MRI என்ன ஏது எப்படி



MRI என்ன ஏது எப்படி

(கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு)

Mri இன் அறிவியல் என்ன..??

ஆ ..னா , ஊ..னா  டாக்டர்ஸ் ஒரு MRI scan எடுத்திடுங்க என்கிறார்களே... அந்த MRI ஸ்கேன் எப்படி வேலை செய்கிறது அதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன ...? வாருங்கள் இன்று MRI ஐ ஸ்கேனை ..ஸ்கேன்  செய்வோம்.....

"Magnetic resonance imaging "என்கிற M RI ஐ உருவாக்கியவர் டாக்டர் ரேமண்ட் டாமண்டியன் என்பவர். 1977 இல் சில மாணவர்களின் துணை கொண்டு இதை உருவாக்கினார்.
இது மிக வலிமையான காந்த புலத்தை கொண்டு இயங்கும் ஒரு கருவி என்பதால் முதலில் இதில் தன்னை பரிசோதனை செய்வித்து கொள்ள அனைவரும் பயந்தனர். பின்னே.... காமா கதிர்வீச்சால் பச்சை மனிதனாக மாறி போன ஹல்க் கதையா ஏதாவது ஏடாகூடமா ஆயிடிச்சினா!! ..
எனவே இது ஒரு ஆபதில்லாத மெஷின் என்பதை காட்ட இதில் முதலில் தன்னையே பரிசோதனை செய்து காட்டினார் டமாண்டியன்...

இன்று உலகளவில் மிக பெரிய அளவில் பயன் படுத்தபட்டு வருகிறது. எக்ஸ் ரே வில் எலும்பில் உள்ள பாதிப்புகளை கண்டறிவதை போல இதில் தசையில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம்... உங்களுக்கு மூலையில் கட்டியா இதில் தெரிந்து விடும் .. உங்களுக்கு புற்றுநோயா.. இதில் தெரிந்து விடும்.. உங்களுக்கு வலிப்பு உள்ளதா இதில் கண்டறியலாம்.. (உங்களுக்குனா உங்களுக்கு இல்லைங்க...)

 மற்ற ஸ்கேனிங் கருவியை காட்டிலும் இது சிறந்த ஸ்கேனிங் கருவியாக கருத பட காரணம் பாதிக்க பட்ட பகுதியை இதில் தெளிவாக 2D மற்றும் 3D படமாக பார்க்க முடியும்.. மூளை நரம்புகளின் செயல் பாடுகள் நரம்புகளில் ரத்தம் பாய்வது எல்லாம் கூட தெளிவாக பார்க்கலாம்.
இதில் உள்ள சுரங்கம் மாதிரி அமைப்பில் ஒரு ஸ்ட்ரெச்சர் மாதிரி அமைப்பில் உங்களை படுக்க வைத்து கருவிக்கு உள்ளே அனுப்புவார்கள்..
இந்த அமைப்பை' போர்' என்று அழைகிறார்கள் .உடலை அசைக்காமல் வைக்கவும் என எச்சரித்து அனுப்புவார்கள் . மீறி அசைத்தால் மீண்டும் பரிசோதிக்க அனுப்புவார்கள். காந்த புலனும் மேலும் அதற்கு ஒரு எதிர் காந்த புலனும் என்கிற இரண்டு விஷயம் இதற்குள் இருப்பதால்.. மெஷின் சும்மா ரோடு போடும் மெஷினுக்குள் உங்களை விட்டதை போல ஒரே லொட லொடா சப்ததத்தோடு ஏகத்துக்கு கூச்சலி்டும்.

இது அதீத சக்தி வாய்ந்த காந்த புலத்தில் இயங்குகிறது என்று சொன்னேன் எனவே இதில் ஜாலி ரெய்ட் செய்ய உங்களுக்கு கண்டிஷன் உண்டு.. நீங்கள் வைத்திருக்கும் வாட்ச்...பேணா..கிரெடிட் கார்ட்... போன அட்சய திருதியைக்கு நீங்கள் வாங்கின தங்கம்.. இப்படி எல்லாவற்றையும் உருவி கொண்டு தான் இதில் அனுப்புவார்கள்..
மீறி ஏதாவது ஜெம் கிளிப் ..குண்டூசி போன்ற பொருட்களை நீங்கள் கொண்டு சென்றால் அது உங்களுக்கு  மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடும்.. குறிப்பாக ஜெம் கிளிப் போன்ற சிறிய பொருட்கள் அதீத காந்த விசையால் கவர பட்டு உங்கள் உடல் தசைகளில் எங்கே துளைக்குமா தெரியாது..
சரி இனி இது எப்படி வேலை செய்கிறது இதில் உள்ள அறிவியல் என்ன என்பதை பார்ப்போம்...

முதலில் அந்த கருவியை குறுக்கே வெட்டி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்..

இதில் நான் சொன்ன அந்த bore என்கிற tube அமைப்பிற்குல் அதீத சக்தி வாய்ந்த காந்த புலத்தை உற்பத்தி செய்ய சூப்பர்கண்டக்டிவ் மேக்னட் வைக்க பட்டுள்ளது..
இது எக்கச்சக்க காயில்கள் வயர்கள் கொண்டு வடிவமைக்க பட்டிருக்கும்.. காயில் களில் மின்சாரத்தை செலுத்துவதன் மூலம் காந்ததை உற்பத்தி செய்யலாம் என்று 9.8.16 தேடல் பெஞ்சில் "மின்காந்தம் என்ன ஏது எப்படி " என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது நினைவு இருக்கலாம்..
இந்த சூப்பர் கண்டக்டிவ் மேக்னட் 0.5 டெஸ்லா முதல் 2 டெஸ்லா வரை காந்த புலத்தை உற்பத்தி செய்ய முடியும் ( டெஸ்லா என்பது காந்த புல செறிவை அளக்கும் அலகு)
இது தவிர சிறிய அளவு காந்த புலத்தை உண்டு பண்ணும் resistant magnet மற்றும் gradient magnet  கள் இருக்கும். கட்டமைப்பில் பார்ப்பதற்கு சூப்பர் கண்டக்ட்டிவ் மேக்னட் போல தான் இருக்கும் அனால் சூ.க மேக்னட்டின் காயில்கள் திரவ ஹீலியத்தில் வைக்க பட்டிருக்கும். இதற்கு அப்படி அல்ல..

Permanent magnet ஒரு நிலையான காந்த புலத்தை உண்டு பண்ணினால் இந்த கொசுறு காந்தங்கள் மாறுபடும் காந்த புலத்தை உண்டு பண்ணும்.
அடுத்ததாக உள்ளே இருக்கும் ஒரு முக்கிய பாகம்.. ரேடியோ அலைகளை உண்டுபண்ண கூடிய ஒரு காயில் அமைப்பு..
அடுத்ததாக சக்திவாய்ந்த கம்பியூட்டர் இணைக்க பட்ட ஸ்கேனர் அமைப்பு ஒன்று உள்ளது.
இனி இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்..

நமது உடல் தண்ணீர் மற்றும் கொழுப்புகளால் ஆனது என்று நமக்கு தெரியும்.. அதே போல தண்ணீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் கலவை என்பதும் நமக்கு தெரியும் .அந்த ஹைட்ரஜன் அணு தான் இந்த ஸ்கேனரில் ஸ்கேன் செய்ய முக்கிய பங்கு வகிக்கும் ஒரு சமாச்சாரம்.
சாதாரணமாக காந்தம் மற்ற சில பொருட்களை கவர காரணம் காந்த புலத்தில் பொருட்கள் வரும் போது அதில் தாறு மாறாக சுற்றி கொண்டிருக்கும் அணுக்கள் ஸ்கூல் பிள்ளைகள் ப்ரேயரில் நின்றதை போல வரிசையாக அடென்ஷனில் நிற்பது தான்.
அதே போல ஸ்கேன் செய்ய பட வேண்டிய பேஷண்ட் MRI கருவியின் வலிமையான காந்த புலத்தில் கொண்டு வரும் போது அவர் உடலில் உள்ள ஹைட்ரஜன் அணு ஒரே சீராக வடக்கு மற்றும் தெற்காக பிரிந்து நிற்கும். அதில் சில பிரச்சினையான செல்களின் புரோட்டான்கள் மட்டும் பொருந்தாமல் இருக்கும் இப்போது அதில் ரேடியோ அதிர்வலைகளை பாய்ச்சும் போது அந்த பொருந்தாத புராட்டான்கள் மட்டும் வேறு திசையில் சுழல தொடங்கும்..
 ரேடியோ அலைகள் அவற்றை குறிப்பிட்ட பிரிக்வன்சியில் குறிப்பிட்ட திசையில் சுழல செய்யும்.. இந்த frequency ஐ  larmour frequency என்கிறார்கள்..
இப்போது நான் முன்னே சொன்ன அந்த gradient magnet தனது மாறுபடும் காந்த புலத்தை கொண்டு மெயின் காந்ததை வெட்டும் போது மிக சரியாக எந்த பகுதியை படம் பிடிக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டு கிறது... இந்த பகுதியை slice என்று அழைகிறார்கள்.

ரேடியோ சிக்னல் நிறுத்த பட்டவுடன் அதனால் சக்தியூட்ட பட்டு சுழன்ற புராடான்ஸ் தனது இயல்பு நிலைக்கு திரும்புகிறது அப்படி திரும்பும் போது அது ஒரு ஆற்றலை வெளியிடுகிறது அதை ஸ்கேனர் பகுதி உள்வாங்கிகாள்கிறது பிறகு இதை கம்பியூட்டருக்கு அளிக்கிறது..கம்பியூட்டர் இந்த சிக்னல்களை fourier transform என்கிற ஒரு கணித சமண்பாடாக பெறுகிறது.. இந்த சமன்பாட்டை இது 2D அல்லது3D வடிவ படமாக மாற்றுகிறது. நமக்கு பார்க்க சிக்னல் சரியில்லாத பழைய டிவி யில் ப்ளாக் அண்ட் வைட் படம் பார்த்த கதையா தெரிந்தாலும் மருத்துவர்களுக்கு இது மனிதனை அறுக்காமலே அவனுக்குள் உள்ள தசை மற்றும் அவனது உள் உறுப்பில் உள்ள குளருபடிகளை தெள்ள தெளிவாக காட்டி விடுகிறது..

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"