சுற்றுவட்டத்தில் ஒரு செயற்கைகோள்.




சுற்றுவட்டத்தில் ஒரு செயற்கைகோள்.

(கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு)

. செயற்கை கோள் எப்படி orbit இல் நிலை நிறுத்துகிறார்கள் என்பதை இன்று எளிமையான முறையில் பார்க்கலாம்.

அதாவது ராக்கெட் மேலே அனுப்பும் நடைமுறை பற்றியோ ....அது அடுக்கடுக்காக கழண்டு கொண்டு கடைசியாக செயற்கைக்கோளை விண்வெளியில் தள்ளி விடும் செயல்பாடு பற்றியோ ...நான் சொல்ல போவது இல்லை..
அதை எப்படி சுற்று வட்ட பாதை orbit இல் நிலை நிறுத்துகிறார்கள்... அது தொடர்ந்து பூமியை சுற்றுவது எப்படி என்பதை பற்றி தான் நான் சொல்ல போகிறேன்.

செயற்கைகோள் பூமியை சுற்றிவருவதை புரிந்து கொள்ளும் முன் நிலா ஏன் எதற்கு எப்படி பூமியை சுற்றிவருகிறது என்பதை பார்ப்போம் காரணம் நிலவும் செயற்கை கோளும் ஒரே அறிவியல் காரணத்தால் தான் பூமியை சுற்றி வருகின்றன.

தன் தலை மேல் விழுந்த ஆப்பிளை பார்த்து பூமி ஈர்ப்புவிசையால் இது கீழே விழுந்துள்ளது என்று சொன்ன நியூட்டன், நிலவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் .. "அப்போ ஈர்ப்பு விசையால் நிலாவும் என் தலையில் விழுமா? "

இதை பற்றி 10.8.16 தேடல் பெஞ்ச் "நியூட்டன் எனும் ஈர்ப்பு விசை" யில் சொல்லி இருந்தேன். அதற்கு அவர் கொடுத்த விடை... ஏற்கனவே நிலா பூமியை நோக்கி தொடர்ச்சியாக விழுந்து கொண்டுதான் உள்ளது..
அனால் அது நேர் கோட்டில் ஓட பார்க்க அதை பூமி தன்னை நோக்கி இழுத்து பிடிக்க அதனால் நிலா சுற்றுவட்டத்தில் சுழல்வதால் மேலும் சுழலும் வேகம் அதிகமாக இருப்பதால் பூமியில் மோதாமல் ஒவ்வொரு முறையும் தவிர்த்து கொண்டே போகிறது என்றார். (அவர் சொன்னதை புரியும் படி விளக்குகிறேன் பொறுங்கள்).

நியூட்டன் இதை ஈர்ப்புவிசைக்கொண்டு விளக்கி இருந்தார் ஆனால் அதற்கு பின் வந்த ஐன்ஸ்டைன் ஈர்ப்புவிசைக்கு வேறு புது அர்த்தத்தை கற்பித்தார் அதாவது பொருளின் நிறையை பொறுத்து அதைசுற்றி உள்ள வெளி வளைந்திருக்கிறது . அந்த வளைவிற்குள் வரும் கோள்கள் அந்த வளைவில் தான் ...வளைவால் தான் சுற்றுகின்றன என்றார்.

 இதை விளக்க எனது கட்டுரை " சார்பியல் எனும் சமுத்திரம் பாகம் 3 "இல் ஒரு எடுத்துக்காட்டு சொன்னேன். அதை திரும்பவும் சொல்கிறேன். அதாவது ஒரு பெட்ஷீட்டை 4 பேர் நாலு முனையில் விரித்து பிடித்து கொள்ளுங்கள்.. இதுதான் வானம் அல்லது வெளி..இப்போது அதற்கு நடுவே ஒரு இரும்பு குண்டை வைத்தால் என்னாகும் இரும்பு குண்டின் நிறையால் பெட்ஷீட் கீழ் நோக்கி வளையும் அல்லவா.. அப்படிதான் வானம் வலைந்துள்ளது.. இப்போது அந்த வளைந்த பெட்ஷீட்டில் குண்டை நோக்கி ஒரு எலுமிச்சையை உருட்டி விட்டால் அது அந்த குண்டை நோக்கி வட்ட பாதையில் வளைந்து வளைந்து சுற்றி வருகிறதல்லவா அப்படிதான் நிலாவும் பூமியை சுற்றிவருகிறது.
 ஆனால் எலுமிச்சை கொஞ்ச நேரம் கழித்து குண்டில் சென்று விழுந்து விடுமே.. ஆனால் நிலா ஏன் விழுவது இல்லை? இப்போது அதே எலுமிசையை எடுத்து கொள்ளுங்கள்..சுற்றி சுற்றி அது மையத்தை நெருங்கிகொன்டிருக்கும் போது இப்போது ஏதாவது செய்து எழுமிச்சையின் வேகத்தை அதிக படுத்துவதாக வைத்து கொள்ளுங்கள் என்ன நடக்கும் ?
எலுமிச்சை ஒரு குறிப்பிட்ட வட்ட பாதையில் தொடர்ந்து சுற்றி சுற்றி வரும். மையத்தில் சென்று விழாது.. காரணம் எழுமிச்சையின் வேகம் அதிகமாக இருப்பதால் அது நேர் கோட்டில் ஓட பார்க்கிறது ஆனால் குண்டு அதை தன்னை நோக்கி ஈர்க்கிறது .
மிக சரியாக இதே போல தான் நிலாவும் பூமியை சுற்றி சுற்றி வருகிறது...

இப்போது செயற்கைகோளுக்கு வருவோம் ... அதை விண்வெளியில் பூமியின் ஈர்ப்புவிசைக்குட்பட்ட ஒரு இடத்தில பக்க வாட்டில் நேர் கோட்டில் செல்லும்மாறு ஒரு ஆரம்ப விசையை கொடுத்து விட்டால் போதும்... அது நேர்கோட்டில் ஓட பார்க்க அதை பூமி இழுத்து பிடிக்க ...மேலே சொன்ன எலுமிச்சை கதையை போல  சாட்லைட் நம்மை சுற்றி சுற்றி வரும்.

இப்போ ஒரு கேள்வி எழலாம்.. ஆரம்ப விசை கொடுத்தோம் சரி... தொடர்ந்து எப்படி சுற்றுகிறது?
இப்போது தான் நியூட்டனின் முதல் விதி உதவிக்கு வருகிறது.. அதாவது" ஒரு இயங்கும் பொருளோ அல்லது அமைதிநிலையில் உள்ள பொருளோ புற விசை ஒன்று செயல்படாத வரை அது தன் நிலையை மாற்றி கொள்ளாது..'' எனவே ஆரம்ப விசை கொடுத்தால் கொடுத்தது தான்.
நிலவுக்கு வேகமாக சுற்ற விசை முதல் முதலில் பூமியில் இருந்து வெடித்து சிதறிய போது கிடைத்தது தான்.. நியூட்டன் விதி படி அது மாறாமல் விசை தொடர்கிறது..
அதீத ஈர்ப்புவிசை கொண்ட அல்லது அதீத நிறைகொண்ட பொருள் ஏதும் குறுக்கிடும் வரை இந்த விசை தொடரும் என்ற விளக்கத்தோடு இன்றைய கட்டுரையை நிறைவு செய்கிறேன்.



(

Comments

  1. வாவ்.. வாவ்.. வாவ்.. எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள்....நன்றி.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"