#தேடல்_பெஞ்ச்(17.8.16) #நான்_ரசித்த_புத்தகங்கள் (கருத்தும்,எழுத்தும்:#ரா_பிரபு)

#தேடல்_பெஞ்ச்(17.8.16)

#நான்_ரசித்த_புத்தகங்கள்

(கருத்தும்,எழுத்தும்:#ரா_பிரபு)

இன்றைக்கு நான் (மீண்டும்)சில புத்தகங்களை அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன்.
கடைசியாக 3.8.16 தேடல் பெஞ்ச் இல் புதையல் புத்தகங்கள் என்ற தலைப்பில் சில புத்தகங்களை அறிமுகம் செய்தேன் இன்று என்னிடம் கலக்ஷனில் உள்ள நான் ரசித்த சில புத்தகங்களை அறிமுகம் செய்கிறேன்.

முதல் புத்தகம் "தண்ணீர் தேசம்.."

ஒரு நிருபர் ...அவனுக்கு கடல்னா உயிர்.. அவனுக்கு ஒரு காதலி அவளுக்கு தண்ணினாலே பயம் .. அதற்கு ஒரு பிளாஷ்பேக் காரணம் இருக்கு...
அவளுக்கு அந்த பயத்தை போக்க காதலன் அவளை சில மீனவ நண்பர்கள் துணை யோடு விசை படகில் ஒரு இரவு கடல் நடுவே கொண்டு போகிறான்.. எதிர் பாராமல் படகு நாடு கடலில் கோளாறு ஆகி விடு கிறது... எந்த உதவியும் இல்லாமல் அங்கேயே பல நாள் இருக்க நேருகிறது.
 முதல் சில நாள் இருக்கும் உணவை சாப்பிடு கிறார்கள் அதன் பின் சோறு சாப்பிடாமல் சோற்றில் மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை குடிக்கிறார்கள் .. காலப்போக்கில் தண்ணீர் தீர்ந்து போக ஆமை ரத்தம் கூட குடிக்கிறார்கள்...இனி உயிர் தப்பிப்பது கேள்விக்குறிதான் என்ற நிலையை அடைகிறார்கள்.
அதன் பின் என்ன ஆச்சு என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புத்தகத்தின் சிறப்பு....
புத்தகம் முழுக்க உரைநடை பாணியில் இல்லாமல் கவிதை பாணியில் எழுத பட்டுள்ளது.
 உதாரணம்....மழை வருகிறது... அதை ஆசிரியர் இப்படி சொல்கிறார் " மழை.. இந்த ஒற்றை தலைப்பை வைத்து கொண்டு வானம் லட்சம் வார்த்தைகளால் பேச தொடங்கியது.."
இந்த நாவலுக்கு புதுமையான கவிதை நடைக்கு காரணம் .. இந்த புத்தகத்தின் ஆசிரியர் வேறு யாரும் அல்ல..               கவிஞர் 'வைர முத்து 'அவர்கள் தான்.

அடுத்து ,

"வெளிச்சத்தின் நிறம் கருப்பு.."

உலகமெங்கும் நடந்த பல விளக்க முடியாத மர்ம சம்பவங்களை விவரிக்கிறது இந்த புத்தகம்... திகில் விரும்பிகள் மிஸ் பண்ணக்கூடாத புத்தகம்.
உதாரணமாக நாய்களின் தற்கொலை முனை பற்றி....அது ஒரு பாலம் ..அங்கு வரும் நாய்கள் மட்டும் ஏதோ உந்தப்பட்டு அங்கிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்றன... ஒன்றல்ல இரண்டல்ல ... இதுவரை நூற்று கணக்கான நாய்கள் செத்தும் அதன் மர்மம் இன்னும் புரிப்பட வில்லை..
நாஸ்கா கோடுகள் முதல்... டேவிட் கூப்பர் வரை பல மர்மங்களை அலசுகிறது "வெளிச்சத்தின் நிறம் கருப்பு.."
மர்ம விரும்பிகளுக்கு நல்ல ட்ரீட்.
இதன் ஆசிரியர் முகில்.

அடுத்தாக நான் சொல்ல போவது ஒரு காமிக்ஸ்..முத்து காமிக்ஸ் இல் வெளி வந்த "மின்னும் மரணம் "எனும் காமிக்ஸ்..
என்னை போல காமிக்ஸ் விரும்பிகளும் நல்ல ட்ரீட் ..
அதிரடி கௌபாய் டெக்ஸ்வில்லர் கேள்வி பட்டிருப்பீர்கள் அவர் ஒரு strait forward அதிரடி டைப் என்றால் கேப்டன் டைகர் (மொழி பெயர்பல்லாத நிஜ பெயர் captain blue berry ) ஒரு இயல்பான எதார்த்த அதிரடி நாயகர்.. ஜேம்ஸ் பாண்ட் போல கொஞ்சம் tricky fellow உடல் வலிமையை கொஞ்சமாகவும் மூளை மற்றும் கியுக்தி ஐடியாவை அதிகம் நம்புபவர்..
அமெரிக்காவில் வடக்கு தெற்கு பிரிவினை போரின் போது போருக்காக ஒதுக்க பட்ட மகா தங்க புதையல் தற்போது எங்கே உள்ளது என தேடி போவதில் கதை தொடங்கு கிறது.. பல நாள் குதிரை தொலைவில் உள்ள ஒரு நகரத்தில் இதை பற்றி அறிந்த நபரை தேடி போகிறார் டைகர் அவரை அரசாங்கம் நேரடியாக அனுப்ப முடியாத சூழல் என்பதால் இவரை குற்றவாளி போல காட்டி இவர் தலைக்கு இதனை டாலர் என்ற விளம்பரதோடு தனது அரசுக்காக தங்கத்தை தேடி செல்கிறார் டைகர்..
 தங்கத்தின் மர்மத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது அதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..ஒரு டிராமா காக தலைக்கு இதனை டாலர் என வைத்தத்து கதை போக்கில் டைகர் தலைக்கு நிஜமாகவே அரசு டாலரை நிர்ணயிக்கிறது... அந்த டாலரின் எண்ணிக்கை கதை நகர நகர் கூடி கொண்டே போகிறது கதை போக்கில் டைகர் மேல் உள்ள crime rate கூடி கொண்டே போகிறது . நகரத்தில் தலைமறைவாகி செவ்விந்தியர்கள் துணை கொண்டு போராடும் நிலைக்கு தள்ள படுகிறார் டைகர்.     ஒரு கட்டத்தில் ப்ரெசிடென்டை கொல்ல முயன்ற குற்றமும் சேர்ந்து கொள்கிறது... இவ்வளவு அவ பெயரையும் கடைசியாக ஒரு அதிரடி செயல் மூலம் துடைத்து எரிந்து விடுகிறார் டைகர் ..(அது என்ன செயல் என்பதையும் நீங்கள் காமிக்ஸ் இல் தான் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்) க்ளைமாக்ஸ் பகுதிகளில் அதிரடியுடன் ரோமான்சும் உண்டு.
முத்து காமிக்ஸ் இல் பல பாகங்களாக வெளி வந்த போதே அதை தொடர்ந்து  படித்து வந்தேன் இப்போது கலரில் வெளிவந்துள்ளது...
இது ஒரு மெகா சைஸ் கதை விலை ரூபாய் 1000.
அவ்வபோது வேறு சில புத்தகங்களை அறிமுகம் செய்கிறேன் .. இப்போதைக்கு இத்துடன் இன்றைய தேடல் பென்சை நிறைவு செய்கிறேன்.

(நல்ல தகவல்கள் அனைவரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் டைம் லைனில் share செய்யவும்)

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு

இது போன்ற பயனுள்ள கட்டுரைகளை படிக்க..
Search us at facebook by following username..@ariviyalkadhalan

LIKE OUR PAGE >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

JOIN OUR GROUP >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

Comments

  1. மகிழ்ச்சி, நீங்களும் காமிக்ஸ் காதலன் என்று தெரிந்ததில்.... ஆனால், எனக்கு காமிக்ஸ் தூரமாகிவிட்டது.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"