#தேடல்_பென்ச் (3.8.16) "#புதையல்_புத்தகங்கள்" (கருத்தும் எழுத்தும்: #ரா_பிரபு)



             #தேடல்_பென்ச் (3.8.16)

           "#புதையல்_புத்தகங்கள்"

(கருத்தும் எழுத்தும்: #ரா_பிரபு)

இன்றைக்கு தேடல் பெஞ்சில் நான் சில புத்தகங்களை அறிமுகம் செய்ய இருக்கிறேன்..

சின்ன அனு துகள் தொடங்கி பெரிய அண்ட வெளி வரை ...நமக்கு புரியாத நாம் அறிந்து கொள்ள துடிக்கிற விஷயங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது..?
எந்த சந்தேகம் என்றாலும் இணையதளத்தை தட்டி பார்க்கும் பழக்கம் வளராத கால கட்டத்தில் கேட்கிறேன்....
அந்த நேரத்தில் பல பேருக்கு அருமருந்தாக அமைந்த புத்தகம் தான் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி..."

ஜூனியர் விகடனில் தொடராக வந்து பின் புத்தகமாக வெளிவந்த போது அறிவியல் காதலர்களாக இருக்கும் பல பேர் இதயங்களை இந்த புத்தகம் கொள்ளை கொண்டது..
சுஜாதா ரங்கராஜன் என்பவர் எழுத்தாளர் மட்டும் அல்ல அவர் ஒரு விஞானி என்பது பல பேருக்கு தெரியாது. வோட்டிங் மெஷின் கண்டுபிடித்ததில் அவர் பங்கும் உண்டு.
சின்ன வயதில் நான் மிக மிக ரசித்து படித்த புத்தகங்களில் இவரது ஏன் எதற்கு எப்படியும் ஒன்று...
இதில் இரண்டு பார்ட் உண்டு..இரண்டையுமே வாங்கி பைண்ட் செய்து வைத்து கொண்டேன். இன்றளவும் என்னிடம் பத்திரமாக உள்ளது.
என் புத்தக அலமாரியில் இருக்கும் சில நூறு புத்தகங்களில்" ஏன் எதற்கு எப்படி" புத்தகத்திற்கு தனி நட்சத்திர அந்தஸ்த்து உள்ளது.

அந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது..?
அதில் எல்லாமே இருக்கிறது .
அணுவிலிருந்து அண்டம் வரை..கடவுள் முதல் கம்பியூட்டர் வரை உலகத்தின் பல மூலைகளிலிருந்து அறிவு தேடலும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் கொண்ட பல வாசகர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது  ..வண்ண படங்கள் கொண்ட பெரிய சைஸ் புத்தகம் அது.

புத்தகம் 2 = ஜீநோம்

இந்த D. N. A பற்றி R.N. A பற்றி விளக்கமாக ஏதாவது தெரியுமா.. ஜீன்ஸ் என்றால் என்ன ஏதாவது ஐடியா இருக்கா ...இதை யாராவது புரியும்படி தமிழில் விளக்கினால் நன்றாக இருக்குமே என உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கான புத்தகம் தான் ஜீநோம் .
கடுகு சிருத்தாலும் காரம் குறையாது என்பதை போல புத்தகம் மிக சிறியது தான் என்றாலும் விஷயங்கள் அற்புதமானவை.
சிக்கலான இதை போன்ற விஷயங்களை தமிழில் விவரிக்கும் புத்தகம் கிடைத்தால் அது பொக்கிஷம் என்பதில் சந்தேகம் இல்லை.
இதன் ஆசிரியர் வேறு யாரும் அல்ல" ஏன் எதற்கு எப்படி "புத்தகத்தின் ஆசிரியரான அதே சுஜாதா தான்.

புத்தகம் 3 ="தலைமை செயலகம்."

தகளைப்பை பாத்து ஏதோ அரசியல் புத்தகம் போல என் நினைத்து உள்ளே சென்றால் மூளையின் செயல் பாட்டை மூளை பற்றிய அணைத்து விஷயங்களை அக்குவேறு ஆணிவேறாக எளிய தமிழில் வெளிச்சம் போட்டு காட்டிய பக்கா அறிவியல் புத்தகம்..
ஆசிரியர் ...அதே சுஜாதா.
Curiosity கொண்ட... அறிவியல் தாகம் கொண்ட நண்பர்கள்
சுஜாதா அவர்களின் மேலே சொன்ன 3 புத்தகங்களும் கட்டாயம் படிக்க வேண்டியவை

புத்தகம் 4: "வந்தார்கள் வென்றார்கள்."

மதன் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்த ஒரு புத்தகம்.
வரலாரு என்றாலே தூக்கம் வரும் என்ற நிலையை மாற்றி இவ்வளவு சுவாரஷ்யமாகவும் விளக்க முடியும் என நிரூபித்தவர்.
இந்த புத்தகத்தை படித்து முடித்த பின் முகலாயர் வரலாறு.. டெல்லியை ஆண்ட அரசர்கள் கதை இதெல்லாம் உங்களுக்கு தண்ணிர் பட்ட பாடாகிவிடும். மன்னர் படையெடுப்புகளை ஒரு க்ரைம் நாவலுக்குரிய விறுவிறுப்போடு விவரித்து இருப்பது தனி சிறப்பு..

புத்தகம் 5 : "கிமு கிபி"

அதே மதன் தான்  இந்த புத்தகத்திற்கு ஆசிரியர் ..வந்தார்கள் வென்றார்களில் இந்தியாவை டெல்லியை முகலயர்களை மட்டும் சுற்றிக்காட்டிய மதன் இம்முறை அழைத்து சென்றிருப்பது உலக சுற்றுலா..
மேலே சொன்ன புத்தகங்கள் என்னிடம் உள்ள கலெக்ஷ்னில் எனக்கு மிக பிடித்தவைகளில் இருந்து நான் தேர்ந்து எடுத்து சொன்னவை.

இந்த புத்தகங்களில் ஆர்வம் வந்தால் நெட்டில் pdf களை தேடாதீர்கள். நிஜமான புத்தகத்தை கையில் பிடித்து ரசித்து படிப்பதற்கும் நெட்டில் டவுன்லோடு செய்து படிப்பதற்கும் உள்ள வேறுபாடு எண்பது படத்தை திருட்டு விசிடி யில் பார்ப்பதற்கும் திரையரங்கில் dts effect இல் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு ஆகும்..

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு

எங்கள் கட்டுரைகள் பிடித்திருந்தால்..
Search us at facebook by following username..@ariviyalkadhalan

LIKE OUR PAGE >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

JOIN OUR GROUP >>>>> CURIOSITY KINGDOM  தேடல் சாம்ராஜ்யம்  <<<<<

Comments

  1. நானும் சுஜாதா புக்ஸ் ரசிகன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"