"நியூட்டன் எனும் ஈர்ப்புவிசை"



.            

     "நியூட்டன் எனும் ஈர்ப்புவிசை"

(கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு)

ஐன்ஸ்டைனை பற்றி கட்டுரை எழுதியபோது அதில் நியூட்டனின் கண்டுபிடிப்புகளை ஐன்ஸ்டைன் விஞ்சி விட்டார் என்கிற ரீதியில் கொஞ்சம் எழுதி இருப்பேன்.
அதற்காக நியூட்டனை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.

நியூட்டன் என்றால் நமக்கு அவரது மூன்று விதியை தவிர வேற ஏதும் தெரிவது இல்லை(அதிலும் பல பேருக்கு மூன்றாம் விதிமட்டும் தான் நினைவில் இருக்கும்) ஆனால் அவர் பெருமைகள் இன்னும் நெறய உள்ளது.

இன்றைக்கு தேதிக்கும் புவியின் சுற்றுவட்ட பாதையில் ஒரு செயற்கைக்கோளை நிலை நிறுத்த நியூட்டனின் பார்முலாவைத்தான் பயன்படுத்துகிறார்களே தவிர ஐன்ஸ்டைனின் E=MC2 ஐ அல்ல.
நியூட்டன் தனது மகா கண்டுபிடிப்பை கண்டுபிடித்த போது அவருக்கு வயது வெறும் 23 தான் அவர் தலையில் ஒரு மாங்காய் விழுந்த பின் அவர் புவிஈர்ப்பு விசையை கண்டு கொண்டார் அல்லவா (சும்மா change கு சொன்னேன் அது ஆப்பிள் தான்) அதன் பின் அவர் என்ன செய்தார் தெரியுமா அண்ணாந்து வானத்தை பார்த்தார் நிலவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் அந்த ஆப்பிள் என் தலையில் விழுகிறது என்றால் இந்த நிலவும் என் தலையில் விழுமா (அறிஞர்களின் கேள்விகளில் எப்போதாவது முட்டாள் தனம் தெரிந்தால் அதற்கு ஒரே அர்த்தம் தான் நாம் முட்டாளாக இருக்கிறோம்)

பிறகு அதற்கு விடையை அவரே கண்டு கொண்டார் அதாவது நிலா ஏற்கனவே பூமியை நோக்கி விழுந்து கொண்டு தான் உள்ளது.. அப்புறம் ஏன் அது தனது தலையில் விழ வில்லை என்றால் அது புவியை வட்ட பாதையில் சுற்றுகிறது இந்த நிலையில் அதன் வேகம் அதிகமாக இருப்பதால் பூமியை நெருங்காமல் தவிர்த்து கொண்டே போகிறது..

அதன் பின் நிலவின் நகர்வை ஆராய்வதில் மும்மரமாக இறங்கிவிட்டார் அந்நிலையில் அதை விளக்க போதிய கணித வசதி இல்லை எனவே தானே அதற்கான கனிதத்தை உண்டாக்கினார் அதன் பெயர் கால்குலஸ் ( அது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தது தான் இவர் தான் அதை கொஞ்சம் மெருகேற்றி பயன்படுத்தியவர் என்று சொல்கிறார்கள்)

நியூட்டனின் மூன்று சமன்பாடுகள் இருக்கிறதே .. அது தொழிற்சாலையில் நகரும் இயந்திரம் முதற்கொண்டு வானில் நகரும் கோள்கள் வரை இயக்கத்தை விளக்க கூடியவை..

முப்படகதை கொண்டு ஒளி பிரிதல் ஏற்படுவதை வைத்து ஒளி யில் 7 வனங்கள் உள்ளதை அவர் கண்டு கொண்டார் 7 நிறங்கள் அடங்கிய சக்கரத்தை சுழற்றினால் அது வெள்ளையாக தெரிவதை நாம் பள்ளியில் செய்து இருப்போமே அதை முதலில் செய்தது நியூட்டன் தான் அந்த டிஸ்க் கு பெயரே நியூட்டன் டிஸ்க் தான்.

ஒரு முறை அவர் இருந்த ஊரில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றியது .. ஊர் மக்கள் அதை பற்றி புரியாமல் பேசி கொண்டார்கள்.. நியூட்டன் மட்டும் அதை ஒரு தொலை நோக்கி கொண்டு கண்காணித்த வண்ணம் இருந்தார் . பிரதிபலிப்பு வகையை சார்ந்த அந்த தொலை நோக்கி .... அவருடைய சொந்த கண்டுபிடிப்பு.

ஒருமுறை அவர் நண்பர் எட்மெண்ட் ஹெலி ..பெரும் செல்வந்தர் அவரை பார்க்க அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அந்த வால் நட்சத்திரம் தோன்றி இருந்த நேரம் அது.. நியுடனை பாத்து கேட்டார் ..
மாம்ஸ் அந்த வால் நட்சத்திரத்த பாரத்தியாடா ?
அதற்கு நியுடன் சொன்ன பதில்
"மச்சி... அத பாக்குறது மட்டும் இல்ல மச்சி டெய்லி அத கண்கானிக்கவும் செய்ரன் அதோட நகர்வை கணக்கிட்டு ஒரு கணக்கீடு வச்சி இருக்கன் உனக்கு மேட்டர் தெரியுமா அந்த வால் நட்சத்திரம் என் கணக்கீட்டை இம்மி பிசகாம follow பண்ணுது மச்சி..."
இதை கேட்டு அசந்து போன hally
"பங்கு... நீ கெத்து ..பங்கு.. சான்ஸே இல்ல செம டா நீ மட்டும் இத அப்படியே புக்கா  போட்டனு வையன் செம்மையா இருக்கும்" என உற்சாக படுத்த அதற்கு நியூட்டன் நம்ம கிட்ட அவ்ளோ வசத்திலாம் இல்ல மச்சி என மறுக்க .."நாம இப்படியா மச்சி பழகனோம்.. நான் தரண்டா மாப்ள உனக்கு காசு " என உற்சாக படுத்த அப்படி பிறந்ததுதான் ப்ரின்சியா என்கிற புத்தகம்..இதுவரை வெளிவந்த அறிவியல் புத்தகங்களில் மிக சிறப்பான புத்தகமாக அது கருத படுகிறது.அதன் பின் இன்னாள் வரை வந்த இயற்பியல் மற்றும் அண்டவெளி ஆறாசச்சிக்கு இது முக்கிய ஆரம்ப மேடையாக விளங்கியது.


Comments

  1. நியூட்டன் குற்த்து இன்னும் எதிர் நோக்குகிறேன் நண்பரே.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"