"பிளாக் ஹோல் ...ஒரு நிறமற்ற ரகசியம்"

   

        "பிளாக் ஹோல்.. "-ஒரு நிறமற்ற ரகசியம்

(அறிவியல் காதலன் 
ரா.பிரபு )

அறிவியலில்....அதாவது வான் அறிவியலில் ஆர்வம் உடையவர்கள்,எப்போதும் பார்த்து வியக்கும் ஒரு பொருள் இந்த பிளாக் ஹோல் .
இவைகள் மொத்த பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்தவைகளில் ஒன்று...

இது என்ன பொருள் ..இது எப்படி இருக்கும் என விளக்க தொடங்கினால் முதலில் வரும் குழப்பமே...இதை என்ன வென்று அடையாள படுத்துவது என்று தான்... இதை பொருள் என்று சொல்லலாம் ஆனால் எக்கச்சக்க சக்தி ரூபம்... இதை சக்தி என்று சொல்லலாம் ஆனால் இதில் எக்க சக்க நிறை உண்டே.. சரி பார்க்க எப்படி இருக்கும் என்று சொல்லலாம் என்றால் இதை நாம் பார்க்க முடியாது. (பிளாக்ஹோல் என்ற பெயரை வைத்து இதன் நிறம் கருப்பு என முடிவிற்கு வர கூடாது)

அதிசய விரும்பிகள் , மாயா ஜால விரும்பிகள் அறிவியலை உற்று பார்ப்பது இல்லை என்பது என் கருத்து இந்த பிரபஞ்சத்தை உற்று நோக்கினால் அவர்கள் மாயாஜாலம் எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை அப்படி பல அதிசய பொருளில் ஒன்று பிளாக் ஹோல்.

.இதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி..உங்கள் பின் தலையை உங்கள் கண்காளாலேயே பார்க்க முடியுமா(பார்பர் ஷாப் கிளம்புபவர்களுக்கு ஒரு கண்டிஷன் கண்ணாடி ..அல்லது போட்டோ எடுத்தல் இப்படி ஏதும் செய்யாமல் நேரடியாக நம் கண்ணை கொண்டு பார்க்க வேண்டும்)

பிளாக் ஹோல் ...அது என்ன எங்க இருக்கு ?

அது விண்வெளியில் இந்த பிரபஞ்சத்தில் பல கோடி எண்ணிக்கையில் இருக்கிறது..அது எப்படி பட்டது?

அதை விளக்குவது கடினம் என்றாலும் அதன் சக்தி எப்படி பட்டது என்பதை சொல்கிறேன்..

உங்களிடம் நான் ஒரு எலுமிச்ச பழத்தை காட்டுகிறேன் என வைத்து கொள்ளுங்கள் இது சாதாரண ஏலுமிச்சை அல்ல மாஜிக் எலுமிச்சை என்கிறேன்.
உங்கள் மொபைல் இப்படி கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கிட்ட கொண்டு போய் மொபைலை தொடுகிறேன்... அவ்வளவுதான் மொபைல் அப்படியே ரப்பர் போல உறிஞ்சி உள்ளிழுக்க பட்டு எலுமிச்சைக்குள் சென்று மறைந்து விடுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்....என்னடா இது என்று நீங்கள் திகைத்து பார்க்க பக்கத்தில் நின்ற ஆட்டோ அல்லது காரை இதால் தோடுகிறேன் அந்த முழு ஆட்டோவும் கரைந்து எலுமிச்சைக்குள் அடக்கமாகிறது நீங்கள் மேலும் திகைக்கும் முன் ஒரு பெரிய  கட்டிடத்தை இதை வைத்து உரிஞ்சிவிட்டேன் என்றால் மாயாஜாலம் எப்படி இருக்கும் ?

உண்மையில் பிளாக்  ஹோல் இந்த சக்திகளை கொண்டது.

இந்த பூமியின் ஈர்க்கும் சக்தியை நீங்கள் அறிவீர்கள் இதை விட ...என்ன..ஒரு பல சில கோடி கோடி மடங்கு ஈர்ப்பு விசை கொண்டது பிளாக் ஹோல் ...ஓரு சிறிய ப்ளாக் ஹோல் மிக பெரிய சூரியனை இழுத்து விழுங்கி ஏப்பம் விட கூடியது...

இது உண்மையில் கருப்பு அல்ல.
இது தனக்குள் வரும் எதையும் தப்ப விடுவது இல்லை ஒளிய கூட ...எனவே இதில் நடக்கும் நிகழ்வுகளை நம்மால் காண முடிவது இல்லை ...
இது தான் பிரபஞ்சத்தின் உண்மையான  ஒரு 'இன்விசிபில்'  பொருள்..

பிளாக் ஹோல் எனப்படும் இந்த கரும் துளை எப்படி உண்டாகிறது?
நம் சூரியனை விட அளவில் பெரிய நட்சத்திரங்கள் அழியும் போது கடைசியாக அது ப்ளாக் ஹோளாக மாறிநிற்கிறது அதன் பின் பல நட்சத்திரத்தை குடிக்கும் ராட்சத வலிமை கொண்டு திரிகிறது ...
நட்சத்திரம் அழியும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்..

இது ஏதோ மெழுகுவத்தி ஊதி அனைப்பதை போல டப் என நடக்கும் விஷயம் அல்ல இது ஒரு நீண்ட நெடிய பிராசஸ்.... ஒரு' நட்சத்திர அழிதல்' நடந்து முடிய பல லட்சம் ஆண்டுகள் எடுத்து கொள்கிறது..
அழிய போகும் கட்டத்தில் அந்த நட்சத்திரம் மிக பெரிதாக வீங்குகிறது..தனது வழக்கமான அளவை விட மிக பெரிதாக...
உதாரணத்திற்கு நமது சூரியன் அந்த நிலையில் வீங்கினால் கிட்டத்தட்ட அது சனி கிரகம் வரை அடைத்து கொள்ளும்...
இந்த நிலையில் இதன் பெயர் (red giant) சிகப்பு அரக்கன்..

வெளி பகுதி இப்படி வீங்கி கொண்டு இருக்க இதன் மைய்ய பகுதி ஈர்ப்பு விசையில் தனக்குள் தானே சுருங்க தொடங்குகிறது... அதிபயங்கர விசையில் .
இதன் சென்டர் கோர் மேலும் மேலும் அடர்த்தி அதிகமாகி அதன் அணுக்கள் நெருக்கி அடித்து கொண்டு ...கிட்டத்தட்ட பலா பழத்தை அமுக்கி ஒரு கடுகு அளவு சுருங்கிய நிலை...
இப்போது இந்த மைய்ய பகுதியின் பெயர் (white dwarf )வெள்ளை குள்ளன்..

ஒரு கட்டத்தில் மேல் பகுதி பலூன் போல வீங்கி கொண்டே போக மைய்ய பகுதி சுருங்கி கொண்டே போக நட்சத்திரம் வெடித்து சிதறுகிறது... இந்த நிகழ்வின் பெயர் சூப்பர் நோவா.. இந்த நிலையில் இது வெளிப்படுத்தும் வெளிச்சம் இருக்கிறதே... அதன் வாழ்நாளில் அது வெளி படுத்திய மொத்த வெளிச்சத்தை விடவும் அதிகம்.

அந்த சுருங்கி கொண்டே சென்ற மைய பகுதியின் நிறை மற்றும் ஈர்ப்பு சக்தி அதிகரித்து கொண்டே சென்று முடிவில் பிளாக் ஹோல் உற்பத்தி ஆகிறது.
இப்போது இதில் இருக்கும் நிறை மற்றும் ஈர்ப்பு சக்தி முடிவிலியாகிறது..
இனி இதை நெருங்கும் எதையும் இது உறிஞ்சி நொறுக்கி இழுத்து கொள்ளும் ..
அது ஒளியாக இருந்தாலும் கூட..

பூமியிலிருந்து ராக்கெட் அல்லது வேற ஏதுவாக இருந்தாலும் விண்ணை நோக்கி புவியின் ஈர்ப்பு விசையை மீறி செல்ல வேண்டும் என்றால் அது வினாடிக்கு 11.2 கி. மி வேகத்தில் சென்றாக வேண்டும் .அதனை தான் நாம் escape velocity என்று அழைக்கிறோம் அதற்கு குறைவான வேகம் இருந்தால் பூமி மீண்டும் இழுத்து கொள்ளும்.
இப்படி சூரியனின் எஸ்கேப் வேளாசிட்டி யானது 600 கி. மி /வினாடி ..

ஆனால் அந்த கரும் துளை அல்லது கரும் பாழ் என்ற பிளாக் ஹோலில் உள்ளே நுழையும் ஓளி தனது 3 லட்சம் கிலோமீட்டர் வினாடிக்கு என்ற சூப்பர் வேகத்தை வைத்து கூட தப்பி வெளியே வர முடியாது என்றால் அதன் ஈர்க்கும் சக்தியை எஸ்கேப் வேலாசிட்டியை பார்த்து கொள்ளுங்கள்..

பிளாக் ஹோலின் அபரிமிதமான ஈர்ப்பு விசை சுத்தி இருக்கும் பொருள் வெளி மற்றும் காலத்தையும் ஈர்த்து நிறுத்த கூடியது...
இதன் நெருக்கத்தில் நின்று பார்த்தால் மொத்த பிரபஞ்சமும் பாஸ்ட் பார்வட் போட்டார் போல அதி வேகத்தில் மாறுவது பார்க்கலாம் ஆனால் நமக்கு காலம் மிக குறைந்த வேகத்தில் நகரும் அல்லது நகரவே நகராது.
இதன் அருகில் சும்மா சென்று விட்டு வந்தால் போதும் உங்கள் காலம் அநியாயத்திற்கு மாறி விடும்.
அங்கே ஒரு வருடம் இருந்து விட்டு வந்து பார்த்தால் பூமியில் பல பல வருடங்கள் கடந்து விட்டு இருக்கும். நீங்கள் எதிர் காலத்தில் வந்து இறங்குவீர்கள்.

ஒரு வேலை நாம் இப்படி பட்ட மகா ஈர்ப்புவிசைக்குள் நுழைந்தால் என்னாகும்?
பல அறிஞர்கள் பல வகையாக சொல்கிறார்கள் . ஒன்று கூட ரசிக்கும் விதமாக இல்லை அவர்கள் வர்ணனைக்கு நரக லோக தண்டனைகள் எவ்வளவோ தேவலாம் .
ஒன்று நாம் கிட்ட தட்ட பல மைல் தூரத்திற்கு ரப்பர் போல இழுக்க படுவோம் நமது தலையை விட நமது பாதம் அதிக ஈர்ப்பை உணரும். நெருங்க நெருங்க அழுத்தம் கூடி கொண்டே போகும் நமது உடலில் ஒரு இடத்தில ஏற்படும் அழுத்ததிற்கும் உடலில் ஒரு செ. மி  தள்ளி ஏற்படும் அழுத்திற்கும் வித்யாசம் பல டன் கூடி இருக்கும். நமது அணுக்கள் சிதைந்து மேலும் சிதைந்து நுணுக்கி நுணுக்கி பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கே மாறி விடுவோம்..

இதில் காலமும் வெளியும் வளைக்க பட்டிருக்கும் என்பதால் நமது பின் தலையை நாமே காணுவோம் அந்த ஒளியை வளைத்து நமக்கே அது காட்டும்.

இதில் இரண்டாவதாக சொல்ல படும் கோட்பாடு தான் சுவாரஷ்யமானது..
அதாவது அதில் நுழையும் நாம் இறக்க மாட்டோம் உண்மை யில் அதில் நுழையும் எந்த பொருளும் அழிவது இல்லை மாறாக சக்தி நிலையாக மாறி வேற ஒரு பரிமானத்திற்கு சென்று விடுகின்றன..
பிளாக் ஹோலில் நுழைபவை எல்லாம் வேறு எங்கோ ஒரு வானத்தில் வேற பரிணமானத்தில் எட்டி பார்க்கின்றன.(இணை பிரபஞ்சம் கட்டுரையில் நான் சொன்னதை போன்ற பிரபஞ்சம்).
ப்ளாக் ஹோல் வேறு உலகத்திற்கான கதவு..இதுவும் ஒரு தியரி தான்.

ஓளி கூட தப்பிக்காது என்று நாம் சொன்னாலும் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் அதை மறுக்கிறார் அதிலிருந்து கதிர் வீச்சு தப்பி வெளியேறுகிறது என்றார்
அதற்கு holkins radiation என்றே பெயர் வைத்து விட்டார்கள்.

இரண்டு பிளாக் ஹோல் நெருங்கி வந்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெரிய பிளாக் ஹோல் ஆகிறது மேலும் பலது ஒன்று சேர்ந்தால் அது சூப்பர் மாசிவ் பிளாக் ஹோல் ஆகிறது ..

நமது பால்வெளிதிரள்... galaxy யின் மைய்ய பகுதில் இருப்பது இப்படி ஒரு super massive black hole தான்.

அதன் ஈர்ப்பு விசை தான் மொத்த galaxy யையே ஈர்த்து பிடித்து வைத்துள்ளது..
எது எப்படியா இன்று வரை black hole இருப்பதை நாம் உணறுவதே அது மற்ற பொருட்களின் மேல் ஏற்படுத்தும் விளைவை வைத்து தான் மற்ற படி அதை பார்க்கவோ அல்லது விரிவாக ஆராயவோ இன்னும் நமக்கு சாத்திய படவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை          

அன்பு நண்பன் அறிவியல் காதலன்
ரா.பிரபு.          



Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"