" கடல் தகவல் அறிக்கை"



        " கடல் தகவல் அறிக்கை"

(கருத்தும் எழுத்தும் .ரா.பிரபு)

கடல் ஒரு ஆச்சர்யம்...
Curios கண் கொண்டு பார்த்தால் பல ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டது.

மிக ஆழமான தகவல்கள் அல்லாமல் சில சாதாரண விஷயங்களை பார்ப்போம்.

கடல் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அல்லது பல நூற்றாண்டுகளாக கடலுக்குள் நதிகள் தண்ணீரை நிரப்பியபடி இருக்கிறதே ஏன் கடல் நிரம்பி வழிவதில்ல என்று யோசித்த இருக்கிறீர்களா?

தொடர்ச்சியாக நிலத்தில் உள்ள உப்புக்கள் நதிகளால் கொண்டுவர பட்டு கடலில் கரைக்க படுகிறது.கடலின் மழை உற்பத்தி procces பற்றி உங்களுக்கு தெரியும் கடல் நீர் சூடாகி ஆவியாகிறது அப்படி ஆவியாகும் போது கரைந்த உப்புக்கள் கடலிலேயே தங்கி விடுகிறது இப்படி காய்ச்சி வடிக்கும் செயல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடப்பது தான் கடலில் இவ்வளவு உப்புக்கு காரணம்...

நீங்கள் வாட்டர் பவுன்டைன் தொட்டிகளை பார்த்திருப்பீர்கள் அதில் தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி கொண்டே இருந்தாலும் அது நிரம்பி வழிய போவதில்லை காரணம் அதில் இருக்கும் மொத்த நீர் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் ஊற்றி கொண்டிருக்கிறது.

அதே போல தான் உலகின் மொத்த நீர் மீண்டும் மீண்டும் கடலில் இருந்து நிலத்திற்கு நிலத்திலிருந்து கடலிற்கு சுழற்சியாகிறது..

இல்லயே ..கடல் நீர் மட்டம் உயருகிறது என்று கேள்வி படுகிறோமே என்று நீங்கள் கேட்கலாம்...அது நடப்பது உலக வெப்பமயமாவதினால் சாதாரணமாக சூடான பொருள் குளிர்ந்த பொருளை விட அதிகம் விரிவடைந்து அதிக இடத்தை அடைக்கும் என்று நமக்கு தெரியும்..அது போல தான் உலக வெப்பமயமாவதில் மொத்தமாக கடல் நீர் சூடாகி அதிக இடத்தை பிடிக்கும்..

மேலும் நில பகுதிகளில் பல இடங்களில் பனி படுக்கைகளாக.. க்ளேசியர்களாக காண படும் பணி கரைந்து கடலில் கலப்பதனாலும் இந்த கடல் மட்ட உயர்வு நடக்கிறது...

இதில் இன்னொரு விஷயம் வெப்பம் அதிகமாகி கடலில் பிரமாண்டமாய் மிதந்து கொண்டிருக்கும் பணிமலைகள்  கரைந்து மட்டம் உயரும் என நீங்கள் நினைத்தால் அது தவறு...இமயமலை அளவுள்ள மிதக்கும் பனி கரைந்தாலும்  கூட ஒரு துளி மட்டம் கூட உயராது.

இது எப்படி என ஆச்சர்யமாய்உள்ளதா?.
இதை விளக்க கடலிலிருந்து கண்ணாடி தம்ளருக்கு வருவோம்.

ஒரு கண்ணாடி டம்ளரில் முழுக்க நிரம்பிய நீரும் அதில் மிதக்கும் ஒரு சிறு பணிக்கட்டியும் கற்பனை செய்து கொள்ளுங்கள்...இப்போது அந்த பனி கட்டி முழுமையாக கரைந்தது போனால் அந்த தண்ணீர் நிலை உயர்ந்து கீழே ஒழுகுமா அல்லது மட்டம் குறையுமா அல்லது சமமாக இருக்குமா?

துளி கூட சிந்தாது என்பது தான் பதில்...
காரணம் நீரில் மிதக்கும் பனி தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தனக்கென்று அடைத்து கொண்டு தான் மிதக்கும்..அது கரையும் போது இவ்வளவு நேரம் அடைத்து வைத்திருந்த அந்த காலி இடத்தில தான் அது நிரம்பும் என்பதால் மட்டம் உயர்வது இல்லை(புரியவில்லை என்பவர்கள் கமெண்ட் இல் கேட்கவும் வேறு விதமாக விளக்குகிறேன்)

அடுத்து கடலில் நடக்கும் பயங்கரமாகிய சுனாமி எப்படி உண்டாகிறது? கடல் அடியில் நடக்கும் பூகம்பம் ....இரு அடுக்குகளுகிடையான மோதல் காரணமாக உண்டாகும் அந்த 'ஜெர்க்' இல் தண்ணீர் விசை ஏற்ற படுகிறது...இது கடலுக்குள் இருக்கும் போது அடியில் மிகவேகமாக கரை நோக்கி பிரயாணம் செய்கிறது...கிட்டத்தட்ட ஜெட் வேகத்தில் ...அந்த சமயத்தில் கடல் நடுவில் சிறு படகில் அமர்ந்திருந்தால் கூட ஆபத்து இல்லை...

ஆனால் அது கரையை நெருங்கும் போது 3 பனைமர உயரத்திற்கு உயர்ந்து மனிதனை கதிகலங்க அடிக்கிறது.

ஒரு சின்ன தகவல் கடலில் நீரில் தங்கம் கலந்திருக்கிறது தெரியுமா ஆனால் நம்மால் எடுக்க முடியாத அளவு மிக குறைவாய்....

பூமியிலிருந்து பிரிந்து சென்ற உருண்டை தான் நிலா அது கழன்று கொண்ட அந்த காலி ஓட்டை இடங்கள் பள்ளங்கள் தான் கால போக்கில் தண்ணீர் நிரம்பி கடல் ஆகியது...
இப்போதும் கூட நிலவை அடித்து நொறுக்கி போட்டால் சரியாக நமது கடலை அடைத்து துருத்து விடலாம்.

இதன் நீல நிறத்திற்கு காரணம்? போன கட்டுரையில் வானத்தின் நீல நிறத்திற்கு நாம் பார்த்த அதே காரணம் தான்...
சிகப்பு பச்சை போன்ற நிறங்களில் அலை நீளம் அதிகம் என்பதால் அவை கடலால் எளிதில் உறிஞ்சி கொள்ள படிகிறது ஆனால் அலை நீளம் குறைவான நீல நிறம் அதிகம் சிதரலடைகிறது..எனவே நமக்கு கடல் நீல நிறத்தில் காட்சி தருகிறது...

பவுர்ணமி நேரங்களில் கடல் அலைகள் சீற்றம் அதிகமாக காண படுகிறது அதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை அலையை ஈர்த்து பிடிப்பதால் தான்.

கடலில் மீன் பிடிக்க போவும் மீனவர்கள் மாலை வேளைகளில் போவது ஏன்?
பகல் முழுக்கு வெப்பத்தால் கடலை விட நில பகுதி விரைவில் சூடாவதால் அங்கே உள்ள காற்று சூடாகி மேல் நோக்கி செல்கிறது அதை நிரப்ப கடல் காற்று உள்ளே வருகிறது..ஆனால் மாலை வேளை கடல் பகுதி யில் சூடாகிய காற்று மேலே சென்று...நிலத்திலிருந்து காற்று கடல் நோக்கி வீசுகிறது படகை செலுத்த இது எளிமையாக இருக்கிறது..

கடல் பற்றி படிக்க தொடங்கினால் தகவல்கள் கடல் போல கொட்டி கிடக்கிறது..இன்றைக்கு இது போதும்


Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"