"கார்பன் புதையல்..."



               "கார்பன் புதையல்..."

(கருத்தும் எழுத்தும் :ரா பிரபு)

நீங்கள் எந்த மூலகூறால் உண்டாக்க பட்டிருக்கிறீர்களோ...அதே மூலக்கூறுகளால் தான் வைரங்கள் செய்யப்பற்றிருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...
தயிருக்கும் மோருக்கும் ஒரே மூலம் பால் தான் என்பதை போல தான் உங்களுக்கும் வைரத்திற்கும் ஒரே மூலம் கார்பன்....

ரத்தின கற்களிலேயே வைரம் மட்டும் இவ்ளோ கெத்து பார்டியாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.....
நீங்கள் வாழ்வில் கஷ்டப்பட்டு கடின உழைப்பால் முன்னேறிய சில பேரை பார்த்திருக்கலாம் அவர்கள் வாழ்வில் எந்த சோதனையையும் மிக அலச்சியமாக எதிர் கொள்ளுவாரகள்...எந்த பிரச்னையும் அவர் மேல் ஒரு சின்ன கீரலை கூட ஏற்படுத்த முடியாது....அதற்கு காரணம் அவர் கடந்து வந்து கடின பாதை...

அதை போல தான் வைரதின் மேல் அவ்ளோ சீக்கிரம் கீறல் ஏற்படுத்த முடியாததற்கு காரணம் அது உருவான விதம்...
ஆச்சார்ய படும் அளவு வாழ்க்கை வரலாரை கொண்டது ஒவ்வொரு வைரமும்..
மனிதனால் இந்த பூமியில் குடையப்பட்ட மிக பெரியஆழம் எவ்வளவு தெரியுமா வெறும் 12 கிலோ மீட்டர் (பூமியை தோண்டி மறுபுறம் வெளியேற வேண்டும் என்றால் நாம் மொத்தம் 22000 கிலோ மீட்டர் தோண்ட வேண்டும்) இயற்கையான மிக பெரிய பள்ளம் ...மரியானா ட்ரென்ச் வெறும் 11 கிலோமீட்டர்...ஆனால் ஒரு வைரம் உண்டாவது கொஞ்ச நஞ்ச ஆழத்தில் அல்ல கிட்ட தட்ட 150 ..200 கிலோமீட்டர் பூமியின் ஆழத்தில் அகல பாதாளத்தில் .1500 டிகிரி நரக வெப்பத்தில் ..மேலும் 50000 கிலோ கிராம் சதுர சென்டிமீட்டர் என்கிற பயங்கர அழுத்தத்தில்.

சரி  இவ்வளவு ஆழத்தில் ...இவ்வளவு வெப்பத்தில் இவ்வளவு அழுத்தத்தில் கொண்டுபோய் நிலகரியை மரதுண்டுகளை போட்டுவிட்டால் வைரமாகிவிடுமா....?
இல்லை ...இந்த சூழ்நிலையில் அது உருவாக எடுத்து கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா ?நாம் கண்டறிந்த மிக குறைந்த வயதுடைய வைரம் 3 கோடி ஆண்டு முன் உருவானது .நம்மை மலைக்க வைக்கும் வைரம் உருவாக எடுத்து கொள்ளும் காலம் சாதாரணமாய் 150 கோடி 200 கோடி ஆண்டுகள்....
இவ்வளவு கடுமையான சோதனயை தாண்டித்தான் வைரம் உருவாகிறது.

ஒரு கேள்வி எழுந்திருக்கலாம்...மனிதன் தோண்டிய மிக ஆழமான ஓட்டையே 12 கிலோ மீட்டர் தான் என்றால் 150 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள வைரம் அவனுக்கு கிடைத்தது எப்படி?

உண்மையில் வைரத்தை அதன் உருவான ஆழத்தில் சென்று எடுத்து வர உலகத்தில் எந்த கருவியாலும் முடியாது...
அது நம் கைக்கு கிடைக்க காரணம் லாவா என்கிற எரிமலை குழம்பு...
அது உள்ளே இருப்பு கொள்ளாமல் ஸ்கூல் முடிஞ்ச மாணவனை போல பீறிட்டு கொண்டு புமியின் மேற்பரப்புக்கு (நாம் தோண்டி எடுக்க கூடிய ஆழத்திற்கு) ஓடி வரும் போது கூடவே சேர்ந்து வைரத்தையும் நமக்காக (?) கொண்டுவருகிறது..

வைரம் இவ்வளவு கடினமான மகா உறுதியாக இருக்க காரணம் ஒரு பானை சைஸ் லட்டு எடுத்து அதை அமுக்கி அமுக்கி ஒரு கார்க் பால் அளவுக்கு பிடித்தால் எப்படி இருக்கும் அப்படி பெரிய பொருள் அழுத்தத்தில் சுருங்கி உருவாக்க பட்டது தான் அதன் உறுதி தன்மைக்கு காரனம்..மனிதன் கண்டு பிடித்ததிலேயே மிகவும் கடினமான பொருள் தான் வைரம்..தூரத்தை மீட்டர் எடையை கிலோகிராம் ..ஆற்றலை ஜுவ்ள் கொண்டு அலப்பதை போல பொருளின் கடினதன்மையை குறிப்பது தான் மோல் என் வைரத்தின் மோல் என்னானது 10.
அமெரிக்காவில் முதலில் வைரத்தை விளம்பர படுத்திய போது அதன் அழியா தன்மை தான் மக்களை கவர்ந்தது..
Diamonds are for ever என்ற விளம்பர வாசகம் எவ்ளோ பேமஸ் என்றால் பின்னாளில் அந்த பெயரில்.   ஜேம்ஸ்பாண்ட படம் கூட வெளியாகியது....

வைரத்தில் நீலம் மஞ்சள் பச்சை வெள்ளை ஏன் கருப்பு கூட உண்டு .வைரத்தை நிறம் உண்டாவது வைரம் உண்டாகும் போது கூட மாட இருந்தது என்ன வாயு என்பதை பொறுத்தது....கற்களில் வைரம் ஒரு அடங்கா ஜென்மம் ஆங்கிலத்தில் இதை adamantad lastar என்று அழைக்க காரணம் இது தனக்குள் வரும் ஒளியை கண்ணாடி போல் ஊடுருவ விடுவது இல்லை ...85 சதம் ஒளியை தனக்குள்ளவே பிரதி பலித்து பிரதிபலித்து....வெளியேவே அனுப்பி விடுகிறது....நாம் காணும் அந்த ஜோலி ஜுலிப்புக்கு காரணம் இது தான்...
தங்கத்தில் தரத்தை பயன் படுத்த காரட் என்ற சொல் உபயோகிக்க படுவதை போல் வைரத்தில் காரட் என்ற சொல் தரத்தை குறிப்பது அல்ல அது எடையை குறிப்பது....
ஒரு காரட் என்றால் 20 மில்லிகிராம்...
இதை நூறாக பிரித்து ஒரு சென்ட் என்பார்கள்....

வைரம் எவ்வளவு மதிப்பு மிக்கது தெரியுமா...ஒரு 20 மில்லி வெறும் 20 மில்லி வைரத்தை வெட்டியெடுக்க நாம் 350 டன் அதாவது கிட்டத்தட்ட 35/40 லாரி மண்ணை தோண்ட வேண்டும் என்றால் வைரத்தின் கெத்து என்ன என்பதை பார்த்து கொள்ளுங்கள்..
கடைசியாக....

இந்த வைரம் நிஜமா அல்லது போலியா என்பதை நீங்களே கண்டு கொள்ள சில எளிய பரிசோதனையை தருகிறேன்..
1) கீறல் சோதனை....அப்படினா ஒன்னும் இல்ல கையில் உள்ள வைரத்தை வைத்து கண்ணாடியில் அழுத்தி ஒரு கொடு போடுங்க தெரிஞ்சிடும்
2)ஒரு நியூஸ் பேப்பர் மேலே வைரத்தை வைங்க இப்ப பூத கண்ணாடியை வைத்து வைரத்தை தாண்டி உங்களால் எழுத்துக்களை படிக்க முடிந்தால்....அந்த வைரத்தை தூக்கி எறிந்து விடலாம் ...உண்மையான வைரம் ஒளியை கடத்தாமால் 85 சதத்தை திருப்பி அனுப்பிவிடும் என்று சொன்னேன்...
3) குளிரில் கண்ணாடி முன் நின்று ஹா ஹா என ஊதுவோமே அப்படி ஊதவேண்டும்...உங்கள் மூச்சு உண்டுபண்ணும் மேக மூட்டம் 3 அல்லது 4 வினாடிக்கு மேல் நீடித்தால் அது போலி....சுத்த வைரம் தன்னை உடனே சுத்தம் செய்து கொள்ளும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"