஒளியாண்டு என்று சொல்லலாம் காரணம் பிக் பாங் உண்டான கால கட்டம் 1500 கோடி ஆண்டுக்கு முன் தான்.. சரி அந்த தூரத்தை கடந்து விட்டால் அதன் பின் இருப்பது என்ன என்று சிந்தித்தால் ... அல்லது பிக் பாங் கு முன் என்ன இருந்தது என சிந்தித்தால். அல்லது பிரபஞ்சம் மொத்தம் அழிந்த பின் என்ன இருக்கும் என சிந்தித்தால்... நம் மனம் சாரி ஓவர் லிமிட் என கையை விரித்து விடுகிறது... அதற்கு அப்பால் சிந்திப்பதை கற்பனையாக கூட செய்ய முடியாத அளவு மனதின் சக்தி குறைப்பட்டு உள்ளது..

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் சாதாரணமாக விட்டு விடுபவன் அல்ல மனிதன். அதனால் இந்த பிரச்சனையை அவன் வேறு கோணத்தில் அணுகினான் .அதாவது ஒரு கோளாறான ரேடியோவை நீங்கள் சரி செய்ய கடையில் கொண்டு போய் கொடுக்காமல் நீங்களாகவே பாட வைக்க முயற்சிக்கிறீர்கள் .. கடைசி வரை அதை உங்களால் பாட வைக்க முடியவில்லை. அந்த அளவு உங்களுக்கு போதிய தொழில் நுட்ப அறிவு இல்லை ..இப்போது நீங்கள் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்... பாட வைக்க முடியவில்லை என்றால் பரவா இல்ல இது ஏன் பாடவில்லைன்னு காரணத்தையாவது கண்டு பிடிக்கலாம் என முடிவு செய்கிறீர்கள். அப்படி இப்படி அதை நோண்டி.. அதில் ஒரு I.C தான் பிரச்னை என கண்டு கொள்கிறீர்கள்..
இப்போது ஒன்றை கவனித்தால் எப்போது நீங்கள் பிரச்சனையை கண்டுபிடித்து விட்டீர்களோ அப்போதே என்றாவது ஒரு நாள் பிரச்சனையை நீங்கள் சரி செய்யும் சாத்திய கூறு அதிகமாகி விட்டது...

இந்த ரீதியில் பார்க்கும் போது பிரபஞ்ச உண்மைகளை மனிதனால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை அது ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையாவது புரிந்து கொள்வோம் என்கிற ரீதியில் யோசித்து பார்த்த மனிதன் தன்னால் புரிந்து கொள்ள முடியாத காரணத்தை.... அந்த உண்மையை கண்டு பிடித்தான்...
அந்த உண்மையின் பெயர் ....

"முழுமை..."

அது என்ன எப்படி  என்பதை விளக்குகிறேன்.
மனித மனதின் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறதே அது எப்படி வேலை செய்கிறது தெரியுமா?.
ஒவொன்றையும் ஒப்பிட்டு பார்த்து மட்டும் தான் அதால புரிந்து கொள்ள முடியும் ஒப்பீடு அல்லாத முழுமையான ஒன்றை அதால புரிந்து கொள்ள முடியாது..
எப்படி என்றால் ஒரு உதாரணத்திற்கு வைத்து கொள்வோம்.. இந்த பிரபஞ்சம் திடீரென மஞ்சளாக மாறிவிட்டது... நல்லா மங்கள கரமா....

மஞ்சள்னா உங்க வீட்டு எங்க மஞ்சள் அல்ல... சும்மா கண்ணனுக்கு தெரியாத dna அல்லது அணு அல்லது வைரஸ் தொடங்கி.. சப் அட்டமிக் ...இலிருந்து...மொத்த அண்டவெளி வரை எல்லாமே மஞ்சளாக மாறி விட்டது .. பிரபஞ்சத்தில் ஒரு துளி மிச்சம் இல்லாமல்..... இப்படி ஒரு பிரபஞ்சத்தில் பிறந்து வளர்கிறார் உங்கள் நண்பர் என்று வைத்து கொள்ளுங்கள்.
இப்போது நான் உங்கள் நண்பருக்கு மஞ்சள் என்றால் என்ன என்பதை புரிய வையுங்கள் என்கிறேன் என வைத்து கொள்ளுங்கள்... அவருக்கு நீங்கள் எப்படி புரியவைப்பீர்கள் சற்று யோசித்து பாருங்கள்... இதோ இருக்கே பா இதான் மஞ்சள்...என நீங்கள் விளக்க விளக்க அவன் எங்கே என தேடி கொண்டே இருப்பான் அவனால் அதை கடைசிவரை புரிந்து கொள்ளவே முடியாது... மஞ்சளை புரிந்து கொள்ள மஞ்சள் அல்லாத ஒன்று வேண்டும்...

ஒரு துளி  ...ஒரே ஒரு துளி....
ஒரே ஒரு குண்டூசி முனை அளவு சிகப்பு நிறம் கிடைத்து விட்டால் போதும் அதை காட்டி இதோ பார் இதன் பெயர் சிகப்பு இது அல்லாத மற்ற எல்லாம் தான் மஞ்சள் என்றால் அவன் புரிந்து கொள்வான்..இப்படி தான் உலகம் முழுவதையும் நாம் புரிந்து கொள்கிறோம்..

நல்லவன் என்பதை புரிந்து கொள்ள கெட்டவன் தேவை... யோசித்து பாருங்கள் உலகத்தில் எல்லோருமே நல்லவர் என்றால் நல்லவன் என்பதற்கான அர்த்தத்தை உங்களால் உள்வாங்க முடியுமா...? பெரிது என்பதை புரிந்து கொள்ள சிறிது தேவை.. அழகை புரிந்து கொள்ள அசிங்கம் தேவை... வெப்பம் புரிந்து கொள்ள குளிர்ச்சி தேவை...இப்படி ஒப்பிட முடியாத முழுமையாக இருக்கும் எதுமே ..நம் மனதிற்கு அப்பாற்பட்டது..

தன்னை உணர்தல் என்ற உண்மையான ஆன்மீகத்தை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் தனக்குள் என்ன இருக்கிறது என்பதை தேடி போனவர்கள் ...அதாவது உண்மையை தேடி போனவர்கள் அந்த உண்மை ஒரு முழுமையாக இருப்பதை உணர்ந்தார்கள்..அந்த உண்மை என்பதை பற்றி சிந்திக்கவோ விளக்கவோ முடியாது என உணர்ந்தார்கள்... ஆனால் முழுமையுடன் ஒன்றிணைய முடியும் என்பதை கண்டார்கள்.
அப்படி ஒன்றிணைந்தவர்களை பற்றி... ஆன்மீகத்தை... பிரபஞ்ச உண்மையை.. தனக்குள் என்ன இருக்கிறது என்பதை தேடிய சில பேரை பற்றி ..அவ்வப்போது நான் கொஞ்சம் பேச இருக்கிறேன் என்பதால் தான் அதன் முன்னுறையாக இந்த கட்டுரையை கொடுத்தேன்...
அறிவியலை கொண்டு... எவ்வளவோ ஆராய்ந்துடோம்... ஆன்மீகத்தை அறிவியல் கொண்டு ஆராய்ந்தால் எப்படி இருக்கும்...
இனி போக போக அதை பார்க்கலாம்..
(இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்... நமக்கு என்னத்துக்கு பா ஆன்மீக அறிவியல் எல்லாம் சாதா அறிவியல் போதாதா என நீங்கள் சொன்னால் உடனே ரிவர்ஸ் கியர் போட்டு வழக்கமான அறிவியல்கு ரிட்டர்ன் அகிடலாம் ஒன்னும் பிரச்னை இல்லை)

(நல்ல தகவல்கள் அனைவரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் டைம் லைனில் share செய்யவும்)

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு

இது போன்ற பயனுள்ள கட்டுரைகளை படிக்க..
Search us at facebook by following username..@ariviyalkadhalan

LIKE OUR PAGE >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

JOIN OUR GROUP >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

Comments

  1. என்னுடைய தேடலுக்கு உதவியாக இருந்தது நண்பா...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இதை பற்றிய சிந்தனை மேலும் தேவை...

      Delete
  2. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"