"எலிசபெத் பாத்தரி ஒரு நிஜ ரத்தகாட்டேறி"





"எலிசபெத் பாத்தரி
ஒரு_நிஜ_ரத்தகாட்டேறி"

(ரா.பிரபு)


வரலாறு எனும் நீண்ட நெடிய புத்தகத்தில் பல கருப்பு பக்கங்கள் இடம் பிடித்திருப்பது நமக்கு தெரியும். பல சைக்கோ மன்னர்களும் கொடூர கொலையாளிகளும் ,ரத்த வெறி கொண்ட அரக்கர்களும் அந்த பக்கத்தை ஆக்ரமித்துருப்பது நாம் அறிந்த ஒன்று தான்.
ஆனால் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லாமல் பெண்களும் அந்த இருண்ட வரலாற்றில் தங்கள் இடத்தை பிடித்திருப்பது நம்மில் பல பேருக்கு தெரியாத ஒன்று.
அப்படி ஒரு வரலாற்றின் கருப்பு பக்கத்தை தான் இன்று நாம் புரட்ட போகிறோம். அப்படி ஒரு கொடூர பெண்மணியின் பெயர் தான் எலிசபெத் பாத்தரி (Elizabeth bathory)

தற்போது இருக்கும் ஸ்லோவேகியா பகுதியில் ஒரு மலைப்பாங்கான ...
ஊருக்கு ஒதுக்கு புரமான இடத்தில் இருந்தது அந்த கேத்தட்டிக்  கோட்டை (the castle of cathetic)
அக்கம் பக்கம் வீடுகள் இல்லாமல் இல்லை.. அனால் மிக குறைவு.
அந்த உறைய வைக்கும் பணி பொழியும் இரவுகளில் திடீர் என ரத்தத்தை உறைய வைக்கும் அலறல் சப்தம் கேட்கும் .. பக்கத்து குடியிருப்புகள் பெரும்பாலும் அந்த அலறல் சப்ததிற்கு பழகி போயிருந்தார்கள்.
அதனால் தங்கள் ஜன்னல்களை இறுக சாத்தி விட்டு அதிர்ப்தியுடன் உறங்க சென்று விடுவார்கள்.
பக்கத்தில் குடியிருக்கும் சில துறவிகள் வழக்கம் போல மண் பானைகளை சுவற்றில் ஓங்கி அடித்து தனது எதிர்ப்பதை காட்டுவார்கள்.

அந்த நேரத்தில் எல்லாம் அந்த கோட்டையில் யாரோ ஒரு சிறுமியின் நக கண்ணில் ஊசியை ஏற்றி கொண்டோ அல்லது இரும்பை பழுக்க காய்ச்சி தன் இளம் வேலை காரிகளின் உடல் முழுக்க சூடு போட்டு அவர்கள் துடிப்பதை பார்த்து ரசித்து கொண்டோ இருப்பாள் பாத்தரி.

எலிசபெத் பாத்தரி 16 ஆம் நூற்றாண்டை சார்ந்த (பிறப்பு 1560)அரச வம்சத்தில் பிறந்த ஒரு ஹங்கேரிய பெண்மணி .இயல்பான திருமணம் ..குடும்பம்.. கொண்ட ஒரு குடும்ப பெண் .5 குழந்தைகளுக்கு தாயும் கூட.
ஆனால் பாத்தரி ஒரு கொடூர சைக்கோ தொடர் கொலையாளி.. சீரியல் கில்லர்... பிறரை கொடுமை படுத்தி துடிப்பதை பார்த்து இன்பம் கொள்ளும் 'சாடிஸம்' வகையை சேர்ந்தவள்.
அவள் கொன்றது கொடுமை படுத்தியது எல்லாமே அதிக படியாக 16 யிலிருந்து 25....26.. வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களை தான்.

வரலாறு அவளை வரலாற்றிலேயே மிக கொடுரமான பெண் கொலையாளி என்ற பெயரை வழங்கி உள்ளது.
கொடூரமாக சித்திரவதை செய்துஅவள் கொன்ற பெண்களின் எண்ணிக்கை ஐந்தோ பத்தோ அல்ல நூறோ இறநூறோ கூட அல்ல மொத்தம் 650 க்கும் மேலான கொலை பழி அவள் மேல் பதிவு செய்ய பட்டுள்ளது.

எலிசபெத் பாத்தரி ஒரு (நிஜ ) ரத்த வெறி பிடித்த ஒரு மங்கை .. பிற்காலத்தில் ' bram stoker 'எடுத்த டிராகுலா என்ற உலக புகழ் பெற்ற படத்திற்கு மற்றும் அதை தொடர்ந்து இன்று வரை எடுக்க பட்டு வரும் ரத்த காட்டேரி டைப் படத்திற்கு முதல் 'இன்ஸ்பிரேஷன்' இந்த பாத்தரி தான்.
உலமமெங்கும் 10 க்கு மேற்பட்ட திரைப்படங்கள் பாதரியின் வாழ்க்கை வரலாற்றை அடிபடையாக கொண்டு எடுக்க பட்டுள்ளது.

பாத்தரி இயல்பில் அரச குடும்பத்தை சார்ந்தவள் என்பதால் இயல்பாகவே அவளிடம் அடக்குமுறையும் அதிகாரமும் குடி கொண்டிருந்தது. குறிப்பாக தனது வேலை கார ஆட்களிடம் ஒழுக்கம் சார்ந்து மிக கடுமையாக நடந்து கொள்பவள் .

அவளிடம் வேலைக்கு சென்ற இளம் பெண்கள் தங்கள் முதலாளி அம்மா கொஞ்சம் 'ஸ்ட்ரிக்ட் ' ஒழுக்கம் ..சுத்தம்.. ஒழுங்குமுறை ...என கடுமை கொண்டவர் அவ்வளவு தான் எல்லா அரச குடும்பத்திலும் இருப்பது தானே இது என்று இருந்து விட்டார்கள்.
ஆனால் பாத்தரி எல்லாரும் போல சாமான்ய பெண்மணி அல்ல அவள் ஒரு வரலாற்று கொடூர பெண்மணி  என்பதை போக போக கண்டு கொண்டார்கள்.

ஒரு முறை ஒரு பெண் ஒரு நாணயத்தை திருடி கையும் களவுமாக பிடி பட்டாள் . அவளுக்கு பாத்தரி கொடுத்த தண்டனை அந்த நாணயத்தையே பழுக்க காய்ச்சி அதை கொண்டு அந்த பெண்ணுக்கு சூடு வைத்து அலற விட்டாள்.
ச்ச இப்படியா கொடுமை பண்ணுவது என்று உங்களுக்கு தோன்றினால் ...
மன்னிக்கவும் அவள் கொடுத்த குறைந்த பட்ச தண்டனை அநேகமாக இதுவாக தான் இருக்கும்.
(இப்போது நான் தர போகும் பட்டியலை அநேகமாக இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்ப்பது நல்லது.)

ஒழுக்கம் கட்டுப்பாடு என்ற பெயரில் சில பெண்களுக்கு தண்டனையாக நாக்கை அறுதெரிந்தாள்  பாத்தரி..அந்த துண்டிக்க பட்ட நாக்கை மறக்காமல் தூக்கி எறியாமல் அதை சமைத்து அவர்களையே உன்ன வைத்தாள்.

அந்த உறைபனி நேரத்தில் பணி பொழிவில் பெண்களை நிர்வாணமாக இரவு முழுவதும் நிற்க செய்து உறைந்து சாகும் படி செய்தாள். (தொடர்ந்து அவர்கள் மேல் பச்சை தண்ணீர் ஊற்றிய படியே இருக்க சிறப்பு ஏற்பாடு செய்திருந்தாள் என்பது கொசுறு செய்தி.)

இளம் பெண்களின் உடல் முழுதும் தேனை ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு அவர்களை பூச்சி மற்றும் எறும்புகளை இரை யாக்கி அனுஅணுவாக உயிர் போவதை கண்டு ரசித்தாள்.

பழுக்க சூடாக்க பட்ட இரும்பு கழி களை பெண்களின் உடலில் 'பல 'இடங்களில். கொடூரமாக செலுத்தி மகிழ்ந்தாள்.
அவர்களின் விரல் நுனி ..நக கண்ணில் ஊசியை ஏற்றினாள்.

அவர்களின் உதடு மற்றும் மூக்கை கத்தரித்து தண்டனை கொடுத்தாள்.

சில பேரின் நாக்கு மற்றும் உதடுகளை ஒன்றாக தைத்தாள்.

அரிப்பு ஏற்படுத்தும் ஒரு வகை செடியை கொண்டு உடல் முழுக்க தேய்த்து குளிக்க செய்தாள்.

கழுத்து வரை ஐஸ் இல் புதைத்து வைத்தாள்.

கேக்கை அதிக பட்ச வெப்பநிலையில் சூடாக்கி  அந்த சூட்டோடு உன்னவைத்தாள்.

அதிக நேரம் தாக்கு பிடிக்கவேண்டும் என்பதால் நல்ல போஷாக்காண ..குண்டான பெண்களை தேர்ந்தெடுத்தாள்... அதிக நேரம் வித வித தொடர் சித்திரவதைகளை செய்து ரசித்தாள்.

ரத்தம் சுவர் மற்றும் படுக்கையில் தெறிக்க தெறிக்க தொடர்ந்து அடிக்கும் படி செய்தாள்..(சுவர் பூரா அவ்வபோது ரத்த மாடர்ன் ஆர்ட் ஆகி போவது இயல்பாகி போனது.)

போதும் போதும் என நீங்கள் முகம் சுளிப்பது தெரிவதால் பட்டியலை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். (ஆனால் நான் சொன்னது குறைவு சில சொல்ல முடியாத கொடுமையை நான் சொல்ல வில்லை என்பது தான் உண்மை .இறுதி யில் நான் கொடுக்க போகும் 'லிங்க் 'கில்  சென்று அதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்)

இப்படி பட்ட அவளிடம் தான் அந்த குறிப்பிட்ட இளம் பெண் வந்து வேலைக்கு சேர்ந்தாள்.
அவள் ரத்த வெறியளாக மாறியது அதன் பின் தான் .

அதாவது நடுத்தர வயது கொண்ட அவளுக்கு தனது இளமை போய் கொண்டு இருப்பதில் மிகுந்த வருத்தம் இருந்ததாய் சொல்கிறார்கள் அவளது மனநிலையை ஆராய்ந்தவர்கள்.
அழகும் இளமையும் கொண்ட பெண்கள் மீது இப்படி கொலைவெறி யை கட்டவிழ்த்து விட இந்த காழ்ப்புணர்ச்சி தான் காரனம் என்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது ஒரு முறை புதிதாக வந்த அந்த இளம் பெண் வேலை செய்யும் போது தவறி கையில் அறுபட்டு அவளுடைய சில ரத்த துளிகள் எலிசபெத் பாத்தரியின் கைகளில் தெறித்து விழுந்தது.
பிறகு அடுத்த நாள் அந்த இடத்தை பார்த்த பாத்தரி கையில் இளம் ரத்தம் பட்ட  இடத்தில் தோல் கொஞ்சம் இளமையாக இருப்பதாய் உணர்ந்தாள் (அல்லது அப்படி கற்பனை செய்து கொண்டாள்) .
எனவே அந்த பெண்ணை வர வழித்து இம்முறை வலுக்கட்டாயமாக கையை கிழித்து ரத்தத்தை எடுத்தாள். அதை தனது முகத்தில் தடவி கொண்டு தூங்க போனாள்.

அடுத்த நாள் முகம் கழுவி கண்ணாடியில் பார்த்தவள் தனது முகத்தில் இளமை திரும்பியதாக ஆழமாக நம்பினாள்.
அவ்வளவு தான்...

அதன் பின் அந்த இளம் பெண்ணின் ரத்தம் தான் இவளது அன்றாட முக பசை ஆகி போனது .
இவளது அழகு சாதனத்திற்கு அந்த பெண்ணை நன்கு சாப்பாடு போட்டு வளர்த்தாள். தொடர்ந்து ரத்தம் உறிஞ்சினாள்.

இவளது ரத்த மோகம் படி படியாக அதிகரித்தது ஒரு கட்டத்தில் ரத்தத்தை குடித்தால் தனது இளமை மீண்டு விடும் என்பதை ஆணித்தரமாக நம்பிய எலிசபெத் பாத்தரி ரத்தம் குடிக்கும் டிராகுலா வாக மாறினாள்.

அவளது ரத்த வெறியை ஆராய்ந்த ஆய்வாளர்கள் அவள் கண்டிப்பாக ரத்தத்தில் குளித்து இருப்பாள் என்று அடித்து சொல்கிறார்கள் (அனால் அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை)
இவளது கொடூர தனத்திற்கு உதவ பிரத்தியேக சேவர்களை வைத்திருந்தாள்.

ஒரு முறை உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடந்தாள் பாத்தரி அந்த நிலையில் சேவர்கள் ஒரு இளம் பெண்ணை அழைத்து வந்து பக்கத்தில் நிறுத்த ...கை தாங்களாக எழுப்ப பட்டு தட்டு தடுமாறி எழுந்த பாத்தரி அந்த பெண்ணை கண்டதும் ரத்த வெறி கொண்ட ஒரு மிருகம் போலவே அவள் மேல் விழுந்து குரல்வளையை கடித்து ரத்தத்தை குடித்தாளாம்.

பாத்தரியின் அரண்மனையில் நடந்தது எல்லாமே ரகசியமானவை..
அவற்றை எல்லாம் அங்கே கொடுமை அனுபவித்த  பெண்களில்... ஊரார்களில்..... 300 கும் மேற்பட்ட நேரடி சாட்சியங்கள் சொன்ன வாக்குமூலத்தை வைத்து தான் உலகம் பின்னாளில் அங்கே இப்படி பட்ட கொடூரங்கள் நிகழ்ந்ததை தெரிந்து கொண்டது.

அப்படி ஒரு தப்பி சென்ற சாட்சியம் மூலமாக தான் அந்த நாட்டை ஆட்சி செய்த மன்னனுக்கு தகவல் சென்றது.
இவள் ஒரு அரச குடும்பம் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அவளை கைது செய்தான் அந்த மன்னன் .
அவளை கைது செய்ய சென்ற சேவகர்கள் அங்கே நிறைய இளம் பெண்ணின் பிணங்களையும் ... குற்றுயிர் குலை உயிறாக கிடந்த பெண்களையும் தோட்டத்தில் பாதி எரிந்து எரியாத பிணங்களையும் பார்த்ததாக சொன்னார்கள்.

அவள் கைது செய்ய பட்டு குற்றம் விசாரிக்க பட்டு நிரூபிக்க பட்டு சிறையில் அடைக்க பட்டாள். தனது மரண நாள் வரை சிறையிலேயே தனது காலத்தை கழித்து சிறையிலேயே இறந்து போனாள் அந்த ரத்த காட்டேரி.

வரலாறை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்.... அதன் கருப்பு ...வெள்ளை இரண்டு பக்கங்களையும் புரட்டிதான் ஆக வேண்டும் என்பதால் தான் இன்று ஒரு கருப்பு பக்கத்தை புரட்டினோம்..

Source : 1) எலிசபெத் பாத்தரியின் கொடுஞ்செயல் பட்டியலை அறிந்து கொள்ள ....

http://www.rejectedprincesses.com/princesses/elisabeth-bathory

இல் சென்று பாருங்கள்..

   Source :  2)  "bothory countess of blood" 2008 என்ற திரை படம் மற்றும் "Elizabeth  bathory " 2014 திரை படம்.

Source :      3)  "bothory countess of blood" discovery documentary. 

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"